Ticker

6/recent/ticker-posts

ஜோதிட ஆய்வு பகுதி-1

என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் ஈசன் செயல்

அன்பர்களே நீங்கள் யாருக்கு உதவி செய்தாலும் அவர்கள் உங்களுகளுக்கு நேரடியாக உதவமாட்டார்கள், நீங்கள் வணங்கும் இறைவனும்தான் எந்த தெய்வத்தை வணங்கினாலும் யாருக்கும் நேரடியாக வந்து உதவமாட்டார்கள், மாறாக உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள்  அறிமுகப்படுத்தப்பட்டு உதவி அளிக்கப்படும், உங்களுக்கு வேண்டிய சொத்து, விரும்பிய சொத்து நேசித்த உறவு உங்களை விட்டு பிரியும்.

கால சோதனை கிரகங்களின் பலன்கள், உங்களுக்கு ஒவ்வாத சொத்து வேறு ஒருவருக்கு மாளிகைக்கு உதவும், யாரோ ஒருவரின் உதவி உங்களின் இந்த வாழ்க்கைக்கு துணையாக அமைந்து இருக்கும், அவர் சேர்த்த சொத்திற்கு ஆதாரமாக அமைந்திருக்கும்.

ஓவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கு பின்னால் ஒருவரின் உதவி மறைந்து வாழும் அதுதான் இறைவன், நீங்கள் செய்யும் ஒவ்வொரு புன்னியமும் யாரோ ஒரு ரூபத்தில் உங்களையோ  உங்கள் குடும்பத்தாரையோ வாழ வைக்கும்.

கிரக சோதனைக்காலத்திலும் தசா சந்தி காலத்திலும் கிரக சந்தி காலத்திலும் கோட்சார சந்திகாலத்திலும் பாதிப்பும் பங்கமும் செலவும் சேதமும் விரயமும் நடக்ககூடும்.

ஒவ்வோரு ஜாதகத்திலும் 1 ஆம் இடம் 5 ஆம் இடம் 9 ஆம் இடம் வலுப்பெறவேண்டும் அதற்கு அவப்பொழுதும் தவப்பொழுது என்ற மாதிரி இடைவிடாத பிராத்தனை, உங்கள் குலதெய்வமும் நீங்கள் வழிபடும் இஷ்ட தெய்வமும் வழிபாடுகளும், நீங்கள் செய்கின்ற புண்ணியங்களும், ஜீவன்களுக்கிடத்து காட்டும் இறக்கங்களும் உங்களை அறியாமல் மேற்சொன்ன மூன்று இடங்களும், வலு அடையும், உங்களுக்கு துணையாக நின்று வழிநடத்தும். அதிஷ்டங்களை அள்ளித்தரும்.

கிரக சோதனைக்காலத்தில் ஆண்டவன் அத்தியாவசிய தேவைகளுக்கு படி அளப்பான் யோக காலத்தில் ஆசைகளை நிறைவேற்றுவான்.

*என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் ஈசன் செயல்*

இழப்பு எவ்வாறு ஏற்படுகிறது? இழப்பிற்கு கிரகங்கள் எவ்வாறு உதவுகின்றன? 

பொதுவாக உயிர்காரகம், உயரற்ற காரகம் என்று இரண்டு உண்டு இழப்பு ஏற்படும் காலத்தில் உயிர்காரகத்தை பாதித்தால் உயிரற்றகாரகம் வலுத்து இருக்கும். உயிர்காரகத்திற்கு எப்படி பட்ட இழப்பை கொடுக்கும் கர்ம வினைக்கேற்ப உயிர்காரத்திற்கு வியாதியை கொடுக்கும் அல்லது உயிரை இழக்க செய்யும் அல்லது அதற்கு சமமான அவமானத்தை கொடுக்கும்.

உயிரற்ற காரகம் பணம் பொருள் வாகனம் வீடு போன்ற செல்வங்களை இழக்க செய்யும் உயிர்காரத்திற்கு சமமான இழப்பாகத்தான் இருக்கும். இழப்பு என்றாலே சந்திரன்தான் இங்கே கர்மக்காரகன் தொடர்பு பெறும்போது இழப்பை உறுதிசெய்யும்.
கர்மக்காரகன் மற்றும் சந்திரன் இணைவு பெறும் காலங்களில் இழப்பை தொடங்கி வைக்கும் அந்த இழப்பு கடுமையானதா இல்லை இயல்பானாத என்பதை உறுதி செய்வது கர்ம வினையால் ஏற்படும் தசைகளே சில சமயம் தன் திசையே தன்னைச்சுடும் சிலசமயம் குடும்ப உறுப்பினர்களின் தசை நமக்கு ஒவ்வாமல் ஆகி பெரிய இழப்பிற்கு வழிவகுக்கும்.
சில இழப்புகள் நம்மை புரட்டி போட்டுவிடும் பழய எந்த சுவடுகளும் இல்லாமல் செய்துவிடும்.
உயிர் இழப்பு எப்போது ஏற்படும்? பொருள் இழப்பு எப்போது ஏற்படும்? தொடர்ந்து வாருங்கள் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஶ்ரீ சென்டாடும் ஐயனார் துணை ஓம் நமசிவாய சிவ சிவ வரவேற்பு அறை - புதன் படுக்கை அறை - செவ்வாய் சமையல் அறை -சுக்கிரன் உணவு -சந்திரன் சாப்பாட்டு அறை- சனி சனி செவ்வாய்- தொழில் நஸ்டம் திருப்தி இன்மை கடன் லக்கனம் பிறப்பு குனம் 12 ஆம் இடம் - தூக்கம் கடைசி இறப்பு பாதம் ராகு வாய் கேது- குதம் தடை ஞானம் வெறுப்பு முடி நூல் சுக்கிரன் பணம் பெண்கள் குரு தங்கம் பெரும் பணம் மூக்கு ஜோதிடம் பார்த்து விதியை மாற்றவதற்குஅல்ல வரும் இடர்களை தாங்கி கொள்வதற்கும் பக்குவபடுத்திகொள்ளுவதற்காகத்தான். ஜோதிடம் என்பது இது விதியை மாற்றும் அற்புத கலை அல்ல வேதனைகளை தாங்கி கொள்ள மனதை தயார்படுத்திக்கொள்தற்கும் சூட்சம எதிர்காலத்தை புரிந்துகொள்ளுவதற்கும் ஜோதிடம் பார்க்கப்படுகிறது.

