தமிழ் ஜோதிடம் -JOTHIDA PATHIL
பொதுவாக ஒரு காரியத்திலோ செயலிலோ வெற்றி பெற வேண்டும் என்றால் குருவருளூம் திருவருளூம் வேண்டும் பெதுவாக ராசிநாதன் லக்கனநாதன் ஐந்துக்கு உடையவன் தர்மகர்மாதிபதிகள் வலுப்பெற்றிருக்க வேண்டும் மறைவு பெற கூடாது சுப வலிமை அல்லது சூட்சம வலிமை பெற்றிருக்க வேண்டும் இப்படி அமைய பெற்ற ஜாதகர்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூர்ணமாக கிடைக்க பெறுவார்கள்.
ராசிநாதன் லக்கனநாதன் ஐந்து ஒன்பதுக்கு உடையவர்கலோ தர்மகர்மாதிபதிகலோ ஆறு எட்டு பண்ணென்டில் மறைந்தாலோ நீசம் பெற்றாலோ மேற்கண்ட கிரகங்களுக்கு வீடு கொடுத்தவர் மறைவு பெற்றாலோ சுப வலிமை சூட்சம வலிமை இலந்தாலோ செய்கின்ற செயல்களில் தடை தாமதங்கள் குறுக்கீடுகள் ஏற்படும்.
உதாரணமாக காரியத் தோல்வி என்பது வேறு, காரிய தாமதம் என்பது வேறு, காரியத் தடை என்பது வேறு காரிய ஏமாற்றம்என்பது வேறு, ஒரு உதாரண விளக்கதோடு பார்போம் ஹோட்டலுக்குச் சாப்பிடப் போகிறோம், இட்லி சாப்பிட ஆசைப்பட்டு கேட்கிறோம் இட்லி முடிந்தது தோசை அல்லது ஊத்தாப்பம் இருக்கிறது என்றால்! விரும்பியது கிடைக்கவில்லை என்பது ஏமாற்றம் ஆகும். அதேபோல் சப்பாத்தி கேட்டால் பூரிதான் இருக்கிறது என்றால் அதுவும் ஏமாற்றம்தான்! எல்லா பதார்த்தமும் முடிந்து விட்டது வெறும் காபி டீ மட்டும்தான் இருக்கிறது என்று சொன்னால் வேறு கடைக்குத்தான் போக வேண்டும் அது காரியத்தடை தோல்வியைக் குறிப்பதாகும். இட்லி இருக்கிறது இருபது நிமிடங்கள் ஆகும் வேகிறது என்றால் காரியதாமதம் ஆகும். எனவே பலன்களை இவ்வாறு பகுத்து பார்த்தால் நிச்சயமாக பலன்கள் பழுது ஏற்படாது
சுப வலிமை சூட்சம வலிமை என்ன என்பதை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்
சில உறவும் நட்பும் அவர்களின் தேவைகளுக்காக
இந்த நிகழ்வு முடிவுரை
நீண்ட நாட்கள் பழகிய உறவு மற்றும் நண்பர்கள் உன்னை விட்டு விளகி செல்கிறார்கள் என்றால் உன்னிடம் உள்ள தேவை முடிந்து விடுகிறது என்று பொருள்.
உறவும் நட்பும் வெளியேறுகிறது என்று பொருள்.
சில உறவுகளும் நட்புகளும் அப்படித்தான் நம் வாழ்க்கையில்.
தேவைக்காக பணத்திற்காக அவர்களின் திட்டத்தை நம் மூலம் பரிசோதித்து பார்பதற்காக நம்மை பயன்படுத்தி பார்ப்பார்கள்.
