ஆனி மாத பலன்கள் - தனுசு
பதவியும் அதிகாரமும் பணமும் வரும்போது கூடவே மமதையும் ஆணவமும் அகங்காரமும் வந்துவிடும், அந்த நிலையில் பாவம், புண்ணியம், என்று ஆராய்ச்சிக்கும் தர்மம், அதர்மம் என்ற நீதி நினைவுக்கும் இடம்தாராமல் தன் சுயநலத்திற்காகத் துணிந்து பாவங்களையும் தவறுகளையும் செய்யத் தோன்றும் அப்போதுதான் கிரகங்களும் விதியும் வினையும் வந்து ஒட்டிக்கொள்ளும். தோஷம் பற்றிக்கொள்ளும் ஆனால் அதற்குரிய தண்டனைகள் மட்டும் அப்போதே உடனுக்குடன் வந்துவிடாது அறிந்தோ அறியாமலோ அவரவர் செய்திருக்கும் நல்ல பலனும் புண்ணியமும் இருக்கும்வரை கவசம்போல இருக்கும், புண்ணியம் கரைந்தவுடன் பாவத்தின் சம்பளம் பற்றிக்கொண்டு தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
என் அனுபவத்தில் ஊர்பஞ்சாயத்து, கட்டபஞ்சாய்த்து, நாட்டாமை, மத்தியஸ்தர், சங்கத்தலைவர், புரட்சி செய்வது, கொடிபிடிப்பது, வேலை கொடுத்தவனை எதிர்த்து நிற்பது பலர் தனுசு ராசி கார்ர்களாக இருப்பார்கள்
தனுசு ராசி ஆனி மாத பலன்கள்
தனுசு ராசி (உத்திராடம் 1 பாதம், பூராடம் நான்கு பாதங்களும் மூலம் 4 ன்கு பாதங்கள் மட்டும்)
முதலில் கிரக நிலைகளை பார்ப்போம் ராசியாதிபதி 4 ல் ஆட்சி அத்துடன் ஐந்து 12 க்குரிய செவ்வாயுடன் சேர்ந்து குருமங்கயோகம், 2 ல் சனி ஆட்சி பாதசனி ஐந்தில் ராகு, 11 ல் கேது, 6 ல் புதன் சுக்கிரன் ஆறாம் அதிபதி ஆறில் ஆட்சி அத்துடன் 7 பத்திற்க்குறிய புதன் ஆறில், 9 க்குறிய சூரியன் ஏழில், 12 ஆம் அதிபதி ஆறில் ஆட்சி.
ஏற்கனவே மூன்றில் இருந்த குருவும் சரி இல்லை பல போராட்டங்களை சந்தித்து இருப்பீரகள் இப்போது நானகில் வந்திருக்கும் இடமும் சரியில்லை. பலன்களை பார்ப்போம்.
மேற்கன்ட கிரகநிலைகள் எவ்வாறு வேலை செய்கிறது, ராசியாதி பதி ஆட்சி பெற்று 8 ஆம்இடம், 10 இடம் மற்றும் 12 ஆம் இடங்களை பார்க்கிறார் பொதுவாக சுபகிரகங்கள் பார்த்த இடம் விருத்தி ஆகும், பாவகிரகங்கள் பாரத்த இடங்களை அழிப்பார்கள், அப்படி என்றால் 8 ஆம் இடத்து பலன்களை விருத்திசெய்வார், 8 ஆம் இடம் என்பது விபத்து, கவலை, ஏமாற்றம், கேவலம், மரணம், அபகீர்த்தி, அதுவே அதிஸ்ட ஸ்தானுமும்தான். ஒரு சிருக்கு விபத்தகளையும் ஒரு சிலருக்கு கவலைகளையும், ஏமாற்றம் இழப்புகளையும் உண்டு செய்வார்கள் ஒரு சிலரை சபையில் ஏற்றி அசிங்கபடுத்தி விடுவார்கள், ஒரு விதி ஒரு கிரக காரகத்தில் ஒரு காரகத்தை கொடுத்து விட்டால் அடுத்த காரகத்தை கொடுக்கமாட்டார், ஒரு கேவலபடுத்தி விட்டார்கள் அல்லது கேவலபட்டு விட்டார் என்றால் அசிங்கபட்டு விட்டார் என்றால் அவர் மரணத்தில் இருந்து காப்பாற்ற படுகிறார் என்று பொருள்.
