தமிழ் ஜோதிடம் ஜோதிட பதில்
1) திருமணகாலத்தில் ராகு தசை நடக்கிறதா மிகவும் அனுபவம் நிறைந்த ஜோதிடரை பார்த்து (பொருத்தம் அல்ல) ஜாதகத்தை பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.
2) அத்தை மகள், மாமன் மகள், அக்கா மகள் பணக்கார பெண் என ஜாதகத்தை ஆராய்ந்து பார்க்காமல் செய்தால் திருமணத்திற்கு பிறகு உறவை உடலை பொருளாதாரத்தை ஏன் சமூகத்தை கூட இழக்கவேண்டும்.
3) திருமண பொருத்தம் பார்க்கும்போது கட்டாயம் அடுத்து வரும் குறைந்தது மூன்ற தசைகளை ஆராய்ந்து சேர்க்கவேண்டும்.
4) அவதியில் செய்தால் சில சமயம் திருமண நாள் அன்றே பிரச்சனைகள் வெடித்து சிதரும்.
5) முறைமாறிய உறவுகளை ஊக்கப்படுத்தும் சமூகத்திற்கு ஒத்துவராத செயல்களில் ஈடுடவைக்கும்
6) மாணவ பருவத்தில் வரும் ராகு அடங்காத பிள்ளையாக மாற்றிவிடும், மாணவர்களை பாதுகாப்பாக வளர்க்கவேண்டும்.
7) கல்லூரி காலத்தில் வரும் ராகு காதலை ஊக்கப்படுத்தும், மருத்தவ படிப்பை ஊக்கப்படுத்தும்.
குரு
சந்திரன்
ராகு
செவ்வாய்
ஏதாவது ஒருவகையில் சம்பந்தம் அல்லது இணைவு உள்ள ஜாதகதம் பெண்ணாக இருந்தால் மிகவும் பாதுகாப்பாக வளர்க்கவேண்டும். அவமான படுத்தி தைரியமாக யாருக்கும் தெரியாமல் காதல் திருமணத்தை செய்து கொள்ளும். சிலர் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து தன் வீட்டிலேயே சிலகாலம் வாழ்வார்கள்.
தொடரும்.
இது நல்லோர்க்கல்ல நயவஞ்ஞோர்க்கிதுவே
அட்டமாதிபதி தசை உனக்கு எதற்கு வேலை பிடிங்கிவிடுவான் , ஒரு மூலையிலே உறங்க வைத்து வேடிக்கை பார்பான் உற்றார் உறவினர் கலகம் மூட்டி பிரித்து வைப்பான், செய்யாத காரியத்திற்கு தண்டனைக்கு ஆளாக்குவான், மனை மக்களை விட்டு பிரியவைப்பான், உற்ற நண்பருக்கே உளைவைத்து பிரிந்துடுவான், ஒருவன் களத்திரத்தை உன்னத போகம் செய்வான், காமத்தை கூட்டி கேவலத்திற்கு ஆளாகுவான், ஊரார் பஞ்சயாத்தில் உன்னை ஒருநாள் கைகட்டி நிற்க வைப்பான் உறவிலே மரணத்தை உண்டுபன்னுவான், தனிமையில் அழவைத்து வேடிக்கை பார்ப்பான் ஒரு மாய தோற்றத்தை மனதிலே உண்டு பன்னி ஒப்புக்கு உதவாத வேலை செய்யச்சொல்லி காலத்தை வீனாக்குவான், ஒரு வேலைக்கு ஏங்க வைப்பான், கர்ம வினை கணக்குகளை சரிபார்த்து சந்தியலே நிற்க வைத்து உன்பிறப்பை உணர்த்திடுவான்.
இது நல்லோர்க்கல்ல நயவஞ்ஞோர்க்கிதுவே. “ மதி கதி பார்க்கவேண்டும்”
ஈசனே என் அப்பனே என் கனவிலும் பாவங்கொள்ள செய்யாதே
காரணம் இல்லாமல் காரியம் நடக்காது ! சாபம் இல்லாமல் பாவம் வாராது!
