Ticker

6/recent/ticker-posts

வெற்றி பெற வேண்டுமென்றால் பல சோதனைகளை கடந்து வரவேண்டும் R

தமிழ் ஜோதிடம் -ஜோதிட பதில்

சந்திரன்- தாய் பயணம் சலனம் தடுமாற்றம் இழப்பு உணவு கெமிக்கல் பெயிண்ட்
கேது -ஞானம் ஞானக்காரகன் மோட்சகாரகன் ஆன்மிகம் தடை
சனி- தொழில் மூத்த அண்ணன்
குரு- மூக்கு ஜாதகன் கல்லீரல் தொட
மிகச்சிறந்த மருத்துவராக இருப்பார் அவர் மகன் மதுவிற்கும் போதை மாத்திரைக்கும் அடிமையாக இருப்பான் ஒரு சிலர் அங்கம் குறைபாடு உள்ள குழைந்தகளாக பிறப்பார்கள், ஒரு சில ஆசிரியர்களின் மகன் கொத்தனார்களாகவும் கூலி வேலை செய்பவராகவும் இருப்பார்கள். ஜோசியர்களின் குடும்ப உறுப்பினர்கள் விதிவிட்ட வழிக்கு வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் ஜோசியர் நினைத்தாலும் மனைவியையோ மகனையோ அல்லது அண்ணன் தம்பிகளை திருத்த இயலாது.
விதி கர்மா மிக மிக வலிமையானது உலக உறுப்பினர்கள் (மாமிச பிண்டங்கள்) 12 ராசிகளில் ஒன்றாகவும் ஒன்பது கிரகங்களை கொண்டும் 27 நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரத்தில் அவதரித்து ஒன்பது நட்சத்திரத்திற்கு குறைவான சாரம் பெற்று பிறப்பு எடுத்து இருப்பார்கள். இதற்கு அப்பால் எந்த கிரகங்களும் கிடையாது. ஆனால் கணக்கில் அடங்காத சோதனைகள் வேதனைகள் நன்மைகள் என எல்லா பிறப்புகளும் அடைந்து மடிகிறது.
அப்படி என்றால் ஜோதிடத்தால் நாம் அடைந்த அடையபோகும் அனுபவித்த பலன்களை எடுக்க முடியாதா? முடியும் என்றால் எப்படி? ஒரு கிரகத்தை எடுத்துக்கொண்டால் அதற்கு பல காரகங்கள் உண்டு காரகம் என்பது காரணமானவர் அதில் உயிர்காரகங்கள் உயிரற்ற காரகம்( பொருள் காரகம்)
உதாரணமாக (சந்திரன் கேது) தாய் ஆன்மீக ஈடுபாடு உண்டு தாய் நோயால் அவதி அடைவாள் தர்ம சிந்தனை உடையவள் தானும் ஆன்மீகத்தில் ஈடுபடுவான்.
(சனி கேது) சிறு வயதில் இருந்து தெரிந்தோ தெரியாமலோ ஆன்மிகத்தை தொட்டு நடந்துவந்திருப்பார் மனதில் ஒருவித விரக்தியோடும் ஏதோ ஒன்றை பறிகொடுத்ததுபோன்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும், உத்தியோகம் வேலை பணி நிரந்தரம் உறுதி அல்ல. வெறுப்பான வாழ்க்கை மோட்சத்தை தேடும் நோக்கில் செயல்கள் இருக்கும்.
இப்படி ஒவ்வொரு காரகமாக கிரகங்களை இணைத்து பலன்களை கூறினால் பலன்கள் பழுது இல்லாமல் கிடைக்கும்.
என்ன பிராப்த்தமோ அதை தொழிலாக்கி கொள்ளுங்கள் அதை தான்டி செல்லும்போது தோல்வியில் முடிகிறது.
சிவ சிவ சிவாய நம

ஐந்தாம் இடம் - புண்ணியங்கள்
நீ என்ன புன்னியங்கள் வைத்திருக்கிறாய் என்பதையும், என்னன்ன புன்னியங்கள் செய்யபோகிறாய் என்பதையும், உன் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் வேலை செய்யுமா? செய்யாதா? என்ற சூட்சமங்களை, 5 ஆம் இடங்கொண்டு அறிந்து கொள்ளலாம், சேர்த்து வைத்த புன்னியம்தான் உனக்கு குழந்தையாய் பிறக்கும். உன் குழந்தையின் கரு ஐந்தில் உருவானால் அது வளரும் இடம் ஒன்பதில்தான், ஐந்துக்கு ஐந்து ஒன்பதாம் இடம்.

குருவே சரணம் மறைவு அஸ்தமனம் மறைவு ஸ்தானத்தை காட்டிலும் அஸ்தமன தோஷம் அதிகம் பலம் வாய்ந்தது; உதாரணத்திற்கு புதன் கன்னியா லக்கனத்திற்கு புதன் 1 ,10 க்கு உடையவர் ஆவார், அவர் அஸ்தமன அடைகிறார் என்று எடுத்துக்கொள்வோம், மேலும் எட்டில் மறைகிறார் என்று எடுத்து கொள்வேம், இதன் பலன்களை ஆராயும்போது, பொதுவாக புதனுக்கு மறைவு தோஷம் இல்லை; மறைவு ஸ்தானத்தை காட்டிலும் அஸ்தமன தோஷம் அதிகம் பலம் வாய்ந்தது என்ற விதிப்படி ஜாதகரின் கௌரவத்திற்கும், மதிப்பு, மரியாதைக்கும் பிரச்சனைகள் உருவாகும், அதனுடன் தொழில், வேலை, உத்யோகம் இவற்றிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரும். இங்கே எழுதுவது அனைத்தும் என் அனுபவ கருத்துகள்

