புனர்பூசம் குருவின் நட்சத்திரம் 16 ஆண்டுகள்- தன்வந்தரி பகாவான்
புனர்பூசம் 1 2 3 மிதுன ராசி
புனர்பூசம் 4 கடக ராசி
புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்த சித்தர் தன்வந்தரி ஆவார், ஜீவசமாதி வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ளது.
குண்டலினி சக்திகளை தன்னுள் கொண்டு ஜீவஜோதியான சித்தர்களின் ஜீவசாதியை சென்று வழிபடுங்கள் உங்கள் கர்ம வினைகள் தீரும்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
ஆழ்வார்களிலே ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மட்டுமே பாடிய ஆழ்வார் என்ற பெருமை பெற்றவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆவார். இயற்பெயர் “விப்ர நாராயணன்”. சோழ நாட்டில் மண்டங்குடி என்ற ஊரில், மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ‘திருமால் வனமாலை’யின் அம்சமாக அவதரித்தார்.
சாபம் வந்து சேரும்
குருவே சரணம்
கனவிலும் நனவிலும் கூட சித்தர்களை மகான்களை சாதுக்களை பரிகாசம் செய்வது கேலி கிண்டல் பேசுவது தரைகுறைவாக பேசுவது மகா பாவத்தில் வந்து முடியும். நான் என் அனுபவத்தில் பல அன்பர்களை பார்த்து இருக்கிறேன்.
குடும்பம் சின்னபின்னாமாகி போவதும் சுபகாரியங்கள் நடக்கமால் போவதும்ம் குடம்ப நபர்கள் சித்தம்பேதலித்து திரிவதும் கைகாகால்களில் பெரியவியாதி வந்துது பொத்துவடிவதும் தற்கொலை செய்து கொள்வதும் நான்பார்த்து இருக்கிறேன்.
ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர்-ஜீவசமாதி கோவில் (கார்த்திகை மாதத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம்)
அழுக்குச்சித்தர்
ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தரின் ஜீவசமாதி பொள்ளாச்சி to டாப்ஸ்லிப் செல்லும் வழியில் ஆனைமலையை அடுத்து உள்ள வேட்டைக்காரன்புதூரில் அமைந்துள்ளது.
அழுக்குச்சித்தர் என்று அழைக்கப்படும் அழுக்கு சுவாமிகள் தன்னுடைய இளம் வயதிலேயே (சுமார் 30 முதல் 40 வயதிற்குள்) 1919 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம் அன்று சமாதிநிலையை அடைந்தார். இவருடைய ஜீவசமாதியில் சுமார் 30 நிமிடங்கள் அமர்ந்து இருந்தாலே நம் உள்நிலையில் ஏற்படும் மாற்றங்களை உணரலாம். மிகவும் சக்தி வாய்ந்த இடம். சேலத்தில் ஜீவசமாதி அடைந்த அப்பா பைத்தியம் சுவாமிகள் அழுக்குச்சித்தரின் சீடர் ஆவார். இவ்விரு ஸ்தலங்களும், புதுவையின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்கள் பலமுறை வந்து வழிபட்டுக்கொண்டிருக்கும் கோவில்கள் ஆகும்.
குருவே சரணம்
குரு கட்டாயமாகத் தேவை. புத்தியாலும், பொறி புலன்களாலும் ஆன கட்டிலிருந்து மனிதனை விடுவிக்க குருவால் மட்டுமே முடியும்.
புனர்பூசம் -பகவான் ரமணர்
சதாசிவ பிரமேந்திராள் திருவடிச்சரணம்
கரூர் அருகே நெரூர் என்ற புண்ணிய ஸ்தலத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் என்ற பிரம்ம ஞானியின் ஜீவசமாதி அமைந்து உள்ளது இங்கு பௌர்ணமி பூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தது அற்புத சித்துக்கள் செய்தருளிய அவதூதர் இங்கு சென்று வழிபடுங்கள் உங்கள் கர்ம வினைகள் மன்னிக்கபடும்.