மந்தன் சேய் சேர்ந்திடவும் தீது பார்த்திடவும் பாழ் 🦅 சனி- கர்மா, மந்தன், மெதுவாகசெயல்படுபவன் செவ்வாய் -மாங்கல்யகாரகன், கணவன் ,வெப்பம் சனி செவ்வாய் சேர்க்கை திருமணத்தை தாமதப்படுத்தும் காதல் திருமணம் கலப்பு திருமணம் செய்து காட்டும், தாமத திருமணம் பிரிவை ஏற்படுத்ததாது அவசரபட்டு 28 வயதிற்குள் திருமணம் செய்துவிட்டால் திருமணபந்தத்தை பிரித்துவிடும். சனி செவ்வாய் இணைவு ஏற்பட்டாலும் பார்த்துகொண்டாலும் மேற்சொன்னபலன்கள் உண்டு. மந்தன் சேய் சேர்ந்திடவும் தீது பார்த்திடவும் பாழ் விபத்தை உண்டு செய்யும் அறுவை சிகிச்சை உடலில் காயங்கள் தழும்புகள் இருக்கும் நிலையான தொழில் அமையாது, இந்த இணைவு பிறப்பு ஜாதகத்தில் இருந்தாலும் அல்லது கோட்சாரத்தில் இணைவுகள் ஏற்பட்டாலும் இந்த பலன்களை கொடுக்கும். இணைவு 1 5 7 9 ல் ஏற்பட்டாலும் சனி செவ்வாய் தன்பார்வைகளால் பாரத்துகொண்டாலும் சனியின் பார்வைகள் 3 7 10 செவ்வாய் பார்வைகள் 4 7 8 மேற் சொன்ன பலன்கள் நடக்கும்.

பொதுபலன்கள்🦅 கிரக காரகங்கள் சனி - பொதுமக்கள், கர்மா, அழுக்கு, மூத்தவர்கள் செவ்வாய்- கல், தீ, நெருப்பு, கரடு முரடான பாறைகள் தீவுகள் நிலங்கள் புதன்- வனிக வளாகம், சந்தை, காதல், இரட்டை, பச்சை, கல்வி, அறிவு, இளையவன் கேது- தடுப்பு, தடை, ஏங்கவைத்தல், சுருக்குபோடுதல் துக்குகயிறு நூல் வருமை ஆன்மீகம் முடி, பரதேச கோலம், ஆன்டி கோலம், முடிகள் நிறைந்த உடம்பு, தாய்வழி பாட்டனார்கள், சிறிய நரம்புகள் ராகு- உதடு, ஊதி தள்ளுதல், உறிஞ்சுதல், விழுங்குதல், தந்தை வழி பாட்டனார்கள், குடல். கிரக இணைவுகள் ஒரு கிரகத்திற்கு மற்றொருகிரகம் கேந்திரம் திரிகோணங்களில் இருக்கும்போது கிரக இணைவுகள் ஏற்பட்டு அதனால் ஏற்படக்கூடிய பலன்களும் உண்டு. அதுபோல குடும்பங்களில் ஏற்படும் பலருக்கு உண்டாகும் கேட்சாரம் மற்றும் தசா பலன்களும் நமக்கு ஏற்படக்கூடிய பலன்களை கூட்டவோ குறைக்கவோ கூடும். கிரக இணைவுகள் 1 5 9 கிரக பார்வைகள் 2 12 3 7 11

பலன்கள்

சனி செவ்வாய் ராகு இணைவு ஏற்பட உள்ளது இதனால் தீ விபத்து வெடிவிபத்துகள் பூகம்பம் நிலச்சரிவு கலவரங்கள் மதக்கலவரங்கள் ரானுவ தாக்குதல் ரானுவ கிடங்குகள் சேதங்கள் வனிக வளாகங்களில் கலவரங்கள் ஏற்பட கூடும். ஏற்கனவே சனி செவ்வாய் கேந்திர இணைவு பெற்று செவ்வாய் பார்வை கேதுவிற்கு ஏற்பட்டதால் நிலப்பிளவு பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதைவிட அதிகமாக செவ்வாய் ராகு இணைவு ஏற்படும்போது சேதங்கள் அதிகமாக ஏற்படும் குரு சனி புதன் இணைவு ( உயிர்சேதங்கள்) இதற்கு ராகு செவ்வாய் இணைவு ஏற்பட உள்ளது மிகுந்த கவனம் தேவை. சிவ சிவ சிவாய நம

சக்கரவர்த்தி கலியபெருமாள்- ஜோதிட பதில்

Post a Comment

0 Comments