Ticker

6/recent/ticker-posts

கோட்சாரம் எவ்வாறு வேலை செய்யும்?

கிரக பெயர்ச்சியின் போது ஏற்படும் விளைவுகள்?

பொதுவாக நல்ல கிரகமோ கெட்ட கிரகமோ பெயர்ச்சி ஆகும்போது ஒரு சில கால அளவிற்கு முன்னாலோ அல்லது நடந்து கொண்டிருக்கும்போது கண்டிப்பாக ஒரு சலனத்தை ஏற்படுத்தும் ஆதாவது ஒரு குட்டையில் அதிகமாக தண்ணீர் இருந்தால் புது தண்ணீர் வரும்போது குழம்பித்தான் தெளியும், அதுபோல அந்த குட்டையில் தண்ணி இல்லாவிட்டாலும் புது தண்ணீர் வந்து விழும்போது குழம்பித்தான் தெளியும் அதுபோல இந்த ராகு கேது பெயர்ச்சிகள் பொதுவாக எல்லோருடைய குடும்பத்தையும் ஒரு குழப்ப குழுப்பி இருக்கும். குறிப்பாக தனுசு குரு கும்ப குரு மிதுன குரு துலா குரு பெண்ணாக இருந்தால் தனுசு கும்ப மிதுன துலா சுக்கிரன் உயிர் காரகத்தை பயமுறுத்தும் அச்சுறுத்தும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை உண்டு செய்யும் அல்லது செய்திருக்கும் குறிப்பாக பங்காளி சண்டைகளை தூண்டி இருக்கும். தேவை இல்லாமல் சன்டை போடச்செய்யும்.

கோட்சார நிகழ்வுகளால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

அதுபோல தனுசில் சனி துலாம் சனி சிம்ம சனி அதுபோல தனுசில் செவ்வாய் மேச செவ்வாய் மிதுன செவ்வாய் சிம்ம செவ்வாய்  துலாத்தில் செவ்வாய் கும்ப செவ்வாய் உள்ளவர்களுக்கு கோட்சாரத்தில் திரிகோணங்களில் 2 ஆம் 12 ஆம் இடங்களிலும் 3 7 11 ஆம் இடங்களில் ராகு கேது சனி செவ்வாய் வரும் காலங்களில் குடும்பத்தில் கலகம் தகராறு ரத்த சொந்தத்தில் பகை வாய்தகறாறு கலவரத்தில் முடியும். தயவு செய்து அடக்கி வாசிக்கவும்.

குறிப்பாக அந்த கலங்களில் ராகு தசைஅல்லது செவ்வாய்தசை நடப்பவர்கள் இவர்களுக்கு ஏழரை அட்டமம் அர்த்தாஷ்மம் கன்டச்சனி நடந்தாலும் கவனமாக இருக்கவும். பொருட்சேதம் அவமானம் குடும்பதை விட்டு பிரிந்து போதல் டைவர்ஸ் கேட்பதும் சில சமயம் கண்டங்கள் தல விபத்து கூட ஏற்படும், சிலரை பீஸ் பிடிங்கி இருக்கும் சிலருக்கு பீஸ் போயிருக்கும்.

பணி செய்யும் இடத்தில் மிகுந்த கவனம் தேவை காணமல் போதல் பரிதவித்தல் அவமானம் கெட்டபெயர் வேலை இழப்பு போன்ற நிகழ்வுகளை செய்து காட்டும். உங்களுக்கு தெரியாமல் தொழிலை இழக்கும் தருவாய்க்கு அழைத்து செல்லும்.

சில அதி புத்திசாலிகள் இந்த பலன் பொதுபலன் எல்லாருக்கும் நிகழும் என்று கூறுவார்கள் அவர்களுக்கு வலிவந்தால்தான் தெரியும் வலியின் வேதனை.

நிகழ்வுகள் சம்பவங்கள் எப்போது ஏற்படும்?

