Ticker

6/recent/ticker-posts

கர்ம வினை பலன்கள்

கர்ம வினை பலன்கள் எப்படி செயல்படுகிறது?

Tamil Astrology

நம் கரு உருவான காலத்தில் இருந்து நம்முடைய கர்ம வினையை அனுபவிக்க தொடங்கி விடுகிறோம் பாவத்திற்கு தண்டனை, புன்னியத்திற்கு புகழ் என்ற கர்ம வினை தத்துவத்தின் அடிப்படையில், நம் கர்மவினை நல்லதாக இருந்தால், நம் கரு நல்லவிதமாக வளரும், நம் கரு கொடுத்த தந்தை, நம் கரும் வளர்க்கும் தாய், நம்முடைய குரு, நம் சகோதரர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், மனைவி, மக்கள், நம் ஜாதகம், நம் ஜென்மம் எல்லாம் நல்ல விதமாக அமைந்து விடும், அதுபோல கர்மவினை நல்லதாக இல்லை என்றால் எல்லாம் கெடு பலனாகவே நடந்து கொண்டு இருக்கும், பூமியில் பிறக்கும் எந்த ஒரு ஜாதகருக்கும், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே, ஒன்பது கிரகங்களாக மாறி, ஜாதக கட்டங்களில் அமர்கிறது அவரவர் வினைகளே வீடுகளையும் தீர்மானிக்கிறது. அவரவர் வினைகளே கிரகங்களாக மாறி இல்லங்களில் அமர்ந்து வினைகளுக்கு ஏற்ப தசைகளை அமைத்து கோட்சார கிரக சஞ்சாரம் மூலம் நம்மை நம் வினைகளுக்கு ஏற்றபடி வழாவைக்கிறது.

கர்ம வினைபலன்களை நாம் எவ்வாறு அனுபவிக்கிறோம்?

நம் கர்ம வினை பலன்கள் நம் தாய் மூலமாகவும், தந்தை மூலமாகவும், நம் சகோதரர்கள் மூலமாகவும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மூலமாகவும் மனைவி, மக்கள் மூலமாகவும், ஏழரைச்சனி காலத்திலும், அஷ்டமச்சனி காலத்திலும், அர்த்தாஷ்டமச்சனி காலத்திலும், கன்டச்சணி காலத்திலும், யோக, அவோயாக தசை காலத்திலும் பாவ விமோசனமாக எல்லா விதமான கெடு பலன்களையும் அனுபவித்து விடுவோம் இதுதான் கர்ம வினை பலன். எனவேதான் தீய குணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள், இறைவன் அந்த மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான், வாழும் காலத்தில் நன்மை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன் ஆகிறான். எனவே நல்லதே செய்யுங்கள், நல்லதே நினையுங்கள் நாம் செய்த நல்வினையும்,  தீவினையும் ஒன்றுக்கு ஆயிரமாகப் பல்மடங்கு பெருகி, விதை போல, ஒன்று பலவாக வளர்ந்து வரும்.

கூட்டு கர்மா -கிரக சேர்க்க -Compound Karma

நம் பிறப்பு கர்ம வினைகளை கழிப்பதற்கே கூட்டு கர்மா கிரக சேர்க்கை ஒரு கர்மா நம்கர்மாவை அழிக்கும், ஒரு கர்மா நம்கர்மாவை பாதுகாக்கும், ஒரு கர்மா நமக்கு வழிகாட்டும் ஒரு கர்மா நம்மை வேடிக்கை பார்க்கும், ஒரு கர்மா நம்மை சுற்றி வந்து கொண்டே இருக்கும், ஒரு கர்மா நம் வினைக்கேற்ப நம்மை சீன்டிக்கொண்டு சன்டை கொண்டு மல்லுக்கு நிற்கும் இப்படி நம் வினைக்கேற்ப நம் ஜீவன் குரு படும் பாடு தான் நம் வாழ்க்கை, ஒரு ஜீவன் (குரு) ஜாதகத்தில் வினைக்கேற்ப மாட்டிக்கொண்டோ தனித்தோ, சுப சேர்க்கை பெற்றோ ஓடுகின்ற கிரக சலனத்தை கோட்சாரம் கொண்டு பார்க்க வேண்டும். நம் ஜீவனின் (குரு)கர்மா கழிய வேண்டும் என்றால் வேறு ஒரு கர்மாவால் நிச்சயமாக முடியும் அதை தேடிக்கொண்டு நம் மனம் (சந்) சில சமயம் அலைந்து மாட்டிக்கொள்ளும், நம் கர்மாவில் வினையை கழிக்க முடியும் என்றால் நமக்கு உள்ள ஜீவன்(குரு) நமக்கு கிடைப்பார்கள் இல்லை என்றால் அலைந்து திரிந்து நம் மனம் படும் பாட்டிற்கேற்ப இச்சை ஆசை பொறாமை சுகம் கள்ளத்தனம் கபடம் என அனுபவித்து கர்மா வினையுடன் அழிந்து போகும்.