பாக்கியம்
பாக்கியம் நன்றாக இருந்தால்தான் அனைத்தும் தடை இல்லாமல் கிட்டும், பாக்கியம் பலம் இல்லாதவன் எல்லாம் இருந்தும் இல்லாதவன் ஆகிறான், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது, உழைப்பு அதிகம் பலன்கள் குறைவு, பேருக்கு வாழந்து வருவான், இருந்தும் இல்லாத நிலை, வாழ்க்கை கற்பனையில் முடிந்து விடும், அதிஷ்டம் இல்லாதவன் ஆகிறான், பாக்கியத்தை வலுப்படுத்தி கொள்ளுங்கள். பாக்கியம் என்பது ஒன்பதாம் இடம், பாக்கயத்தில் மிகப்பெரிய சூட்சமம் அடங்கி உள்ளது.

உன்மனமே உன் வினையை உண்டு பன்னும், நீ செய்யும் பாவத்திற்கும் சாபத்திற்கும் உன்மனமே காரணம் (யாராவது நமக்கு சாதாமாக பலன் கூறமாட்டர்களா என்று மனம் ஜோதிடரை தேடிக்கொண்டே அலையும். இதுவே வினையாக அமைந்து விடும்) அன்பு மிக்க வேத ஜோதிட குழு அன்பர்களே என் சிரம்தாழந்த வணக்கங்கள், மனம் என்பது ஒரு செயலை ஆராயும்போது நல்லவைகளை மட்டும் நினைத்து இது சரி என்று முடிவெடுத்து விடும், தீயவைகள் கெடுதல்கள் மனதால் மறைக்கப்படும் இங்குதான் விதி ஆரம்பம் ஆகிறது, நல்ல தசா பலன்கள் நடக்கும்போது கெடுதல்களிலுருந்து காப்பற்றபடுவீர்கள் ஆனால் கெடுதாலான தசாபலன்கள் நடக்கும்போது கர்மவினை பாவபலன்களை நிறைவேற்றிக்கொள்ளும், உதாரணமாக வீடுகட்டுகிறார் என்றால் நல்ல தசை நடந்தால் வீட்டு அமைப்பு வாஸ்து படி அமையும், பணி ஆட்கள் நல்லபடி அமைவார்கள், பணசிக்கல் ஏற்படாது, ஆனால் கெடுதசை நடந்தால் எல்லாம் தலைகீழாக அமைந்து விடும் செய்கின்ற வேலை போய் பொருளாதரா சிக்கலை ஏற்படுத்திவிடும். இன்னொரு உதாரணம் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் செய்ய ஏற்பாடு செய்வார்கள் அப்போது அவசரப்பட்டு தோஷம்கழியாமல் திருமணம் செய்து வாரிசுக்கு ஏங்கி, அசிங்கம்பட்டு குடும்பம் பிரிந்து சிக்கலில் நிற்கும் நல்ல அமைப்பு இருந்தால் எல்லாம் நன்றாக ஈடேரும். இதில் விதி பெற்றோர்கள் மூலம் நல்ல இடம் விட்டால் கிடைக்காது என்று முடிவெடுத்து முடிவில் விட்டால் போதும் என்று கோர்ட்டுக்கு அலைவார்கள், யோசித்து முடிவெடுங்ள் ஜோதிடம் என்பது விதியை மாற்றும் அற்புதம் அல்ல, அல்லது அதிஷ்டத்தை தரும் சக்தி அல்ல, சந்தர்ப்பத்தை சாதகமாக்கி கொள்ள சொல்லப்படும் ஒரு வழிகாட்டி! கைகாட்டிதான்" சோதனை இல்லாமல் சுகத்தில் மிதக்கும்போது மனிதன் மாயையில் சிக்கி இறைவனை மறந்துவிடுவார்கள். உங்கள் அவசரத்திற்கும், அவசியத்திற்கும் கிரகங்கள் உடனே ஓடிவந்து யோகத்தை பன்னிவிடாது. ஒரு ஜாதகருக்கு யோகம் செய்யும் கிரகங்கள் என்று இரண்டு உண்டு, பாவம் செய்யும் கிரகங்கள் என்று நான்கு உண்டு எந்த பலுனும் செய்யாமலே வேடிக்கை பார்க்கும் கிரகங்கள் மூன்று உண்டு. இவைகள் எப்போது பயன்படும் என்பது சூட்சமம். வாழ்க்கையில் உயர்வது என்பது மலை ஏறுவது போன்றது கடினமாக இருக்கும், வாழ்க்கையில் தாழ்வது என்பது மிக எளிது மலையிலிருந்து இறங்குவது போன்றது) ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் கழியாமல் திருமணம் செய்வது, மற்றும் பொருத்தம், முகூர்த்தம் இவைகள் மூன்றும் மிக முக்கியமானவை இவற்றை யார் யார் எல்லாம் தவிர்த்துவிட்டு, திருமணம் நடத்தினார்களோ என் அனுபவத்தில், வாரிசு இல்லாமல் போதல், குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் பிரிந்து விடுவார்கள், பொருளாதாரத்தில் தடைபட்டு நிம்மதி இல்லாமல் வாழ்தல், இதனால்தான் 10 பொருத்தம் பார்த்த திருமணம் எந்த ஒரு காரணமும் இல்லாமல் பிரிந்து விடுகிறது நன்றி வேத ஜோதிட ஆராய்ச்சிகள் தொடரும்

Post a Comment

0 Comments