யோகங்கள் நடைபெறும் காலம், அதிஷ்டம் நடைபெறும் காலம் இதில்தான் ஜோதிடம் வேறுபடுகிறது.
ஒரு உதாரணம் கிரக இணைவுகள்தான் யோக காலம்
அப்படி என்றால் ஒரு ஜாதகத்தில் 
உதாரணத்திற்கு ஏதாவது இரண்டு கிரகங்கள் 
ஜாதகத்தில் இணைவு பெற்று
இருப்பதாக எடுத்து கொள்வோம்
அந்த இணைவு எந்த பாகையில் இருக்கவேண்டும்
கோட்சார இணைவுகள் எந்த பாகையில் ஏற்படும்போது 
பலன்களை கொடுக்கும் இதை தெரிந்து
கொண்டால்தான் சம்பவ காலத்தை நெருங்கி பார்க்க முடியும்
இதை தெரிந்துகொள்ளமால் எல்லா இணைவுகளுக்கும் பலன்களை காணமுடியாது.
எல்லா இணைவுகளும் பலன்களை கொடுக்காது அதுபோல வாக்கிய இணைவுகளுக்கு திருக்கணித இணைவுகளுக்கும் வேறுபாடு உண்டு. தசாபுத்திகள் மாறுபாடுகளும் உண்டு.
இந்த இணைவுகள் எந்த பாகைகளில் இருக்க வேண்டும் திருக்கணித வாக்கிய பஞ்சாங்கம் கிரக இணைவுகளின் வேறுபாடு தசாபுத்திகளின் மாறுபாடு எப்படி கண்டறிவது விரிவாக பின்னால் பார்க்கலாம்.

காலத்தின் விளைவுகள் (கோட்சாரம்)

நடைபெற்று கொண்டு இருக்கின்ற அத்தனை நிகழ்வுகளும் விருப்பத்திற்கு நேர்மாரக நடந்து கொண்டிருக்கிறது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இருட்டில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டிவிடும் பாதுகாப்போடு தவறு செய்தவர்கள் எல்லாம் தடையத்தோடு மாட்டிக்கொள்வார்கள் சின்ன விஷயம்தானே என்று நினைத்து ஊதி விட்டதன் விளைவு  பெரிய வினையில் வந்து முடிந்து விடும்  அடக்கி ஆண்ட ஆளுமை இப்போது ஆளுமை அடங்கி போய் ஆட்டம் கண்டு நிற்கும் அறுவாள் கத்திகள் வெட்டிக்கொண்டு இருந்தது இப்போது அறுவாளே வெட்டு வாங்கும். பெண்கள் தங்களை மறந்து இழந்து விடுவார்கள் மிகவும் எச்சரிக்கை, இது தவறு என்று நினைத்தவர்கள் இது தவறே இல்லை என்று மதிமயங்க வைத்துவிடும் மதி கெட்டு விடும் சிறியவர் முதல் பெரியவர் வரை சுய கட்டுப்பாடோடு இருந்து வாருங்கள். எல்லா மூலைகளும் அதிக குழப்பத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் காலகட்டம் 100 சதவிகிதம் சரியாக செய்தாலும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும் கேது கிறிஸ்தவ கிரகம் அது படும் பாடு சொல்வதற்கில்லை காரணம் செவ்வாய்யை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தது அல்லவா இப்போது செவ்வாய் கேதுவை தூண்டி விடுகிறது வேடிக்கை பார்ப்போம் இறைநம்பிக்கையோடு இருந்தவனை மறக்க செய்கிறது மத நம்பிக்கை இல்லாதவரை கரம் குவிக்க வைக்கிறது என்ன கிரக தூண்டல், யாரும் லாபத்தில் ஓட்டவில்லை நிற்காமல் ஓட்ட்டும் என்று ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்ன சோதனை! காலம் காலமாக பிரியாமல் இருந்த உறவைகளை கட்டாயாமக பிரித்து விடும் ஒரு இரண்டு மூன்று மாதங்களாவது என்ன காலக்கணிதம்.

ஆணுக்கு சுக்கிலத்தை குறைத்து வேடிக்கை பார்க்கும் அடப்பாவமே!

பெண்களே மீண்டும் சொல்கிறேன் சுய ஜாதகத்தில் சில தோஷம் உள்ள ஜாதகங்கள் தவறே என்று தெரிந்தும் தடம் புரண்டு தன்னை கெடுத்துக்கொள்ள வைத்துவிடும் உங்களை எல்லாம் மிக சுலபமாக கனவனை விட்டு பிரித்து விடும் எச்சரிக்கையாக முடிவெடுங்கள் என்ன கிரகநிலை.

