தமிழ் ஜோதிடம் -ஜோதிட பதில் Tamil Jothidam
சிவ சிவ
பிறப்பின் பதிவுகள்
ஒவ்வொரு பிண்டமும் கர்ம வினை பதிவோடு பிறக்கும் அந்த பிண்டம் நல்வினையாவதும் தீவினையாவதும் கர்ம வினை பதிவை பொறுத்தே கர்ம வினை பதிவுகளை மனக்காரகனே முதலில் பதிவு செய்து விடுவான். அவன் சலனமே முதல் சலனம்.
மனதை அடக்கு மார்க்கம் உண்டு.
ஒருமனிதனின் எண்ணங்கள் செயல்பாடு திறமைகள் நடப்பு நிகழ்வுகள் எல்லாம் கிரகங்களின் கட்டுபாட்டிலியே இருந்துகொண்டு இருக்கும். நீ என்ன தான் தத்துவ ஞானியாக இருந்தாலும் அறவழியில் நடப்பது போல நடித்துகாட்டக்கூடும் ஆனால் நடப்பு தசை கோட்சாரம் கிரக இணைவு கூட்டு தசா புத்தியில் செயல்பாட்டில் தான் உன் செயல் இயக்கங்கள் உன் எண்ண நினைவுகள் இருந்துகொண்டே இருக்கும் உன் சுய கட்டுபாட்டை இழந்துவிடுவாய் அதற்கு பல உதாரணங்களை கூறலாம்.
நடப்பு தசா புத்திகள் கோட்சார கிரக இணைவுகளுக்கு ஏற்ப சமூகத்தில் ஒரு விதமான நடிப்புகள் நாடகங்கள் ஆனால் அதேசமயம் வினைக்கேற்ப வக்கிரபுத்தி கெடுக்கும் செயல்களில் ஈடுபடுதல் அபகரிப்பு செய்தல் மற்றவர்களுக்கு தெரியாமல் களவாடுதல், இவைகள் எல்லாம் சுய ஜாதக தசா கோட்சார கிரக இணைவகளின் ஆட்டங்கள்
விதி விலக்கு
ஐந்தில் குரு, ஒன்பதில் குரு, இரண்டில் குரு, இராசி லக்கனத்திற்கு குருபார்வை அல்லது குரு உள்ளவர்கள் குருவின் நட்சத்திரத்தில் அமைந்த கிரகங்கள் சாந்தமாக்கும்.
கூட்டு கர்மா (கிரக சேர்க்கை)
நம் பிறப்பு கர்ம வினைகளை கழிப்பதற்கே கூட்டு கர்மா கிரக சேர்க்கை ஒரு கர்மா நம்கர்மாவை அழிக்கும், ஒரு கர்மா நம்கர்மாவை பாதுகாக்கும், ஒரு கர்மா நமக்கு வழிகாட்டும் ஒரு கர்மா நம்மை வேடிக்கை பார்க்கும், ஒரு கர்மா நம்மை சுற்றி வந்து கொண்டே இருக்கும், ஒரு கர்மா நம் வினைக்கேற்ப நம்மை சீன்டிக்கொண்டு சன்டை கொண்டு மல்லுக்கு நிற்கும் இப்படி நம் வினைக்கேற்ப நம் ஜீவன் குரு படும் பாடு தான் நம் வாழ்க்கை, ஒரு ஜீவன் (குரு) ஜாதகத்தில் வினைக்கேற்ப மாட்டிக்கொண்டோ தனித்தோ, சுப சேர்க்கை பெற்றோ ஓடுகின்ற கிரக சலனத்தை கோட்சாரம் கொண்டு பார்க்க வேண்டும். நம் ஜீவனின் (குரு)கர்மா கழிய வேண்டும் என்றால் வேறு ஒரு கர்மாவால் நிச்சயமாக முடியும் அதை தேடிக்கொண்டு நம் மனம் (சந்) சில சமயம் அலைந்து மாட்டிக்கொள்ளும், நம் கர்மாவில் வினையை கழிக்க முடியும் என்றால் நமக்கு உள்ள ஜீவன்(குரு) நமக்கு கிடைப்பார்கள் இல்லை என்றால் அலைந்து திரிந்து நம் மனம் படும் பாட்டிற்கேற்ப இச்சை ஆசை பொறாமை சுகம் கள்ளத்தனம் கபடம் என அனுபவித்து கர்மா வினையுடன் அழிந்து போகும்.
