குருவேசரணம் குருவே துணை எல்லாம் சிவன் செயல்
இந்த பதிவு ஜோதிடர்களை சங்கடபடுத்தலாம் அல்லது எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம் எனக்கு அதைபற்றிய எந்த தயக்கமும் இல்லை.
பதிவிற்கு வருகிறேன் நான் அடிக்கடி எழுதுவேன் அதைத்தான் மீண்டும் எழுதுகிறேன். ஜாதகம் என்பது நாம் செய்த கர்மவினை பலன்கள் இதில் கர்மா என்பது (சனி) நானாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அரசனாக இருந்தாலும் ஆன்டியாக இருந்தாலும் அனைத்து கர்ம வினைகளையும் அனுபவித்தே தீர வேண்டும். நான் மாவட்ட ஆட்சியராக இருக்கிறேன் நான் மிகச்சிறந்த ஆசிரியராக இருக்கிறேன், நான் மிகச்சிறந்த மருத்துவர் நான் மிகச்சிறந்த ஜோதிடர் எனக்கு எதிர்காலம் பற்றி நன்கு தெரியும் நான் கர்மாவிலிருந்து பாதுகாத்து கொள்வேன் எனக்கு மருத்துவம் தெரியும் நோயிலிருந்து பாதுகாத்துகொள்வேன் என்பதெல்லாம் கர்மவினையில் உங்கள் பாட்சா பலிக்காது.
எத்தனையோ ஜோதிடர்களின் இறுதி கதை மிகசோகமாக வருமையிலும் தீராத வியாதியிலும் வாடி வதங்கி காலத்தை கடந்து வருகிறார்கள். எனக்கு இந்த வியாதி வரப்போகிறது என்பதை கூட ஜோதிடர்களால் கணிக்க இயலாமல் தவித்து மரணத்தை தழுவுகிறார்கள் வருமையில் வாழ்க்கை போராட்டம் வீடு வீடாக பையை தூக்கிகொண்டு ராஜா மமதையில் காலத்தை கழித்தும் ஊருக்கெல்லாம் கணித்து விளம்பரபடுத்திகொண்டு தனக்கும் தன்குடும்பதாருக்கும் கணித்தும் கணிக்க இயலாமலும் திடிர் வறுமை கடன் தொல்லைகளால் அடுத்த தசை நன்றாக இருக்கும் அடுத்த புத்தியில் தெளிந்து விடலாம் சனி கோட்சார சஞ்சாரம் சரியில்லை என்று வருமை வந்த பிறகு அதற்கு ஏத்தார்போல ஜாதக்கணிதத்தை வளைத்து தன்னை தேற்றிகொள்வது என்பது இயலாமை ஊருக்கு கணித்து உனக்கு உன்னைபற்றி கணிக்க இயலாத என்ன!
கணக்கன் தன்கணக்கை தான் அறியான்! கண்டிப்பாக உன்னால் உன்னைபற்றி அறிய இயலாது அங்கே விதி என்ற கர்ம வினை முன்வந்து நின்று உன்னைவாட்டி எடுக்கும்.
கர்மா தொழில் செய்பவர்கள் வினையால் விளைந்த ஜாதகத்தை கணித்து பலன்களை சொல்லும்போது நான் என்ற அகங்காரத்தை நீக்கிவிட்டு குருவை குலதெய்வத்தை ஈசனை நினைவில்கொண்டு இறைவனின் அருளால் நடக்கின்றன நடக்க இருக்கிறது என்று பலன்களை உரைக்கவேண்டும் தவிர என்னால் நடக்க இருக்கிறது நான் கூறியதால் செல்வம் வந்தது குழந்தை பிறந்தது என்று கூற கூடாது எல்லாம் அவன் செயல் ஈசன் செயல் என்ற நினைவோடு கடக்கவேண்டும்.
கர்மாவைபற்றி கூறி வாங்கும் கர்மகாசுகள் கர்மத்திற்கே அர்பணித்து விடவேண்டும் அப்படிசெய்தால் வருமை நெருங்காது. நான் நன்றாக பலன் கூறுகிறேன் என்றுகடைவிரித்து அமர்ந்தால் கடைசியில் வருமை இயலாமை நெருக்கடி நோய்களில் வாடி வாழ நேரிடும்.
அதை தெரிந்துதான் ஆசிரியராக குருவாக மாறிவிட்டார்கள் பல ஏழைகளை உருவாக்கி தெருவில் நிற்கவைத்து வேடிக்கைபார்க்க!
ஜோதிடத்தை கற்றுக்கொண்டு கோடிகளை பார்க்கலாம் என்ற நினைவில் இன்றைய மாணவர்கள். இன்றைய மாணவர்களுக்கு கற்றுகொடுக்கும் குருக்கள் கடைவிரித்து பார்த்து இருந்தால் தெரிந்திருக்கும். ஒருநாளைக்கு எத்தனை அப்பாய்மெண்டகள் என்று.
