அனைவருக்கும் அநேக நமஸ்காரங்கள்
மாதா பிதா குரு தெய்வங்கள் மகான்கள் சித்தர்களின் திருவடிகளை வணங்கி இந்த பதிவை பதிவிடுகிறேன்
அனுபவம் என்பது ஆகச்சிறந்த பல்கலைகழ அறிவு, ஒரு செயல் நிகழ அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும் அரிசி வேகும்வரை காத்திருக்க வேண்டும், அவசரபட்டு வடித்துவிட்டால் அரைவேக்காடுதான்.
ஒரு தொழிலை கற்றுக்கொண்டு தன் அனுபவத்தால் கையாளுகின்ற விதம் மற்றவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும், அவர் தீர்க்கும் பிரச்சனைகள் மிக எளிதாக சிறப்பாக கையாண்டு விடுவார்கள்.
ஒரு மருத்துவர் முதல் அறுவை சிகிச்சை கிழிபடும் இடம் அளவுக்கு அதிமாக இருக்கும் நேரம் அதிகபடும் சமயத்தில் தவறாக கூட நடந்து விடும் உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்வதால் எவ்வளவு கிழித்தாலும் ஒருகட்டத்தில் பழகி விடுகிறது.
சமையல் செய்பவரின் முதல் சமையல், அதுபோல இரண்டு நான்கு சக்கர வாகனங்களின் பழுது நீக்குபவர் முதல் அனுபவம் அவருக்கு புரியவில்லை என்றால் வாகனத்தை நிறுத்தி விட்டு செல்லுங்கள் பார்த்து தருகிறேன். எதைகழட்ட வேண்டும் என்பதை கூட தெரியாதவர்களிடம் சிக்கி கொண்ட வாகனம் என்னவாகும்.
அனுபவம் உள்ள ஆசிரியர் உதாரணமாக 5 அல்லது 10 ஆம் வகுப்பு ஆசிரியர் பல ஆண்டுகளாக அந்த ஒரே வகுப்பிற்கு பல வருடங்களாக பாடம் கற்பித்து பல அனுபவங்களையும் மாணவர்களை எப்படி கொண்டு செல்லவேண்டும் என்ற அனுபவங்களையும் மிகச்சிறப்பாக செயல் படுவார்கள். அதே புதிய அனுபவம் இல்லாத ஆசியர் மாணவர்களுக்கு எப்படி கற்பிக்கவேண்டும் எப்படி தேர்விற்கு தாயர்செய்ய வேண்டும் என்ற அனுபவம் இல்லாதவர்களிடம் சிக்கிக்கொண்ட மாணவர்களின் கல்வி அறிவு வளிர்ச்சி பெறாது.
ஜோதிடமும் அப்படித்தான் நன்றாக யோசனை செய்து முடிவு எடுங்கள் ஒரு ஜோதிடர் தரமானவாரக ஆகவேண்டும் என்றால் சதா ஜோதிடத்தை ஆரயந்து வந்தாலும், படிப்பதற்கம் கற்று கொள்வதற்கும் பல ஆண்டுகள் தேவை அதற்கும் நல்ல ஆசான்கள் தேவை பல ஆயிரம் ஜாதகங்களை பார்த்த அனுபவங்கள் வேண்டும்.
ஒருபாவத்தை ஆரயவேண்டும், ஒரு விதியை பல ஜாதகத்தில் பொருத்திபார்க்கவேண்டும் அல்லது ஒரு கிரக இணைவு என்ன செய்யும் அந்த இணைவில் வருடகிரக கோட்சார கிரகங்கள் நகரும்போது என்ன செய்யும் அந்த கிரகங்களின் தசாபுத்தி நடக்கும்போது என்ன நிகழ்வுகள் நடக்கும் என்பதை அனுபவத்தில் அறிந்து இருக்க வேண்டும். பாவகிரகங்களின் இணைவு சுப கிரகங்களின் இனைவு என்ன செய்யும், என்பதை அனுபவத்தில் அறிந்து இருக்க வேண்டும்.
திருமணபொருத்தம் மிக மிக மிக கடினமான ஒன்று ஒரு நொடியில் பார்பது அல்ல 98 சதவிகிதம் மன பொருத்தத்திலும் பூர்வ ஜென்ம புண்ணியத்திலும் வாழ்க்கையை நடத்திகொண்டுவருகிறார்கள். ஜோதிடம் பார்த்து பலன் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டு ஜோதிட நூலை புரட்டி பலன் கூறி மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாட கூடாது கர்மா உன்னை தொடரும் துரத்தும்.
ஜோதிடர் வாஸ்து நிபுணர் பெயரியல் மேதை எல்லாம் தெரிந்து இருந்தால் தன் வாழ்க்கையை நன்றாக அமைத்து திருத்தி கொள்ளலாமே, ஆகச்சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டலாமே! கடன் வரும் என்று தெரிந்தாலே ஒதுங்கி வாழலாமே ! எங்கே முதலீடு செய்தால் வெற்றி பெறலாம் என்று தெரிந்து கொண்டு வெற்றி பெறலாமே! நல்லமுகூர்த்தத்தை தெரிந்து கொண்டு சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து காட்டலாமே ! நோய் வருவதை தெரிந்து கொண்டு விளகி வாழலாமே.
ஒரு எம் எல் ஏ, ஒரு ஊர் பிரசிடண்ட், ஒரு கவுன்சிலர் ஒரு சேர்மேன் ஒரு வார்ட் மெம்பர் நல்ல முகூர்த்தத்தில் நாமிநேசன் செய்து வெற்றி பெறலாமே!
ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் தன் மாணவர்களை ஒரு மருத்துவர், ஒரு பொறியாளர், ஒரு ஐ ஏ எஸ் உருவாக்கலாம் தவிர, தான் ஆக முடியாது.
எல்லாவற்றிற்கும் நேரம் காலம் வரவேண்டும் அதுவரை நல்லவனாக காத்து இருக்க வேண்டும். காலம் கனியும் வரை காத்து இருக்கவேண்டும். சோறு வேண்டும் என்றால் உலை கொதித்த பிறகு அரசி கலைந்து போட்டு அரசி வேகும் வரை காத்திருந்து வடிக்கவேண்டும். அவசர பட்டு வடித்து விட்டால் அரைவேக்காடகத்தான இருக்கும் எதற்கும் உதவாது.
அசுவினி நட்சத்திர பலன்கள் (பொது பலன்)
குருவடிசரணம் திருவடிசரணம்
ஓம் நமசிவாய எல்லாம் சிவமயம்
அசுவினி நட்சத்திரம் மேச ராசியில் நான்கு பாதங்களையும் கொண்டுள்ளது, இந்த நட்சத்திரம் கேது பகவானின் நட்சத்திரம் ஆகும், மருத்துவ குணம் உடைய நட்சத்திரம் என்று சாத்திரங்கள் கூறும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வைத்தியராக (டாக்டர்) பணிபுரியவர்களாக இருப்பார்கள் டாக்டர் பட்டம் பெறாதவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர் கையால், தண்ணீரே, மருந்தாகி சாப்பிட்டவற்கு நன்மை செய்யும்; நோய் தீர்க்கும் என்பது அனுபவக் கணிப்பு ஆகவே, அசுவினியில் பிறந்தவர்களை மருத்துவர் என்று சொல்வது பொருத்தம் ஆகும். இவர்கள் பிறந்து 25 வயதுக்கு மேல் அந்திமக் காலம் வரை நல்ல பெயரோடும், புகழோடும் வாழ்வார்கள். சிறுத்த கண்களும், பருத்தத் தோள்களும் இந்த நட்சத்திரத்தின் சிறப்பு அம்சம். எல்லோர்க்கும் உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கம் உடையவர்கள். பிறர் சொல்லும் சொல்லையும் செயலையும் மதிக்கத் தெரிந்தவர்கள் சமயம் வரும்போது தனது உதவியை மற்றவர்க்கு தவறாமல் செய்யும் இயல்பு உடையவர்கள் அரசு உத்தியோகஸ்தர் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பெரியோர்களால் பராட்டப்படுவார்கள். பற்கள் மட்டும் ஈறுகளில் குறைபாடுகள் காணப்படும்.
எவரையும் எளிதில் நட்பு கொண்டு தன்னோடு இணைத்து கொள்வதில் மிகவும் வல்லவர்கள் சிறு வயதில் இவரை யோகம் இல்லாதவர் எனக் கூறுவார்கள் ஆனால் அவர்களே பிற்காலத்தில் இவரைப்போல் யோகசாலி யாருமில்லை எனப் பாராட்டப்படுவார்கள் எதிர்காலப் பலனை இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு புத்திசாலிகளாவார்கள் இந்த அளவிற்கு பிற்காலத்தில் உயர்ந்த நிலையைக் கொடுக்கும் அசுவினி நட்ச்சதிரத்தார்க்கு புத்திர பாக்கியத்திற்கு குறையில்லை ஒருசிலர்க்குபணக்கார மனைவி இயற்கையாகவே அமைவர் ஒருசிலர்க்கு திருமணமானபின் வசதி வாய்ப்புகள் வந்து சேரும் அமைதியான குடும்பம், ஆனந்தமான வாழ்வு அசுவினிக்கு உண்டு
இது பொது பலன்களே, ஜாதக பலன் தெரிந்து கொள்ள தனி நபர் ஜாதகம் பார்த்து அல்லது குடும்ப நபர்கள் ஜாதகம் பார்த்து பலன்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த காரகத்தை பற்றி சொல்கிறோமோ
அதற்கு அந்த காரகத்திற்கு
குறைபாடு ஏற்படும் என்று பொருள்
ஆண் -மனைவியை குறிக்கும் கிரகம் சுக்கிரன்
பெண் - கனவனை குறிக்கும் கிரகம் செவ்வாய் ஆகும்.
குரு -ஜாதகனை குறிக்கும் (ஆண் )
சுக்கிரன் -ஜாதகியை குறிக்கும் (பெண்)
பொதுவாக ஒரு கிரகத்திற்கு ராகு கேதுவின் தொடர்பு ஏற்பட்டாலோ பகைகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஏற்பட்டாலோ
அந்த கிரகத்தின் காரகத்தை பாதிப்பு அடையச் செய்யும்.
உதாரணமாக பெண் ஜாதகத்தில் செவ்வாய்க்கு 1 5 9 3 7 11 2 12 ல் சனி இருந்தால் செவ்வாய் காரகத்தை பாதிப்பு அடையச்செய்யும் இதை தோஷம் என்று கூறலாம்.
மீண்டும் வேறு ஒரு பதிவில் ✍
ஓம் நமசிவாய எல்லாம் சிவமயம்
நன்றி🙏
சக்கரவர்த்தி கலியபெருமாள்.
0 Comments