Ticker

6/recent/ticker-posts

ராசியான அதிஷ்டமான நேரத்தை தேர்வு செய்ய என்ன செய்யவேண்டும்? R

குருவே சரணம்!

முகூர்த்தம் தேர்வு எப்படி?

ஒரு முகூர்த்தம் குறிப்பது அதாவது நிச்சயம் செய்ய, திருமண நேரம் குறிக்க பந்த கால் நட காதுகுத்த மனைமுகூர்த்தம் செய்ய நாம சூட்ட உங்கள் ஊருக்கு அருகில் உள்ள அனுபவம் நிறைந்த கைராசியான ஜோதிடர் பஞ்சாங்ககாரரை சந்தித்து தட்சனை கொடுத்து ஆலோசனை பெறுவது சிறப்பு.

முகநூலில், இன்பாக்ஸில் பார்ப்பது, ஆன்லைனில் பார்பது எல்லாம் சரியான தேர்வு அல்ல. முடிவு செய்து கொள்ளுங்கள் யாரிடம் பார்க்கலாம் என்பதை.

வீனாக காலத்தையும் நேரத்தையும் செலவு செய்ய வேண்டாம் முகநூலை கற்றுக்கொள்வதற்கும் அனுபவத்தை பெறுவதற்கும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

உன்மனமே உன் வினையை உண்டு பன்னும், நீ செய்யும் பாவத்திற்கும் சாபத்திற்கும் உன்மனமே காரணம் (யாராவது நமக்கு சாதாமாக பலன் கூறமாட்டர்களா என்று மனம் ஜோதிடரை தேடிக்கொண்டே அலையும். இதுவே வினையாக அமைந்து விடும்) அன்பு மிக்க வேத ஜோதிட குழு அன்பர்களே என் சிரம்தாழந்த வணக்கங்கள், மனம் என்பது ஒரு செயலை ஆராயும்போது நல்லவைகளை மட்டும் நினைத்து இது சரி என்று முடிவெடுத்து விடும், தீயவைகள் கெடுதல்கள் மனதால் மறைக்கப்படும் இங்குதான் விதி ஆரம்பம் ஆகிறது, நல்ல தசா பலன்கள் நடக்கும்போது கெடுதல்களிலுருந்து காப்பற்றபடுவீர்கள் ஆனால் கெடுதாலான தசாபலன்கள் நடக்கும்போது கர்மவினை பாவபலன்களை நிறைவேற்றிக்கொள்ளும், உதாரணமாக வீடுகட்டுகிறார் என்றால் நல்ல தசை நடந்தால் வீட்டு அமைப்பு வாஸ்து படி அமையும், பணி ஆட்கள் நல்லபடி அமைவார்கள், பணசிக்கல் ஏற்படாது, ஆனால் கெடுதசை நடந்தால் எல்லாம் தலைகீழாக அமைந்து விடும் செய்கின்ற வேலை போய் பொருளாதரா சிக்கலை ஏற்படுத்திவிடும். இன்னொரு உதாரணம் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் செய்ய ஏற்பாடு செய்வார்கள் அப்போது அவசரப்பட்டு தோஷம்கழியாமல் திருமணம் செய்து வாரிசுக்கு ஏங்கி, அசிங்கம்பட்டு குடும்பம் பிரிந்து சிக்கலில் நிற்கும் நல்ல அமைப்பு இருந்தால் எல்லாம் நன்றாக ஈடேரும். இதில் விதி பெற்றோர்கள் மூலம் நல்ல இடம் விட்டால் கிடைக்காது என்று முடிவெடுத்து முடிவில் விட்டால் போதும் என்று கோர்ட்டுக்கு அலைவார்கள், யோசித்து முடிவெடுங்ள் ஜோதிடம் என்பது விதியை மாற்றும் அற்புதம் அல்ல, அல்லது அதிஷ்டத்தை தரும் சக்தி அல்ல, சந்தர்ப்பத்தை சாதகமாக்கி கொள்ள சொல்லப்படும் ஒரு வழிகாட்டி! கைகாட்டிதான்" சோதனை இல்லாமல் சுகத்தில் மிதக்கும்போது மனிதன் மாயையில் சிக்கி இறைவனை மறந்துவிடுவார்கள். உங்கள் அவசரத்திற்கும், அவசியத்திற்கும் கிரகங்கள் உடனே ஓடிவந்து யோகத்தை பன்னிவிடாது. ஒரு ஜாதகருக்கு யோகம் செய்யும் கிரகங்கள் என்று இரண்டு உண்டு, பாவம் செய்யும் கிரகங்கள் என்று நான்கு உண்டு எந்த பலுனும் செய்யாமலே வேடிக்கை பார்க்கும் கிரகங்கள் மூன்று உண்டு. இவைகள் எப்போது பயன்படும் என்பது சூட்சமம். வாழ்க்கையில் உயர்வது என்பது மலை ஏறுவது போன்றது கடினமாக இருக்கும், வாழ்க்கையில் தாழ்வது என்பது மிக எளிது மலையிலிருந்து இறங்குவது போன்றது) ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் கழியாமல் திருமணம் செய்வது, மற்றும் பொருத்தம், முகூர்த்தம் இவைகள் மூன்றும் மிக முக்கியமானவை இவற்றை யார் யார் எல்லாம் தவிர்த்துவிட்டு, திருமணம் நடத்தினார்களோ என் அனுபவத்தில், வாரிசு இல்லாமல் போதல், குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் பிரிந்து விடுவார்கள், பொருளாதாரத்தில் தடைபட்டு நிம்மதி இல்லாமல் வாழ்தல், இதனால்தான் 10 பொருத்தம் பார்த்த திருமணம் எந்த ஒரு காரணமும் இல்லாமல் பிரிந்து விடுகிறது நன்றி வேத ஜோதிட ஆராய்ச்சிகள் தொடரும்.