வழிகாட்டுங்கள் கைகாட்டியாக இருங்கள் வேறு தொழிலை உருவாக்கி கொள்ளுங்கள் ஜோதிடம்தான் தொழில் என்றால் முழுஅர்பணிப்பில் உண்மையாக நேர்மையாக நடமாடும் சிவனாக வாழவேண்டும்.
எவன் ஒருவனுக்கு கர்மாவோடு (சனி) ஜீவன் (குரு) இருக்கிறதோ கர்மாவோடு வாழ்ந்துவிடுவான் கர்மா என்ன ஜீவனுக்குதருமோ அதைபற்றிதான் அவன் என்னம் மனம் செயல்படும் கர்மா அவனுக்கு என்ன தரஉள்ளதோ அதைமட்டும்தான் அவன் உணர்ந்து செயல்படுவான்.
சில ஆண்டுகளுக்கு முன் மதுரை நடமாடும் சிவன் திரு பாலசுப்பிரமணியம் ஐயா (பாலஜோதிடம் ஆசிரியர்) தலைமையில் பல யாகங்களை நடத்திய வலாஜபேட்டை தன்வந்தரி ஆரோக்கிய பீடத்தின் நிறுவனர் திரு முரளிதரசுவாமிகளால் உலக ஜோதிடர்கள் நலன் கருதி மிகப்பெரிய யாகத்தை நடத்தினார்கள்.
ஜோதிடம் என்பது பார்த்தவுடன் பலன் தந்து விடாது காலம் கனிந்து வரவேண்டும்!
ஜோதிடம் என்பது விதியை மாற்றும் அற்புத கலை அல்ல கர்ம வினைக்கேற்ப காலைத்தைகாட்டும் ஒரு கணிதம். கர்ம வினைக்கேற்ப வாழ்வை அனுபவித்து வாழவைக்கும்.
கர்ம வினை பலன் என்பது என்ன? தொடர்ச்சி -19
திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி!
நம் கரு உருவான காலத்தில் இருந்து நம்முடைய கர்ம வினையை அனுபவிக்க தொடங்கி விடுகிறோம் பாவத்திற்கு தண்டனை, புன்னியத்திற்கு புகழ் என்ற கர்ம வினை தத்துவத்தின் அடிப்படையில், நம் கர்மவினை நல்லதாக இருந்தால், நம் கரு நல்லவிதமாக வளரும், நம் கரு கொடுத்த தந்தை, நம் கரும் வளர்க்கும் தாய், நம்முடைய குரு, நம் சகோதரர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், மனைவி, மக்கள், நம் ஜாதகம், நம் ஜென்மம் எல்லாம் நல்ல விதமாக அமைந்து விடும், அதுபோல கர்மவினை நல்லதாக இல்லை என்றால் எல்லாம் கெடு பலனாகவே நடந்து கொண்டு இருக்கும், பூமியில் பிறக்கும் எந்த ஒரு ஜாதகருக்கும், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே, ஒன்பது கிரகங்களாக மாறி, ஜாதக கட்டங்களில் அமர்கிறது அவரவர் வினைகளே வீடுகளையும் தீர்மானிக்கிறது. அவரவர் வினைகளே கிரகங்களாக மாறி இல்லங்களில் அமர்ந்து வினைகளுக்கு ஏற்ப தசைகளை அமைத்து கோட்சார கிரக சஞ்சாரம் மூலம் நம்மை நம் வினைகளுக்கு ஏற்றபடி வழாவைக்கிறது
நம் கர்ம வினை பலன்கள் நம் தாய் மூலமாகவும், தந்தை மூலமாகவும், நம் சகோதரர்கள் மூலமாகவும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மூலமாகவும் மனைவி, மக்கள் மூலமாகவும், ஏழரைச்சனி காலத்திலும், அஷ்டமச்சனி காலத்திலும், அர்த்தாஷ்டமச்சனி காலத்திலும், கன்டச்சணி காலத்திலும், யோக, அவோயாக தசை காலத்திலும் பாவ விமோசனமாக எல்லா விதமான கெடு பலன்களையும் அனுபவித்து விடுவோம் இதுதான் கர்ம வினை பலன். எனவேதான் தீய குணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள், இறைவன் அந்த மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான், வாழும் காலத்தில் நன்மை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன் ஆகிறான். எனவே நல்லதே செய்யுங்கள், நல்லதே நினையுங்கள் நாம் செய்த நல்வினையும், தீவினையும் ஒன்றுக்கு ஆயிரமாகப் பல்மடங்கு பெருகி, விதை போல, ஒன்று பலவாக வளர்ந்து வரும்.
