Ticker

6/recent/ticker-posts

புன்னியம் செய்தவன் யார்?

ஜோதிட பலன்கள்

உலகத்தில் பிறந்த அனைத்து ஜீவன்களுக்கு (குருஉயிர் மேல் அவ்வளவு ஆசை!
நன்றாக வாழ வேண்டும் சுகத்தோடு வாழ வேண்டும் நல்ல அழகான மனைவியோடு வாழ வேண்டும் நல்ல அறிவுள்ள அழகான குழைந்த வேண்டும் நல்ல வசதியான வீடு வேண்டும் வாகனம் வேண்டும் நல்ல வேலை அல்லது தொழில் வேண்டும்.
நிறைய பணம் வேண்டும் இப்படி பல ஆசைகள் உண்டு அனைத்து சுகத்திற்கும் காரகம் சுக்கிரன் 
அதிக மிக அதிக என்றால் ராகு
இது எல்லாவற்றுக்கும் தடை கேது 
செவ்வாய் கனவன் போலீஸ் ராணுவம் கூர்மையான ஆயுதம் ரத்தம்
சனி தொழில் பொதுமக்கள்
புதன் வனிகம் வியாபாரம் கல்வி பேச்சு காதலன்
சூரியன் குழந்தை மகன் உயர்வு அதிகாரம் அரசாங்கம்
ராகு சந்திரன் இணைவு கிரகணம்
சனி சுக்கிரன் இணைவு பணக்காரன் குரு சுக்கிரன் இணைவு ஆயுள் விருத்தி 
குரு சனி சுக்கிரன் இணைவு நன்றாக செல்வோத்தோடு வாழ்வான்
இப்படி பட்ட இணைவுகள் இயற்கையாக ஜாதகத்தில் அமைந்து விட்டால் அவன்யோகக்காரன் 
புன்னியம் செய்தவன் அப்படி இணைவு இல்லாத ஜாதகத்திற்கு செயற்கை இணைவுகளை கொடுக்கவேண்டும்
இதற்கு பெயர்தான் பரிகாரம் என்று கூறிவந்தார்கள்.
செயற்கை இணைவு என்பது பல வழிகள் உள்ளது பூர்வ ஜென்மம் புண்ணியம் இருந்தால் இவ்வாறு இணைவு உள்ள மனைவி மகன் மகள் கிடைப்பார்கள் அப்படி இல்லை என்றால் சரியான தெய்வ வழிபாடு நட்சத்திர வழிபாடு ஜீவசமாதி வழிபாடு இப்படி உள்ளன
அடுத்த பதிவில் பார்ப்போம்

செவ்வாய்- கணவன், திருமணம், இரத்தம், சகோதரர உறவுகள், 
கேது -தடை ஆன்மிகம், காரகத்தை கெடுப்பது, பிரிப்பது

செவ்வாய் கேது இணைவு

சகோதர உறவு திருமண உறவுகளுக்கு தடை தாமதம் பிரிவுகளை ஏற்படுத்துவது, இரத்த உறவுகளுக்கு தடை தாமதம் பிரிவுகள் சன்டை சச்சரவுகளை ஏற்படுத்துதல் உயர் ரத்த அழுத்தம் ரத்த நாளங்களில் தடை ரத்த கோளாரல் ஏற்படும் அலர்ஜி ( ஒவ்வாமை) உடல் சோர்வு புருவத்தில் முடி இல்லாமல் போதல் பூர்வீக சொத்தை தாரைவார்த்தல் அல்லது வில்லங்கம்.

திருமணமான தம்பதிகளை பிரிப்பது சன்டை சச்சரவுகளை ஏற்படுத்துதல்

செவ்வாய் கேது இணைவு உள்ள ஜாதகத்தில் 1 5 9 இடங்களில் கோட்சார ராகு வந்தால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பல விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்.

வாழ்க்கையின் அடிப்படை தேவைகள் பூர்த்தி அடையக்கூடிய ஜாதக அமைப்பு /யோக அமைப்பு எது?

ஒரு சிறிய விளக்கத்துடன் பதிவை நிறைவு செய்கிறேன் ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் அமைந்துவிட்டால் உங்களுடைய வாழ்க்கையின் அடிப்படை தேவைகள் பூர்த்தி அடைந்துவிடும். 

மனிதன் ஆசைபடுவதெல்லாம் நிறைவேறவேண்டும் என்றால் அதற்கு அவன் கொடுத்து வைத்திருக்கவேண்டும் அதற்கு தகுந்தாற்போல் ஜாதக அமைப்புகள் அமைந்திருக்கும், மனிதன் வாழ்வதற்கு தேவையான அடிப்படை அத்தியாவசியமான தேவைகள் அனைத்தும் தடைபடாமல் கிடைக்கும் அமைப்பு என்பது வேறு, சிலருக்கு அந்த அடிப்படை வசதிகள் கூட தட்டுப்பாடுகள் ஏற்படும் உதாரணமாக குடி இருக்க வீடு, மாற்றி உடுத்த உடை, பசிக்கு ஒரு வேளை உணவு இந்த மூன்றும் எல்லோருக்கும் அவசியம் இது எல்லோருக்கும் கிடைத்தால் அவர்கள் இறைவனின் கருணைக்குரியவர்கள் என்று பொருள், இந்த மூன்றும் சரியாக கிடைக்காதவர்கள் இந்த நாட்டில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவர்கள்தான் பூர்வ புன்னிய பாக்கியம் இல்லாதவர்கள் தர்மகர்மாதிபதி யோகம் இல்லாதவர்கள் என்று பொருள்.

