தமிழ் ஜோதிடம்- ஜோதிட பதில்
அனைவருக்கும் அநேக நமஸ்காரங்கள்
மாதா பிதா குரு தெய்வங்கள் மகான்கள் சித்தர்களின் திருவடிகளை வணங்கி இந்த பதிவை பதிவிடுகிறேன்
எவ்வளவு கொண்டுவந்தாயோ அவ்வளவும் அனுபவிக்கவேண்டும்
நான் இதுநாள் நாள் வரை கண்ட படித்த உணர்ந்த உணர்த்தபட்டவைகளை எழுதுகிறேன்.
நான் அறிந்த, புரிந்து கொண்ட, அற்புத ஜோதிடம் பல பதிவுகளாக எழுத இருக்கிறேன் இறை அருள் உங்களின் ஆதரவோடு பதிவிட போகிறேன் திரும்ப திரும்ப பதிவுளை படித்து புரிந்து கொள்ளுங்கள்.
முதல் கேள்வி- ஜோதிடம் உண்மையா? ஆம் உண்மையே - நான் பதிவிடவுள்ள அனைத்து பதிவுகளையும் புரிந்து வாசித்து உணர்ந்தால் மட்டுமே தெளிவு பெற முடியும். இரண்டாவது கேள்வி ஜோதிடத்தை ஒருவாரத்தில் படித்து விடாலாம் ஒருமாதத்தில் படித்து உணரலாம், அல்லது ஒரு வருடத்தில் உணரலாம் என்ற தப்பான கணக்கில் இதை தொடராதீர்கள் ஜோதிடம் பயில இந்த ஜென்மம் போதாது ஒரு குறிப்பிட்ட காலம் அடிப்படைகளை புரிந்து கொண்ட பிறகு உங்களுக்கு பிரபஞ்சம் தினம் தினம் கற்று கொடுத்து கொண்டே இருக்கும்.
பலர் வாழ்க்கையில் ஜோதிடர் என்ற மாய உருவில் விளையாண்டு கடைசியில் ஜாதகனின் வாழ்க்கை கர்மாபடியே முடிந்து விடுகிறது.
ஒருவரின் கர்மா மற்றவரின் கர்மாவை கண்டிப்பாக பாதிக்கும் இதை நான் பல பதிவுகளில் எழுதி இருக்கிறேன். அது எப்படி பாதிக்கும்? என்று சில மா மேதை அறிஞர்கள் தன் தொழில் நுட்ப அறிவால் அறியமையில் உளரி இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.
மெத்த படித்த அறிஞர்கள் இந்த சிறியவன் கூட்டத்தில் உளவு பார்த்து ஊரை ஏமாற்ற வேண்டாம். சரி விசயத்திற்கு வருகிறேன் ஒரு ஜாதகம் அதாவது ஒரு கர்மா மற்றொரு உறவு கர்மாவை பாதிக்கும் அதாவது ஒருகுடும் பத்தில் ஒருவரின் ஜாதகம் மற்றொருவரின் ஜாதகம் உறவாகும் போதும் நண்பணாகும்போது தொழில் பார்ட்டனாரகும்போது மனைவியாகும்போது, அண்ணன்,தம்பி, அக்காள், தங்கை, தாய், தந்தை என அனைத்து கர்ம உறவுகளும் ஏன் குரு ஆசான் ஜோதிடர் என அனைத்து தகுதிகளையும் ஒன்று பாதிப்பை தரும் அல்லது உயர்வை தரும். பாதிப்பு என்பது மிக மிக கடுமையாக இருக்கும்.
ஜோதிடம் என்பது கர்மாவின் தொடர்ச்சி எப்படி என்பதை பற்றியும் என் சிறிய அறிவிற்கு தெரிந்த நான் உணர்ந்த ஜோதிட விடயங்களை உங்களுடன் வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன்.
நன்றி
கிரகங்கள் தரும் துயரங்கள் என்ன?
அனைவருக்கும் அநேக நமஸ்காரங்கள்
மாதா பிதா குரு தெய்வங்கள் மகான்கள் சித்தர்களின் திருவடிகளை வணங்கி இந்த பதிவை பதிவிடுகிறேன்
எவ்வளவு கொண்டுவந்தாயோ அவ்வளவும் அனுபவிக்கவேண்டும்-2
நான் இதுநாள் நாள் வரை கண்ட படித்த உணர்ந்த உணர்த்தபட்டவைகளை எழுதுகிறேன்
கிரகம் கொடுக்க நினைத்ததை மனிதன் ( ஜோதிடன், மருத்துவர், மந்திரவாதி) தடுக்க முடியாது
கிரகம் தடுக்க நினைத்ததை மனிதன் ( ஜோதிடன், மருத்துவர், மந்திரவாதி) கொடுக்க முடியாது
நீ ஜோதிடனாக மருத்துவராக மந்திரவாதியாக இருந்து கொண்டு உனக்கோ, உன் உறவுக்கோ மற்வர்களுக்கோ வரும் கர்ம வினை பிரச்சனைகளை தீர்க்கலாம் என்றால் நிச்சயம் இயலாது ! நீனாக தானாக திருந்தாத வரை நீ திருத்தி கொள்ளாத வரை கிரங்களின் தாக்குதல் தொடர்ந்து வந்து உன்னை தொந்தரவு செய்யும்.
