Ticker

6/recent/ticker-posts

எல்லாம் விதிப்படிதான் நடக்கிறது என்றால் அந்த விதி எங்கிருந்து வந்தது ? R

எல்லாம் விதிப்படிதான் நடக்கிறது என்றால் அந்த விதி எங்கிருந்து வந்தது ? 

அதை யார் வகுத்தது ஒரு பொருளை தாயார் செய்யும் நிறுவணம் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து பொருட்களையும் மிகச்சரியாக உற்பத்தி செய்யபடுகிறது அவை சரியாக உற்பத்தியாகவில்லை என்றால் உற்பத்தி செய்யக்கூடியவர்களின் தவறு ஆகும்  உற்பத்தியில் தவறு ஏற்பட்டால் சரிசெய்து கொள்ளலாம் ஆனால் மானிட பிறவி உற்பத்தியில் பல எண்ணற்ற பாகுபாடுகள் ஏன் ஏற்படுகிறது ? உற்பத்தி செய்பவர்களின் குறைபாடு என்று கூறலாமா? அப்படி என்றால் என்ன குறைபாடு எங்கே ஏற்படுகிறது?

இங்கேதான் ஊழ் வினை பயன் ஒரு கரு உருவாக ஊழ்வினை பயன் தேவை விதி கர்மா இல்லை என்றால் மாமிச பிண்டம் இல்லை நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என் மனைவி நன்றாகத்தானே இருக்கிறாள் எனக்கு பிறந்த குழந்தை இப்படி பிறந்து விட்டதே நான் என்ன பாவம் செய்தேன் என்று பிண்டம் புலம்புகிறது அல்லவா அந்த பாவம் நன்மை தீமைகள் எங்கே எப்படி செய்யபட்டது.

கரு உருவான மாதம்முதல் பிறக்கின்ற காலம்வரை மருத்துவர்களால் கவனிக்கப்பட்டு மாதம் மாதம் கன்கானிக்கபட்டு மருந்து வழங்கபட்டு பத்துமாதம் கழித்து பிறக்கும் குழுந்தை அறிவு உடல் வளர்ச்சி எதிர்ப்புசக்தி வசதி வாய்ப்போடு பிறக்க வேண்டும் அல்லவா ஆனால் பிறப்பில் ஏதாவது ஒரு விதத்தில் குறைபாடு வந்துவிடுகிறது எதானால் மருத்துவர் சரியாக கவனிக்கவில்லையா?

இங்கே கர்மவினை வேலை செய்கிறதா? ஓர் அறிவு முதல் ஐந்து அறிவு வரை பிறப்புகள் எல்லாம் நல்லவிதமாமாகத்தான் செயல்படுகிறது அங்கங்கள் உறுப்புகள் எல்லாம் திடகார்த்தமாக குறைபாடு இல்லாமல் பிறப்பு உற்பத்தி ஆகிறது ஏற்றத்தாழ்வு கிடையாது

இந்த ஆறாவது அறிவு மாமிச பிண்டத்திற்கு மட்டும்தான் கர்ம வினை உண்டு வினைக்கு ஏற்றாற்போல் பிறப்பும் வாழ்வும் ஏற்தாழ்வுடன் அமைந்துவிடுகிறது வினைபடி மனம் அலைந்து திரிந்து வாழ்ந்து மடிகிறது.

ஒரு கர்மா உருவாக யார் காரணம் ? அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்

சகோதர காரகன் பூமிகாரகன் தன் பகை கிரகங்களோடு பயணம் மேற்கொண்டால் உன் சகோதரன் மனை மண் உன்னை விட்டு போக போகிறது நீ என்னதான் பாசம் வைத்தாலும் சுக்கிர உறவு வரும் வரை உன்னுடன் உறவாடுவான் சுக்கிரனோடு செவ்வாய் இனைந்தபிறகு நீ கொஞ்சும் கொஞ்சமாக வெளியேற்றபடுவாய்.