வேத ஜோதிட பதில் பாடம் -23 குருவேசரணம் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆசைபடுபவர்கள் என் பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் முதலில் புரியாது, அதன் பிறகு புரிந்த மாதிரி இருக்கும் அதன் பிறகு புரிய வரும் என் எல்லா பதிவுகளிலும் சில முக்கிய அனுபவ தகவல்களை எழுதி இருக்கிறேன், எல்லா பதவிகளிலும் ஒன்றுக்கொன்று தெடர்பு உள்ளதாக இருக்கும். உதாரணங்கள் 1) ராகு கேது பகவான் 3, 6, 11 ஆம் இடங்களில் யோகம் தருவார்கள், உதாரணத்திற்கு 6 ல் இராகு இருப்பதாக வைத்துக்கொண்டால் 12 ல் கேது அமர்ந்து விடும் 6 ல் இருக்கும் இராகு விதிப்படி யோகம் செய்வார் ஆனால் 12 ல் இருக்கும் கேது எப்படி யோகம் செய்வார், அதாவது 12 ஆம் இடம் என்பது கெட்ட இடம், ஒரு கெட்ட கிரகம் கெட்ட இடத்தில் வந்தால் கெடுதல் மறைந்து நன்மை உண்டாகும். சத்துரு ஜெயம் 2) 6 ஆம் இடம் எண்பது எதிரி, கடன், போட்,டி பொறாமை, வைத்திய செலவு ஆகும். இந்த இடத்தில் ராகு அல்லது கேது மேலே சொன்ன பலன்களை அழித்து விடுவார்; சத்துரு இருந்தால் தானே சத்துருவை ஜெயித்து ஜெயம் காண முடியும, போட்டி இருந்தால்தான் வெற்றி காண முடியும். 3) 6 ல் கேது இருப்பதற்கும் 6 ஆம் இடத்தை கேது பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. 6 ல் கேது இருந்தால் எதிரி, கடன், போட்,டி பொறாமை, வைத்திய செலவு இருக்காது. 6 ஆம் இடத்தை கேது பார்த்தால் எதிரி, கடன், போட்,டி பொறாமை, வைத்திய செலவுகள் எல்லாம் தோன்றி அழியும். (பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் நான் எழுதுவது அனுபவ கருத்துகள் மட்டும்தான், ஒவ்வொருவரும் கருத்துகளை Comment கள் மூலம் தெரியபடுத்துகங்கள்)

