Ticker

6/recent/ticker-posts

செல்வம் உங்களிடம் தங்க என்ன செய்ய வேண்டும்?

செல்வம் உங்களிடம் தங்க வேண்டுமா?🦅

சுக்கிரன்- மனைவி
வீடு மனைவி- சுக்கிரன்
பெண்கள் -சுக்கிரன
சுக்கிரனை சுகமாக சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும்
மனைவியிடம் பெண்களிடம் நன்றாக நடந்து கொள்ள வேண்டும் 
குரு -பணம் தனம் ஜீவன் 
குருவிற்கு துரோகம் செய்ய கூடாது ஆசிரியர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது தனம் தங்காது, நீங்கள் வாங்கும் ஊதியம் பணம் ( குரு) அந்த ஊதியம் ஞாயமானதாக இருக்கவேண்டும் உழைத்து பெறவேண்டும். அந்த தனம் உங்களிடம் தங்கும் புண்ணியம் சேரும்.
வேலை தொழில் - சனி 

பணிபுரியும் இடத்தை தூய்மையாகவும் அன்புடனும் நேர்மையாகவும் நடந்துகொள்ளவேண்டும்
குரு சனி சுக்கிரன் நன்றாக இருந்தால் ஜாதகத்தில் இணைவு இல்லாவிட்டாலும் உங்களை நல்ல நிலைக்கு அழைத்து செல்லும்.
உங்கள் ஜாதகம் எப்படி வேண்டும் என்றாலும் இருந்துவிட்டு போகட்டும் மேலே சொன்னதை கடைபிடியுங்கள் வளம் பெறலாம்.
சிவ சிவ சிவாயநம

சுக்கிரன் +ராகு -லட்சுமி வடிவம்
சுக்கிரன் + சனி+  ராகு - அஷ்டலட்சுமி யோகம்

சுக்கிரன் சனி ராகு ஒருவருக்கொருவர் திரிகோணத்தில் இருந்தால் அது மிகுந்த அதிஷ்டத்தை அள்ளத்தரும் அஷ்டலட்சுமி யோகமாக செல்படும்.

வீ்ட்டில் செல்வம் சேர சமையல் அறையில் சிறிய பூஜை அறை வைத்து வழிபட்டுவந்தால் தடையில்லா செல்வ் சேரும்.

பாரம்பரிய ஜோதிட முறை

தந்தை உயிரை பூர்வ ஜென்ம புண்ணியித்தால் வளர்த்து உடலை வளர்க்க தாயிடம் தருகிறான், தாய் உயிரை வைத்து உடலை வளர்க்கிறாள் கர்ம வினைக்கேற்ப பாவ புண்ணியங்கள் அமைக்கபற்று உடல் வளர்ந்த நட்சத்திரத்தில் பிறப்பு ஏற்படுகிறது. பிறப்பின் போது அமையபெற்ற கிரக அமைவுகள் கர்மவினை பதிவுகள் (ரெக்காட்) ஆகும். உடல் வளர்ந்த நட்சத்திரத்தை முதலாவதாக கொண்டு நம் கர்ம பிண்டத்தை வளர்த்து செல்லும் கர்ம வினை பிறப்பு கிரக பதிவிகளுக்கு ஏற்ளார்போல தசா கோட்சாரங்களை கொண்ட கிரக இணைவு அதாவது கிரக தூண்டல்கள் மூலம் விதிகளை செயல்படுத்தி கர்ம வினை பிண்டத்தை வளர்த்து முடித்துவிடும்.

இந்த கர்மவினை கிரக இணைவு அல்லது தூண்டல்களை கீழ்கண்ட முறைகளில் ஆராய்ந்து பலன்கூறிவருகிறார்கள்

1) பாரம்பரியமுறை முறை
2) கே பி ஜோதிட முறை
3) பிருகு நந்திநாடி முறை
4) சந்திர நாடி

இதில் அனுபவம் வெற்றி பெறுகிறது

நாடி முறையில் ஏற்படும் கிரக இணைவுகள் 1 5 9  3 7 11  மற்றும் 2 12 கோட்சார இணைவுகள் மற்றும் கிரக தூண்டல்களையும் நாடி எங்கே தோற்கிறது பாரம்பரியமுறையில் எங்கே தோற்கிறது ஏன் தோற்கிறோம் என்பதை அற்புதமாக நூல் பிடித்து அறியலாம்.