கர்ம வினைகள் குறைய வேண்டும் என்றால் உன்னை நீ உன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் திருந்தி வாழ வேண்டும் இதுவே மிகப்பெரிய பரிகாரம் இறைவனுக்கும் மனத்திற்கும் மட்டும்தான் இறைதொடர்பு உண்டு. உன் கர்ம வினை கணக்குகள் அனைத்தும் மாயகிரகங்களின் சாய (ராகு கேது)கிரகங்களின் கைகளில் உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது கோட்சாரம் நகரும் போது நீ படும் பாட்டை பார்த்துதான் தெரிந்து கொள்ள முடியும்.
பாவகிரகங்களின் நகர்வுகள் கோட்சாரம் தசாக்கள் நீ யார் என்பதை வெளிபடுத்திவிடும்.
நீ கேவளபடுகிறாய் அவமானபடுகறாய் கடனாளியாகிறாய் உன் சொத்தகளை இழக்கிறாய் நோய் வாய் படுகிறாய் என்றால் கர்ம வினை தான்டவத்தில் இருக்கிறாய் என்று பொருள்.
இவைகளை எல்லாம் நீயாய் தேடிக்கொள்வாய் உன்னை அழிக்க உறவுகளாக நட்புகளாக தேடிவந்து சேர்ந்துகொள்வார்கள், நீயாகவும் தன்னைத்தானே உட்படுத்திக்கொள்வாய், நீ அப்போது நல்லவர்களுக்கும் துரோகம் செய்ய ஆரம்பித்து விடுவாய்.
தனித்த கிரகங்கள் ஏதும் செய்து விடாது தன்னை மாய்த்து கொள்ளும் தவிர, மற்ற கிரகங்களோடு இணைவு பெறும் போது வினைகளுக்கு ஏற்ப தாண்டவம் ஆடும்.
சித்தர்கள் மகான்கள் ஆசான்கள் தாய் தந்தைகளை நினைந்து நினைந்து சரனைடயுங்கள் பாவங்கள் தீரும்.
எதற்கும் நேரம் காலம் வேண்டும்
எந்த பூஜைகளும் பரிகாரங்களும் நியாமான கோரிக்கையாக இருந்தால்தான் பலன் தரும். அதற்கு அவரவர் ஜாதகத்திலும் அந்த அமைப்பு வேண்டும். எந்த பரிகார பூஜைகளும் விதியை மாற்றி விடாது, அப்படி இருந்தால் எல்லோரும் பரிகாரம் செய்து கொண்டு விதியை மாற்றிவிடலாம்.
ஜோதிடம் ஜோதிடர்
ஜோதிடம் மூலம் கர்ம வினை பலன்களை மட்டும் தான் அறிந்து கொள்ள முடியும, ஜோதிடர்கள் மூலம் கர்ம வினை பலன்களால் நாம் பெறக்கூடிய நல்லவை கெட்டவைகளை அறிந்து கொள்ள முடியும் கர்ம வினை அடிகளை ஜோதிடர்கள் குருக்கே நின்று தடுக்க முடியாது ஒவ்வொருவரும் பூர்வ ஜென்ம புண்ணியத்திற்கு ஏற்ப சுப அசுப பலன்களின் கால அளவுகள் நடைபெறும் காலம் மாறுபடும் நான் மிக நல்லவன் எனக்கு ஏன் இப்படி சோதனை என்றால் 5 ம் 9ம், ஒன்பதுக்கு 11 ஆம் இடமும், உனக்கு 11 ஆம் இடமும் என்ன சொல்கிறதோ அந்த வினைகளை அனுபவித்தே தீரவேண்டும்.
ஜோதிடம் பார்த்த உடன் பலன் தந்துவிடாது ஜோதிடர் பார்த்த உடன் பாவம் தீர்த்து விடாது புண்ணியம் செய்திருக்கவேண்டும் மகான்களை தரிசித்து சரனாகதி அடைந்து வாருங்கள் உங்கள் கர்ம வினை கணக்குகளை அவர் பெற்றுக்கொண்டு உங்களுக்கு விமோசனம் தருவார்கள்.
வாழ்க நலமுடன்
சக்கரவர்த்தி கலியபெருமாள்
0 Comments