வினையால் விளைந்த வினை (ஆய்வு 11) ராசிநாதன் அல்லது லக்கனநாதன் மறைந்துவிட்டால் எவ்வளவு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் செயல்பட்டாலும் முயற்சிகள் எடுத்தாலும் ஏமாற்றமாகவும் தோல்வியாகவும்தான் காரியங்கள் ஈடேறும். இதை மனைவி நண்பர்கள் தாய் தந்தை உறவுகள் ஆதரவோடு காரியங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம் 9 ல் கேது ராகு இருந்து சனியின் சம்பந்தம் ஏற்பட்டால் தெய்வ நம்பிக்கை நிலையாக இருக்காது வேண்டிக் கொண்ட காரியங்கள் நிறைவேறா விட்டால் ஆண்டவனையும் வெறுத்து திட்டுகிற நிலை ஏற்படும். மீண்டும் அனுகூலமான திருப்பம் அமைந்துவிட்டால் வேண்டி விரும்பி ஆண்டவனை வழிபடும் மனமாற்றமும் உண்டாகும். 9 ல் சனி இருந்தால் தெய்வ நம்பிக்கை இருக்காது, 9 ல் குரு இருந்தால தெய்வம்தான் வாழ வைக்கிறது என்ற நம்பிக்கை என்ற நம்பிக்கை தீவிரமாக இருக்கும் 9 ல் ராகு கேது இருந்தால் ஆன்மீக தொடர்பு வளரும் ஆனால் சனி சம்பந்தம் பட்டால் காவி உடையில் பாவிகளாக திரிவார்கள், கேவலமும் அபகீர்த்தியும் தன் செயல்களாலேயே தேடிக்கொள்வார்கள். சமீப காலமாக சிம்மத்தில் செவ்வாய் இருந்து விருச்சக சனியை பார்த்து மருத்துவருக்கே கண்டுபிடிக்க முடியாத வியாதியால் பீதியில் கடந்தது, கடந்த சில மாதங்களில் பிரசவத்திற்கு சேர்ந்தவர்கள் ஒன்று தாய் காரணம் புரியாமல் ICU இல்லை குழந்தை இங்குபேட்டரில் வைத்து பராமரித்து வந்தார்கள். உங்கள் ஆய்விற்கே விட்டு விடுகிறேன் எத்தனை தாய் குழந்தைகள் பிரசவத்திற்கு வந்தவர்கள் நிம்மதி இல்லாமல் நிலை குலைந்து போனார்கள் தெரியுமா? மருத்துவருக்கு காரணம் புரியவில்லை நார்மலாகத்தானே அட்மிட் ஆனார்கள், ஆனால் பிரசவத்திற்கு பிறகு சீரியசாகி விட்டார்களே, உண்மையில் எத்தனை மருத்துவர்கள் மிரண்டு போகி இருந்தார்கள். இவற்றிற்கு எல்லாம் தற்சமயம் விடிவுகாலம் எல்லாம் தேறி வருகிறார்கள் இப்போது எல்லா மருந்துகளும் வேலை செய்ய ஆரம்பிக்கும். கலைஞரின் வருகை உங்களுக்கு ஆய்வு அறிக்கை தருகிறேன் என்னிடத்தில் ஒன்றும் இல்லை என்று நினைத்திவிடாதீர்கள் ஏதோ ஒன்று உண்டு இருக்கிறது, அதை பெற்றுச்செல்லுங்கள். பழம் சாப்பிட பழுக்கும் காலம் வரை காத்திருக்கவேண்டும் இல்லை என்றால் ருசி இருக்காது.

 சக்கரவர்த்தி கலியபெருமாள் 

Post a Comment

0 Comments