குருவே சரணம்.
திருவாரூர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி
திருவாரூர் தெப்பக்குளம் அருகே மடப்புரம் என்னும் பகுதியில் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ளது அற்புதம் சித்திக்குள் அருள் தன்னை நம்பியவர்களுக்கு வாழ்வு தந்த மகான். ஆவனி மதம் குருபூஜை நடைபெறும் அன்று ஆயிர கணக்கில் அன்னதானம் பிரசாதம் வழங்கப்படும்
குருவே சரணம்.
நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயாம் ( வாழ்வாதரங்களின் மூலங்கள்)
பிரபஞ்சம் பஞ்ச பூதத்தால் ஆனாது அதன் விகிதாசாரம் குறையும் போது, தன்னைத்தானே சரி செய்து கொள்ள முயலும், அப்போது பஞ்ச பூத சீற்றங்கள் ஏற்படும்.
எந்த ஆதாரத்தையும் இயற்க்கைக்கு மாறாக அழிக்கும்போது ஒரு கட்டத்தில் தன் பற்றாக்குறைகளை தானே நிவர்த்தி செய்து கொள்ள முற்படும்போது இயற்கை சீற்றங்கள் உருவாகும் அதற்கு நவக்கிரகங்களின் பெயர்ச்சிகளை சாதகம் ஆக்கி கொள்ளும் நவக்கிரக கட்டுபாட்டில் இருக்கும்போது நாம் தெரிந்தோ தெரியாமலோ அழித்த பஞ்ச பூதங்களை நவக்கிரக கட்டுபாடு இழக்கும்போது பாகைக்கு ஏற்ப தானே சரி செய்து கொள்ளும் அப்போது ஏற்படும் சீற்றம்தான் சுனாமி சூறாவாளி நிலநடுக்கம் நெருப்புக்குழம்பு.
இயற்கையை அழிக்கமால் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை ஆரோக்கியமான நீன்ட ஆயுள் உள்ள வாழ்க்கை. நாம் பாதை அழிவை நோக்கி செல்கிறது பஞ்ச பூதங்களை காத்து வணங்குவோம்.
நாம் இயற்கையை அழித்து சேர்த்து வைக்கும் சொத்தை வைத்து எதையும் சாதிக்க முடியாது வருங்கால சந்ததிகளுக்கு இயற்கையை அழிக்காமல் பரிசு அளிப்போம்.
ஸ்ரீ ஜோதி மௌன குரு ஸ்வாமிகள் (கசவனம்பட்டி சித்தர்)
குருவடிசரணம் திருவடிசரணம்
நம் நாடு ஒரு புண்ணிய பூமி என்பதில் ஐயமில்லை. எண்ணற்ற சித்தர்கள் அவதரித்த, நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் சித்தர்கள் நிறைந்த பூமி. அவர்கள் தாங்கள் வந்த நோக்கத்தினை நிறைவேற்றி, மக்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்து பிறகு, பரம்பொருளுடன் ஐக்கியமாகின்றனர்.
அப்படி வந்த மகாந்தான் கசவனம்பட்டி சித்தர். இவர் எப்பொழுது பிறந்தார், எங்கிருந்து வந்தார் என ஒருவரும் அறியார். நிர்வாணமாக பதினோரு வயது சிறுவனாக கசவனம்பட்டி கிராம மக்களால் அறியப்பட்டுப்பின் அங்கேயே தங்கிவிட்டவர். இறுதி வரை இயற்கை அன்னை அவரை வடித்த உருவிலே ஆடை எதுவுமின்றி வாழ்ந்து சமாதியடைந்தவர்.
சுவாமிகள் பேசி ஒருவரும் கேட்டதில்லை. ஆனால் அவர் பார்வை ஒன்றேபோதும் பக்தர்களின் துயர் துடைக்க. அவரை மனதில் நினைத்து நம் துன்பங்களைக் கூறினால் போதும். நம் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார்.
சக்கரவர்த்தி கலியபெருமாள்
0 Comments