Ticker

6/recent/ticker-posts

வீடு வாகனம் சொத்துகள் பணம் யார் யார் போராட வேண்டி வரும்? R

தமிழ் ஜோதிடம்- ஜோதிட பதில் Tamil Jothidam

சிவ சிவ சிவாய நம

சுக்கிரன்
வீடு, வாகனம், வண்டி, பணம், மனைவி, சுகம், சொத்து, பெண், ஆடம்பர சொகுசு வீடு
வீடு வாகனம் சொத்துகள் பணம் யார் யார் போராட வேண்டி வரும்?
பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரனுடன் கேது இணைவு சுக்கிரனுக்கு 6 ல் கேது கேது அல்லது ராகுவிற்கு 10 ல் சுக்கிரன் அல்லது சுக்கிரனுக்கு 2 ல் கேது 12 ல் கேது, சுக்கிரனுக்கு 1 5 7 9 2 12 ல் கேது இருந்தால் கண்டிப்பாக போரடவேண்டும்.
கடனில் இருப்பார் கட்டிய வீடு பாதியில் இருக்கும் குடிபுகமால் விற்றுவிடுவார் கார் கடனில் இருந்து கடன் கொடுத்தவர் கட்ட முடியாமல் எடுத்து சென்று விடுவான். சிலருக்கு காசு பணம் இருந்தும் கனவாகவே இருக்கும்.
சிலர் தனக்கு கிடைத்த பரம்பரை சொத்தை அழித்துவிடுவார்கள்
எவ்வாறு வெற்றி பெறுவது கர்மா வழிகொடுக்குமா? அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் குடும்ப நபர்களின் ஜாதகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்

