ராகு பற்றிய தொடர் பதிவு -ஜோதிட பதில்
பொதுவாக ராகு தசை நடப்பவர்கள் மிகவும் உஷாராக எல்லா விதத்திலும் இருக்கவேண்டும் உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரியாக மாறிவிடும்.
1) ராகு
2) ராகு தசை என்ன செய்யும்?
3) எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
4) ஏன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்?
6) எதை எல்லாம் இழக்க செய்யும்?
7) ராகு தசை நடப்பவர்கள் உங்கள் தசை மட்டும் அல்ல உங்கள் குடும்ப நபர்களின் தசையும் உங்களை படுத்தி எடுத்துவிடும்?
8)குடும்ப நபர்களின் ஒவ்வாத தசை உங்களை படாய படுத்தி விடும் முதலில் உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரியாக மாறி விடும்.
9) ராகு திசைக்கு முன்பே கடன் வாங்கி வைத்துவிட்டு அதாவது கடன் வாங்கி வீடு கட்ட சொல்லும் தொழிலை விரிவு படுத்த சொல்லும். ராகு தசை ஆரம் பித்த வுடன் தசை ஒவ்வாத பட்சத்தில் பார்க்கும் வேலையை பிடுங்கி விடும் தொழில் இழப்பு நோக்கி அழைத்து செல்லும்.
10) மருத்துவத்திற்கு கண்டு பிடிக்க முடியாத வியாதைகொடுத்து வேடிக்கை பார்க்கும்.
இனம்புரியாமல் மிரட்டி வரும்.
அடுத்த பதிவில் ராகுவின் வேதனைகள் சோதனைகள் தொடரும்.
ராகுதசையில் சிக்கியவர்கள் குடும்ப நபர்களின் ஜாதகத்துடன் ஜோதிடரை தொடர்பு கொள்ளுங்கள்.
ராகு என்ன செய்தது?
என் செயலால் யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே!
நான் பல பதிவுகள் ராகு பற்றி எழுதி இருக்கிறேன்
பயம் முடுத்தாதிர்கள்
இவருக்கு வேறு வேலை இல்லை
எப்ப பார்த்தாலும் இப்படித்தான்
இன்னும் மனதிற்குள் வந்த வார்த்தை எல்லாம் போட்டு திட்டி இருப்பீர்கள்
பரவாயில்லை இப்போது உலகத்தை அலரவிடுகிறது புரிந்து கொள்ளுங்கள்
பணம் உங்களை பாதுகாக்காது விதிக்கு வினைகளுக்கு முன்னாள் எல்லாம் ஒடிங்கிவிடும்.
நான் இந்த நேரத்தில் எதையும் விரிவாக எழுத வில்லை எல்லா விமோசனத்திற்கு பிறகு விரிவாக பார்ப்போம்
ராகு தசை செவ்வாய் புத்தி பலன்கள்?
மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் தசையின் கடைசி புத்தி ராகு செவ்வாய் பலமாக இருந்தால் நிலபுலன்கள் சேர்க்கை உண்டாகும் மாறாக பலவீனமாக இருந்தால் வாகனவிபத்து சொத்து தகராறு கட்டபஞ்சாய்த்து அடிதடி கோர்ட் கேஸ் போலீஸ் டேசன் கைகால் முறிவு உண்டு செய்யும்.
பெண்கள் விசயத்தில் எச்சரிக்கை தேவை
வடக்கு பார்த்த அம்மன் அல்லது காளிக்கு ராகு காலத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.
ராகு -கேது (கர்ம வினை கிரகங்கள்)
கேதுவோடு இணைவு பெற்ற காரகங்கள் எல்லாம் மனதில் பல பிரமாண்ட ஆசைகளை வைத்து புழுங்கி வெளியில் காட்டிக்கொள்ளாமல் வேடமிட்டு திரியும்.
அனைத்து சுகங்களையும் சுன்டச்செய்து விடும்.
ராகு பிரமாண்டமாக செய்து மாட்டிக்கொள்ளும் குறிப்பாக பிரர்மனை விரும்பி பிரமாண்ட நம்பிக்கையில் அவர்கள் இருப்பிடமே யாரும் அரியாமல் புகுந்து மாட்டிக்கொண்டு நைய புடைத்து நசுக்கி எடுத்துவிடுவார்கள் ரத்தகளரியில் வெளியே வந்து அவமானப்பட வேண்டியதுதான்.
ராகு பிரமாண்டமான கர்பனை ஆசைகளை உருவாக்கி கர்மாவில் இருந்தால் அதை நிறைவேற்றி காட்டும் கணக்கில் அடங்காததாக சொத்தை கொடுக்கும் அங்கே அழிவுக்கார கிரகம் அருகில் இருந்தால் நிர்கதியாய் விட்டு விட்டு சென்றுவிடும்.
கோட்சார ராகு தசா ராகுவின் கொடுமை பூர்வ ஜென்ம புன்னியத்தை பொறுத்து நீ மீண்டு வருவாய இல்லையா என்பது தெரியும்.
சனி சுக்கிரன் ராகு மிகுந்த செல்வத்தை கொடுக்க துடிக்கும் இதில் ஜீவன் குருதொடர்பு பெறவேண்டும்.
