Ticker

6/recent/ticker-posts

கிரகங்கள் எவ்வாறு வேலை செய்கிறது

Tamil Astrology -ஜோதிட பதில்

கிரகங்கள் எவ்வாறு வேலைசெய்கிறது 

பிறப்பு ஜாதகத்தில் ஒரு கிரகம் தான் முதலில் தொடும் கிரகத்தின் இயல்புகளை செயல்படுத்த தன்னை தயார் படுத்தி கொள்ளும் கர்ம வினை கணக்கிற்கேற்ப இணைவு பெறும் இடத்தில் கிரகங்களை அமைத்து பிறப்பை ஏற்படுத்தும்.

பிறப்பு ஜாதக கிரகங்கள் தான் ஒரு கிரகத்தோடு இணைவு பெறும் வரை புரோகாரம் செய்யாத காலியான Memory Chip ஆகும்.

ஒரு ஜாதகத்தில் ஜீவன்- குரு, ஆன்மா ஆத்மா - சூரியன், தேகம்- செவ்வாய், கர்மா- சனி இவைகள் எந்த வகையிலும் கெடக்கூடாது கெடாமல் இருந்தால்தான் ஜோதிட விதி பலன்களை அனுபவிக்க முடியும்.

அதையும் தான்டி ஒருவர் தசா மற்றவர் தசாவை வாழவைக்கும் சில சமயம் சீறழிக்கும் எனவே அதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்

ஜோதிடர் என்பவர்கள் கர்ம வினை ஆலோசகர், மகான்கள் கர்ம வினை பாவங்களை கரைப்பவர்கள் ( யாரிடம் எதைப்பெற முடியுமோ அதைத்தான் பெறமுடியும் )

குருவடிசரணம் திருவடிசரணம்

பொதுவாக ஜாதகம் பார்க்கவருபவர்கள் நல்ல படியாக இருக்கும் காலத்தில் வருபவதில்லை அதாவது காரு, பணம், பங்களா, வீடு, வாசல், வேலை, தொழில், உத்தியோகம், பணி ஆட்கள், மனைவி மக்கள், நல்ல சுகத்தோடு வாழும்போது யாரும் ஜோதிடரை பார்க்க வருவதில்லை, எல்லாம் போன பிறகு அல்லது இழந்த பிறகு வந்து கேட்பார்கள் நான் என்ன செய்யவேண்டும், எப்படி இழ்ந்தேன் என்று தெரியவில்லை, எதாவது பரிகாரம் இருக்கிறதா, ராசிக்கல் அணிந்து கொள்ளலாமா, அல்லது எத்தனையோ பரிகாரம் செய்து விட்டேன் ஒன்றும் வேளைக்கு ஆகவில்லை, மாற்று வழி இருக்கிறதா சொல்லுங்கள் செய்கிறேன் என்று கேட்பார்கள், எப்படி கெட்ட நேரத்தில் நல்ல நேரம் எப்போது வரும் என்று கேட்கிறிர்களோ அது போல நல்ல காலத்தில் இருக்கும் போது எனக்கு எப்போது கஷ்ட காலம் வரும் அதற்கு என்ன மாற்று வழி என்பதை தெரிந்து கொண்டு அதற்கு உண்டான மாற்று வழியை உருவாக்கி அதன் வழி நடந்து கொள்ளவேண்டும்,

ஒரு குடும்பத்தில் சுபகாரியம் செய்யும்போது தான் அவன் விதி ஆரம்பம் ஆகிறது அதன் பிறகுதான் அவன் தன் தலைவிதியை கர்மாவை அனுவபிக்கிறான் அதாவது வீடு, திருமணம், வாகனம், தொழில், இடம், கல்வி, இவைகள் எல்லாம் ஆரம்பிக்கும்போது கண்டிப்பாக ஜோதிடம் அறிந்த, அனுபவம் நிறைந்த நபரிடம் அறிந்து ஆரம்பியுங்கள் இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக கர்மவினையை அனுபவிக்க வேண்டும்.

சில ஒவ்வாத தசைகள் நடந்தாலோ கோடிஸ்வரர்களையும், கீழே தள்ளி விட்டு நிர்மூலம் ஆக்கிவிடும், 

ஒருவருக்கு ஏழரைச்சனியோ, அட்டமச்சனியோ, அர்த்தாஷ்டமசனியோ, கண்டச்சனியோ நடக்கும்போது தசா சந்தி நடந்தால் மிகப்பெரிய இழப்புகளும், சேதங்களும், கண்டங்கள், மற்றும் மரணங்களை கூட ஏற்படுத்தும்,

இவைகளை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல மாற்று எற்பாடுகளை செய்து கொள்ளலாம், இறைவன் உங்கள் தேவைகளுக்கு உதவுவான் ஆசைகளுக்கு உதவ மாட்டான், கடினமான காலங்களில் ஆசைகளை ஒதுக்கி வைத்து விட்டு தேவைகளை வேண்டி பெற்றுக்கொள்ளலாம்.