குருவே சரணம் குருவடிசரணம் திருவடிசரணம்
திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி
போற்றுதலுக்குரிய பன்பாலர்களே அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கங்கள், எல்லா பதிவின் மூலமாக என் மனம் உங்களிடம் பேசுவது போலத்தான் எழுதி வருகிறேன், நான் தாங்களை காட்டிலும் அறிவிலும் அனுபவத்திலும் மிகமிகச்சிறியவன் என்பதை மனதார ஒப்புக்கொண்டுதான் எல்லா பதிவுகளையும் உங்களுக்கு பதிவிடுகிறேன், அதுபோன்று இந்த பதிவின் மூலமும் சில அனுபவங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், மகான்களால் எழுதப்பட்ட அனைத்து கருத்துக்களும் உண்மைகள், அனுபவங்கள், நடந்தவை, நடக்க இருப்பவைகள்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது, அதாவது எல்லாம் அவன் செயல், எண்ணம்போல வாழ்வு, தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான், இப்படிப்பட்ட பழமொழிகள் காவியங்கள் இதிகாசங்கள் எல்லாம் வாழ்க்கையில் உணரப்பட்ட உண்மைகள்.
காரணம் இல்லாமல் காரியம் நடக்காது, சாபம் இல்லாமல் பாவம் வாராது, கர்ம வினை இருந்ததால்தான் நாம் வினையை கழிக்க பிறந்தோம், உப்பு உண்டாதலே நீரைக்குடிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும், புன்னியவான்களை அவர்களிடத்திலே சென்று களங்கப்படுத்தியாதால் சாபம் பெற்று யோகதிசை பாங்கமாகியது, தன்ஆட்சியிலே தான்அழிந்தான். நல்லவனை துன்படுத்துகிறான் துரோகம் செய்கிறான் அது செய்தவினை, அப்படி செய்தால்தான் பாவம் வந்து சேரும், காரணம் கிடைக்கும் காரியம் நிறைவேற. கிரகங்கள் காரணம் இல்லாமல் தண்டிக்காது கர்ம வினை கணக்கில் இருக்கவேண்டும் அல்லது வாழும் காலத்தில் வினையை விலைகொடுத்து வாங்குவார்கள், நல்லவர்களுக்கு தீங்கு செய்வது சொத்துக்களை அபகரிப்பது, இப்படி பல வழிகளில் வினைகளை சேரத்துக்கொள்வாரகள்.
அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே, ஒன்பது கிரகங்களாக மாறி, ஜாதக கட்டங்களில் அமர்கிறது அவரவர் வினைகளே வீடுகளையும் தீர்மானிக்கிறது. அவரவர் வினைகளே கிரகங்களாக மாறி இல்லங்களில் அமர்ந்து வினைகளுக்கு ஏற்ப தசைகளை அமைத்து கோட்சார கிரக சஞ்சாரம் மூலம் நம்மை நம் வினைகளுக்கு ஏற்றபடி வழாவைக்கிறது, இப்படி இருக்க வாழும் காலத்தில் அவன் நல்லவனாக இருப்பான் அதன் பயன் எடுத்த ஜென்மத்தை கடைதேற்றலாம், செய்த வினையால்தானே பிறப்பு எடுத்து உள்ளோம் அதை அனுபவித்துதான் ஆக வேண்டும் இல்லை என்றால் கர்ம வினை கரையாது, அப்படி இருக்க நான் நல்லவன் ஒரு பாவமும் செய்யவில்லை என்னை இறைவன் சோதனை செய்கிறான் என்றால் அவைகள் எல்லாம் முன்செய்த வினைக்குதான். ஒருவன் நல்லவன் கரம்வினை குறைவாக உள்ளவன் என்பதை பிறப்பு ஜாதகம் வெளிப்படுத்தும்.