இந்த நிகழ்வுகள் முகவுரை
இங்கேதான் விதி கர்மா செயல்பட ஆரம்பிக்கிறது ஏழரையும் ஒவ்வாத திசைகளும் கற்பனை வருமானங்களை கனவில் எண்ணவைக்கும் ராகுமகா தசைகள் சுக்கிரனுக்கு சுளுக்கெடுக்கும் சந்திரன் ராஜா தசை என்று சொல்லப்படும் குரு இவைகள் எல்லாம் ஆரம்பிக்கும்போது தெரியாது. அடிவிழும்போதுதான் வளிகளும் வேதனைகளும் தெரியப்படுத்தும்.
ராகு சுகமாக தேடி அலையும் எல்லாம் சொர்க்கமாக தெரியும் கற்பனை வருமானங்களை கனவிலே எண்ணவைக்கும் ஏன் அர்ப சுகங்களை அள்ளி பருக வைக்கும் எல்லை மீறி போகும்போது நசுங்கி வெளியேவரும் யாரை பற்றியும் கவலை படாது எல்லாவற்றையும் விழுங்கிவிடும். மிகப்பெரிய கிரகம் அல்லவா! அவற்றின் சூழ்ச்சிக்கு அனைத்து கிரகங்களும் ஏன் அனைத்துராசிகளும் அடங்கி திவால் ஆகிவிடும்.
சில
உறவும் நட்பும் தேவைகளுக்காக எச்சரிக்கை!
யார் நேர்மையானவன்? ஏன் தடுமாறுகிறான்?
சுக்கிரன் மூலம் யாரெல்லாம் புகழ் பெறுகிறார்களோ உச்சத்தை அடைகிறார்களோ, அதே சுக்கிரன் கோட்சாரத்தில் சிக்கும் போது தடுமாறி விடுகிறான் அப்போது அவனுக்கு குரு ராஜாவாக இருந்து அந்தப்புர ரகசியங்கள் பாதுகாக்கப்படுவது போல பாதுகாப்பாய் வாழவிடும் அவனுக்கு அட்டமாதி தசை வரும்போது அவன் ரகசியங்கள் சூரியனால் வெளிச்சத்திற்கு வந்து மானபங்கபடுத்திவிடும்.
*சுக்கிரன் கிரக இணைவிற்கேற்ப அனைத்து சுகங்களையும் அள்ளித்தரும்*
குரு சூரியன் புடம்போட்ட சுத்த தங்கம் நேர்மையாணவன் தசா கோட்சாரம் இணைவால் தடுமாறி தடுமாறுகிறான் அதே சூரியன் அவனை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து ரகசியங்களை வெளியே கொண்டுவந்து அம்பல படுத்தி அவமானபடுத்துகிறது
*நான் சொல்லும் கிரக இணைவுகள் பாரம்பரியம் நாடி முறைகளுக்கு உட்பட்டவை
மேற்சொன்ன கிரக இணைவுகளை உதாரண ஜாதகத்துடன் பின் வரும்பதிவுகளில் பதிவிடுகிறேன்
ராசியான அதிஷ்டமான நேரத்தை தேர்வு செய்ய என்ன செய்யவேண்டும்?
ஒரு முகூர்த்தம் குறிப்பது அதாவது நிச்சயம் செய்ய, திருமண நேரம் குறிக்க பந்த கால் நட காதுகுத்த மனைமுகூர்த்தம் செய்ய நாம சூட்ட உங்கள் ஊருக்கு அருகில் உள்ள அனுபவம் நிறைந்த கைராசியான ஜோதிடர் பஞ்சாங்ககாரரை சந்தித்து தட்சனை கொடுத்து ஆலோசனை பெறுவது சிறப்பு.
முகநூலில், இன்பாக்ஸில் பார்ப்பது, ஆன்லைனில் பார்பது எல்லாம் சரியான தேர்வு அல்ல. முடிவு செய்து கொள்ளுங்கள் யாரிடம் பார்க்கலாம் என்பதை.
வீனாக காலத்தையும் நேரத்தையும் செலவு செய்ய வேண்டாம் முகநூலை கற்றுக்கொள்வதற்கும் அனுபவத்தை பெறுவதற்கும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சக்கரவர்த்தி கலியபெருமாள்
0 Comments