ஜாதகத்தை எங்குத்தொட்டாலும் வழுக்கும் -அனுபவம் ஜோதிடம்
ஐயா வணக்கம், தாங்கள் தனியாக இருந்தால் தாங்கள் ஜாதகம் மட்டும் பார்த்தால் போதும் ஐயா, அப்படி இல்லை என்றால் எல்லா நபர்களின் ஜாதகமும் சேர்த்து பார்க்க வேண்டும், அப்படி பார்த்தால்தான் பலன் ஓரளவு கணிக்க முடியும், இதில் மற்றவர்களுக்கு வேறுபட்டு இருக்கலாம் இது என் அனுபவம், அதற்காக இப்போதே பதிவிட்டு பலன் கேட்காதீர்கள், கஷ்டத்தில் உள்ளவர்கள் ஜாதகம் பார்பது ஒருவிதம், திருமணத்திற்காக ஜாதகம் பார்பது ஒரு விதம், ஜோதிடம் கற்றுக்கொள்பவர்கள் ஜாதகத்தை மற்றவர்களிடம் பார்பது ஒரு விதம், மேலும் ஒரு ஜாதகத்தை எடுத்தவுடன் பலன் கூறிவிட முடியாது, ஜோதிடத்தை எங்கு தொட்டாலும் வழுக்கும், ஒரு விதி என்று ஒன்று இருந்தால், அதற்கு விதி விலக்கும் உண்டு, அதுபோல ஜதாகம் பார்ப்பவர்கள் தான் கற்ற யோகங்கள், ஆட்சி உச்ச அமைப்புகள் ஜாதகத்தில் இருக்கிறதா என்று பாரத்து விட்டு இல்லை என்றால், வலு இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள், ஜாதகத்தில் யோகங்களும் பங்கமாகும், பங்கங்களும் யோகம் மாகும் அதற்கு அனுபவம் குருஅருள் திருஅருள், குலதெய்வ அருள் எல்லாவற்றிற்கும் மேலாக தாய் தந்தைகளின் ஆசி வேண்டும், இவைகள் இருந்து விட்டால் ஆயக்கலைகள் 64 கும் அவர்கள் பேச்சை கேட்டு நடக்கும் இது என் அனுபவம் மாறுபாடுகள் இருக்கலாம், அவை அவர்வர்களின் அனுபவம் இதுதான் என்று என்னால் கூற இயலாது எல்லாவற்றிற்கும் மேல் எனை ஆளும் என் அப்பன் சிவன் பாரத்துக்கொண்டு இருக்கிறான், அவன் போடும் கணக்கு வேறு. நன்றி
ஜாதக பலன்கள் நடைபெறும் காலம்
கிரகங்கள் இணைவது பெறும்போது மட்டுமே பலன்கள் ஏற்படும் ஒன்று பிறப்பு ஜாதக இணைவு நிரந்தர இணைவு, மற்றொன்று கோட்சார இணைவு தசா இணைவு உறவு ஜாதக தசா இணைவு இந்த இணைவுகள் இல்லை என்றால் அதாவது வருடக்கோள்களின் இணைவு நம் ஜாதகத்திற்கு இல்லை என்றால் நாட்கள் சஞ்சார கோள்களின் இணைவை அல்லது மாத கோள் சஞ்சாரம் இணைவுகளால் நம் சில பல பலன்களை பெற்று நம் காலங்கள் நகர்த்தப்படும்.
கிரக இணைவு எவ்வாறு ஏற்படுகிறது? ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணைந்தால் என்ன பலன்கள்? அந்த இணைவு எந்த முறையில் ஏற்படவேண்டும்? எப்போது ஏற்படும்? என்பதை ஒன்றான் பின் ஒன்றாக பார்க்கலாம்
உச்சம் நீசம் ஆட்சி பகை இது வேண்டுமா? இதனால் என்ன பயன்கள்? நாடியில் தேவை இல்லையா? கண்டிப்பாக வேண்டும் தெரிந்திருக்கவேண்டும் தெரியவில்லை என்றால் நீங்கள் பலன் சொல்லும்போது தோற்றுவிடுவீர்கள் அது எப்படி ஒரு சிறிய உதாரணத்தோடு பதிவை முடித்துவிடுகிறேன் வேறு பதிவில் இதன் தொடர்ச்சிகள் பார்க்கலாம் ஒரு கிரகம் உச்சம பெற்று இருப்பதாக கொள்வோம் அந்த உச்சம்பெற்ற கிரகத்தின் இரண்டு பக்கமும் பகைகிரகங்கள் இருக்கிறது அதாவது 2 12 அதற்கு அடுத்து 7 ல் அதற்கு திரிகோணத்தில் 5 9 என எந்த கிரகங்களும் இல்லை அல்லது பகைகிரகங்கள் இருக்கிறது என்றால் அந்த உச்ச கிரகம் வலிமை இழந்து விடும்.