இதையெல்லாம் படித்து விட்டு நான் உங்களை மாற்றி விடுவேன் என்று எண்ணம் வேண்டாம், நன்றாக இருக்கும்போதே யோசனைகள் செய்யவேண்டும், கஷ்டமான காலத்தில் இறைவன் கூட கண்மூடிதான் நிற்பார்கள், ஜோதிடர்களுக்கும் காலக்கணக்கு புடிபடாது. எல்லாம் அவன் செயல் செய்தார்க்கு செய்தபடி என்பார்கள்.

நீசபங்கம் ராஜயோகம், வக்ரம், எட்டாம் இடம் - (ஜோதிட விளக்கம்)

ஓம் சுப்பையா சுவாமிகள் (ஓத சுவாமிகள்) திருவடிகள் போற்றி !

குருவடிசரணம் திருவடிசரணம்

நேரம், காலம் முட்டாளையும் அறிவாளியாக்கும், வீரனையும் கோழையாக்கும். நீசம் என்பது ஒரு நிலை, நீசபங்கம் என்பது ஒரு நிலை, நீசபங்கம் ராஜா யோகம் என்பது ஒரு நிலை, நீசனை நீசன் பார்த்தாலும் நீசபங்க ராஜயோகம் ஆகும், அதுபோல நீசம் பெற்ற கிரகத்திற்கு ஐந்து, ஒன்பது என்ற திரிகோனபதிகளின் சம்பந்தம் ஏற்பட்டால் நீசபங்க ராஜயோகம் ஆகும் இதை விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஒரு வேட்பாளர் லட்சகணக்கில் செலவழித்தும் தேர்தலில் தோற்று விட்டால் அது நீசம் ஆகும். அவரே கடைசி நேரத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி வெற்றி வேட்பாளராக அறிவிக்கபட்டால் அது நீசபங்கம் ஆகும், அப்படி வெற்றி பெற்ற வேட்பாளருக்கு மந்திரி பதவி கிடைத்துவிட்டால் அது நீசபங்கம் ராஜயோகம் ஆகும். அது போல வக்ரம் கிரகம் என்ன செய்யும்? பொதுவாக வக்ரம் ஆன கிரகத்திற்கு உக்ரபலம் என்பார்கள், எடுத்து காட்டாக ஜென்மச்னி நடக்கும் காலத்தில் சனி கிரகம் வக்ரம் அடைந்தால் மிகுந்த கெடுதலை கொடுக்கும்.

எட்டாம் இடம் என்பது கவலை, சஞ்சலம், அபகீர்த்தி, கௌரவப் போராட்டம், விபத்து இவற்றைக் குறிக்கும் லக்கனதுக்கு எட்டாம் பாவம் அஷ்டமஸ்தானம் என அழைப்பார்கள் இதை ஆயுள்ஸ்தனம் என்றும் கூறுவார், இந்த பாவத்தை கொண்டு ஜாதகரின் மர்மஸ்தானத்தை பற்றியும் அறியலாம் ஆயுள் பலம் மற்றும் ஏற்படும் வியாதிகள், மான அவமானங்கள், வேதனைகள் பற்றியும் அறியலாம், மரணம் எங்கு, எப்போது, எப்படி, எந்த நிலையில் அற்படும் என்பதை உணர்த்தவள்ளது, விபத்துகள், வம்பு வழக்கில் சிக்குதல், சிறைத்தண்டனை பெறுதல் அரசாங்க தண்டனை பெறுதல் போன்று தோல்லை தரும் பல விஷயங்களை அறிய உதவும், பெண்களுக்கு மாங்கல்ய பலத்தை அறிய உதவும். இந்த பாவாதிபதியை எட்டாம்மதிபதி, அஷ்டமாதிபதி, ஆயுள் ஸ்தானாதிபதி என்றும் கூறுவர்

ஜீவசமாதியில் உங்கள் குறைகளை முறையிட்டு அழுங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சென்று வாருங்கள் உங்கள் கிரக தோஷமும் வினைப்பயன் தோஷமும் விலகிவிடும்

சக்கரவர்த்தி கலியபெருமாள் 

You May Also Like 

யார் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

Post a Comment

0 Comments