கோடசாரம் என்றால் என்ன? கிரகங்கள் எவ்வாறு செயல்பட்டு ஜாதகருக்கு பலன்களை தருகிறது?
கோட்சாரம் என்பது தினமும் நடக்ககூடிய கிரக நகர்வுகள் சலனங்கள் இந்த சலனங்களால் கிரகங்களின் இணைவுகளால் (சேர்க்கை பார்வை 1 5 7 9 இடங்களில் ஒரு கிரகத்திற்கு மற்றொரு கிரகங்கள் இருப்பது)ஏற்படக்கூடிய பலன்களே கோட்சார பலன்கள். இந்த பலன்கள் பொதுபலன்களே ஆனால் பிறப்பு ஜாத கிரகங்ளும் கோட்சார கிரகங்களும் இணைவு பெறும்போது பலன்கள் மாறு படும் வேறுபடும்.
சந்திரன்- உடல் மனம்
கர்ம வினைபடி கிரகங்களால் ஏற்படுகின்ற சுப/அசுப நன்மை தீமைபலன்களை உடல் என்ற மாமிச பிண்டம் அனுபவிக்கின்றது, கர்ம வினைபடி கிரகங்கள் தூண்டக்கூடிய செயல்களை மனம் நினைக்கிறது அதை மூளை உடலுக்கு கட்டளை இடுகிறது மனதை கட்டுபடுத்தினாலே உன் கர்ம வினை குறையை ஆரம்பிக்கின்றது.
கிரகங்கள் தானாக எந்த வித பலன்களையும் தராது ஏதாவது ஒரு வகையில் சேர்க்கை பெற்றால் ஒழிய பலன்களை வெளிபடுத்தும் அது சுப/ அசுப பலன்களாக இருக்கலாம். கோட்சார கிரகங்கள் பிறப்பு ஜாதக கிரகங்களோடு இணைவு பெறும்போதும் இணைவு என்பது சேர்க்கை பார்வை கோட்சார கிரகத்திற்கு 1 5 7 9 ல் பிறப்பு ஜாதக கிரகங்கள் இருப்பது அல்லது நடப்பு தசைகளுடன் இணைவு பெறுவது அல்லது குடும்ப நபர்களின் ஜாதக கிரகங்கள் மற்றும் தசா கோட்சார சந்திப்புகள். கடைசியாக எந்த இணைவுகளும் இல்லை என்றால் சுமார் பலன்களாக கிரகம் நின்ற நட்சத்திரம் சாரம் பெற்ற கிரகங்ளின் இணைவுகள் மற்று ம் சந்திரனின் அதிவேக பெயர்ச்சியால் ஏற்படுகின்ற தினபலன் நிகழ்ந்து கொண்டே வாழ்க்கை நகரும்.
கோட்சாரத்தில் கிரகங்கள் ஒரு ராசியை கடக்க எடுத்து கொள்ளும் கால அளவுகள் எத்தனை?
சந்திரன் 2 1/4 நாள் ஒரு ராசியை கடக்க எடுத்துக்கொள்ளும் காலஅளவு சூரியன் ஒரு மாதம் புதன்/ சுக்கிரன் 30 நாள் செவ்வாய் 45 நாட்கள் குரு ஒரு வருட காலம் சனி இரண்டரை ஆண்டுகள் ராகு/கேதுக்கள் ஒன்றரை ஆண்டு காலம் ஒரு ராசியை கடக்க கிரகங்கள் எடுத்து கொள்ளும் கால அளவுகள் ஆகும்.
