Ticker

6/recent/ticker-posts

ஜோதிட விளக்கம்

தமிழ் ஜோதிடம்

வாரிசுகள் எப்படி சொத்தை இழக்கிறார்கள்?

வருமை பல வேதனைகளையும் வலிகளையும் சந்தித்து வாழும் ஒவ்வொரு பணக்காரர்களும் வருமையை கடந்துதான் வெற்றி பெற்று இருப்பார்கள் அவர்களிடம் ஏராளமான சகிப்புத்தன்மை இருக்கும். அவர் சேர்த்த சொத்துகள் வாரிசுகளிடம் செல்லும்போது அதிகாரம் மமதை ஆனவம் சகிப்புத்தன்மை இல்லாத மனதால் வருமையின் வேதனை வலிகள் தெரியாத காரணத்தால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக சொத்துகளை இழக்கிறான்.

யோகங்கள் எப்படி ஏற்படுகிறது?

நிரந்தர யோகம்? கோட்சார யோகம்? தசா யோகம்? கூட்டு கிரக தசா சந்தியோகம்? ஒத்த தசா யோகம்?மேற்கண்ட யோகங்கள் சுப யோகத்தையைம் கொடுக்கும் அசுப யோகத்தையைம் கொடுக்கும்.
பிறப்பு ஜாதகம் என்பது ஒரு சூட்சமம் நிறைந்த சலனம் இல்லாத கிரக குறியீடுகள், நிரந்த யோகம் மட்டும் பிறந்ததிலிருந்து வேலை செய்யும் மற்றயோகங்கள் எல்லாம் காலம் வரும் வரை காத்திருக்கவேண்டும். பிறப்பு ஜாதக கிரகங்களை இயக்குவது கோட்சாரம், தசா புத்தி அந்தர சூட்மங்கள், உறவுவழி கிரக இணைவுகள், மனைவி வழி கிரக இணைவுகள் புத்திரவழி கிரக இணைவுகள், வீடு மனை கிரக இணைவுகள். சூட்சமம் மூலம் தற்சமயம் நடக்கின்ற நிகழ்வுகளை தெளிவாக அறிவதே சூட்சம கணிதம் ஆகும் தொடரும்.

செவ்வாய் புதன் இணைவு பலன்கள் என்ன?

செவ்வாய் -கோபம், பொறியியல், பற்கள், சகோதரன்
புதன்- கல்வி தாய்மாமன், நண்பர்கள், தோல், கைவிரல்கள்

ஜாதகருக்கு பற்களில் பாதிப்பு, தோல் வறட்சி ஏற்படும் கைவிரல்கள் பாதிப்பு ஏற்படும், கழுத்து மற்றும் காது ஒட்டிய பகுதிகளில் நரம்புகளில் பிரச்சனை ஏற்படலாம், நரம்பு ரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்படலாம் இளம் பெண்கள், சகோதரன், தாய்மான்களுடன் பிணக்கு ஏற்படும், கல்வியில் தடைஏற்படும், தடைபட்டு மீண்டும் கல்வியில் தேற்ச்சி பெறலாம் பொறியில் தொழில் நுட்பகல்வி பயிலாலம்.
இவர்களின் நண்பர்கள் காதலி தாய்மான் கோபப்படக்கூடயவர்களாக இருப்பார்கள், இவர்களுக்கும் தடைபட்ட கல்வி ஏற்படும்.

கிரகவினையால் விளைந்த வினைகள் எவ்வாறு செயல்படுகிறது?

கிரகத்தினால் ஏற்படும் கோளாறால் மனம் பலவீனம் அடைந்து விடும் அதனால் உடல்  சோர்வடைந்து எதையும் சிந்தனை செய்யாமல் தடுத்துக்கொண்டு இருக்கும். சில கிரகத்தன்டனை உயிர்சேதம் பொருட்சேதம் அவமானம் கெட்டபெயர் ஏற்படுத்தும், சிலருக்கு உடல் உபாதைகளை உண்டு பண்ணும் சிலர் செய்தொழில் நஷ்டம் ஏற்பட்டு கடனில் முழ்க ஆரம்பிப்பார்கள், சிலருக்கு குடும்ப நபர்களாலால் அவமானத்தை சந்திக்க நேரிடும், சிலருக்கு நல்ல யோக தசையானது குடும்ப நபர்களின் தசையால் பாதிக்கபட்டு வருமானத்தை இழந்து, தைரியத்தை இழந்து, குடும்பத்தை பிரிந்து மனநலம் பாதிக்க பட்டவர்களாய் திரிவார்கள்.