1) ஒரு ஜாதகனுக்கு ஜாதகத்தில் உள்ள யோகம் எப்போது வேலை செய்யும்?, ஒரு உதாரணம் நீசபங்க ராஜயோகம் பற்றி ஒரு பதிவு முன்பு பதிவிட்டிருந்தேன் அதை ஒட்டிய சில கேள்விகளை அடுத்த பதிவில் விளக்குகிறேன். 2) நீச பங்க ராஜயோகம் சுபக்கிரகம் பெற்றிருந்தால் என்ன பலன் கிடைக்கும்?, பாபகிரகம் பெற்றிருந்தால் என்ன பலன் கிடைக்கும்?. 3) நீச பங்க ராஜயோகம் சுபஸ்தானத்தில் அடைந்து இருந்தால் என்ன பலன்? அசுபஸ்தானத்தில் அடைந்து இருந்தால் என்ன பலன் ? 4) இவைகள் எந்த காலத்தில் நடைபெறும்? அடுத்த பதிவில் விளக்குகிறேன்.
நல்லதே செய்- நல்லதே நினை – நல்லதே நடக்கும் ( பாவம் செய்யாமல் வாழுங்கள் வாழ கற்றுகொடுங்கள் வளரும் சந்ததியர்களுக்கு)
ஓம் சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் திருவடிகள் போற்றி!
குருவே சரணம்
குருவடிசரணம் திருவடிசரணம்
பதவியும் அதிகாரமும் பணமும் வரும்போது கூடவே மமதையும் ஆணவமும் அகங்காரமும் வந்துவிடும். அந்த நிலையில் பாவம், புண்ணியம் என்ற ஆராய்ச்சிக்கும் தர்மம், அதர்மம் என்ற நீதி நினைவுகளுக்கும் இடம் தராமல், தன் சுயநலத்துக்காகத் துணிந்து பாவங்களையும் தவறுகளையும் செய்யத் தோன்றும். அப்போதுதான் கிரகங்களும் விதியும் வினையும் வந்து ஒட்டிக் கொள்ளும். தோஷம் பற்றிக் கொள்ளும். ஆனால் அதற்குரிய தண்டனை மட்டும் அப்போதே உடனுக்குடன் வந்துவிடாது. அறிந்தோ அறியாமலோ அவரவர் செய்திருக்கும் நல்ல பலனும் புண்ணியமும் இருக்கும் வரை கவசம்போல இருக்கும், புண்ணியம் கரைந்தவுடன் பாவத்தின் சம்பளம் பற்றி கொண்டு தண்டனையை அனுபவிக்கவேண்டும், பாவம் செய்யாதவரையும், அக்கிரமும் செய்யாதவரையும், 10 –ஆம் இடத்து குருவும் ஒன்றும் செய்யாது. எழரைச் சனியோ, அட்டமத்துச் சனியோ எந்த கிரகமும் எதுவும் செய்யாது. அதாவது மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயப்பட வேண்டும்.
இதில் ஒரு சந்தேகம் வரலாம். நல்லவர்களுக்கு ஏன் சோதனையும் வேதனையும் கஷ்டமும் வருகிறது என்றால், இப்போது நல்லவர்களாக இருக்கலாம். ஆனால் இதற்கு முன்னால் செய்த தீமைகளுக்குப் பின்னால்தானே தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். மழையில் நனையும்போதே ஜலதோஷம் வராது. மறுநாள்தான் அதன் தாக்கம் தெரியும். இதற்காகத்தான் பெரியவர்கள் நல்லதே செய்- நல்லதே நினை – நல்லதே நடக்கும் என்றார்கள். நல்லவர்கள் வினைப் பயன் தாக்கினாலும் நீந்தித் கரை சேர்ந்துவிடலாம் கெட்டவர்கள் மீளமுடியாமல் கெட்டு விடுவார்கள்; பட்டுப்போய் விடுவார்கள்.
"மாடு வாராது கன்று வாராது
மனைவி வரமாட்டாள் மகன் வரமாட்டான்
தேடிய செல்வம் வாராது
ஆடை ஆபரணம் வாராது
பற்றி தொடரும் இருவினை புண்ணிய பாவவுமே
ஆகையால் நல்லதை செய்யுங்கள்
பாவம் செய்யாதிருங்கள்."
