Ticker

6/recent/ticker-posts

கிரக இணைவு பலன்கள்

கிரக இணைவு என்பது என்ன?

கிரக இணைவு என்பது 1, 2, 5, 7, 9 இல் இருப்பது, ஒருவருடன் ஒருவர் சேர்ந்து இருப்பது, தன் பார்வைகளால் பார்பது, ஒருவருடைய சாரத்தில் இருப்பது. பலன்கள் என்பது நேரடித்தொடர்பு பெறும் கிரகத்திற்கு வலிமை அதிகம் பார்வை சாரம் மத்திம பலன்களை தரும்.

ஒரு கிரகத்தோடு குரு இணைவு பெறும்போது முயற்சி செய்யவைத்து தெய்வ அனுகூலத்துடன்  வெற்றி பெறச்செய்யும், சனியுடைய தொடர்பு இணைவு பெறும்போது கர்மத்தொடர்பு அதுவாகவே நடந்தேறச்செய்யும்.

இரண்டுகிரங்கள் சேர்க்கை/ இணைவு பெறும்போது தங்களுடைய குணங்களை இருவரும் பரிமாறிக்கொள்கின்றானர்.

கிரக காரகங்கள்:-

சுக்கிரன் -பெண்கள், பணம், அழகு, கருப்பை, கணையம், கன்னம், மனைவி, சுக்கிலம், பெண்கள்.
ராகு- பெரிய, விஷம், நிழல், விரிதல், விரிவு, வாய், கவ்வுதல், நுழைவு வாயில், கண்டம்
கேது- ஞானம், பக்த, தடை, நூல், முடி, சுருக்கம், சுருங்குதல், வால்
சந்திரன்- நீர, சலனம், பிரயாணம், உணவு, செலவு, குளிர்ச்சி, தாய், இடது கண்
புதன்- கல்வி, காதலன், இளையவன், எழுத்து, பேச்சு, கவிதை, தோல், நெற்றி, படிப்பு, தாய்மாமன்
குரு - ஜாதகர், கோவில், கல்லீரல், சுயமுயற்சி
சூரியன்- தந்தை, அரசு, அரசியல், ராஜா, சக்கரவர்த்தி, வலது கண்
சனி- கர்மா, தொழில், வேலைஆட்கள், பழைய, அழுக்கு
செவ்வாய்- புருவம், தழும்பு, சொத்து, கோபம்

பகை கிரகங்கள்:-

சந்திரன்-  புதன், சனி, கேது, ராகு,
சூரியன்-
செவ்வாய்-
புதன்-

சுக்கரன்+ சந்திரன்

சுக்கிரன் + சந்திரன் இணைவு பரிவர்த்தனை, பார்வை சுக்கிரனுக்கு சந்திரன் 1 5 7 9 ல் சந்திரன் இருந்தால் கீழ்கண்ட பலன்கள் டைபெறும்.

திருமணத்தடை, சிக்கல், பிரிவு, மாமியருடன் கருத்துவேறுபாடு ஒத்துபோகமல் வாழுதுல், பிரிவினை ஏற்படுத்துதல், கணவரின் அக்காள் தங்கைகளுடன் கருத்து வேறுபாடு, கணவன் மனைவி பிரிந்து வாழுதல்.

கடக வீட்டில் சுக்கிரன் அதாவது சந்திரன் வீட்டில் சுக்கிரன் இருந்தாலும் மேற்கன்ட பலன்கள் ஏற்படும். சிலருக்கு இரண்டு திருமணங்கள் ஏற்படும்.

பணம் விரயம், இவர் குளிக்கும்போதும், பாத்திரங்கள் கழுவும்போதும், நீரை உபயோகிக்கும்போதும் இவர்கள் நீரை அதிகமாக விரயம் செய்வா்கள் இவர்களுக்கு கருப்பை கோளாறு, வெள்ளைபடுதல், பணத்தை அதிகம் செலவு செய்பவர், கடன் இருக்கும், ஆண்களுக்கு விந்துவின் தன்மை கெடும். 

சுக்கிரன் + ராகு 

சினிமா துறை, பொருட்காரகம் அதிக படுத்தும், உயிர்காரகத்தை கெடுத்துவடும், கணவனை இழந்துவிடுவது, பிரிந்து வாழ்வது, விதவை, நிழல் படம்.