செவ்வாய்யோடு பகை கிரகங்கள் சேர்க்கை பெரிய இழப்புகள் உண்டு உதாரணம் சனி தொடர்பு ஏற்பட்டால் நஷ்டம் கஷ்டம் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தும் தாமத திருமணம் அதை நடத்தி காட்டும் கேது இணைவு ஏற்பட்டால் சகோதரனால் பயன் இல்லை.

மேற்கொண்ட இணைவு குருவிற்கு சம்பந்தம் ஏற்பட்டால் பட்டயம் பட்ட படிப்பை தொடரலாம் பொறியில் துறையில் தடை தடங்களுடன்.

பிறப்பு ஜாதகத்தில் யாருக்கெல்லாம் மேசத்தில் செவ்வாய் தனுசில் செவ்வாய் சிம்மத்தில் செவ்வாய் மிதுனத்தில் செவ்வாய் இருக்கிறதோ தற்சமயம் சகோதரனால் பிரச்சனைகளை வம்பு வழக்கு பஞ்சாயத்து பிரிவு முறிவு சொத்துபிரச்சனைகள் ஏற்படுத்திவிடும்.

விநாயகர் முருகப்பெருமான் வழிபாடு நம்பிக்கை தரும்.

உன் நோயை மரணத்தை வெல்லமுடியாத காக்க முடியாத பணம் எதற்காக என்று யோசித்துபார்!
நீ சேர்த்த கோடிகள் உன் மரணத்தை மாற்றாது உன் நோய்களுக்கு மருந்தாக இருக்காது.
மைக்கல் ஜாக்சன் ஒரு மருத்துவ படைகளோடு பல்லாயிரம் டாலர்கள் சம்பளம் கொடுத்து தான் நீன்ட ஆயுலோடு வாழ்ந்துவிடவேண்டும் என்று வாழ்ந்து வாழ்ந்தான் இறுதியில் மரணம் அவனை சீக்கிரம் வென்றது.
அவன் சேர்த்த பணம் என்ன செய்ய முடிந்தது!
மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் மரணத்தை பணம் வெல்ல முடியவில்லை!
யார் வென்றார்கள்!
நோய் இல்லாத வாழ்க்கைதான் கோடீஸ்வரன் வாழ்க்கை

அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே.  -திருமந்திரம்
பொருள்:-
உடல் சுருங்க,சுருங்க ஆரோக்கியமாகும்.குறைவாக உண்பதால் பல நன்மைகளை பெறலாம்.நீல நிற முடைய கழுத்தும், கையில் மண்டை ஓடும் சுமந்திருக்கும் சிவன் போல் ஆகலாம்.
குறைவான உணவை உண்பது ஆரோக்கியத்தின் சூட்சமம்.

உடல் நலம் ஒவ்வோரு மனிதனுக்கும் மிக முக்கியமானது மிக பெரிய சொத்து நோய் இல்லாத வாழ்க்கை.

நோய் இல்லாத வாழ்க்கை வாழ்வது எப்படி?
நீங்கள் என்ன சொத்து சுகம் கார் ஆள்கள் சேனை பணம் நகை உறவினர்கள் நண்பர்கள் இருந்தாலும் நீங்கள் திடமாக இருந்தால்தான் அதனால் நீங்கள் சுகத்தை அடையலாம்.
நோயால் படுத்துவிட்டால் உன்யோசனை அங்கு இருக்காது அடுத்தவர்களின் யோசனை கட்டுப்பாட்டிற்குள் சென்று விடுவீர்கள் தைரியம் வீரம் திமிர் விதன்டவாதங்கள் எல்லாம் அடங்கி விடும்.
மருத்துவர்களின் ஆலோசனைக்கு மாறிவிடுவீர்கள் மரணபயம் வந்து மனைதை அச்சபடுத்தும் குன்ன வைத்துவிடும். நீங்கள் சேர்த்து வைத்த எதுவும் உங்களுக்கு பயன்படாது.
எப்படி என்பதை பார்ப்போம் நோய் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள் அதுதான் அந்தவாழ்க்கைதான் கோடீஸ்வரன் வாழ்க்கை.
தொடரும்.

சக்கரவர்த்தி கலியபெருமாள்

Post a Comment

0 Comments