குரு மங்களயோகம் -Gurumangala Yogam
Tamil Astrology -ஜோதிட பதில்
குருவிற்கு செவ்வாய் கேந்திர ஸ்தானமான 1 4 7 10 ஆம் இடங்களில் இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலோ குருமங்கள யோக்தை உருவாக்கும்.
யோகம் என்றால் என்ன? Yogam Enral Enna?
யோகம் என்பது இரண்டு கிரகங்கள் இணைவு பெறுவது அல்லது சேர்க்கை அல்லது பார்வை ஆகும் மேலும் ஒன்றுக்கொண்று கேந்திரத்தில் இருந்தாலும் அல்லது திரிகோணத்தில் இருந்தாலும் சமசப்த பார்வையில் இருந்தாலும் அல்லது கிரகங்களின் பார்வைகளில் இருந்தாலும் சேர்க்கையின் வலிமைக்கேற்ப பலன்களின் அளவு மாறுபடும். அவை சுப யோகங்களாகவும் இருக்கலாம் அல்லது அசுப யோகங்களாகவும் இருக்கலாம். கோட்சார நிகழ்வின்போது ஏற்படும் இணைவுகளால் ஏற்படும் பலன்கள் குறைவாகவும் தசா புத்தி காலங்களில் ஏற்படும் பலன்கள் அதிகமாகவும் காணப்படும்.
யோகங்கள் யாவும் கர்ம வினைகளுக்கு கேற்பவும் பூர்வ ஜென்ம புண்ணியங்களுக்கு ஏற்றவாறும் உன் குடும்ப நபர்களின் ஜாதகங்களுக்கு ஏற்றவாறும் அளவுகள் மாறுபடும்.
பலன்கள்-Palangal
சமுதாயத்தில் அல்லது குடும்பத்தில் உயர்ந்த புகழ் அந்தஸ்து கௌவுரவம் ஏற்படும் பெண்ணாக இருந்தால் நல்ல புகழுடைய ஆன்மீக ஈடுபாடு உள்ள கணவர் அமைவார் படிப்படியாக உயர்ந்த இடத்தை அடைந்து விடுவார்கள் ஜாதகர் அல்லது கணவர் அடிக்கடி கோப்படக்கூடியவராக இருப்பார்கள். வீடு மனை வாகனம் செல்வம் விவசாய நிலம் தோட்டம் அமையும
கிரக காரகங்கள்:- Kiraga Karagangal
குரு - மஞ்சள் நிறம், கல்லீரல், கொண்டைகடலை, யாணை, தெய்வ நிகழ்ச்சி, தங்கம், உயர்ந்த சிந்தனை, நேர்மை, நல்ல குனம், தர்ம சிந்தனை, தானம் தர்மம், நல்ல ஆலோசனை சொல்பவர், மூக்கு, அமைச்சர், ஆசான், அந்தணன், வயிறு, அதிக பணம், பிரகஸ்பதி, பூஜை அறை, நீதி, ஜாதகர், ஆனமீகம், கோவில், மத போதகர்.
செவ்வாய்- மங்களன், வெப்பம், கோபம், கரடு முரடான, நிலம், கணவர், பற்கள், சமையலறை, முரட்டுத்தனம், பிரறை அடக்கி ஆள்பவர், போலிஸ், கற்கள், ஈட்டி, Heater, பொறியாளர்,விளையாட்டு வீர்ர், படுக்கை அறை, சமையல் அறை, இளையசகோதர்ர், மின்மோட்டர், பாறைகள், சிவப்பு நிறம், பூமி, மலை
நீசபங்க ராஜயோகம்
ஒரு கிரகம் நீசம் பெற்றாலும் அந்தக் கிரகம் நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10ல் அமைந்திருந்தாலும் நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு உச்ச கிரகம் இருந்தாலும், நீசம் பெற்ற கிரகம் ராசி சக்கரத்தில் பரிவர்த்தனை பெற்றோ, அம்ச சக்கரத்தில் ஆட்சி உச்சம் பெற்றோ இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகிறது,
நீசபங்கம் பெற்று நீசபங்க ராஜயோகம் உண்டாகி இருந்தால் முதலில் கெடுபலன்களை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு பெரிய அளவில் அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும்.
