Ticker

6/recent/ticker-posts

சில உறவும் நட்பும் அவர்களின் தேவைகளுக்காக

Tamil Astrology- ஜோதிட பதில்

இந்த நிகழ்வு முடிவுரை

நீண்ட நாட்கள் பழகிய உறவு மற்றும் நண்பர்கள் உன்னை விட்டு விளகி செல்கிறார்கள் என்றால் உன்னிடம் உள்ள தேவை முடிந்து விடுகிறது.

உறவும் நட்பும் வெளியேறுகிறது என்று பொருள்.

சில உறவுகளும் நட்புகளும் அப்படித்தான் நம் வாழ்க்கையில்.

தேவைக்காக பணத்திற்காக அவர்களின் திட்டத்தை நம் மூலம் பரிசோதித்து பார்பதற்காக நம்மை பயன்படுத்தி பார்ப்பார்கள்.

இந்த நிகழ்வுகள் முகவுரை

இங்கேதான் விதி கர்மா செயல்பட ஆரம்பிக்கிறது ஏழரையும் ஒவ்வாத திசைகளும் கற்பனை வருமானங்களை கனவில் எண்ணவைக்கும் ராகுமகா தசைகள் சுக்கிரனுக்கு சுளுக்கெடுக்கும் சந்திரன் ராஜா தசை என்று சொல்லப்படும் குரு இவைகள் எல்லாம் ஆரம்பிக்கும்போது தெரியாது. அடிவிழும்போதுதான் வளிகளும் வேதனைகளும் தெரியப்படுத்தும்

ராகு சுகமாக தேடி அலையும் எல்லாம் சொர்க்கமாக தெரியும் கற்பனை வருமானங்களை கனவிலே எண்ணவைக்கும் ஏன் அர்ப சுகங்களை அள்ளி பருக வைக்கும் எல்லை மீறி போகும்போது நசுங்கி வெளியேவரும் யாரை பற்றியும் கவலை படாது எல்லாவற்றையும் விழுங்கிவிடும். மிகப்பெரிய கிரகம் அல்லவா! அவற்றின் சூழ்ச்சிக்கு அனைத்து கிரகங்களும் ஏன் அனைத்துராசிகளும் அடங்கி திவால் ஆகிவிடும்.

சில உறவும் நட்பும் தேவைகளுக்காக எச்சரிக்கை!

சனி செவ்வாய்/ சனி கேது இணைவு

ஜாதகத்தில் சனி செவ்வாய் அல்லது சனி கேது சேர்க்கை இருந்தால் அத்தகைய ஜாதகர்கள் வாழ்க்கையில் மிகவும் சிரமப்படுவார்கள் பல இன்னல்களை அனுபவிப்பார்கள் திருமணத்தடை வேலையில் பிரச்சனைகள் என பல தரப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எனவே அவர்கள் ஒரு நல்ல குரு/ ஆசான்கள்/சித்தர்கள்/ மகான்களை சரணடைந்து அவரின் ஆசி பெற்றால் வாழ்க்கை சுபீட்சமாக மாறிவிடும். சனி கேது இணைவு , கடன், விரக்தி, தொழில் நஷடம் மற்றும் வேலை இழப்பு அடிக்கடி உண்டாகும்.

உடல் ஊனம்

உடலில் ஏற்படும் ஊனத்தை குறிக்கும் கிரகம் ராகு ஆகும் இந்த ராகு எந்த கிரகத்துடன் ணைகிறதோ அந்த கிரகத்தின் காரக உறவுகளை பாதிப்பு அடையச்செய்யும்.

மறதி/ சோம்பேறித்தனம்

ஜெனன கால சந்திரன் கோச்சார சனியை பார்க்கும் காலம். மந்த புத்தி, ஞாபக மறதி ஏற்படும் இதனால் பொருட்கள் ஞாபக மறதியால் தொலைந்து போகும், அல்லது காணாமல் போகும். செலவுகள் அதிகமாகும், அலைச்சல்கள் அதிமாகும், சோம்பேறித்தனம் உண்டாகும், வீட்டில் திருட்டுபோகவும் வாய்ப்புண்டு.

