ஜோதிட பதில்-Tamil Astrology
மரணபயம், மரணம், மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள்
கூட்டு மரணங்கள்
ராகு - கண்டம், மரணம், விஷம்
குரு -ஜீவன் ஆண்
செவ்வாய்- கூர்மையான ஆயுதம் கற்கள் ஆயுதங்கள் காவல்துறை ரானுவம்
கேது- குறுகிய, நெரிசல்
சுக்கிரன் - பெண் வாகனம் சுகம் வீடு
குரு ராகு இணைவு கூட்டுமரணங்கள்
இந்த இணைவிற்கு சனி செவ்வாய் சுக்கிரன் இணைவு திரிகோணங்களில் ஏற்பட்டால் கண்டிப்பாக கூட்டு மரணங்கள் வாகன மூலமும் சாலைகளிலும் ஏற்படும். அது தவிற பலவிதமான கூட்டுமரணங்கள் ஏற்படும்.
மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் - மரண பயம் நீங்க
மரணத்தின் சூட்சமம்
எட்டாம் இடம் என்பது கவலை, மரணம், அவமாணங்கள், மலையிலிருந்து கீழ் விழுதல்.
எட்டாம் இடம் என்பது ஒன்பதாம் இடத்திற்கு விரையஸ்தானம் ஆறாம் இடம் என்பது ஐந்தாம் இடத்திற்கு விரையஸ்தானம் 12 ஆம் இடம் என்பது லக்கனத்திற்கு விரையஸ்தானம்.
6 8 12 மறைவிடங்கள் 1 5 9 திரிகோணங்கள்
திரிகோணங்களுக்கு விரையஸ்தானங்கள் மறைவிடங்கள் ஆகும் அப்படி என்றால் மரணம் வியாதி மோட்சம் செய்த புண்ணியங்கள் அடிப்படையில் வந்து சேரும்.
செய்த பாவங்கள் வம்சங்கள் செய்த பாவங்கள் மறைவிடத்தில் வந்து நின்று அதிர்ஸ்டத்தையும் (மரணத்தையும்) யோகத்தையும் கொடுக்கும். மரணமும் அதிஸ்டமும் கண்ணுக்கு தெரியாதவை இவைகள் ராகு கேதுக்கள் என்ற மாய கிரகத்தில் மறைந்து நின்று தடுக்கவேண்டியதை கொடுக்கவேண்டியதை சரியாக செய்துகாட்டும்.
மரணம் பல அவமாணங்களையும் பெருட்சேதத்தையும் கடன்களையும் கொடுத்து உயிரை காக்கும் புன்னியம் ஜாதகத்தில் இருந்தால்.
நீ சேர்த்த வைத்த பணம் உன் உயிரை காக்காது நீ செய்த புண்ணியங்கள் அரணாக இருந்து கவசமாக உன்னை பாதுகாக்கும்
வேறு பதிவில் சந்திப்போம்
பிண்டம் புலம்புகிறது
குருவடிசரணம், திருவடிசரணம்
கர்ம பிடியில் கடந்து வருகிறேன், நாட்கள் என்னை தின்று வருகிறது, என் கர்ம பாவம் என்னை விடவில்லை, வளர்சிதை மாற்றமாய் என் தேகம், சிதைந்து கொண்டு இருக்கிறது, என் கர்ம வினை காலத்திற்கு ஏற்ப, வேதனை பட்டு, கேவலப்பட்டு, அசிங்கப்பட்டு, நோய்வாய்பட்டு, நல்விணைக்கேற்ப புகழப்பட்டு, இந்த மாய வாழ்க்கையோடு மல்லுக்கட்டி நிற்கிறேன், இறைவா இந்த மாய பிறப்பை வேர் அறுத்து விடுவாய், இந்த அழுக்கு பிண்டத்திற்கு நற்கதி கொடுப்பாயக, நான் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்களையும், குற்றங்களையும் மண்ணித்து நற்கதி அடைய, இறைவா, உன் திருவடி வணங்கி வேண்டுகிறேன்.
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;
வேண்டும் காலம் குருவை அறிந்திட
வேண்டும் ஞானம் குருவைப் புரிந்திட
வேண்டும் அறிவு குருவழி நடந்திட
வேண்டும் புண்ணியம் குருவை வேண்டிட
வேண்டும் பேறு குருவைக் கண்டிட
மனைவி வரமாட்டாள் மகன் வரமாட்டான்
தேடிய செல்வம் வாராது
ஆடை ஆபரணம் வாராது
பற்றி தொடரும் இருவினை புண்ணிய பாவவுமே!!!
ஆகையால் நல்லதை செய்யுங்கள்
பாவம் செய்யாதிருங்கள்
குருவடிசரணம், திருவடிசரணம்
0 Comments