Ticker

6/recent/ticker-posts

இழப்பு எவ்வாறு ஏற்படுகிறது? இழப்பிற்கு கிரகங்கள் எவ்வாறு உதவுகின்றன? R

தமிழ் ஜோதிடம் -ஜோதிட பதில் Tamil Jothidam

பொதுவாக உயிர்காரகம், உயரற்ற காரகம் என்று இரண்டு உண்டு இழப்பு ஏற்படும் காலத்தில் உயிர்காரகத்தை பாதித்தால் உயிரற்றகாரகம் வலுத்து இருக்கும். உயிர்காரகத்திற்கு எப்படி பட்ட இழப்பை கொடுக்கும் கர்ம வினைக்கேற்ப உயிர்காரத்திற்கு வியாதியை கொடுக்கும் அல்லது உயிரை இழக்க செய்யும் அல்லது அதற்கு சமமான அவமானத்தை கொடுக்கும்.

உயிரற்ற காரகம் பணம் பொருள் வாகனம் வீடு போன்ற செல்வங்களை இழக்க செய்யும் உயிர்காரத்திற்கு சமமான இழப்பாகத்தான் இருக்கும். இழப்பு என்றாலே சந்திரன்தான் இங்கே கர்மக்காரகன் தொடர்பு பெறும்போது இழப்பை உறுதிசெய்யும்.

கர்மக்காரகன் மற்றும் சந்திரன்  இணைவு பெறும் காலங்களில் இழப்பை தொடங்கி வைக்கும் அந்த இழப்பு கடுமையானதா இல்லை இயல்பானாத என்பதை உறுதி செய்வது கர்ம வினையால் ஏற்படும் தசைகளே சில சமயம் தன் திசையே தன்னைச்சுடும் சிலசமயம் குடும்ப உறுப்பினர்களின் தசை நமக்கு ஒவ்வாமல் ஆகி பெரிய இழப்பிற்கு வழிவகுக்கும்.

சில இழப்புகள் நம்மை புரட்டி போட்டுவிடும் பழய எந்த சுவடுகளும் இல்லாமல் செய்துவிடும்.

உயிர் இழப்பு எப்போது ஏற்படும்? பொருள் இழப்பு எப்போது ஏற்படும்?  தொடர்ந்து வாருங்கள் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

காணிக்கை.     🦅        (வேதம் 99)

குருவேசரணம் குருவடிசரனம் திருவடிசரனம்

திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி

பெற்றவர்கள் எந்த பிரதிபலனை எதிர்பார்க்கமால் வளர்த்து ஆளாக்கிறார்கள், அதுபோல குரு (ஆசான்) எந்த பிரதிபலனை பார்க்காமல் வித்தைகளை கற்றுக்கொடுக்கிறார்கள் இவர்களுக்கெல்லாம் நாம் மரியாதை செலுத்தவேண்டும், இதற்கு வரம்பு என்று ஒன்று கிடையாது, இப்போது எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது அப்போது குருகுல கல்வி என்பது குருவிற்கு தொண்டு செய்து படிப்பது இதில் தோஷம் வராது, தோஷவராத காணிக்கை பெற்றோர்களுக்கும், ஆசான்களுக்கும் செலுத்தவேண்டும். இதைத்தான் 1, 5,9 ஆம் இடங்களை வைத்து அதில் நாம் செய்யும் பாவ புன்னிய கணக்கை அடக்கி அதற்கு ஏற்றவாறு கிரகங்களை அமைக்கபெற்று வம்சம் பிறப்பு ஏற்படும். எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு உன் வம்சம் தழைக்க பெற்றோர்களையும் ஆசான்களையும் மற்றோர்களையும் மனதார மதிப்போம் காப்போம், உன்னை விதி தின்று கொண்டுவருகிறது, வளர்சிதை மாற்றமாய் உன் தேகம் பொலிவிழந்து சிதைந்து போகின்றது, உலகின் எல்லா அசைவுகளும் கிரகச்சலணங்களால் ஆனது, எல்லா ஆசைகளும் கிரகத்தால் ஆனது, உன் மனம் படும் ஆசைகளுக்கு கிரகங்களே காரணம் நால்லவணாக்கவதும் கெட்டவணாக்குவதும், நம் ஜென்மத்தில் மிஞ்சுவது பாவமும் சாபமும் புண்ணியமும்தான் இவைகள்தான் ஏழுஜென்மமும் பற்றி தொடரும்.