புதன்+செவ்வாய்

புதனுடன் செவ்வாய் கேது இணைவு பெற்றால் கல்விதடை ஏற்படும், சிலர் தடைபட்டு பிறகு கல்வியை தொடருவார்கள், கல்வியில் கனவு ஆர்வம் இருந்தாலும் கல்வி தடைபடும், நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும், காதலி காதலுடன் கருத்துவேறுபாடு உண்டாகும், அழகாக எழுதினாலும் அடித்தல் திருத்தலுடன் எழுதுவார்கள், தோல் வியாதி, அலர்ஜி ஏற்படும், சிலருக்கு தோலில் அங்காங்கே நிறம் மாறிய பகுதிகள் காணப்படும்.

குரு + சூரியன்

ஆன்மீக ஈடுபாடுகளை உண்டு செய்யும், நேர்மையை கடைபிடிக்க செய்யும், நல்ல புகழ் பெற செய்யும். நல்லவர்களுடன் மட்டுமே நட்புகள் தொடரும்.

சனி +சுக்கிரன் 

நல்ல வருமானத்தை, செல்வத்தை, நல்ல புகழை, அந்தஸ்த்தை அளிக்கும் குறைவான முயற்சியில் கர்மபடி கொடுக்கும். இந்த இணைவு உள்ள ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகு நல்ல செல்வ யோகங்களை அனுபவிப்பார்கள். ஒரு சிலர் மத்திம வயதில் புகழ் பெறக்கூடியவர்கள், மனைவி வந்தபிறகு நல்ல தொழில் வேலை பணம் செல்வம், வீடு, வன்டி, வாகணங்கள் அமையும் பெருகும். அதாவது மனைவி வந்த பிறகு சுக்கிர காரகத்துவங்கள் பெருகும்.

குரு +சுக்கிரன்
குரு+சந்திரன்
குரு+ சூரியன்
ஆயுள் ஆரோயக்கத்தை தரும்
குளம் /குளிர்ச்சி நிறைந்த இடத்தில் விசிப்பிடம், சினிமா விரும்பி, இசைஞானம், கலை விருப்பம், ஜலதோஷம, ஒவ்வாமை.
சிவராஜயோகம், கோவில் கட்டுவார், சமூக ஆர்வம், தொண்டு நிறுவணம்
குரு+ ராகு
அதிக முயற்சி உடையவர்கள்,
சூரியன் +சனி 
கண்நோய் உண்டு, கண் கலங்கி கொண்டே இருக்கும் நீர் வரும், கண்ணாடி அணிந்து இருப்பார்.
கேது +சனி

கேது சனி இணைவு சேர்க்கை பார்வை பலன்கள் திடிர் செய்தொழில் முடக்கம், வேலையில்லாமல் போதல், பார்க்கும் வேலையில் சிக்கல் பிரச்சனை ஏற்படுவது, பணியிடைநீக்கம், வேலையை இழக்கும் நிலைகளை ஏற்படுத்தும்.

இரண்டுக்கும் மேற்பட்ட உப தொழில்களை செய்துவரவேண்டும் பார்க்கும் வேலை நிலைக்காவிட்டால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை உணர்ந்து பார்க்கும் வேலையை நிதானாமாக பர்க்கவேண்டும், ஆன்மீக தொழிலை உப தொழிலாக செய்து வரவேண்டும்.

தோஷம் (குறைபாடு பாதிப்பு ) 🦅
 
தோஷம் என்பது பாதிப்பு அடைவது என்று பொருள்
எந்த காரகத்தை பற்றி சொல்கிறோமோ 
அதற்கு அந்த காரகத்திற்கு
குறைபாடு ஏற்படும் என்று பொருள் 
ஆண் -மனைவியை குறிக்கும் கிரகம் சுக்கிரன் 
பெண் - கனவனை குறிக்கும் கிரகம் செவ்வாய் ஆகும். 
குரு -ஜாதகனை குறிக்கும்   (ஆண் )
சுக்கிரன் -ஜாதகியை குறிக்கும்  (பெண்)

பொதுவாக ஒரு கிரகத்திற்கு ராகு கேதுவின் தொடர்பு ஏற்பட்டாலோ பகைகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஏற்பட்டாலோ
அந்த கிரகத்தின் காரகத்தை பாதிப்பு அடையச் செய்யும்.

உதாரணமாக பெண் ஜாதகத்தில் செவ்வாய்க்கு 1 5 9 3 7 11 2 12 ல் சனி இருந்தால் செவ்வாய் காரகத்தை பாதிப்பு அடையச்செய்யும் இதை தோஷம் என்று கூறலாம்.
மீண்டும் வேறு ஒரு பதிவில் ✍
சக்கரவர்த்தி கலியபெருமாள் ஜோதிட பதில்
You May Also Like 
கிரக இணைவுகளால் ஏற்படும் பலன்கள்

Post a Comment

0 Comments