இதில் சந்திரன் உடல்காரகன் செவ்வாய் தொடர்பு மோசம் செய்து விடும்.
ராகு 100 க்கு 100 சதவிகிதம் நேர்மையான வழியை தேர்ந்து எடுக்காது குருக்கு வழியை மட்டும்தான் தேர்ந்தெடுக்கும் சில சமயம் அதுவே பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும் ஆனால் பல சமயம்
ஆசை காட்டி மோசம் செய்துவிடும்.
ஒரு மிகப்பெரிய உண்மை ராகுதிசையில் சேர்த்த சொத்து உண்மையும் உண்மையாக இருந்தால் அது அவனுக்கும் அந்த சந்திக்கும் பயன்படும் இல்லை என்றால் பாம்பு எப்படி பதுங்கி வாழ்கின்றது அது போல அவன் சேர்த்த சொத்தும் பதுங்கி பதுங்கி வாழும். அவன் சந்ததிக்கு உதவாமால் சில சமயம் கோர்ட்டில் வழக்கில் மாட்டிக்கொள்ளும்.
அவன் சொத்து மர்மமாகவே வாழ்ந்து வரும்.
தீர்வு உண்டு உன் வினைக்கேற்ப
(ராகு தசையால் பட்ட வேதனைகள்) அடுத்து வரும் குருதசையும் சில சமயம் சொல்லி மாளாது. சிவ சிவ
பன்புள்ளம் கொண்ட வேத ஜோதிட பதில் குழுமத்தின் உறவுகளே நான் அடிக்கடி என் பதிவுகளில் எழுதி வருவேன் கர்ம வினை கர்மவினை என்று இதை மற்ற குழுக்களில் கேளி செய்துகொண்டு இருக்கிறார்கள் அதைபற்றி எனக்கு கவலை இல்லை எனக்கு தெரியியும் கர்ம வினை வேதனையின் வலி எவ்வாறு இருக்கும் என்று நான் அறிந்தவன் உணர்ந்தவன் என்அனுபவத்தில் அதை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
அதாவது ஒன்பது கிரகங்களும் நல்லவைகளை செய்யும் அதேசமயம் கெட்டவைகளையும் செய்யும் அதை அனுபவத்தில் உணர்ந்தவர்களுக்கு தெரியும் நீ எதை யோகாதிபதி யோகக்காரகன் யோகாதியின் சாரம் பெற்றுள்ளார் குரு பார்க்கிறார் இது நிச்சயமாக யோகம் செய்யும் என்று நினைத்தாயோ அது உன்னை வேர் அறுக்கும் வேதனைபடுத்தும் கடனாலிஆக்கும் கௌரவத்தை கெடுக்கும் உறவுக்குள்ளேயே பிரிவினையை ஏற்படுத்தும் நிம்மதி இல்லாமல் அலையவைக்கும் களவுபோகும் பெண்களால் அவப்பெயரை உண்டாக்கும் உன் நட்பு கூட கூடா நட்பை நோக்கி சென்று கேடாய் முடியவைக்கும்.
ஒரு உதாரணம் கர்மவினை எப்படி வரும் என்பதை உன் ஒரு ஜாதகத்தை ஆராய்ந்தால் தெரிந்து விடாது உன்குடும்ப நபர்களின் ஜாதகத்தை ஆராயவேண்டும். ராகு மற்றும் கேது மாயகிரகங்கள் கர்ம வினைக்கு மிக முக்கிய பொருப்பு நீ புண்ணியவானாக இருந்தால் இந்த ராகு கேது உன்னை ஒன்றும் செய்துவிடாது அந்த திசையில் கிடைத்தவைகளை உலகரியவைக்கும் செலவத்தை புகழை கணக்கில் அடங்காமல் சேர்த்துக்கொடுக்கும்
அதே நேரத்தில் கர்மவினையில் நீ மாட்டிக்கொண்டால் இந்த ராகு படுத்தும்பாடு சொல்லி மாளாத துன்ப துயரங்கள் கடன்கள் அவமானங்கள் உயிர்சேதம் பொருட்சேதம் கெட்டபெயர் சொல் பேச்சு கேளாமை களவுக்கு துணைபோதல் மந்திரம் தந்திரம் கற்றுக்கொள்ள மனம் செல்லும் ஜோதிடத்தில் மனம் கொண்டு செல்லும் சில சமயம் குடல் பிரச்சனை அறுவைசிகிச்சை உண்டுபன்னும் விஷம் அறுந்த வேதனை படவைக்கும் மது மாதுவிற்கு அடிமை படுத்திவிடும். நெருப்பால் கண்டம் ஏற்படும் உன்வீட்டை சுற்றி.
ராகுதசை ஜாக்கிரதை கர்மவினைக்கேற்ப உன்னை நசுக்கிவிடும்.அடுத்து வரும் குரு தசையும் சில சமயம் உன்னை கும்மி எடுத்துவிடும்.
இதன் தொடர்ச்சி அடுத்தபதிவிகளில்.
சக்கரவர்த்தி கலியபெருமாள்- ஜோதிட பதில்
0 Comments