உதாரணம் மூலமாக ஒரு பெயர்ச்சியை சிறிய விளக்கத்துடன் இந்த பதிவை முடித்துகொண்டு வேறு ஒரு பதிவில் சந்திப்போம். உதாரணத்திற்கு குரு பெயர்ச்சி நடப்பதாக எடத்து கொள்வோம் ஏதாவது ஒரு ராசியிலிருந்து வேறு ஒரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது உதாரணமாக கும்ப ராசியிலுருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆகிறதாக எடுத்து கொள்வோம் முதலில் மீனத்தில் கிரகம் இருந்தால் அந்த கிரகத்திற்கு ஏற்பவோ அல்லது அந்த ராசிக்கு 1 5 7 9 ல் பிறப்பு ஜாதக கிரகங்கள் இருந்தாலோ உயிர் காரக பலன்களையோ அல்லது பொருட்காரக பலன்களையோ சுப/அசுப பலன்களாக கொடுக்க ஆரம்பித்துவிடும் எந்த கிரகங்களும் இல்லை என்றால் தவித்து நிற்கும் பலன்களை அளிக்க முடியாமல் காத்திருக்கும் மக்கள் எல்லாம் கூறுவார்கள் எனக்கு சனி பெயர்ச்சி குரு பெயர்ச்சி ராகு /கேது பெயர்ச்சி நடந்து விட்டது எனக்கு பலன் ஏதும் நடக்கவில்லை இதற்கு காரணம் இந்த காரணம் தான் இதுவரை இதை யாரும் தெளிவு படுத்தியது இல்லை. அடுத்து பலனே அளிக்காமல் பெயர்ச்சி ஆகிவிடுமா? ஆகாது தின கிரகமான சந்திரனாலும் மாத கிரகங்களான புதன் சுக்கிரன் செவ்வாய் போன்ற கிரகங்களால் சொற்ப பலன்களை கொடுத்து விட்டு பெயர்ச்சி ஆகிவிடும். ஆனால் அந்த பலன்களை அடுத்த ராசியில் கிரகங்கள் இருந்தால் கர்ம வினைகளுக்கு ஏற்ப கண்டிப்பாக பலன்களை கொடுக்கும்.
இதுவரை கோட்சாரம் என்றால் என்ன எப்படி கிரகங்கள் பலன்களை தருகிறது என்று விளக்கமாக பதிவிட்டு இருக்கிறேன் படித்து உணர்ந்து பலண்களை கூறுங்கள். சில அறிவு திருடர்கள் நான் யாரும் கூறாத சில தகவல்களை எழுதி இருக்கிறேன் இதை காப்பி செய்து தங்களின் பழைய பதிவில் எடிட் செய்து பதிவிட்டு கொள்கிறார்கள் அதைபற்றி எனக்கு கவலை இல்லை!
ஒவ்வொரு நிகழ்விற்கும் நடக்கும் காலம் வரை காத்திருக்க வேண்டும் அதற்கு நிறைய உதாரணங்கள் தரலாம் சாதம் சமைக்க உளை கொதித்து அரிசி கலைந்து போட்டு வெந்த பிறகே வடிக்க வேண்டும் இல்லை என்றால் அறைவேக்காடுதான், அது போல பஸ்சில் ஏறியுடன் உன் நிறுத்தம் வரும்வரை காத்திருக்கவேண்டும், இறுதி போட்டியில் பதக்கம் பெற பல போட்டிகளை சந்தித்து வரவேண்டும் , உன் ஜாதகத்தில் கிரக நிகழ்வுகள் நிகழ அந்த காலம் வரும்வரை காத்திருக்கவேண்டும் உன் ஜாதகம் முன்பதிவு செய்யபட்ட பயணசீட்டு அந்த காலம் வரும்வரை காத்திருக்கவேண்டும்.
ஜோதிடம் பார்த்தவுடனே வேலை செய்துவிடாது உன் உடல் பஞ்ச பூதத்தால் ஆன நவகிரக பிண்டம் கிரக சலணத்திற்கேற்ப சிதைந்து கொண்டே நகரும் பிரமாண்ட ஆசை பெருக்கி காட்டி இறுதியில் சுருக்கிவிடும். பிரமாண்ட ஆசையை சுருக்கி இறுதி காலத்தை பெருக்கி கொள்ளுங்கள்.
கர்மாவை ஒழிக்க ஆசை ஒழிக்கவேண்டும் ஞானம் -கேது சிவன் வாழ்வு சிவனே என்ற வாழ்வு ஞானத்தை பெருக்கி மோட்சத்தை கொடுக்கும்.
இறுதியில் மிஞ்சுவது ஒன்றும்இல்லை இப்போதே உணர்ந்துவிடு நவகிரகங்கள் உண்ணை கண்டு மிரண்டு ஓடும்?
சக்கரவர்த்தி கலியபெருமாள் -ஜோதிட பதில்
Jothida Pathil
0 Comments