Ticker

6/recent/ticker-posts

நோய் R

ஜீவன்
உலக ஜீவன்கள் அனைவரும் வேறுபாடு அற்றவர்கள்
நோய் என்பது யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம்
யாருக்கு எல்லாம் கோட்சாரம் தசா புத்திகள் தசா சந்திகள்
சிக்கலாக இருக்கிறதோ அவருக்கு வியாதிகள் தீருவதற்கு சிக்கலாக இருக்கும் ஏழரைச்சனி அட்டமச்சனி 

அர்த்தாஷ்டம சனி கன்டச்சனி ராகுதசை சந்திரதசை
நடப்பில் இருப்பவர்கள் சிக்கலை சந்திப்பார்கள் பலர் மீண்டு வந்துவிடுவார்கள் சிலர் கர்ம வினைபடி மரணத்திற்கு இணையான கண்டங்களை சந்திப்பார்கள்
அதுபோல் ஆண் ஜாதகமாக இருந்தால் மிதுனம் துலாம் மீனம் கும்பம் தனுசு குரு இருப்பவர்கள் பெண் ஜாதகமாக இருந்தால் மிதுனம் துலாம் மீனம் கும்பம் தனுசு சுக்கிரன் இருப்பவர்கள் சில கண்டங்களையும் மரண பயங்களையும் சந்திப்பார்கள்.
ஆண்களுக்கு சுக்கிரன் பெண்களுக்கு குரு பிறப்பு ஜாதகத்தில் ஜீவனுக்கு பாதுகாப்பாக இருந்தால் மரணத்தில் இருந்து காப்பாற்ற படுவார்கள்.
உடனே தங்களுடைய ஜாதகத்தை எடுத்து கொண்டு எனக்கு இப்படி இருக்கிறது மரணம் வந்துவிடுமோ என்று பயம் கொள்ளவேண்டாம்.
சாதாரன பாமர மக்களுக்கும் இந்த வியாதி வருகிறது ஆனால் செல்வந்தர்களுக்கு வருகிறதை மட்டும் இந்த மீடியா (ராகு) சிறப்பு செய்தியாக சொல்லி வருகிறது ஏனோ?

சுக்கிரன் + சந்திரன் இணைவு

நீரழிவு நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு, 12 ஆம் இடத்தில் சுக்கிரன் நீரழிவு நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு, ஹார்மோன் குறைபாடுகள், வெள்ளை படுதல், தைராய்டு பிரச்சனை, கணவருக்கு வீரிய குறைபாடு உண்டு செய்யும், கண் பார்வை குறைபாடு உண்டாகும், விந்து நீர்த்து காணப்படும், கரு சிதை உருதல் ஏற்படும, கனையம், கருப்பை பதிப்பு ஏற்படுத்தும், நீர்கட்டிகள் உருவாகும்.

சந்திரன் ராகு இணைவு
மனநோய், தனியாக பேசிக்கொள்வார்கள், அமானுஷ்ய எண்ணங்கள், பயமான கனவுகள் ஏற்படும்.
குரு+ சுக்கிரன் இணைவு
காம உணர்வு அதிகம், ஆயுள் விருத்தி அடையும்.
சந்திரன் + கேது
மன விரக்தி, ஏதோ மனதில் கவலை கொண்டு இருக்கும், சதா சோகத்துடன் காணப்படுவார், தாடி இருக்கும்.
செவ்வாய்+ சந்திரன் இணைவு
செவ்வாய்+ சந்திரன் இணைவு உள்ள ஜாதகிக்கு, கணவர் சபலபுத்தி உடையவர், காம உணர்வு அதிகம் உள்ளவர் நிலைஇல்லாத மனம் கொண்டவராக இருப்பார்.
சுக்கிரன்+ செவ்வாய்
கோபக்காரி
குரு புதன் இணைவு
வழுக்கை தலை, முடி கொட்டும்

🦀🦅 ஓம் தன்வந்திரி பகவான் திருவடிகள் போற்றி குருவடிசரணம் திருவடிசரணம் நோய் என்பது மனிதர்களுக்கு இரண்டு வகையில் உண்டாகும் 8 ஆம் இடம் என்பது 9ஆம் இடத்திற்கு விரயஸ்தானம் ஆகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடம் 6- ஆம் இடத்துக்கு விரையஸ்தானமாகும். நோய் என்பது இரண்டு வகையில் ஏற்படும். உணவு, பழக்க வழக்கம், அலர்ஜி, இயற்கை மாற்றத்தால் ஏற்படும் நோய் போன்றவை 6- ஆம் இடத்து நோய். இதுவல்லாமல் பூர்வ கர்ம வினைகளால்- சாப தோஷங்களால் ஏற்படும் நோய் 8-ஆம் இடத்து நோய். இதுதான் ‘எல்லா டெஸ்டும் எடுத்துப் பார்த்தாச்சு. என்ன நோய், எதனால் வருகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று பேசப்படும் நோய், சிகிச்சைக்கும் அடங்காத நோய்! (8 என்பது 9-ஆம் இடம்மான பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு 12 இடம். இந்த ஸ்தானங்களை இவ்வாறு உற்று நோக்கினால் சில உண்னமகள் புலப்படும்.) இந்த இருவகை நோய்களும் பாதிப்புகளும் சனி, ராகு-கேது சம்பந்தத்தால் ஏற்பட்டாலும், குரு பார்வையும் சம்பந்தம் இருந்தால் தெய்வப் பரிகார முறைகளினால் நிவர்த்தி தேடலாம். நோய்க்கும் பார்-பேய்க்கும் பார் என்று சொல்லுவார்கள். சில நோய்களுக்கு மாத்திரை, மருந்து, ஊசி, ட்ரிட்மெண்டு உண்டு. சில நோய்களுக்கு பரிகாரம், பூஜை, வழிபாடுதான் சிகிச்சை! மனநோயாளிகளுக்கு தூக்கமருந்து கொடுத்துத் தூங்க வைப்பதுதான் வைத்தியம். அது போகப் போக நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கிவிடும். குணசீலம் அழைத்துப் போய் குறிப்பிட்ட காலம் தங்க வைத்து காலை, மாலை இரண்டு வேலை காவேரியில் குளிக்க வைத்து, பெருமாள் சந்நிதியில் நிறுத்தி மந்திரித்து, காப்பு கட்டி துளசி தீர்த்தம் கொடுப்பார்கள். சரியாகிவிடும். ஆரோக்கியத்தை தரும் தெய்வம் தன்வந்திரி பகவான். அவருடைய மந்திரம் ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அமிர்தகலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஆரோக்கிய லட்சுமி சமேத தன்வந்தரயே மகாவிஷ்ணுவே நமஹா' பரிகாரத்தை பரிகாஷம் செய்ய வேண்டாம், கர்ம வினை கரையும், வியாதி மருத்துவத்திற்கு கட்டுப்படும், மருத்தவ சோதனையில் வியாதியின் விளக்கம் புலப்படும்.
எல்லா உயிர்களும் இவ்வுலகில் இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Post a Comment

0 Comments