Ticker

6/recent/ticker-posts

வாழ்க்கையில் அனைவரும் எல்லா வளங்களும்

தமிழ் ஜோதிடம்- ஜோதிட பதில் - Tamil Jothidam

வாழ்க்கையில் அனைவரும் எல்லா வளங்களும் 
பெற்று நலமுடன் வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன் 
குருவருளும் திருவருளும் உங்களுக்கு துணையாக அரணாக இருக்கட்டுமாக!
செல்வவலம் பெறுக!
எந்த காரணத்தை கொண்டும் தகாத வார்த்தைகளை பேசாதீர்கள். மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் குடியிருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். கழிப்பறை தூய்மையாக இருக்கவேண்டும்.
மனது கட்டுபாட்டுடன் இருக்கவேண்டும், நீங்கள் தொழில் புரியும் இடம் அல்லது வேலை பார்க்கும் இடம் தூய்மையாக இருக்கவேண்டும் கொடுக்கின்ற ஊதியத்திற்கு தகுந்த வேலைகளை செய்ய வேண்டும். மற்றவர்கள் மனம் புன்படகூடாது.
அனைத்து இடத்திலும் இறைவன் நிறைந்து இருக்கிறான் நீங்கள் செல்வத்தை எவ்வாறு சிறுக சிறுக சேர்க்கிறீர்களோ அதுபோல புண்ணியங்களையும் சிறுக சிறுக சேர்த்து வையுங்கள் உங்கள் கஷ்ட காலத்தில் அரனாக வந்து நிற்கும். இவன்தான் வந்து உதவுவான் என்ற எண்ணத்தில் உதவாதீர்கள் யாராவது உங்களுடைய துன்ப நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள்!
அனைத்து உயிர்களிடத்தும் இறைவன் நிறைந்து இருக்கிறான். யாருக்கு உதவினாலும் இறைவன் யாராவது ஒரு ரூபத்தில் வந்து உங்களை துன்பத்திலுருந்து பாதுகாப்பான் இது உண்மை சத்தியம்.
எந்த உயிருக்கும் தீங்கு செய்யவேண்டாம்.
மனைவி- சுக்கிரன்
தொழில் - சனி
உயிர் ஜீவன் - குரு
வீடு - சுக்கிரன்
ஊதியம் பணம் -குரு
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
சிவ சிவ சிவாயநம