ஒரு சிலருக்கு கும்பிடபோன தெய்வம் நம் குறுக்கே வந்து நிற்கும், ஒரு சிலருக்கு கோவிலுக்கு சென்றாலும் நடைசாற்றி இருக்கும். அந்த அமைப்பு ஜாதகத்தில் அமைந்து விட்டால் தத்துவம் பேசிக்கொண்டு சாமி என்ன பூதம் என்ன குரு என்ன என்று நம்மை நக்கல் செய்யும் ஒரு சிலர் மறைமுகமாக குருவை தேடிக்கொள்வார்கள் ஒரு சிலர் ஒன்றும் கிடைக்காமல் அலைந்து திறியவேண்டிய நிலைதான்! அவர்கள் யார்? யார்? எந்த கிரக நிலை? யாரை தேடினால் நம் ஜீவன் அடங்கிபோகும் வேறு பதிவில் வேத நாடி ஜோதிடக்கலை குழுமத்தில் பதிவிடபட இருக்கிறது படித்து பயன் பெறுங்கள்.

செய்த வினை- கர்மா Karma

செய்த வினை என்பது முன் செய்த வினையாக இருக்கலாம் அல்லது செய்ய போகின்ற வினையாக இருக்கலாம் அந்த வினை நல்வினையாக இருக்கலாம் அல்லது தீவினையாக இருக்கலாம். நீ அனுபவிக்கும் பலன்களை பொருத்து உன் வினைகளை தீர்மானம் செய்து கொள்ளலாம்.

யோகம் என்றால் கிரகங்களின் இணைவு அது சுபயோகமாக இருக்கலாம் அல்லது அசுப யோகமாக இருக்கலாம். இந்த இணைவுகளும் உன் கர்ம வினைகளை பெருத்தே பலன்கள் பாதகமாகவும் சாதகமாகவும் நடைபெறும்.

உன் பிறப்பு நீ செய்த வினையால் மட்டுமே ஏற்படும் தவிர ஒரே மாதிரியாக அமையாது.

ஊழ் என்றால் என்ன என்று தெரியும் உங்களுக்கு ஊழ்வினை என்றாலும் என்ன என்று தெரியும் புதுசாக பலன்களை கூற வேண்டாம்.

கர்ம வினை

  • பாவங்கள் -நாம் நம் முன்னோர்கள் செய்த பாவங்கள்
  • சாபங்கள் -நாம் நம் முன்னோர்கள் பெற்ற சாபங்கள்

கார்மா தொடரும்
நமக்கு கிடைக்க வேண்டியவகளை தடுப்பதும் தவிக்க வைப்பதும்
ராகுவும் கேதுக்கள்தான்
ராகு -மரணம் மரணத்திற்கு ஒப்பான கன்டங்கள் அவமானங்கள் வியாதிகள் பெருங்குடல்கள் குடல் வியாதிகள் அல்சர் செரிமான கோளாறு
கேது -தடை தாமதம் தவிக்கவைப்பது நெரிப்பதும் தூக்குபோடவைப்பதும் வெறுப்பது, உறவில் இருந்து பிரியவைப்பது ஞானத்தை தருவது.
சிவாய நம ஓம்