வியாதியின் வேதனையும் வலிகளும் வந்தவனுக்குத்தான் தெரியும், அவமானத்தின் ரனங்கள் அவமானபட்டவனுக்குத்தான் தெரியும். தசா சந்தி கோட்சார சந்தி ஒவ்வாத தசை தோஷ திருமணநாள் கூட்டு கிரக தசா சந்தி இவைகள் எல்லாம் வந்தவனுக்குத்தான் தெரியும் 16 வருட குரு தசை ஒவ்வாமால் ஆகிவிட்டால் நீ எந்த யோகத்தில் இருந்தாலும் உன்னை தரைமட்டம் ஆக்கி விடும் 6 வருட சூரிய தசை 10 வருட சந்திர தசை 18 வருட ராகு தசை சொல்லி மாலாத கஷ்டங்கள் பொருள் இழப்பு உயிர்சேதங்கள் உற்றார் உறவினர் பகை விவசாய நட்டம் அடுத்த பெண்டீர்மோகம், நல்ல சுகத்தை காட்டி கெடுத்து விடுவான். திருமணம் ஆகி 10 அல்லது 15 வருடங்கள் வாரிசுக்கும் வம்சத்திற்கும் ஏங்கி நிற்கும் தம்பதிகளின் வேதனை அவர் அவர்களுக்கு வந்தால்தான் தெரியும். 

ஆசைகாட்டி மோசம் செய்வது போல ஒருதசை கடைகூறில் யோகத்தை கொடுத்து அடுத்து வரும் யோக தசை ஒவ்வாத தசையாக மாற்றி மிகப்பெரிய கடனாலியாக ஓடி ஒளியவைக்கும் மனதின் கற்பனையிலேயே  40 அல்லது 45 வருடம் நிலையில்லாத வேலைகளை காட்டி வாழ்க்கை ஆதாரம் இல்லாமல் உட்காரவைத்திருக்கும், நிரந்த வேலை இல்லாமல் வாழ்க்கையை ஓட்டி இருப்பார்கள். 

நம் ஜோதிடம் மூலம் குழந்தைக்கு ஏங்கி நிற்கும் தம்பதிகளுக்கும் 40 அல்லது 45 வயதை கடந்தும் ஒரு நிரந்தர வேலை இல்லாமல் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பவருக்கும், நல்ல தசை என்று கூறி 16 வருடம் 18 வருடம் எல்லாவற்றையும் இழந்து நிற்பவர்களுக்கும், நன்றாக வெளிநாட்டில் வாழ்ந்து ஊருக்கு வந்து திருமணத்தை முடித்து செல்லலாம் என்ற ஆசை கனவில்  வந்தவருக்கு பக்கத்து வீட்டு வேலித்தகறால் சிறைக்கு சென்றதும் எதிர்பாராத விபத்தால் கை கால்களை இழந்தும் சிலசமயம் உயிரை இழந்தவர்களுக்கும், திருமணம் ஆகி வாழ முடியாமல் விவாகரத்திற்கு கேட்டு நிற்பவர்களுக்கும் என்ன கூற போகிறீர்கள்? 

இவைகள் எல்லாம் கிரகங்களின் வேலை கிடையாது அவர் அவர்களின் இயலாத கரணம்தான் கிரகங்கள் எப்போதும் யோகம் செய்து கொண்டுதான் இருக்கும் கெடுக்காது என்று கூறப்போகிறீர்களா!

"வாழ்க்கையில் கிரக வேதனையில் இருப்பவர்களுக்கு திடீர் யோகம் எல்லாம் வராது பட்டினி இல்லாமல் சாப்பிட்டால் போதும்"

மனம் - சந்திரன் - கிரகங்கள்

ஒரு சிறு விளக்கம்! உன் விதிப்படிதான் மனம் எண்ணங்களை தூண்டும் செயல்படுத்த வைக்கும் அது எப்படி? சந்திரன் மனக்காரகன் அவன் சலனத்திற்கு உரியவன் எங்கெல்லாம் தப்பு நடக்கிறதோ அங்கெல்லாம் சந்திரன் இல்லாமல் நடக்காது ஒரு சில உதாரணங்கள் சந்திரன் ராகு இணைவு, சந்திரன் சுக்கிரன் இணைவு, சுக்கிரன் சந்திரன் இணைவு, சந்திரன் புதன் இணைவு, குரு சந்திரன் இணைவு, சனி சந்திரன் இணைவு, கேது சந்திரன் இணைவு, இராகு சந்திரன் இணைவு.

மேலே சொன்ன அத்தனை இணைவுகளும் பல பிரச்சனைகளுக்கு துணை போகும் அப்படி என்றால் எல்லாம் விதிப்படிதான்! விதியின் இயக்கத்தை உன் மனம் நினைத்தால் கட்டுபடுத்தலாமே!

குருவே சரணம் 

கர்ம வினையால் அமையபெற்ற ஜாதகத்தை கிரக அமைவுகளை யாராலும் மாற்ற முடியாது தசைக்கேற்ப இணைவிற்கேற்ப நன்மைகள் தீமைகள் நடந்தேறும் அனைத்து செயல்களும் உன் வினையால் நடப்பவைகளே ஏமாறுவது ஏமாற்றுவது உதவுவது வஞ்சிப்பது நல்ல பழக்கவழக்களில் நடமாடுவது மது மாதுவில் மயங்கி நிற்பது உயர்வது தாழ்வது இப்படி எல்லா காரணங்களுக்கும் கர்ம வினை கிரகங்களே பொறுப்பு இதை யாராலும் தடுக்கமுடியாது மனதை அடக்கி ஆசைகளை அடக்கி எண்ணங்களை அடக்கி துரோகங்கள் செய்யாமல் ஏதாவது ஒரு சித்தர்களின் வழியில் நடந்தால் வினைகள் குறைக்கப்படலாம்.

Post a Comment

0 Comments