சிலருக்கு தன் தேவைகள் நிறைவேறும் ஆனால் குடும்பத்தாரின் தேவைகள் நிறைவேறாது இது ஒரு வகை ஜாதக அமைப்பு அதாவது தன் குழந்தைகளுக்கு பள்ளிக்கூட கட்டணம் கட்ட பணம் இருக்காது ஆனால் தகப்பனை யாரோ ஒருவர்  வந்து ஏசி காரில் அழைத்து சென்று வசதியான ஹோட்டலிலில் தங்க வைத்து விதவிதமாக உடைகளை உடுத்த வாங்கி கொடுத்து உண்ண உணவு அளித்து வீட்டில் இறக்கிவிட்டு செல்வார்கள் இது ஒரு விதம், தன்மகனுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு  வாங்கி தர இயலாது ஆனால் வேறு ஒருவனினின் மகனுக்கு சிபாரிசு செய்து வேலை வாங்கி தந்துவிடுவார்.

இதைத்தான் தன் சொந்த தேவை நிறைவேறினால்  தன் குடும்பத்தாரின் தேவை நிறைவேறாது, தன் குடும்பத்தாரின் தேவை நிறைவேறினால் தன் சொந்த தேவை நிறைவேறாது இது ஒரு விதமான ஜாதக அமைப்பு.

இதற்கு என்ன ஜாதக அமைப்பு என்பதை பின் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

தசா சந்தியில் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

தசா சந்தியில் பிரச்சனைகள் வெடித்து சிதறும், யோகதிசையும் பங்கமாகி விடும் 

இறையுள்ளம் கொண்ட அன்பர்களே அனைவருக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள் இந்த பதிவின் மூலம் எனக்கு தெரிந்த சில கருத்துக்களை தாங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன் ஜோதிட கேள்வி பதில் குழுமத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடந்தது, ஆனால் கார் விபத்தில் குடும்பத்தோடு மரணம் அடைந்து விட்டார்கள் என்றும் இதில் எங்கு தவறு நடந்து உள்ளது என்றும் ஜோதிடத்தின் மீதும் ஜோதிடர்கள் மீதும் நம்பிக்கை இழந்தது போன்ற பதிவாக இருந்தது. முதலில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம், 

நான் அடிக்கடி எழுதிவருவேன், அதிர்ஷடமும் மரணமும் கண்ணுக்கு தெரியாதவை, தசா சந்தியில் பிரச்சனைகள் வெடித்து சிதறும், யோகதிசையும் பங்கமாகி விடும், ஜோதிடர்களின் கணிதம் கூட பொய்த்துவிடும், கண்ணை மறைத்துவிடும். குருவருள் திருவருள் குலதெய்வ அருள் தாய் தந்தைகளின் பூரண ஆசிர்வாதங்கள் ஜோதிடருக்கும் ஜோதிடம் பார்க்க வருபவருக்கும் வேண்டும், இது அனுபவ உண்மை இந்த அவசர காலத்தில் பெண் பருவ வயது அடைந்தவுடன் எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் தாங்கள் கடமை முடிந்துவிடும் என்ற பெற்றோர்களின் கடமை உணர்வு. மேலும் திருமண மண்டபத்திற்காக திருமணத்தேதி முகூர்த்தம் குறித்தல் இது போன்று பல காரணத்திற்காக தவறான முகூர்த்த திருமணத்தேதி. இதன் விளைவுகள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரும், அதுபோல சில ஒவ்வாத தசாசந்தியில் திருமணம் நடத்த தேதி குறித்தல் இதன் விளைவு குடும்ப பிரச்ச்சனை வெடித்து சிதருதல் அகால விபத்துக்களுக்கும் வழிவகுத்துவிடும், மேலும் தோஷமான ஜாதகங்களை அவசரகதியில் திருமண நடத்தி வைத்து வேதனைகளை விலை கொடுத்து வாங்கி அனுபவிப்பது, இப்படி இருக்க ஜோதிடரை, ஜோதிடத்தை குறைகூறுவதா? இல்லை இதுதான் விதி என்று விட்டு விடுவதா? 

சில தோஷ ஜாதகங்களை பெண்ணாக இருந்தால் 27 வயதுக்கு மேல் ஆணாக இருந்தால் 30 வயதுக்கு மேல் கட்டாயாம் காத்திருந்து திருமணம் செய்ய வேண்டும், அது போன்று உங்கள் வசதிக்காக தோஷமான நாட்களில் திருமணமண்டபத்திற்காக திருமணத்தேதி குறிக்க கூடாது. மிக மிக முக்கியாமானது ஜாதாகருக்கு ஒவ்வாத தசா சந்தியில் எந்த காரணத்திற்காகவும் சோர்த்து வைக்க கூடாது, தசா சந்தி, தோஷ திருமணநாள், தோஷ ஜாதக திருமண வயது இதை கட்டாயம் பார்த்து முடிவு எடுக்க வேண்டும்,  ஜோதிடம் எங்கு தொட்டாலும் வழுக்கும், வாக்கு பலிதமும் வேண்டும். அனுபவ அறிஞர்களை நாடி குரு கணிக்கை செலுத்தி தேவைகளை பெற்றுக்கொள்ளுங்கள். நல்ல குருவை அடைய தினமும் இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்.

மேற்கூறியவைகளை கடைபிடக்காமல் செய்தால் பின்வரும் விளைவுகளை சந்திக்க நேரும், அவைகள் குடும்பத்தில் ஒற்றுமை இன்மையை உண்டு செய்யும், தாமத குழந்தை பாக்கியம், நிரந்தரபிரிவு, நிச்சயத்திற்கு பின் மணமகன் அல்லது மணமகள் அகால மரணம், திருமணநாளிலே பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிதல், கோரவிபத்துகளில் குடும்பமே மரணம் அடைதல், ஒரு குழந்தை பெற்ற பிறகு நிரந்தர பிரிவு அடைதல்.

Post a Comment

0 Comments