புத்திர தோஷம்என்பது என்ன? புத்திர சோகம் எனபது என்ன? இதை வேத ஜோதிடம் எவ்வாறு விளக்கம் அளிக்கிறது! நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் நம்பிக்கை இல்லாதவர்கள் இத்துடன் விளகிவிடலாம் பொதுவாக 5 ல் 7ல் 8ல் சனி ராகு கேது போன்ற கிரகங்கள் இருந்தால் புத்திர தோஷம், களஸ்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஏற்படும், அதுபோல ஐந்து ஏழு எட்டாம் இடங்களை சனி ராகு கேதுக்கள் பார்த்தாலும் தோஷம் ஏற்படும். புத்திர பாக்கியமே இல்லை என்றால் புத்திர தோஷம், பிள்ளைகள் பிறந்து பிறந்து இறப்பது புத்திர சோகம்! தகப்பனுக்கு அந்திம காலத்தில் கர்மா செய்வதற்கு, கொள்ளி வைப்பதற்கு ஆண் பிள்ளை அவசியம், ஆனால் தகப்பனை உயிரோடு இருக்கும்போது பிள்ளை சாக, பிள்ளைக்கு தகப்பன் கொள்ளி வைத்தால் புத்திர சோகம்! நல்ல இளமைப் பருவத்தில் படித்துப் பட்டம்பெற்றார் வேலைக்குப் போகும் தருணத்தில் திருமணம் ஆகாமல் எதிர்பாராமல் மகன் இறந்து விட்டான். அவன் தந்ததையே அவனுக்கு அந்திமக் கரும் கிரியைகள் செய்யும்படி ஆயிற்று இதுதான் புத்திர சோகம். இதற்கு அடுத்து புத்திர வேதனை இதை பின்னால் பார்க்கலாம். ஜோதிட கணக்கு திரும்ப திரும்ப படியுங்கள் சக்கரவர்த்தி ஏதும் சொல்லித் தருவதில்லை என்று சிலர் வருத்தம் அப்படி நான் ஏதும் செய்யவில்லை நிறைய எழுதி இருக்கிறேன் எனக்கு தெரிந்ததை உதாரணத்திற்கு ராகு 7ல் இருப்தாக வைத்துக்கொள்வோம் ஏதாவது ஒரு லக்கனத்தை உதாரனப்படுத்தி கொள்ளுங்கள், அவர் பார்க்கும் இடங்கள் 5 ஆம் இடம் 9ஆம் இடம் அடுத்து லக்கனம். 9 ஆம் இடம் என்பது தகப்பனார், பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும். 5 ஆம் இடம் என்பது புத்திர ஸ்தானம் அது மட்டுமல்ல, 5 ஆம் இடத்தையும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பார்கள். 5 ஆம் இடம் என்பது அடுத்த ஜென்மம் 9 ஆம் இடம் என்பது போன ஜென்மம் 10 ஆம் இடம் என்பது கர்ம ஸ்தானம் அதற்கு 12 ஆம் இடம்தான் 9 ஆம் இடம் பாக்கிய ஸ்தானம். முன் ஜென்மாவில் செய்த கர்ம வினையின் காரணமாக இந்த ஜெனாவில் அடையும் பாக்கியம்தான் பூர்வ புண்ணியம் ஆகும். இந்த ஜென்மாவில் நாம் செய்யும் நல்லது கெட்டதுகளுக்கு 6 ஆம் இடத்துக்கு பலன் தொடர்புடையது (10 ற்கு பாக்கிய ஸ்தானம்) அதற்கு 12 ஆம் இடம் அடுத்த ஜென்மாவில் அடையக்கூடிய நன்மைகள், வாரிசு புத்திர ஸ்தானம் 5 ஆம் இடம் ஆகும் இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் (பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் புரியும் வரை, நான் ஜோதிடத்தை பார்த்து வியந்த இடங்கள் இந்த சூட்சமத்தில்தான்) (இதன் தொடர் பதிவு கிடைக்கவில்லை என்றால் புண்ணியம் இல்லை என்றே கூறுவேன்) இந்த பதிவிற்கு தகுந்த Comment மற்றும் கேள்விகளை பதிவிடுங்கள்.
விதி மதி விதி என்னவாக இருக்கிறதோ அதை முதலில் நிறைவேற்ற துடிக்கும் அதற்கு மதி மயங்கி விடும், குரு ராகு சனி ராகு இனைவு பெற்ற ஜாதகர்கள் தான் பிறந்த இடத்தை விட்டு வேறு இடமாறி அல்லது இனமாறி வாழ்ந்து வந்தால் மட்டுமே வாழ்க்கை வெற்றிபெறும். ஏழரைச்சனி அட்டமச்சனி காலங்களில் சேர்ந்தவர்களை பிரித்து வைக்கும் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும், அலைந்து திரிய வைக்கும் உன்வருமானத்தை சுருங்க வைத்து வேடிக்கை பார்க்கும், தேவைப்பட்டால் பார்க்கும் வேலையை பிடிங்கி விட்டு பைத்தியமாய் திரிய வைக்கும், முடிந்தால் பட்டினி போட்டு பார்க்கும், உறவில் விரிசல் ஆக்கி ஊறை விட்டு தள்ளி வைக்கும், அற்ப சுகத்திற்கு அலைந்து திரியவைக்கும், கற்பனை உலகத்தின் மாய பிம்பம்காட்டி மம்மதையில் அலைய வைக்கும், அதிக சுகங்காட்டி ஆளை கெடுத்திடும், மூலையில் உறங்க வைக்கும். மனது நினைப்பது எல்லாம் உடனே நடக்கவேண்டும் என்று நினைப்பது எதிர்பார்ப்பது தவறு, சாதம் வடிக்க உலை கொதிக்கும் வரை காத்திருக்க வேண்டும், பிறகு அரிசியை கலைந்து போட்ட பிறகு அரிசி வெந்த பிறகு வடிக்கவேண்டும், அவசரபட்டால் அரைவேக்காடுதான் திரும்ப வேகவைக்கவும் முடியாது சாப்பிடவும் முடியாது, மனிதனின் கர்ம வினை கஷ்ட காலத்தில் அத்திவாசிய தேவைகளுக்கு இறைவன் படி அளப்பான். ஆடம்பர தேவைகள் யோக்காலத்தில் ஈடேரும்.

சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள்

Post a Comment

0 Comments