Ticker

6/recent/ticker-posts

இராகு கேது பெயர்ச்சி பலன்கள்- பொது பலன்கள்

சிம்ம ராசி (இராகு கேது பெயர்ச்சி பலன்கள்) பொது பலன்கள்

குருவேசரணம் குருவடிசரனம் திருவடிசரனம்

திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி!

கடந்த ஒன்றரை வருடங்களாக இராகு கேது முறையாக 1 மற்று 7 ஆம் இடத்திலும், மற்றும் குரு கன்னியிலும், சனி பகவான் விருச்சகத்திலும் அமர்ந்து கோட்சரம் மூலம் கர்ம வினைகளை தசாபுத்திகளுக்கு எற்ப பலன்களை அளித்தது, இதன் பலன்கள் சிம்ம ராசிக்காரர்களை படாத பாடு படுத்தி விட்டது, 

அதாவது லக்கனத்தில் இராகு ஏழில் கேது என்றால் நாக தோஷம் இதன் பலன், திருமண வயதில் இருந்து பெண் தேடியவர்களுக்கு பெண் அமைந்து இருக்காது இதன் மூலம் பண விரயம், மனகஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கும், உறவினர்களே தடையாக இருந்திருப்பார்கள், பெண் அமைவது குதிரை கொம்பாக இருந்திருக்கும், திருமணமான தம்பதிகளுக்கு கணவன் மனைவி இடத்து கருத்து வேறுபாடு உண்டாகிறது இருக்கும், பரிவு பிளவுகளை ஏற்படுத்தி இருக்கும், உடல்நலக்குறைவு, கருச்சிதைவு, உண்டாகி இருக்கும், தன் நலத்தையும் தாயார் நலம், தாயாருக்கு மனவேதனைகளை ஏற்படுத்தி இருக்கும், 

தொழில் துறையில் முடக்கம், போட்டி பொறாமைகளை ஏற்படுத்தி இருக்கும், வருமானத்தை முடக்கி இருக்கும், கவலை, அபகீர்த்தி அவமானம், கெட்ட பெயர்களை உண்டு செய்திருக்கும், ருண ரோக சத்துருக்களை விருத்தி செய்திருக்கும், தன்மீதே தனக்கு சந்தேகத்தையும் விரக்த்தியையும், தெய்வநம்பிக்கை இன்மையை ஏற்படுத்தி இருக்கும், இதற்கு எல்லா காரணங்களையும் பின்பு விளக்கமாக கூறுகிறேன்,  

அதாவது  வருட கிரகங்கள் கிரக  பெயர்ச்சிக்கு 45 நாட்களுக்கு முன்பாகவே பலன்களை கொடுக்க தொடங்குவார்கள் அதன் பலன்களை அனுபவிக்க ஆரம்பித்து இருப்பீர்கள் கையில் பணபுழக்கத்தை கொடுத்திருப்பார், இராகு கேதுவும் ஆறும் மற்று 12 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி அடைவதால், ருண ரோக சத்துரு ஜெயம், கவலை இல்லா வாழ்வு, வெளிநாட்டு முயற்சியில் வெற்றி, வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வருமான விருத்தி, ஊதிய உயர்வு, 7 ஆம் இடத்தை டிசம்பர் 16 ற்கு பிறகு குரு பார்வை கிடைப்பதால் நல்ல இடத்தில் மனைவி கிடைப்பாள் திருமணம் கைகூடும், திருமணமாணவர்களுக்கு தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை , பொண் பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும், வியபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். இராகு கேதுகளுக்கு வீடு கொடுத்த அல்லது சாரம் கொடுத்த கிரகங்கள் குருவோடு சம்பந்தபடும்போதும் தசா புத்திகள் சாதகமாக இருந்தால்தான் யோகங்கள் முழைமயாக கிடைக்கும், தசா புத்திகள் பாதகமாக நடந்தாலும் 6,8,12 ஆம் அதிபதிகளின் தசை நடந்தாலும் யோகம் செய்யாது. இது பொது பலன்களே சுய ஜாதக பலன்களை பாரத்து முழபலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக ராகு தசை நடப்பவர்கள் மிகவும் உஷாராக எல்லா விதத்திலும் இருக்கவேண்டும் உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரியாக மாறிவிடும்.
1) ராகு
2) ராகு தசை என்ன செய்யும்?
3) எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
4) ஏன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்?
6) எதை எல்லாம் இழக்க செய்யும்?
7) ராகு தசை நடப்பவர்கள் உங்கள் தசை மட்டும் அல்ல உங்கள் குடும்ப நபர்களின் தசையும் உங்களை படுத்தி எடுத்துவிடும்?
8)குடும்ப நபர்களின் ஒவ்வாத தசை உங்களை படாய படுத்தி விடும் முதலில் உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரியாக மாறி விடும்.
9) ராகு திசைக்கு முன்பே கடன் வாங்கி வைத்துவிட்டு அதாவது கடன் வாங்கி வீடு கட்ட சொல்லும் தொழிலை விரிவு படுத்த சொல்லும். ராகு தசை ஆரம் பித்த வுடன் தசை ஒவ்வாத பட்சத்தில் பார்க்கும் வேலையை பிடுங்கி விடும் தொழில் இழப்பு நோக்கி அழைத்து செல்லும்.
10) மருத்துவத்திற்கு கண்டு பிடிக்க முடியாத வியாதைகொடுத்து வேடிக்கை பார்க்கும்.
இனம்புரியாமல் மிரட்டி வரும்
அடுத்த பதிவில் ராகுவின் வேதனைகள் சோதனைகள் தொடரும்.
ராகுதசையில் சிக்கியவர்கள் குடும்ப நபர்களின் ஜாதகத்துடன் ஜோதிடரை தொடர்பு கொள்ளுங்கள்.