குருவேசரணம் குருவடிசரனம் திருவடிசரனம்
திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி
தசா சந்தியில் பிரச்சனைகள் வெடித்து சிதறும், யோகதிசையும் பங்கமாகி விடும்
குருவடிசரணம் திருவடிசரணம்
இறையுள்ளம் கொண்ட அன்பர்களே அனைவருக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள் இந்த பதிவின் மூலம் எனக்கு தெரிந்த சில கருத்துக்களை தாங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன் ஜோதிட கேள்வி பதில் குழுமத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடந்தது, ஆனால் கார் விபத்தில் குடும்பத்தோடு மரணம் அடைந்து விட்டார்கள் என்றும் இதில் எங்கு தவறு நடந்து உள்ளது என்றும் ஜோதிடத்தின் மீதும் ஜோதிடர்கள் மீதும் நம்பிக்கை இழந்தது போன்ற பதிவாக இருந்தது. முதலில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்,
நான் அடிக்கடி எழுதிவருவேன், அதிர்ஷடமும் மரணமும் கண்ணுக்கு தெரியாதவை, தசா சந்தியில் பிரச்சனைகள் வெடித்து சிதறும், யோகதிசையும் பங்கமாகி விடும், ஜோதிடர்களின் கணிதம் கூட பொய்த்துவிடும், கண்ணை மறைத்துவிடும். குருவருள் திருவருள் குலதெய்வ அருள் தாய் தந்தைகளின் பூரண ஆசிர்வாதங்கள் ஜோதிடருக்கும் ஜோதிடம் பார்க்க வருபவருக்கும் வேண்டும், இது அனுபவ உண்மை இந்த அவசர காலத்தில் பெண் பருவ வயது அடைந்தவுடன் எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் தாங்கள் கடமை முடிந்துவிடும் என்ற பெற்றோர்களின் கடமை உணர்வு. மேலும் திருமண மண்டபத்திற்காக திருமணத்தேதி முகூர்த்தம் குறித்தல் இது போன்று பல காரணத்திற்காக தவறான முகூர்த்த திருமணத்தேதி. இதன் விளைவுகள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரும், அதுபோல சில ஒவ்வாத தசாசந்தியில் திருமணம் நடத்த தேதி குறித்தல் இதன் விளைவு குடும்ப பிரச்ச்சனை வெடித்து சிதருதல் அகால விபத்துக்களுக்கும் வழிவகுத்துவிடும், மேலும் தோஷமான ஜாதகங்களை அவசரகதியில் திருமண நடத்தி வைத்து வேதனைகளை விலை கொடுத்து வாங்கி அனுபவிப்பது, இப்படி இருக்க ஜோதிடரை, ஜோதிடத்தை குறைகூறுவதா? இல்லை இதுதான் விதி என்று விட்டு விடுவதா?
சில தோஷ ஜாதகங்களை பெண்ணாக இருந்தால் 27 வயதுக்கு மேல் ஆணாக இருந்தால் 30 வயதுக்கு மேல் கட்டாயாம் காத்திருந்து திருமணம் செய்ய வேண்டும், அது போன்று உங்கள் வசதிக்காக தோஷமான நாட்களில் திருமணமண்டபத்திற்காக திருமணத்தேதி குறிக்க கூடாது. மிக மிக முக்கியாமானது ஜாதாகருக்கு ஒவ்வாத தசா சந்தியில் எந்த காரணத்திற்காகவும் சோர்த்து வைக்க கூடாது, தசா சந்தி, தோஷ திருமணநாள், தோஷ ஜாதக திருமண வயது இதை கட்டாயம் பார்த்து முடிவு எடுக்க வேண்டும், ஜோதிடம் எங்கு தொட்டாலும் வழுக்கும், வாக்கு பலிதமும் வேண்டும். அனுபவ அறிஞர்களை நாடி குரு கணிக்கை செலுத்தி தேவைகளை பெற்றுக்கொள்ளுங்கள். நல்ல குருவை அடைய தினமும் இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்.
மேற்கூறியவைகளை கடைபிடக்காமல் செய்தால் பின்வரும் விளைவுகளை சந்திக்க நேரும், அவைகள் குடும்பத்தில் ஒற்றுமை இன்மையை உண்டு செய்யும், தாமத குழந்தை பாக்கியம், நிரந்தரபிரிவு, நிச்சயத்திற்கு பின் மணமகன் அல்லது மணமகள் அகால மரணம், திருமணநாளிலே பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிதல், கோரவிபத்துகளில் குடும்பமே மரணம் அடைதல், ஒரு குழந்தை பெற்ற பிறகு நிரந்தர பிரிவு அடைதல்
குருவடிசரணம் திருவடிசரணம்
சிவ சிவ சிவாயநம ஓம்
0 Comments