ஜீவன் கர்மாவை நோக்கி-ஜோதிட பதில்
ஜீவன் மனம் தேகம் கர்மா உன் பிறப்பு கர்மாவை சார்ந்தது, இதில் உன் பிறப்பு ஜாதக அமைப்பு கர்ம வினை பொருத்து கிரகங்கள் எங்கு எங்கு அமையவேண்டும், அதற்கு தகுந்தாற்போல அமைந்துவிடும், நீ என்ன கல்வி கற்பாய், நீ என்ன வேலை செய்ய போகிறாய், உனக்கு எப்போது திருமணம் நடக்கும், என ஒவ்வோரு செயல்களையும் தீர்மானித்து கிரக அமைவு ஏற்படும்போது ஜனனம் அதவது பிறப்பு ஏற்படும்.
இந்த ஜீவனுக்கு வேறு உறவு சம்பந்தம் ஏற்படும்போது கூட்டு கிரக உறவால் உன் ஜீவன் சில சமயம் பக்குபடலாம் சில சமயம் சலணபடலாம் சில சமயம் இருப்பிடத்தை விட்டு ஓடி போகலாம், சில சமயம் உடல்நிலை பதிப்பு ஏற்படலாம், சில சமயம் மரணம் கூட ஏற்படலாம், ஜீவன் கர்மாவோடு சேர்ந்து சுழலும்போது கர்ம வினைக்கேற்ப ஜீவன் வாழ்ந்து விடும் அப்படி என்றால் அவன் பிறப்பும் கர்ம வினைக்கேற்ப கிரகங்கள் அமைந்துவிடும் ஜீவனை அலைய விடாது. ஜீவனுக்கு என்ன என்ன வேண்டுமோ அதை நிறைவேற்றும் விதத்தில் கிரக அமைவு ஏற்படும்போது பிறப்பு ஏற்படும்.
ஜீவன் எப்போது வாடும்?
ஜீவன் தனித்து கர்மா தனித்து மனம் தனித்து தேகம் தனித்து பிறப்பு ஏற்படும்போது ஒன்றுக்கொன்று அலைந்து ஜீவன் நொந்து போய் அவைகள் ஒன்று சேரும்போது தன் கர்மாவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்த்துக்கொள்ள துடிக்கும். அதற்குள் இணைவு காலம் முடிந்து விட்டால் வேறு ஒரு இணைவு ஏற்படும் வரை ஜீவன் வாடி நிற்கும்.
ஒரு ஜீவன் வேறு ஒரு ஜீவனை தனிக்கும் ஒரு கர்மா வேறு ஒரு கர்மாவை வழிநடத்தும், ஒரு ஜீவன் வேறு ஒரு ஜீவனுக்கு அடங்கி வாழும். இந்த அமைப்புகள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தை பொருத்தே அமைகிறது
இளமை-விளக்கம்
வேறு பதிவில் தொடரலாம் (வேத நாடி ஜோதிடக்கலை குழுமத்திலும்)
7ஆம் இடம் 8 ஆம் இடம் (பெண்களுக்காக)
திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி!
ஒரு பெண்ணிற்கு களஸ்திர ஸ்தானம் 7ஆம் வீடு ஆகும் ,இது ஒரு சிறப்பன ஸ்தானம் ஆகும், 7ஆம் அதிபதி ஆட்சி, அல்லது உச்சம் அடைந்ததும், பாப கிரகங்களின் சாரம் அடையாமலும், பாப கிரக பார்வை, அல்லது சேர்க்கை பெறாமல் அமைய பெற்ற பெண் கணவனுக்கு மிகுந்த யோகத்தை கொடுப்பாள், அதேபோன்று களத்திரக்காரகன் சுக்கிரன் ஆட்சி, உச்சம், பாப கிரகங்களின் சாரம் அடையாமலும், பாப கிரக பார்வை, அல்லது சேர்க்கை பெறாமல் அமைய பெற்ற பெண், கணவனுக்கு மிகுந்த யோகத்தை அளிப்பாள். அதுபோல பெண்களுக்கு 8ஆம் இடம் மிக முக்கியமான இடம், அந்த இடத்தை மாங்கல்யஸ்தானம் என்று கூறுவார்கள், அந்த எட்டாம் வீட்டை சுபர்கள் நோக்கினால் கணவனுக்கு ஆரோய்க்யம் ஆயுள் பலன் உன்டாகும், பாப கிரகங்களின் சாரம் அடையாமலும், பாப கிரக பார்வை, அல்லது சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும், இந்த அமைப்பு மாங்கல்ய பாக்கியம் உண்டாகும்.