ராகு பற்றிய தொடர்ச்சி பதிவு

ராகு-பெரிய குடல்
ராகு -பெரியது

ராகு பெரிய கடனை ஈசியாக வாங்க சொல்லும், பெரிய தொழிலை ஈசியாக விரிவு படுத்திவிடும், ஆனால் அந்த தசை ஒவ்வாத என்று செயல்படும் விதத்தில் மூலை நரம்பை பாதித்து வாத நோயை உண்டு செய்யும், பெரியகடனை உருவாக்கி விடும், சில சமயம் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு உருவாக்கி மணமுறிவுக்கு சாதகமாக்கிவிடும். எதிர்பாரத விபத்துகளை உருவாக்கி ஜாதகத்தில் உள்ள கர்ம வினைக்கேற்ப இழப்புகளை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ ஏற்படுத்தி காட்டும். கால்களை முறிக்கும், வாகனத்தை பெரிய அளவில் சேதப்படுத்தி பயம் முடுத்தும். இதை செவ்வாய் தசை ராகு புத்திகாலத்தில் ஒத்திகை படுத்திகாட்டும். 

ராகு தன்னிச்சையாக செயல்படும் போது எந்த வித தோந்தரவுகளையும் செய்யாது ஆனால் அதற்கு ஒவ்வாத கிரகங்கள் வந்தால் போதும் பிரச்சனைகள் வெடித்து சிதரும் மூலை நரம்பை பாதிக்கும் மது மாதுவை தேடிச்செல்லும், சிலரை சமூகத்தை கேவலபடுத்தும் வகையில் மாற்றான் மனைவி தொடர்பை தூண்டும். மருத்துவத்திற்கு கட்டுபடாதா நோயை உருவாக்கி வேடிக்கை பார்க்கும் தற்கொலை எண்ணத்தை தூண்டும் சிலர் விஷம் அருந்தி குடலை இழக்கும் அவலம் ஏற்படும் சிலர் உயிரை பரித்துவிடும், கூடவே குருவை வைத்துகொள்ளும்

ராகு யார் யாரை பாதுகாப்பார்? அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்

ஏதாவது ஒருதிசையில் ஒரு ராகு புத்தி நடந்தாலே பதற்றமடையச்செய்யும் நடுங்க செய்யும்.

வரும் பதிவுகளில் உதாரண ஜாதகத்துடன் எந்த கிரக இணைவுகள் எந்த விதமான வேதனைகளை உறுதி செய்யும் என்பதை பார்க்கலாம்.

என்பதிவுகள் பிடிக்கவில்லை என்றால் கடந்து சென்று விடுங்கள் இழப்பு எனக்கு அல்ல உங்களுக்குத்தான். தேவை இல்லாமல் சீன்டி பார்க்கவேண்டாம் இதனால்தான் நான் பதிவுகள் பதிவிடுவதை நிருத்தி இருந்தேன்

ராகுதசை என்ன செய்யும்?

ராகுதசை பாதகமாக இருந்தால் பெரியகுடல் புட் பாய்சன் பெரிய ஆசையைகாட்டி பெருங்கடன்காராக்கி விடும் பிறர்மனை விரும்ப வைக்கும் கல்லக்காதல் ஆகி விஷம் அருந்த வைக்கும் தீ விபத்தை ஏற்படுத்தும் சீற வைக்கும் உறவு நட்பை பிரித்துடும் பெண்கள் விசயத்தில் அவமானபடுத்தி பஞ்சாயத்து செய்யும் ஜோதிடம் கற்க வைக்கும் பெரிய விபத்தை கொடுத்து காலை  முறிக்கும் இதில் ஏழரை அட்டமம் அர்தாஷ்டமம் அட்டமம் சங்கமம் கண்டிப்பாக நிகழ்த்திகாட்டும் தவிற்க முடியுமா? அடுத்த பதிவில்

ராகு கொத்துவதற்கு முன்னாலேயே முடிவெடுத்து விடுங்கள் அது கொத்தி விட்டால் விரட்டி சின்னபின்னாமாக்கிவிடும், அது கலைத்ததை அது போகும்வரை விஷம் உடலில் இருந்து கொண்டே இருக்கும், கூண்டோடு கலைத்துவிடும் கோரம் கொடுராமாக இருந்தால் கட்டிய தாலியை தூக்கி எரிந்து விட்டு சென்றுவிடும்
உங்களுக்கு தசை ஒவ்வாமல் போகிவிட்டால் அவ்வளவுதான் குளவி தன் கூண்டில் புழுவை துடிக்க துடிக்க கொட்டி முடி விடுவது போல ஒரு கொடுமை ஐயா
சமைத்த சாப்பாட்டை அமர்ந்து சூடாக சாப்பிட விடாது பிரச்சனை தகராறு பேச்சு சீறி பாயும்.
உங்கள் சக்கரவர்த்தி கலியபெருமாள்

Post a Comment

0 Comments