புதன்- செவ்வாய் 
புதன் - பேச்சு, கல்வி, தாய்மாமன்
செவ்வாய் - கணவன்,  ஆயுதம், படுக்கைஅறை
கும்பம் -சுரங்கம் மர்மமான இடம்
சனி ராகு - நிலக்கரி
சனி - சேமிப்பு கிடங்கு, சேமிக்கும் இடம் குப்பை
படி- கேது
சனி குப்பைகளை குறிக்கும், சனி திரிகோணத்தில் ராகு இருக்க, வீட்டில் அதிக குப்பைகள் அதிகம் சேரும். சனிக்கு திரிகோணத்தில் செவ்வாய் அல்லது ராகு பலமாக இருக்க பற்கள் வரிசை அல்லது பற்களில் சொத்தை அல்லது ஓட்டை ஏற்படும்.

என்ஜாதகம் யோகம் இல்லை நான் என்ன செய்வது?

ஶ்ரீ சென்டாடும் ஐயனார் துணை!

உங்கள் ஜதகத்தை பார்த்து விட்டீர்கள் மிகச்சிறந்த பிரபல ஜோதிடர்கள் ஒருவர் நடக்கும் என்கிறார் வேறு ஒருவர் நடக்காது என்கிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை தயவுடன் கருணையுடன் நடந்து வாருங்கள் உங்களால் முடிந்த தானங்களை உயிர்களுக்கு செய்து வாருங்கள்.படிபடியாக பாவங்கள் குறைந்து நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.

வெற்றி நிச்சயம்.

ஜோதிடரிடம் ஜாதகத்தை கொடுத்தவுடன் தன்னை பற்றி தன் குடும்பத்தாரை பற்றியும் நடந்த நடக்கின்ற நடக்க போகிற நிகழ்வுகளை பற்றி கூற வேண்டும் என்ற நினைப்புடனே நெருங்குகின்றனர். முதலில் நீங்கள் கொடுத்த ஜாதகம் சரியானதா ஜோதிடர் பார்க்கும் முறைக்கு ஏற்றாற்போல இருக்கிறதா என்பதை உறுதி படுத்தவேண்டும் சில அடிப்படை கேள்விகளை கேட்டு உறுதிபடுத்து கொள்வார்கள் சில நடந்த நிகழ்வுகளை கூறி கூட கால நிர்ணயத்தை சரி செய்து கொண்டு பலன் கூற முற்படுவார்கள் சிலர் இதை நம்மிடமே கேட்டு பலன் கூறுகிறார் என்றும் ஒரு அற்ப முடிவை எடுத்து விடுகிறார்கள். ஜோதிடர் மந்திரவாதிகள் அல்ல ஒரு கணிதர் ஒரு கணக்கில் இருந்தால்தான் பலனும் கணக்காக வரும்.

உங்கள் பிரச்சனைகளை நேரடியாக கூறி பலன்களையும் அந்த பிரச்சனைகளிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை கேட்டு தெளிந்து கொள்ளுங்கள். 

ஜோதிடர்கள் தன்னை தானே  சோதித்து பல சோதனைகளை செய்து பார்த்து பல ஜாதகங்களை ஆராய்ந்து பல அனுபவங்களை பெற்றவர் ஜோதிடரை தேரந்தெடுக்கும்போதே அனுபவம் நிறைந்தவர்களை பாரத்து தேர்ந்தெடுத்து உங்கள் பிரச்சனைகளை தெளிவு படுத்திகொள்ளுங்கள்.

ஜோதிடர்களின் அனுபவம் ஜோதிடத்திற்கு அப்பாற்பெற்று பல பிரச்சனைகளுக்கு மருந்தாக செயல்படுவார்கள்

செவ்வாய்+ புதன் இணைவு

‌ஜாதகத்தில் செவ்வாய்க்கு 1 ,2 ,5 ,9 புதன் அமையபெற்றவர்கள் புதன் - செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள், இவர்கள் பேசும் பேச்சில் நேர்மை இருக்கும், மறைத்து பேசத்தெரியது, சொற்கள் கடினமானதாகவும் , பேசும் போது சிறு தடைகள் இருக்கும். இவர்களின் படிப்பில் தடைகள் வரக்கூடும். செவ்வாய் கணவனை குறிப்பதால் ஜாதகியின் கணவர் புத்திசாலியாக இருப்பார்.படுக்கை அறையில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு.

சக்கரவர்த்தி கலியபெருமாள்✍️

Post a Comment

0 Comments