ஜோதிடம்🦅 கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே, அது சில சமயங்களில் நம் கண்ணிற்கு படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம் அனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்தரம் இல்லை, அவரவர் ஜாதக ரீதியாக கிரங்கள் மூலம் கர்மபலனை அனுபவிக்கநேரும், வினைக்கு ஏற்றவாறு கர்மவினை கிரகங்களாக கட்டத்தில் அமைந்து விடுகிறது. ஜோதிடம் என்பது நழுவி செல்லுதல் என்று பெயர், அதாவது ஜோதிடத்தை எங்குத்தொட்டாலும் வழுக்கும் என்பார்கள், அதாவது எல்லா கிரகங்களும் ராசி மன்டலத்தில் நட்சத்திரத்தின் பாதையிலேயே அதன் வேகத்திற்கு தக்கவாறு சுழன்று கொண்டே இருக்கிறது அதனால்தான் அன்டத்தில் உள்ள உயிர் இனங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அதன் சுழற்சி நிற்கும்போது எல்லாம் அழிந்து விடும். பிறக்கும்போது வானமண்டலத்தில் எந்தந்த கிரகங்கள் எந்த நிலையில் சுழன்றதோ அதே நிலைதான் பிறப்பு ஜாதக குறிப்பு அதாவது ஜாதகம், அதன் பிறகு அந்த நிலை சுழற்சியால் மாறி கிரகப்பெயர்ச்சி ஏற்படுகிறது, இந்த பெயர்ச்சிகள் எல்லாம் இடத்திற்கு தகுந்தவாறு சுப மற்றும் அசுப பலன்களை தந்துகொண்டே தன் பெயர்ச்சியை தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த தத்துவத்தை பயன்படுத்தி நட்சத்திர கால் பாரத்து பலன் கூறி வந்தனர், இதில் தனிப்பட்ட ஜாதக பலன், குடும்ப ஜாதக பலன் என்று அன்றே வகுத்துவிட்டனர், கூட்டு ஜாதக சுப பலன்கள், அசுப பலன்கள் என்று வகுத்து எழுதினார்கள் பல ஆதி கிரந்தங்களில் அதற்கு சான்று உண்டு. ஒரு ஜாதகத்தில் நடக்கும் யோகம் மற்றும் திசைகள் அதே குடும்பத்தில் வேறு ஒருவருக்கு நடக்கும் யோகத்தை திசைகளை கெடுக்கும் , வேர்அறுக்கும், ஒரு ஜாதகத்தில் எல்லா உறவுகளையும் உள்ளடக்கியது ஜாதகர், தாய், தந்தை, சகோதரர், குழந்தைகள், மனைவி, நண்பர், இவைகள் எல்லாம் தெரிந்தவைகள், தெரியாதவை மரணம், பூர்வ ஜென்மம், தொழில், லாபம், மறுபிறவி. ஆக கர்ம வினைப்படி லக்கனம் அமைத்து பிறக்கிறார்கள்.1, 5, 9 படி வாழ்க்கை அமைகிறது. இதை ஆராய்ந்து பலன் கூறுபவர்கள் வேத ஜோதிடர், ஒரு உதாரணம் கூட்டுகிரக தசா சந்தியில் ஏற்படும் மரணம் மற்றும் சேதங்கள், குழந்தை பிறப்பிற்கு பிறகு ஏற்படும் தசா சந்தியில் ஏற்படும் மரண சேதங்கள், கால சந்தியில் ஏற்படும் மரண சேதங்கள், இப்படி சில பல விதிகள் உள்ளது, இதை எல்லாம் கால நிகழ்வுகளுக்கு ஏற்பத்தான் பலன் கூற இயலும். இப்படி ஆராய்ந்த பலன் கூட கர்ம வினையால் ஜோதிடரின் சில கால கணக்கீடு கண்களை மறைத்து விடும். இது எல்லாம் அவர் அவர் வாங்கி வந்த வரன், ஜோதிடம் பார்பதால் ஜோதிடருக்குத்தான் கிரக சாபங்கள் வந்து சேரும், கர்ம வினை அனுபவித்தே தீரவேண்டும் ஜோதிடம் என்பது விதியை மாற்றும் அற்புதம் அல்ல, அல்லது அதிஷ்டத்தை தரும்சக்தி அல்ல, சந்தர்பத்தை சாதகமாக்கி கொள்ள சொல்லப்படும் ஒரு வழிகாட்டி.கைகாட்டிதன்.
குருவே சரணம் (ஜோதிட அரிச்சுவடி). வேத ஜோதிடம் சனி செவ்வாய் சேர்க்கை எந்த வீட்டில் சேர்ந்திருக்கிறார்களோ அந்த வீட்டுக்கு கெடுதல்களை ஏற்படுத்தும், அது போல எந்த இடத்தை பார்க்கிறார்களோ அந்த இடங்களுக்கும் கெடுதல்களை ஏற்படுத்தும்; சேர்க்கை ஏழில் இருந்தால் மணவாழ்க்கையை பாதிக்கும், 10 ல்இருந்தால் தொழிலை பாதிக்கும், 4 ல் இருந்தால் கல்வி அல்லது சுகம் அல்லது தாயை பாதிக்கும் அதுபோல சேர்க்கை 9 ல் இருந்தால் தகப்பனார் அல்லது பூர்வ புண்ணியத்தை பாதிக்கும். விதி என்று ஒன்று இருந்தால் விதி விலக்கு கட்டாயம் உண்டு அதன்படி செவ்வாயும் சனியும் ராசி நாதனாகவோ அல்லது லக்னநாதனாகவோ இருந்தால் தோஷ நிவர்த்தி உண்டு, அவர்களை குரு பார்த்தாலும் விதிவிலக்கு உண்டு, அதிலும் குரு 5அல்லது 9 என்ற திரிகோணாதிபத்தியம் பெற்று பாரத்தாலோ; உச்ச பலம் ஆட்சி பலம் பெற்றுபாரத்தாலோ அல்லது 4,7,10 என்று கேந்திர பலம் பெற்று பரத்தாலோகூட விதிவிலக்கு தோஷ நிவர்த்தி உண்டு. பாவாதி பதி பாவத்தை பார்க்க பாவ புஷ்டி என்பது பலதீபிகை விதி, செவ்வாயோ, சனியோ தன் சொந்த வீட்டை தானே பார்த்தால் கேடு கெடுதிகளுக்கு இடம் இல்லை .
ஒன்பாதாம் இடம் -பாக்கியம் புண்ணியஸ்தானம்

பாக்கியம் நன்றாக இருந்தால்தான் அனைத்தும் தடை இல்லாமல் கிட்டும், பாக்கியம் பலம் இல்லாதவன் எல்லாம் இருந்தும் இல்லாதவன் ஆகிறான், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது, உழைப்பு அதிகம் பலன்கள் குறைவு, பேருக்கு வாழந்து வருவான், இருந்தும் இல்லாத நிலை, வாழ்க்கை கற்பனையில் முடிந்து விடும், அதிஷ்டம் இல்லாதவன் ஆகிறான், பாக்கியத்தை வலுப்படுத்தி கொள்ளுங்கள். பாக்கியம் என்பது ஒன்பதாம் இடம், பாக்கயத்தில் மிகப்பெரிய சூட்சமம் அடங்கி உள்ளது.

சனி வக்ரம்
சனி வக்ரம் பெற்றவர்கள் தான் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தான் ஊர்காரர்களால் கூட கண்டுபிடிக்காதாவாறு செய்து கொண்டிருப்பார், (உதாரணம் அவர் என்ன படித்துள்ளார், எங்கு வேலை பார்க்கிறார் என்பது கூட ஊராருக்க தெரியாது, ஒரு சிலர் திருமணத்தை கூட ரகசியமாக முடித்து இருப்பார்கள்)

வெற்றி எண்பது இரண்டு வகை
வெற்றி எண்பது இரண்டு வகை ஒன்று போட்டி இல்லாமல் ஏகமனதாக தேர்ந்து எடுத்து வெற்றி பெறுவது என்பது ஒரு வகை; போட்டிகளைச் சந்தித்து ஜெயிப்பது என்பது இரண்டாவது வகை, இதை கோட்சாரமும், சுய ஜாதகமும் முடிவு செய்யும். ஆறாம் இடம் வலுப்பெற்றால் எதிர்ப்பு இருக்கும், 5,9,11 ஆம் இடங்கள் வலுப்பெற்றால் எதிர்ப்பு இல்லாத வெற்றி ஆகும். சுய ஜாதகங்களையும் கோட்சார நடப்புகளையும் பார்த்து வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்

நன்றி
சக்கரவர்த்தி கலியபெருமாள் ✍️

Post a Comment

0 Comments