-பட்டிணத்தார் சுவாமிகள்
"பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் உள்ளன மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி"
ஜோதிட விதிகள்- தமிழ் ஜோதிடம்
முழு சுபக்கிரகமான குரு பகவான் அவர்கள் ராசியையோ அல்லது லக்னத்தையோ பார்த்துவிட்டால் போதும் வாழ்நாள் முழுவதும் எல்லா செயயல்களும் பிரச்சனைகள் இல்லாமல் ஈடேறும், அசுப கிரகங்கள், பாப ஸ்தானங்களில் நின்றால், யோகமான பலன்கலேயே கொடுப்பர், தர்ம, கர்மாதிபதி என்று சொல்லக்கூடிய ஒன்பது, பத்துக்குரியவர்கள் ஒன்று சேர்ந்து நின்றாலோ அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டாலோ மிக அற்புதமான பலன்களை கொடுப்பார்கள் ஒருவேளை திசை சந்தியில் சறுக்கி விழ்ந்தலோ உடனே எழும்பி ஓடக்கூடிய யோகத்தினை கொடுத்துவிடுவார்கள் அதுபோல பரிவர்த்தனை யோகம் பெற்ற ஜாதகர்களுக்கு அபரிவிதமான யோகங்களை அள்ளித் தருவார்கள்.
பாவதிபதிகள் தங்களுடைய பாவங்களை பார்ப்பது பாவத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கும், மறைவிட ஸ்தானமான மூன்று, ஆறு, எட்டு, பனிரெண்டுக்கு உரியவர்கள் சொந்த ஸ்தானங்களில் நின்றாலோ அல்லது ஒருவருக்கு ஒருவர் மாறி நின்றாலோ திடிர் யோகத்தை உண்டுபன்னுவர், இந்த யோகம் தேவ ரகசியமானது, கேந்திராதிபதிகள் திரிகோணத்தில் நின்றாலோ, திரிகோணதிபதிகள் கேந்திரத்தில் நின்றாலோ அற்புதமான, புனிதமான, நீடித்த பெயர்பெறக்கூடிய, புகழ்பெரக்கூடிய யோகங்களை அள்ளித் தருவார்கள், ராசிநாதன் லக்னநாதன் பார்வைக்கு பாவங்கள் போக்கும் தன்மை உண்டு, இவர்கள் அசுப ஸ்தானங்களில் நின்றாலும் கெடுதல் செய்யமாட்டார்கள், விபத்தரா தசை நடக்கும் போது சொந்த தொழில் ஏதும் செய்யக்கூடாது, எந்த விதமான நன்மைகளும் நடைபெறாது, மேலும் எண்ணங்களும் கனவுகளும் ஈடேற வேண்டும் என்றால் ஐந்தாம் இடம் மூலம்தான் ஈடேறும்,
பொதுவாக ஏழரைச்சனி, அட்டம்ச்சனி,கண்டச்சனி, அர்த்தாஷ்ட்டமச்சனி நடக்கும்போது வரும் பிரச்சனைகள், மாற்றங்கள் சுனாமி போல வந்து செல்லும் அந்த பிரச்சனைகள் ,மாற்றங்கள் அவரவர் பூரவ்ஜென்ம புன்னியத்தை பொறுத்தே, ஏற்றமாகவும், இறக்கமாகவும் அமையலாம் பொதுவாக சனி பகவான் எல்லாரையும் கெடுக்கமாட்டர்கள், தப்பு செய்தவனுக்கு தண்டனையை கொடுப்பார்கள், நிரபராதிகளை விடுதலை செய்வார்கள், பொதுவாக ஜோதிடத்தில் எண்ணற்ற ஜோதிட விதிகள் உள்ளன அவகளை அனுபவத்தில் பார்க்கும்போதுதான் மனதில் பதியும் எனவே கேள்வி பதில் பகுதியில் ஜோதிட விதிகளை கோடிட்டு விளக்கி உள்ளேன் மேலும் பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லா ஜோதிட விதிகளும் எல்லா பதிவுகளிலும் இடம் பெற்றுள்ளது.
குருவே சரணம் குருவடிசரணம் திருவடிசரணம்
0 Comments