நீச்சனை நீச்சன் பார்ப்பது. அதாவது நீச்சம் பெற்ற ஒரு கிரகத்தை மற்றொரு நீச்ச கிரகம் பார்த்தால், இரண்டு நீச்சகிரகங்களும் நீச்சபங்க ராஜயோகத்தை அடையும்.
சிறந்த யோகங்கள் யாவை? பஞ்சமகா புருஷ யோகம்
யோகங்களில் முதன்மையானுதும் மிகச்சிறப்பு வாய்ந்ததுதான் பஞ்சமாக புருஷ யோகமாகும் இந்த யோகங்கள் மிகுந்த சக்தி வய்ந்தது ஒளி கிரகங்களான சூரியன் சந்திரன் நிழல் கிரகங்களான ராகு கேதுக்களை தவிர மற்ற ஐந்து கிரகங்களான செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி ஆகிய கிரகங்களால் உருவான யோகங்களே பஞ்சமாக புருஷ யோகம் ஆகும்.
ருச்சுயோகம் : Astrlogy
பலன்கள்:
பத்தரை யோகம்:
பலன்கள்:
அம்ஸ யோகம்:
பலன்கள்:
மாளவியா யோகம்
சகடை யோகம்
பரிவர்த்தனை யோகங்கள்🦅
இரண்டு கிரகங்கள் ஒருவர் வீட்டில் மற்றொருவர் மாறி நிற்பதால் ஏற்படும் யோகம் ஆகும்.பரிவர்த்தனை யோகம் எப்போது செயல்படும்- ஜோதிட ஆசான்களை அனுகி தெரிந்து கொள்ளுங்கள்.
பரிவர்த்தனை நடப்பில் வரும்போது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். உச்ச நிலையில் இருப்பவர்கள் எதிர்பாராத விதமாக கிழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள், ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் எதிர்பாரத விதமாக கவிழ்க்கபடுவார்கள் எதிர்பாரத விதமாக ஆட்சி பாடத்திற்கு கொண்டுவரப்படுவார்கள், உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் திடிரென வீழ்த்படுவார்கள், தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு எட்டிவிடுவார்கள், ஆன்மீக வாதியாக இருப்பவர்கள் திடிரென பெண்களால் அவப்பெயர்கள் ஏற்பட்டு அசிங்கப்படுத்தபடுவார்கள். சிலர் தன்வாழ்க்கையில் பாதி நாள் குடும்ப வாழ்க்கையும் மீதி நாள் காவி உடுத்தி ஆன்மிகத்தில் ஐக்கியம் ஆவதும். வாழ்க்கையின் முற்பகுதியில் தகாது உறவுகள் களவாடுதல் துரோக செயல்களில் ஈடுபடுதல் பிற்பகுதியில் திருந்தி வாழ்க்கை பாதைகளையும் சீர்செய்து கொள்ளுதல் இதற்கெல்லாம் காரணம் பரிவர்த்தனை யோகங்கள் செயல்படுத்தும்.
புதன் சந்திரன் குரு இணைவு எங்கெல்லாம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் முறைகேடுகள் ஒழுக்ககுறைபாடு காதல் திருமணம் முறைமாறிய உறவுகள் ஏற்படும்.
இதுமட்டும் காரணம் அல்ல அதிசூட்சமங்களும் உண்டு ஜோதிட ஆசான்கள் நீங்கள் ஜோதிடம் பயிலும்போது தொட்டுகாட்டுவார்கள்.
அதிசூட்சமங்கள் என்றால் சிலருக்கு தெரிந்த விசயங்கள் அது உங்களுக்கு தெரியாத செய்திகள்.
0 Comments