ஜோதிட பதில்
ஜோதிடம் பார்த்தால் உன் விதி மாறி நல்லது நடந்து விடுமா?
ஜோதிடம் பார்பதால் என்ன செய்து விட முடியும் என்று நினைத்து பார்க்கிறீர்கள் அதை நீங்கள் மிக மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஜோதிடம் எனபது ஒரு வழிகாட்டி அது உன் விதியை மாற்றும் அற்புத கலை அல்ல வழி தவறி நிற்கும் மனிதர்களுக்கு ஒரு கைகாட்டிதான், நீ என்ன செய்தாய் என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என்ன செய்யவாய் என்பதை 65 லிருந்து 80 விழுக்காடு அறிந்து கொள்ளலாம். அதை கண்டிப்பாக மாற்றவோ திருத்தவோ ஜோதிடத்தால் நிச்சயமாக முடியவே முடியாது. அதற்கு ஏன் ஜோதிடம் பார்க்வேண்டும். ஜோதிடம் பார்பதால் உன்னை பற்றி சுய பரிசோதனை செய்து கொள்ளலாம் நீ எந்த இடத்தில் இருக்கிறாய் என்பதை தெரிந்து கொள்ளலாம் அதற்காகத்தான் ஜோதிடம் பார்க்க வேண்டுமா? ஒரு Lab Test Result போல இதை வைத்து என்ன செய்யலாம்
ஒவ்வொரு மனிதனுக்கும் பயிற்சி முயற்சி நல்லொழுக்கம் மிக மிக முக்கியம் எதாவது ஒரு செயல் உதராணமாக ஒரு விளையாட்டு சைக்கிள் ஓட்ட கற்று கொள்வது மொழி கற்றுக்கோள்வது சமையல் செய்ய கற்றுக்கொள்வது இதற்கு கண்டிப்பாக பயிற்சி முயற்சி நல்ல ஒழுக்கத்தோடு நன்றாக விடாமல் தேர்ச்சி பெறும் வரை தொடர்ந்து முயர்ச்சி செய்து வந்தால் அவன் நோக்கம் நிறைவேரிவிடும்.
பயிற்சி முயற்சி நல்லோழுக்கம் இல்லாமல் எந்த செயல் கலைகளை கற்றுகொள்ள இயலாது. இந்த பயிற்சிக்கும் முயற்சிக்கும் நல்லொழுகத்திற்கும் ஒவ்வொருவரின் மனம் (சந்திரன் கர்ம வினை பதிவு கிரகம்) ஒத்துவரவேண்டும். மனம் மனம் போன போக்கிற்கு விட்டுவிட்டால் உன் முயற்சியின் இலக்கு நிறைவேறாமல் போய்விடும் கர்மாவை நோக்கி சென்று விடும்.
உன் இலக்கை அடைய முதலில் உன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் (LAB TEST ஜாதகம் பார்ப்பது) அதற்கு தகுந்தார்போல உன் உடலை தகுதி படுத்தி கொள்ளவேண்டும் மனதை பக்குவபடு்த்தி கொள்ள வேண்டும் மனதை அடக்கி இயல்பு நிலைக்கு செல்ல தியனாம் பழக வேண்டும் நல்ல ஆசிரியர் குரு நல்ல நண்பன் நல்ல உறவு இறை நம்பிக்கை நல்ல வழிகாட்டியுடன் உன் வாழ்க்கை தொடரபெற்றால் வெற்றி நிச்சயம்.
வாழ்க்கை நிம்மதியாக வாழ என்ன வேண்டும் முதலில் உன் உடல் தகுதியாக இருக்க வேண்டும் பணம் வேண்டும் அதற்கு தகுதியான வேலை வேண்டும் கடன் இருக்க கூடாது நல்ல ஒழுக்கம் வேண்டும் மீண்டும் சொல்கிறேன் இவை எல்லாம் எளிதில் கிடைக்க நல்ல ஆசான் குரு வழிகாட்டி நல்ல நண்பன் நிதானமான வாழ்க்கை உன்னை எளிதில் மிகுந்த செல்வந்தானக அறிவாளியாக ஆக்கி விடும்.