10 ஆம் இடத்து பலன்களை விருத்தி செய்வார், 10 ஆம் இடம் என்பது தொழில், கர்மா, வேலை, தொழிலை வேலைகளை விருத்தி செய்வார்கள் ஆனால் லாபங்கள் விராயமாகி விடும், 12 ஆம். இடத்து பலன்களை விருத்தி செய்வார், 12 ஆம், இடம் என்பது விரயம், நஷ்டம், அலைச்சல், வெளியூர் பயணம், இடம்மாற்றம் ஆகியற்றை குறிக்கும்.
ஐந்தில் ராகு பிள்ளைகள் வகையில் வீன் செலவுகள், வைத்திய செலவுகள் கவலைகளை உருவாக்கும் அவர்களை பற்றிய ஆசைகள் என்னங்கள் ஈடேறாமல் போகி விடும், நல்ல மதிப்பெண்கள் பெறுவார் என்று எண்ணத்தை ஈடேற்ற முடியால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியாமல் பார்டரில் பாஸ் செய்து இருப்பார்கள், நல்ல கல்லூரிகளில் பிடித்த கோர்ஸில் சேர்க்க முடியாமல் போகிவிடும்.
இரண்டில் சனி இது விரயச்சனி என்பார்கள் பொதுவாக இரண்டாம் சுற்று ஏழரைச்சனி நடப்பவர்களுக்கு பொங்குசனி என்பார்கள் இதை சந்திக்கும் ஆண் பெண் திருமணம் ஆகதவர்களுக்கு திருமணம் நடந்தேறும், வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசுயோகம் கிடைக்கும், குடும்பத்தில் சுபமங்கல செலவுகள் நிறைவேறும், வேலைவாய்ப்பு செய்தொழில் விருத்தி அடையும். புதிய தொழில் யோகம், வீடுமனை, வாகன யோகம் மனைவி மக்கள் மகிழ்ச்சி , ஆன்மீக ஈடுபாடு அதிகாரிக்கும்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகில் கிருஷ்ணாபுரம் சென்று ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயரை வழிபட்டு வரலாம்.
சித்தர்களை மகான்களை இருகப்பிடித்து கொள்ளுங்கள் இது பொதுபலன்களே உங்கள் சுய ஜாதகத்தை பார்த்தும் குடும்ப உறுப்பிணர்களின் ஜாதகத்தை பார்த்து பலன்களை தெரிந்து கொண்டு வாழ்வில் எல்லா வளங்களும் பெற இறைவணை பிராத்தனை செய்வோம்.
இங்கே கோட்சாரத்தை இவ்வளவு விரிவாக எழுதுவதற்கு காரணம் நான் ராசிபலன் எழுதி புகழ்பெறுவதற்கு அல்ல கோட்சாரம் அடிப்படை கிரக நகர்வுகள் பார்வை பலன்களை தெரியாமல் ஜோதிடம் கற்க இயலாது இந்த ராசிபலன்கள் மூலம் உங்களுக்கு அடிப்படை ஜோதிட அறிவு கிடைத்து விடும் யாரெல்லாம் கிரகத்தை விவரித்து பலன்கள் எழுதிகிறார்களோ ஜோதிட பயிற்சியாளர்கள் ஒரு வருட காலம் திரும்ப திரும்ப ராசிபலன களை படித்து வாருங்கள் இரண்டாவது வருடத்தில் ஜோதிடத்தில் உங்களுக்கு நல்ல அறிவு கிடைத்துவிடும் என்பது உறுதி.
சக்கரவர்த்தி கலியபெருமாள். ஜோதிட பதில்
ஜீவசமாதிகள்
0 Comments