ஒரு கிரகம் நீசம் பெற்று தசை நடக்கும்போது அது ஒவ்வாத தசை யாக இருந்தால் குடும்பம் சிதறிபோகும் அது என்ன ஒவ்வாத தசை எவ்வாறு கண்டறிவது இதன் தொடர்ச்சி உங்களின் கமண்டை பொருத்து பதிவுகள் தொடரும், பதிவிர்க்கு தகுந்த சந்தேகங்களை கேட்கலாம்.
கர்ம வினை 🦅
செய்த பாவத்திற்கு பரிகாரம் நம் மானிட பிறப்பு ஆகும் வினைகளை அனுபவிக்க பிறந்து இருக்கிறோம் அந்த வினையில் அனைத்தும் அடக்கம் தாய் தந்தை உறவினர்கள் மகன் மகள் செல்வம் என அனைத்தும் அடங்கிய மாமிச பிண்டமே மானிட பிறப்பு இந்த பிறப்பில் எவன் ஒருவன் பின்ட பசியை ஆசையை அடக்கி வாழ தொடங்கும்போது அவன் தெளிவு பெறுகிறார் அவன் கர்மா கழிந்து சுத்த தேகத்தை அடைகின்றனர்.
கர்ம வினை கடந்து செல்கிறது நீ நினைக்கின்ற ஒவ்வொரு ஆசைகளும் அடுத்த வினைக்கு வித்தாகிவிடுகிறது.
அஸ்தங்கம் என்றால் என்ன?
சூரியன் அருகில் தன் பாதையில் சுற்றி வரும் கிரகங்களில், சூரியனுக்கு மிக அருகில் வரும் கிரகங்கள் தன் செயல்கள் மற்றும் சக்திகளை இழந்துவிடுகிறது.
கிரகங்கள் சூரியன் இருக்கும் ராசிக்கட்டத்தில் வந்ததும் அஸ்தங்கம் அடைவது இல்லை, சூரியனுக்கு அருகில் சில பாகையில் வரும்போது மட்டுமே அஸ்தங்கம் அடைகிறது.
சந்திரன் - 12 பாகை
செவ்வாய்- 17 பாகை
புதன் - 11 பாகை
குரு - 15 பாகை
சுக்கிரன் - 9 பாகை
சனி - 17 பாகை
ராகு மற்றும் கேதுக்கள் அஸ்தங்கம் அடைவது இல்லை
பூர்வ புன்னியம் வலுக்க செய்ய வேண்டும்
திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி
ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.
பரிகாரங்கள், மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள், பரிகார ஹோமங்கள் எல்லாம் பார்த்தவுடனே அல்லது படித்த உடனே அல்லது செய்த உடனே வேலை செய்யாது எல்லாவற்றிக்கும் ஒரு நேரம், காலம் உண்டு ஒன்றை பெறவேண்டும் என்றால் வேறு எதாவது ஒன்றை இழக்கவேண்டும் என்பது விதி; எது செய்ய வேண்டும் என்றாலும் நேரம் காலம் பார்த்துதான் செய்ய வேண்டும், இவைகளை எப்போது, எப்படி செய்தால் நம் பிரச்சினைகள் தீரும் தேடி பெற்றுக்கொள்ளுங்கள் விடை கிடைக்கும், அல்லது பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் விடை கிடைக்கும்.
ஜோதிட உண்மைகள்
மேச ராசி அன்பர்களே உண்மையில் நீங்கள் சும்மா இருந்தாலும் உங்கள் உறவு உங்களை காய் படுத்தும் கலவரபடுத்தும் அல்லது படுத்தி இருக்கும் (சில காலம் மட்டும்)
ரிசப ராசி அன்பர்களே ராகு தசை நடக்கும் அன்பர்களே ஊரை விட்டு கிளம்பி விடுங்கள் ஒவ்வொரு பிரச்சனையாக வரிசையில் நின்று வந்து செய்யும் பாவத்தை சேர்க்கவேண்டாம். குரு தசை நடப்பவர்களுக்கு சொல்லவேண்டாம் எல்லாவற்றையும் பிடுங்கி இருக்கும்.
மேலே சொன்ன இரண்டு ராசியில் உண்மையில் உண்மையானவர்களுக்கு கண்டிப்பாக யோகம் உண்டு, வஞ்சகதன்மை உள்ளவர்களுக்கு கண்டிப்பாக உங்களை விரட்டி விரட்டி நசுக்கும். உங்கள் எண்ணத்தை புனிதமாக்கி செயல்படுங்கள்.
நாளை அடுத்த இரண்டு ராசிகளை பற்றி பார்க்கலாம்
சக்கரவர்த்தி கலியபெருமாள் ✍
0 Comments