மூன்று மாதங்களுக்கு பிறகு கர்ம வினை விளையாட்டால் பிரிந்த என் இனிய உறவுகளே சேர்ந்து விடுங்கள் நீங்கள் நினைத்த வாழ்க்கை எல்லாம் வெற்று கனவுகளே  “வாழ்க்கை வாழ்வதற்கே” 

வினையால் விளைந்த வினை    (ஆய்வு 11)

ராசிநாதன் அல்லது லக்கனநாதன் மறைந்துவிட்டால் எவ்வளவு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் செயல்பட்டாலும் முயற்சிகள் எடுத்தாலும் ஏமாற்றமாகவும் தோல்வியாகவும்தான் காரியங்கள் ஈடேறும்.

இதை மனைவி நண்பர்கள் தாய் தந்தை உறவுகள் ஆதரவோடு காரியங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம் 9 ல் கேது ராகு இருந்து சனியின் சம்பந்தம் ஏற்பட்டால் தெய்வ நம்பிக்கை நிலையாக இருக்காது வேண்டிக் கொண்ட காரியங்கள் நிறைவேறா விட்டால் ஆண்டவனையும் வெறுத்து திட்டுகிற நிலை ஏற்படும். மீண்டும் அனுகூலமான திருப்பம் அமைந்துவிட்டால் வேண்டி விரும்பி ஆண்டவனை வழிபடும் மனமாற்றமும் உண்டாகும். 

9 ல் சனி இருந்தால் தெய்வ நம்பிக்கை இருக்காது, 9 ல் குரு இருந்தால தெய்வம்தான் வாழ வைக்கிறது என்ற நம்பிக்கை என்ற நம்பிக்கை தீவிரமாக இருக்கும் 9 ல் ராகு கேது இருந்தால் ஆன்மீக தொடர்பு வளரும் ஆனால் சனி சம்பந்தம் பட்டால் காவி உடையில் பாவிகளாக திரிவார்கள், கேவலமும் அபகீர்த்தியும் தன் செயல்களாலேயே தேடிக்கொள்வார்கள்.

சமீப காலமாக சிம்மத்தில் செவ்வாய் இருந்து விருச்சக சனியை பார்த்து மருத்துவருக்கே கண்டுபிடிக்க முடியாத வியாதியால் பீதியில் கடந்தது, கடந்த சில மாதங்களில் பிரசவத்திற்கு சேர்ந்தவர்கள் ஒன்று தாய் காரணம் புரியாமல் ICU இல்லை குழந்தை இங்குபேட்டரில் வைத்து பராமரித்து வந்தார்கள். உங்கள் ஆய்விற்கே விட்டு விடுகிறேன் எத்தனை தாய் குழந்தைகள் பிரசவத்திற்கு வந்தவர்கள் நிம்மதி இல்லாமல் நிலை குலைந்து போனார்கள் தெரியுமா?

மருத்துவருக்கு காரணம் புரியவில்லை நார்மலாகத்தானே அட்மிட் ஆனார்கள், ஆனால் பிரசவத்திற்கு பிறகு சீரியசாகி விட்டார்களே, உண்மையில் எத்தனை மருத்துவர்கள் மிரண்டு போகி இருந்தார்கள். இவற்றிற்கு எல்லாம் தற்சமயம் விடிவுகாலம் எல்லாம் தேறி வருகிறார்கள் இப்போது எல்லா மருந்துகளும் வேலை செய்ய ஆரம்பிக்கும். கலைஞரின் வருகை

உங்களுக்கு ஆய்வு அறிக்கை தருகிறேன் என்னிடத்தில் ஒன்றும் இல்லை என்று நினைத்திவிடாதீர்கள் ஏதோ ஒன்று உண்டு இருக்கிறது, அதை பெற்றுச்செல்லுங்கள். பழம் சாப்பிட பழுக்கும் காலம் வரை காத்திருக்கவேண்டும் இல்லை என்றால் ருசி இருக்காது.

சக்கரவர்த்தி கலியபெருமாள்

Post a Comment

0 Comments