ஒரு சிலருக்கு கும்பிடபோன தெய்வம் நம் குறுக்கே வந்து நிற்கும், ஒரு சிலருக்கு கோவிலுக்கு சென்றாலும் நடைசாற்றி இருக்கும். அந்த அமைப்பு ஜாதகத்தில் அமைந்து விட்டால் தத்துவம் பேசிக்கொண்டு சாமி என்ன பூதம் என்ன குரு என்ன என்று நம்மை நக்கல் செய்யும் ஒரு சிலர் மறைமுகமாக குருவை தேடிக்கொள்வார்கள் ஒரு சிலர் ஒன்றும் கிடைக்காமல் அலைந்து திறியவேண்டிய நிலைதான்! அவர்கள் யார்? யார்? எந்த கிரக நிலை? யாரை தேடினால் நம் ஜீவன் அடங்கிபோகும் வேறு பதிவில் வேத நாடி ஜோதிடக்கலை குழுமத்தில் பதிவிடபட இருக்கிறது படித்து பயன் பெறுங்கள்.
நிரந்தர யோகம்? கோட்சார யோகம்? தசா யோகம்? கூட்டு கிரக தசா சந்தியோகம்? ஒத்த தசா யோகம்?
மேற்கண்ட யோகங்கள் சுப யோகத்தையைம் கொடுக்கும் அசுப யோகத்தையைம் கொடுக்கும்.
பிறப்பு ஜாதகம் என்பது ஒரு சூட்சமம் நிறைந்த சலனம் இல்லாத கிரக குறியீடுகள், நிரந்த யோகம் மட்டும் பிறந்ததிலிருந்து வேலை செய்யும் மற்றயோகங்கள் எல்லாம் காலம் வரும் வரை காத்திருக்கவேண்டும்.
பிறப்பு ஜாதக கிரகங்களை இயக்குவது கோட்சாரம், தசா புத்தி அந்தர சூட்மங்கள், உறவுவழி கிரக இணைவுகள், மனைவி வழி கிரக இணைவுகள் புத்திரவழி கிரக இணைவுகள், வீடு மனை கிரக இணைவுகள்.
சூட்சமம் மூலம் தற்சமயம் நடக்கின்ற நிகழ்வுகளை தெளிவாக அறிவதே சூட்சம கணிதம் ஆகும்
திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி
ஒரு போதும் தவறான வழிகாட்டியாக இருக்கவேண்டாம், ஜோதிடக்கலை மற்ற எல்லா கலைகளை விட மோகனக்கலை வசியக்கலை எனப்படும். அரசர், மந்திரி அந்தப்புரம் வரை சென்று அவர்களுக்கு பிரச்சனை வழிமுறை சொல்லும் தகுதி மூன்று பேருக்கத்தான் உண்டு கோவில் அர்ச்சகர், வைத்தியர், ஜோதிடர் (மணி, மந்திரம், ஔஷதம்) பிறர் துன்பம் போக்கும் கலையாகும். வாழ்க்கையில் வீழ்ந்தவர்களுக்கு வழிகாட்டும் கலை இது,
நாள் தோரும் கிரகங்கள் மாறுகிறது, மாதகணக்கில் கிரகங்கள் மாறுகிறது, வருடபெயர்ச்சி ஆகிறது, வக்கரம் வக்கிர நிவர்த்தி ஆகிறது, அஸ்தங்கம் ஆகிறது, அதிசாரம் அடைகிறது ஆரோகணம் அவரோகணம் , பரிவர்த்தனை ஆகிறது, இருந்தும் வாழ்வில் பெரிதளவில் மற்றங்கள் இல்லையே என்ற எண்ணம் சிலருக்கு தோன்றுகிறது. நவக்கிரகங்கள் தங்களது கடமையிலிருந்து ஒருபோதும் தவறுவதே இல்லை, நாம் அனுபவிக்கும் நல்ல பலன்களும், தீயபலன்களும் நம் செயல்களை வைத்தே அமைகிறது "தீதும் நன்றும் பிறர் தர வாரா" விதைகள் போட்டவுடன் மரம் வளர்வதில்லை, மரம் வளர்ந்தவுடன் காய் காய்பது இல்லை, காய்த்தவுடன் கனி வருவதும் இல்லை, அதுபோல நீங்கள் செய்யும் நன்மைகள் உடனடியாக உங்களுக்கு பலன் தராவிட்டாலும் உங்கள் சந்ததிகளைக்காக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, உங்களுக்கு கெடுதல் செய்தோருக்கும் நல்லது செய்யும் உள்ள கொண்டோரை இறைவன் கைவிடமாட்டார் குருவருளும் திருவருளும் உங்களை நல்வழி படுத்தும் நல்வழிநடத்தும்.
எப்போதும் நடக்கும் என்ன காரணம் என்ன விதிகள் என்ற என் பதிவிறக்கு கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு என் பதிவிகள் அனைத்தையும் படித்துவாருங்கள் விடை கிடைக்கும்.
0 Comments