குறிப்பு:- கணவன், மனைவி, குழந்தைகளுக்கு இடையே தசா சந்தி ஏற்பட்டால், அல்லது ஒவ்வாத தசை நடந்தாலும்,மேற்கூறிய பலன்கள் வேலை செய்யாது, எல்லாம் கெட்டு குடும்பம் சிதரி நிற்கும், ஜாதகம் என்பது சலனம் கொண்டது சுற்றி கோண்டே இருக்கும், எங்கு தொட்டாலும் வழுக்கும், வளர்பிறையும் உண்டு, தேய்பிறையும் உண்டு அது போன்று, அமிர்த யோகம், சித்த யோகம் இருப்பது போல மரணயோகமும் உண்டு, இதானால் நன்றாக ஆராய்ந்து வரும் நபர்களின் குலதெய்வம் அறிந்து, குரு கடாட்சத்துடன் பலன் உரைக்க வேண்டும், அப்போதுதான் பலன் தப்பாமல் பளிக்கும், பலன் அளிக்கும்
(என்னிடம் கேள்வி கேட்க விரும்பும் அன்பர்கள் என் எல்லா பதிவுகளையும் படித்துவிட்டு கேள்வி கேளுங்கள்
கல ஒழுக்கம் கற்பு நெறி
11ஆம் இடம் என்பது லாப ஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், வெற்றி ஸ்தானம் என்பர் அத்துடன் (உபய களஸ்திர ஸ்தானமும்) ஆகும்.
இந்த பதிவு யாரையும் சுட்டிகாட்ட வில்லை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும், கர்ம வினைகள் எப்படி எல்லாம் வருகிறது என்றும், அது எந்த ரூபத்திலும் வந்து தீர்த்து கொள்ளும் என்பதையும், கல ஒழுக்கம் கற்பு நெறி மாறமல் வாழவேண்டும் என்பதை எல்லோருக்கும் வளியுருத்தவே இந்த பதிவு ஆகும்
11ஆம் இடம் என்பது லாப ஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், வெற்றி ஸ்தானம். அத்துடன் உபய களஸ்திர ஸ்தானமும் ஆகும். பிறந்த ஜாதகத்தில் களஸ்திர தோஷமும் இருதார யோகமும் இருந்தால் அந்தகாலத்தில் மறுமணம் ஏற்படலாம். சிலர் மூத்த தாரத்திற்கு குழந்தை இல்லை என்று அவர் சம்மதத்துடன் இரண்டாம் தாரம் கட்டிக் கொள்வார்கள். அல்லது சின்னவீடு ரகசியமாக செட்டப் செய்துகொள்வார்கள்.
இன்று நாட்டில் ரொம்ப பேருக்கு மனைவி இருக்கும்போதேமற்ற பெண்மீதும் சபலம் வருகிறது, பழமொழி சொல்லுவது மாதிரி கிளிபோல பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வைப்பாட்டி வைத்துக் கொள்கிறார்கள் சிலர் வெளியுலக மரியாதைக்கு பயந்து மனதுக்குள் ஆசைப்பட்டு மனதிற்குள்ளேயே ஆசையைப் புதைத்துவிடுகிறார்கள். சிலர் பகிரங்கமாகவே தப்பு செய்வார்கள். கேட்டால் மனைவி,குழந்தைகளைக் கைவிடாமல்வேண்டியதை செய்கிறேனே என்று நியாயம் பேசுவார்கள் சிலர் ரகசியமாகவே மதினி அல்லது கொளிந்தியாளுடன் தொடர்பு வைத்துக் கொள்வார்கள். சிலர் வேலைக்காரியோடு பழகி காசை விரயமாக்குவார்கள். இவற்றை எல்லாம் ஊழ்வினைப் பயன் என்பதா, சபல புத்தி என்பதா?
மனைவியை மறந்துவிட்டு மற்ற பெண்மீது மையல் கொண்டு திரிகிறவர்களை அந்தப் பெண் வசியம் வைத்துவிட்டாள், மருந்து வைத்து விட்டாள் என்று நம்புவதும், அதை மறப்பதற்காக மனைவி போலி மந்திரவாதிகளை நம்புவதும், தாலியைக் காப்பாற்றிக் கொள்ள தங்கத்தையும் காசு பணத்தையும் கொடுத்து ஏமாறும் அவல நிலையைப் பற்றியும் அடிக்கடி பேப்பரில் படிக்கலாம். வசியம், மருந்து எல்லாம் உண்மையல்ல பொய் சபலமும் ஆசையும்தான் பேய் உரு எடுக்கிறது.
மனிதராய் பார்த்து மனக்கட்டுப்பாடு கொண்டு ஒழுக்கமாக வாழவேண்டும் மனிதன் மதியின் போக்குப்படி செய்யும் செயல்கள்தான் பின்னால் விதி என்ற பெயரில் கிரகங்களின் ரூபத்தில் வந்து பற்றிக் கொண்டு ஆட்டிவைக்கிறது அடுத்த வருடம் விதி நல்லதாக அமைய வேண்டுமானால் மதியை நல்ல வழியில் திருப்பி நடக்க வேண்டும்.
செய்வினை என்பது நீ செய்த வினைதான் மற்றவர்கள் செய்த வினை உன்னை பாதிக்காது செய்தவரைத்தான் சேரும்.
Tamil Astrology
0 Comments