பதினொன்றில் சூரியன்
ஒரு ஜாதகத்தில் பதினொன்றில் சூரியன் இருந்தால் சர்வதோஷ நிவர்த்தி ஆகும், ஜாதக ரீதியாக எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் எளிதாக நிவர்த்தி அடைந்து விடும், ஒரு முகூர்த்தம் நிர்ணயிக்கும் பொது பதினொன்றில் சூரியன் உள்ள லக்கனத்தை குறித்து கொடுத்தால் எல்லா தோஷங்களும் அடிபட்டு போய்விடும் எல்லா காரியமும் எளிதாக ஈடேரிவிடும், இந்த அமைப்பு உள்ள ஜாதகர் நல்ல செல்வ செழிப்பு, உயர்ந்த செல்வாக்கு, ஆள், அம்பு, சேனை, நீர் நில வளத்துடன் உயர்ந்த நிலையில் வாழ்வார்கள்.
குளிகை நேரம் (ஜோதிட விளக்கம்)
ராகு, கேது கிரகங்கள் போல, குளிகை, மாந்தி என்பவற்றையும் முன்னோர் நிழல் கிரகங்களாக வகுத்தனர். சூரியன் முதலான கிரகங்கள் ஏழிற்கும் ஏழு நாட்களின் பெயர் சூட்டினார்கள். ராகுவிற்கு தினமும் ராகு காலமாகவும், கேதுவிற்கு எமகண்ட நேரமும் ஒதுக்கப்பட்டன. குளிகைக்கும் தினமும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது, நல்ல செயல்கள் செய்யும் போது குளிகை காலம் பர்ர்க்கத் தேவையில்லை தாரளமாக செய்யலாம், பிதுர் (முன்னோர் வழிப்பாடு) காரியங்கள் செய்யும் போது குளிகையில் செய்ய கூடாது
குளிகன் என்றால் சனியின் மைந்தன் என்று சொல்வார்கள். குளிகனுக்கு உகந்த காலமான குளிகை காலத்தினை இந்து சமய சோதிடம் வரையறை செய்துள்ளது. இதன்படி பகல் மற்றும் இரவு என இருவேளைகளிலும் குளிகை காலம் வருகிறது.
குளிகை காலத்தில் செய்யப்படுகிற காரியங்கள் தொடர்ந்து நடைபெறும் என்பது இந்து சமய மக்களின் நம்பிக்கையாகும். அதனால் நற்காரியங்களையும், சுபகாரியங்களையும் மட்டுமே இந்தக் காலத்தில் செய்கின்றார்கள்.
குளிகை நேரத்தில் கடனை திருப்பி கொடுப்பது, வீடு – நகை வாங்குவது இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் செய்தால் தொடரும்.
குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்டே போகும். கடன் வாங்குவது, வீட்டை உடைப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்யாமல் இருக்க வேண்டும்.
அதாவது சனியின் ஆதிக்க நேரம் அது. அந்த நேரத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சனிப் பிணம் துணை தேடும் என்று சொல்வார்கள். குறிப்பாக குளிகை காலத்தில் இறந்தாலோ, குளிகை காலத்தில் ஈமச்சடங்கு செய்தாலோ அடுத்ததாக ஒரு இழப்பை சந்திக்க நேரிடும். அதனால்தான் அந்த காலகட்டத்தில் இதுபோன்றவைகளை செய்யக் கூடாது என்று சொல்வார்கள். பொதுவாகவே குளிகை காலத்தை தவிர்ப்பது நல்லது.
செயல்களும் வினையால் விளைந்த வினைகளே
செய்த வினைக்காகத்தான் நாம் பிறப்பு எடுத்து உள்ளோம்.
ஒவ்வோரு நிகழ்வுகளும் வினையால் விளைந்த செயல்களே!
நாம் என்ன செய்ய இருக்கிறோம் என்பதை தெரிந்து செயல்படுங்கள்
இதுவே ஒருசிறப்பான பரிகாரம்.
நாம் விதைக்கின்ற விதையே தளிர்விட்டு மரம் ஆகும்✍️
🦅உலகத்தில் பிறந்த அனைத்து ஜீவன்களுக்கு (குரு) உயிர் மேல் அவ்வளவு ஆசை
நன்றாக வாழ வேண்டும் சுகத்தோடு வாழ வேண்டும் நல்ல அழகான மனைவியோடு வாழ வேண்டும் நல்ல அறிவுள்ள அழகான குழைந்த வேண்டும் நல்ல வசதியான வீடு வேண்டும் வாகனம் வேண்டும் நல்ல வேலை அல்லது தொழில் வேண்டும்.
நிறைய பணம் வேண்டும் இப்படி பல ஆசைகள் உண்டு அனைத்து சுகத்திற்கும் காரகம் சுக்கிரன்
அதிக மிக அதிக என்றால் ராகு
இது எல்லாவற்றுக்கும் தடை கேது
செவ்வாய் கனவன் போலீஸ் ராணுவம் கூர்மையான ஆயுதம் ரத்தம்
சனி தொழில் பொதுமக்கள்
புதன் வனிகம் வியாபாரம் கல்வி பேச்சு காதலன்
சூரியன் குழந்தை மகன் உயர்வு அதிகாரம் அரசாங்கம்
ராகு சந்திரன் இணைவு கிரகணம்
சனி சுக்கிரன் இணைவு பணக்காரன் குரு சுக்கிரன் இணைவு ஆயுள் விருத்தி
குரு சனி சுக்கிரன் இணைவு நன்றாக செல்வோத்தோடு வாழ்வான்
இப்படி பட்ட இணைவுகள் இயற்கையாக ஜாதகத்தில் அமைந்து விட்டால் அவன் யோகக்காரன்
புன்னியம் செய்தவன் அப்படி இணைவு இல்லாத ஜாதகத்திற்கு செயற்கை இணைவுகளை கொடுக்கவேண்டும்
இதற்கு பெயர்தான் பரிகாரம் என்று கூறிவந்தார்கள்.
செயற்கை இணைவு என்பது பல வழிகள் உள்ளது பூர்வ ஜென்மம் புண்ணியம் இருந்தால் இவ்வாறு இணைவு உள்ள மனைவி மகன் மகள் கிடைப்பார்கள் அப்படி இல்லை என்றால் சரியான தெய்வ வழிபாடு நட்சத்திர வழிபாடு ஜீவசமாதி வழிபாடு இப்படி உள்ளன
அடுத்த பதிவில் பார்ப்போம்
சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்🦅
தன்வந்திரி மூல மந்திரம்
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ!
குருவடிசரணம் திருவடிசரணம்
0 Comments