Tamil Astrology
கடன் எப்படி ஏற்படுகிறது? Loan and Debt -ஜோதிட பதில்
பொதுவாக கடன் என்பது தன் சுய ஜாதகத்தில் (Horoscope) பாவ கிரகங்களின் சேர்க்கை இருந்தால் அந்த ஜாதகர் காலமுழுவதும் கடன்ககளுடன் வாழ்ந்து வருவார்கள் ஒரு சிலருக்கு கோட்சார நிகழ்வுகள் கோட்சார கிரக சேர்க்கை ஏற்படும்போது கடன் ஏற்படும் ஒரு சிலருக்கு குடும்ப நபர்களின் ஜாதக கிரகங்களின் இணைவு ஏற்படும் போது கட்டாயம் கடன்(Debt) ஏற்பட்டு விடும் ஒருசிலருக்கு மனைவி வந்த பிறகு ஒருசிலருக்கு மகன் மகள் பிறந்த பிறகு அதாவது ஒவ்வாத பாவ கிரகங்களின் இணைவு ஏற்படும்போது கடன் ஏற்பட்டு விடும். ஒரு சிலருக்கு ஏழைரச்சனி அட்டமத்துசனி கன்டச்சனி அர்த்தாஸ்டமச்சனி வரும்போதும் அதோடு ராகுதசை சனி தசை சந்திர தசை நட்ந்தால் பெருத்த கடன் அவமானம் அதானால் ஏற்படும் கெட்டபெயர், சில சமயம் உயிர்சேதங்கள் ஏற்படும் பொருட்சேதமும் அவமானங்களும் அதிகமாக ஏற்பட்டுவிட்டால் உயிர்சேதம் நிகழாது.
கடன் யோகம் யாருக்கு அமையும்! Mars and Saturn
ருணம்- கடன்
ரோகம்-நோய்
சத்ரு-எதிரி
ஆறாம் இடம் -ருண, ரோக, சத்ரு ஸ்தானம் ஆகும்
ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாயோடு பகை கிரகங்களான சனி ராகு சேர்க்கை ஏற்படும்போது கடன், நோய், எதிரிகள் உண்டாகும். சேர்க்கை என்பது கோட்சார ரீதியாக இருக்கலாம் இல்லை சனி ராகு இணைவு அல்லது பார்வை பெற்று ஜாகத்தில் உள்ள சனி ராகு செவ்வாய் மீது கோட்சார சனி ராகு செவ்வாய் பயணம் பட்டால் மேற்கண்ட பலன்கள் ஏற்படும்.Astrology ஜோதிட பதில்
ஒவ்வாத கிரக தசையால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
ஒவ்வாத கிரக தசை ஏற்படும் போது அந்த தசை முழுவதும் சிலர் ஏன் பலர் தன் சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சம்மாக தோற்று விடுவார்கள் ஒவ்வாத தசை என்றால் என்ன உதரணமாக 6 8 12 இடத்து தசை ஒரு சிலருக்கு அது சனி தசையாக இருக்கலாம் குருதசையாக, சுக்கிரதசையாக சந்திரதசையாக அல்லது ராகுதசையாக்கூட இருக்கலாம்.
குறிப்பாக ராகு தசை பலகுடும்பங்களை தெருவில் இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை சனி ராகு சேர்க்கை சனி கேது சேர்க்கை குரு கேது சேர்க்கை மிக மிக அதிகமான சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
இந்த சேர்க்கை மட்டும் போதாது கோட்சார நிகழ்வுகள் ஏற்படும் போது கொதிக்கும் எண்ணையில் போட்டு சிப்பஸ் பொரிப்பது போலத்தான் வாழ்க்கை பொசுங்கி போகும் சிலர் வீட்டை விட்டு ஊரைவிட்டு நாட்டை விட்டு ஓடி விடுவார்கள் டைவர்ஸ் தலைவிரித்தாடும்.
கடனிலிருந்து எவ்வாறு விடுபடுவது? How to get relief from loan and debt?
இதிலுருந்து தப்பிக்க முடியுமா? முடியும் என்று நினைத்தால் முடியும்! முடியாது என்று நினைத்தால் முடியாது! முதலில் உங்கள் ஜாதகத்தில் இந்த இணைவுகள் எல்லாம் இருக்கிறது என்று இளம் வயதிலேயே கண்டு பிடித்து கிரகம் வெளியேற்ற நினைக்கும் முன்பே மறியாதையாக நாம் வெளியேறி விடவேண்டும், அத்துடன் விடா முயற்சி தன்னம்பிக்கை கடின உழைப்பு சேமிப்பு சிக்கனத்தை கடைபிடித்து ஊதாரிதனத்தை ஒதுக்கி விட்டு உண்மையாக சத்தியத்துடன் ஒரு குருவின் வழிகாட்டி துணையுடன் ஒரு சித்தரை இருகபிடித்து கொண்டு உழைத்தால்.
அதுவரை எல்லாவல்ல சித்தர்களின் திருவடிகளை வணங்கி விடைபெறும் உங்கள்
சக்கரவர்த்தி கலியபெருமாள் -ஜோதிட பதில்
0 Comments