இவைகள் எல்லாம் கிடைக்க உன் மனதால் தினம் தினம் மகான்கள சித்தர்களை வழிபட வணங்கிவர இ்ந்த பிரபஞ்சம் உன் மன எண்ணத்திற்கு ஏற்றார்போல நல்ல ஆசான் குரு வழாகாட்டி நல்ல நண்பர்கள் குடும்பம் மனைவி அறிவு சிறப்பாக வழுங்குவார் இது கதை அல்ல நிஜம்.
திரும்ப திரும்ப தெளிவாக படித்து உணர்ந்து அனைவரும் வாழ்வில் வெற்றி பெற்று செல்வ செழிப்போடு வாழ சித்தர்களை வணங்குவொம்
வேறு ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்
சக்கரவர்த்தி கலியபெருமாள்
நீ தெறிந்து கொள்
(சில மகா அறிவு ஜீவன்களுக்காக சுயமாக சிந்தித்து பதிவிடுங்கள் யாராவது பதிவிடுகிறார்கள் அதற்கு கமண்டும் லைக்கும் அதிகமாக இருக்கிறது அந்த வைத்தரிச்சலை போக்குவதற்கு பதில் பதிவு போட்டு உங்கள் அடிமைகளை சேர் செய்து நீங்கள் அரைத்த மாவை வைத்து புளித்த ஆப்பம் சுட்டு கேவலாமான அரசியல் செய்ய வேண்டாம்.
நீ எதையல்லாம் மறுப்பது போல நடித்தாயோ அதைவைத்துதான் இன்று உன் பிழைப்பு ஓடுகிறது் உன் சைனா அசம்பல் வன்டியை ஓட்டி பிழைப்பை நடத்திகொள் மற்றவர்களின் அழுக்கை நோன்டி மோந்து பார்க்காதே.)
ஜீவனை ராகு நெருக்கினால் மரண பயம் உண்டு மரணம் ஏற்படுமா? தொடர்ந்து பதிவை படியுங்கள்.
ஆண்டு அனுபவித்து மோட்சத்தை தழுவுங்கள்
ராகு -விஷம் மரணம் கூடாரம் பாம்பு மசூதி இஸ்லாம், போதை பொருள், கண்ணுக்கு தெரியாத விஷம் வஞ்சகம் சூது
கேது - மருத்துவ மனை புத்த மத கோவில் சிறை கிரிஸ்தவ ஆலயம், தியானம் தனிமை வெறுப்பு
குரு - இந்துக்கள் பூஜை பொருட்கள் பிராமணர் மஞ்சள், தேங்காய் எலுமிச்சை சீரகம் வாழைப்பழம்
மிதுனம் கன்னி தனுசு மீனம் உபய ராசிகள்
உபயம் என்றால் மற்றவர்களுக்கு கொடுத்தல்
கிரகண நேரத்தில் விஷ கிருமிகள் உருவாகும்.
எந்த ஒரு கிரகங்களும் இடப்பெயர்ச்சி ஆகும்போது ராசி கட்டத்தில் உள்ள நட்சத்திர வழியேதான் நகரும் அவ்வாறு நகரும்போது தன் சுய சாரம் இல்லாமல் வேறு நட்சத்திரத்தில் வழியாக செல்லும் போது அது தன் உக்கிரத்தை அடக்கி வாசிக்கும் தன் சுய சாரத்தில் நகரும்போது தாண்டவமாடும்.
ஒரு ஜீவன் மரணம் அடைய வேண்டும் என்றால் கர்மக்காரகன் சனி தொடர்பு வேண்டும் தேகாதிபதி தொடர்பு வேண்டும் ஜீவன் தொடர்பு வேண்டும். எந்த பாரபட்சம் இலாலாமல் உயிரை போக்கும் ராகு கேது தொடர்பு வேண்டும் திருமணம் ஆகி மனைவி மக்கள் இருந்தால் அவர்களும் விடை கொடுக்க வேண்டும்.
புண்ணியம் செய்தவர்கள் உறவுகளால் காப்பாற்ற படுவார்கள்
மிதுனம் காற்று ராசி
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷய மாம்ருதாத் ஓம்
படிப்படியாக இழந்ததை பிடித்து விடுவார்கள் ஆனால் இதற்கு காரணம் அறிந்து கடுமையான சேதங்களை சந்திப்பார்கள்.
எல்லாம் அவன் செயல்
சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்
0 Comments