ஒவ்வொரு நிகழ்விற்கும் நடக்கும் காலம் வரை காத்திருக்க வேண்டும் அதற்கு நிறைய உதாரணங்கள் தரலாம் சாதம் சமைக்க உளை கொதித்து அரிசி கலைந்து போட்டு வெந்த பிறகே வடிக்க வேண்டும் இல்லை என்றால் அறைவேக்காடுதான், அது போல பஸ்சில் ஏறியுடன் உன் நிறுத்தம் வரும்வரை காத்திருக்கவேண்டும், இறுதி போட்டியில் பதக்கம் பெற பல போட்டிகளை சந்தித்து வரவேண்டும் , உன் ஜாதகத்தில் கிரக நிகழ்வுகள் நிகழ அந்த காலம் வரும்வரை காத்திருக்கவேண்டும் உன் ஜாதகம் முன்பதிவு செய்யபட்ட பயணசீட்டு அந்த காலம் வரும்வரை காத்திருக்கவேண்டும்.

ஜோதிடம் பார்த்தவுடனே வேலை செய்துவிடாது உன் உடல் பஞ்ச பூதத்தால் ஆன நவகிரக பிண்டம் கிரக சலணத்திற்கேற்ப சிதைந்து கொண்டே நகரும் பிரமாண்ட ஆசை பெருக்கி காட்டி இறுதியில் சுருக்கிவிடும். பிரமாண்ட ஆசையை சுருக்கி இறுதி காலத்தை பெருக்கி கொள்ளுங்கள்.
கர்மாவை ஒழிக்க ஆசை ஒழிக்கவேண்டும் ஞானம் -கேது சிவன் வாழ்வு சிவனே என்ற வாழ்வு ஞானத்தை பெருக்கி மோட்சத்தை கொடுக்கும்.
இறுதியில் மிஞ்சுவது ஒன்றும்இல்லை இப்போதே உணர்ந்துவிடு நவகிரகங்கள் உண்ணை கண்டு மிரண்டு ஓடும்.

குருவின் பார்வை கோடி தோஷங்களை போக்கும்

குருவே சரணம் குரு பார்வை கோடி தோஷங்களை போக்கும் பொதுவாக ஜாதகத்தின் கிரகங்களை மேலோட்டமாக பார்த்தால் விதியின் செயல்பாடுகளை ஆராயமுடியாது என் பதிவிகளை மேலோட்டமாக படித்தால் சூட்சமங்களை உங்களால் புரிந்துகொள்ள இயலாது எனவே பதிவுகளை திரும்ப படியுங்கள் ஒரு உதாரணம் வினை இருப்பததால்தான் பிறப்பு எடுத்து பிறந்தோம் அந்த வினைகளை வாழும்காலத்தில் கிரகங்கள் மூலம் அனுபவிக்க தொடங்குகிறோம் நம் கர்ம வினையானது ஒரு கிரகங்கள் நிறைவேற்றாது ஒன்பது கிரகங்களையும் உபயோகபடுத்திகொள்ளும்ளம்இதில் சுப பலன்கள் அசுப பலன்கள் என காலத்திற்கேற்ப சுழற்சி முறையில் அனுபவிக்க விடும் ராகு கேது க்களிலும் மட்டும்தான் நாம் அனுபவிக்க கூடிய கர்மவினைகளை சூட்மத்தில் அடக்கி காலத்திற்கேறப் கொடுத்தோ பறித்தோ அழித்தோ தடுத்தோ பிரித்தோ கதறவிட்டோ வேடிக்கை பார்க்கும் வினைக்கேற்ப அதிபயங்கர ஆசைகளை தூண்டிவிட்டு கொடுரங்களை தூண்டிவிட்டு அசிங்களை தூண்டிவிட்டு அனுபவிக்க விட்டு ஞானத்தை கொடுத்து சுருக்கிவிடும். இந்த கால கட்டத்தில் குருவின் பார்வைகள் கர்ம வினை பலன்களுக்கு கேற்ப ஏற்படுத்தும் அதற்கேற்ப பாவ வினைகளின் செயல்பாடு தூண்டுதல் குறைக்கப்படும். அடுத்பபதிவுகளில் மேலும் விளக்கமாக பார்க்கலாம்.

🦅 சிவ சிவ சிவாய நம சக்கரவர்த்தி கலியபெருமாள்

ஜோதிட பதில்- Tamil Astrology

Post a Comment

0 Comments