என்னை உண்மையாக தொடர்பவர்களுக்கு நிச்சயமாக கற்றுத்தரப்படும்  என் பதிவுகளை கேளிகூத்தாக்கி பார்க்காமல் உண்மையாக திரும்ப திரும்ப படித்து வாருங்கள் பல உண்மைகள் தெரியவரும்.

பலன் சொல்ல என்ன தேவையோ மற்றும் ஒருமனிதன் எந்த நேரத்தில் துன்பத்தை அனுபவிக்க நேரும் என்ற சூட்சம ஞானத்தை பெற்றால் போதும் ஜோதிடம் உங்கள் வசம் 

பாரம்பரியத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ளுங்கள் பல இடங்களில் உங்களை வியப்பில் ஆழ்த்தும் உண்மை உண்மை உண்மை 

யார் நேர்மையானவன்? ஏன் தடுமாறுகிறான்?

சுக்கிரன் மூலம் யாரெல்லாம் புகழ் பெறுகிறார்களோ உச்சத்தை அடைகிறார்களோ, அதே சுக்கிரன் கோட்சாரத்தில் சிக்கும் போது தடுமாறி விடுகிறான் அப்போது அவனுக்கு குரு ராஜாவாக இருந்து அந்தப்புர ரகசியங்கள் பாதுகாக்கப்படுவது போல பாதுகாப்பாய் வாழவிடும் அவனுக்கு அட்டமாதி தசை வரும்போது அவன் ரகசியங்கள் சூரியனால் வெளிச்சத்திற்கு வந்து மானபங்கபடுத்திவிடும்.

*சுக்கிரன் கிரக இணைவிற்கேற்ப அனைத்து சுகங்களையும் அள்ளித்தரும்*

குரு சூரியன் புடம்போட்ட சுத்த தங்கம் நேர்மையாணவன் தசா கோட்சாரம்  இணைவால் தடுமாறி தடுமாறுகிறான் அதே சூரியன் அவனை  வெளிச்சத்திற்கு கொண்டுவந்து  ரகசியங்களை வெளியே கொண்டுவந்து அம்பல படுத்தி அவமானபடுத்துகிறது 

*நான் சொல்லும் கிரக இணைவுகள் பாரம்பரியம் நாடி முறைகளுக்கு உட்பட்டவை *

மேற்சொன்ன கிரக இணைவுகளை உதாரண ஜாதகத்துடன் பின் வரும்பதிவுகளில் பதிவிடுகிறேன்.

கர்வினைகளிலிருந்து விடுபட🦅

முன் ஜென்மம் ஒன்பதாம் இடம் இதற்கு பத்தாம் இடம் நாம் முன் ஜென்ம கர்மாவை குறிக்கும் இந்த இடத்தை ஆராய்ந்தால் நாம் படும் துன்பங்களை கண்டு அறியலாம் இதற்கு ஏழாம் இடம் தீர்வை தரும்.

ஐந்தாம் பாவம் -குல தெய்வ வழிபாடு

அன்னதானம் ஆயுள் ஆரோக்கியம் விருத்தி அடையும், பூர்வ ஜென்ம பாவங்களை போக்க கூடியது.

முன்ஜென்ம வினைகளால் வரும் பிரச்சனைகளுலிருந்து விடுபட 
குலதெய்வ வழிபாடு செய்வதாலும் கடல் நீரில் தீர்த்தம்மாடுவதாலும், ( ராமேஸ்வரம்) அன்னதானம் செய்வதாலும் தாய் தந்தை குரு இறைவன் ஜீவசமாதி அடைந்தவர்களின் திருவடியை வணங்குவதாலும் நாம் நவ கிரகத்தால் அனுபவிக்கூடிய கர்ம வினைகளிலிருந்து விடுபடலாம். 

சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள்🦅

Post a Comment

0 Comments