"மாடு வாராது கன்று வாராது
மனைவி வரமாட்டாள் மகன் வரமாட்டான்
தேடிய செல்வம் வாராது
ஆடை ஆபரணம் வாராது
பற்றி தொடரும் இருவினை புண்ணிய பாவவுமே
ஆகையால் நல்லதை செய்யுங்கள்
பாவம் செய்யாதிருங்கள்."

ஒருநாள் கர்ம வினையால் ஆன பின்டம் உன் பொல்லாத ஆசைகளை விட்டு விட்டு நீ சேர்த்த பாவ, சாப, புன்னிய சொத்துக்களோடு உன் கர்மா, வேறு ஜென்மத்திற்கு தயாராகிறது, தேடிய செல்வங்கள் தெரிவில் அனாதையாக்கபடுகிறது, மற்ற கர்மாக்களுக்கு பாவ சாபத்தின் கூலியாகிறது உன் செல்வங்கள், புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் புரியிவில்லை என்றால் வேறுபதிவில் சந்திப்போம்.

மிகப்பெரிய சூட்சமம்   (நாம் சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தை)

கரு உயிரால் உருவாகிறது தாயின் கருவறையில், உயிர் என்றால் லக்கனம் கருவறை ஐந்தாம் இடம். பிறக்கூடிய நேரம் அப்போதே தீர்மானிக்கப்படுகிறது. இந்த கருவிற்கு ஜென்மம் கொடுத்தவர் ஒன்பதாம் இடத்துக்குரியவர். இவர்களை வைத்துதான் மற்ற கிரகங்கள் உன் பிறப்பின் போது தீர்மானிக்கப்பட்டு பிறக்கிறாய். இப்போது புரிகிறதா நாம் சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தை. 1 5 9 க்கிற்கு பிறகுதான் எல்லா இடங்களும்.

புரியும் வரை படியுங்கள். (இதில்தான் மிகப்பெரிய தத்துவம் சூட்சமம் உங்கள்யோகம் சாபம் தோஷம் நோய் மரணம் எல்லாம் அடங்கி உள்ளது)

இந்த பதிவிற்கு பிறகு உங்கள் ஜோதிடத்தை இந்த வழியிலும் ஆராய்ந்து பலன் அடையுங்கள் இது தொடக்கம் மட்டுமான் இன்னும் ஏராலாம் உள்ளது.

பாவக கிரகவலிமை அறிதல்

திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி
பாவக கிரகவலிமை பற்றி ஆராய்ம்போதும் பாவத்தில் நிற்கும் கிரகம், பாவத்தை பார்க்கும் கிரகத்தின் நிலை, பாவதிபதி, பாவதிபதிக்கு வீடு கொடுத்த கிரகம், வீடு கொடுத்த கிரகத்தின் சாரம், பாவதிபதியின் சாரம் பாவத்தில் நிற்கும் கிரகத்தின் சாரம் சுபரா பாபரா, அவர் கேந்திரதிபதியா அல்லது திரிகோணதிபதியா, பாதகாதிபதியா என்று பல்வேறு சூட்சமத்தில சோதித்துப் பார்த்து பலன்கூறவேண்டும்
"பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள்" 
குருவேசரணம் குருவடிசரனம் திருவடிசரனம்
சக்கரவர்த்தி கலியபெருமாள்

எட்டாம் இடத்து கேது-01
(மிதுனம் கன்னி விருச்சிகம்) 
முதலில் தடைகளையும் பிறகு தனலாப யோகங்களையும் தருவார்கள்.
சுபகிரகம் பார்க்காத எட்டாம் இடத்து கேது நோய் நொடி உபத்திரங்களை அளிக்கும் சுபக்கிரகங்களால் பார்க்கப்பட்டால் தெய்வநிலை ஆயுள் பலம் கூடும்.

🦅 சிவாயநம 
எமபயம் 
நீங்க!

அன்னதானம் செய்யுங்கள் 
சிவனுக்கு 
திங்கள்கிழமை 
தோறும்
பால் அபிசேகம் 
செய்து வாருங்கள் 
குருவே சரணம்
சிவன் கோவில்களில் 
ருத்ர ஹோமம் நடந்தால் 
கலந்து கொள்ளுங்கள் 
வசதி இருந்தால் பழமையான சிவன் 
கோவிலில் ஆயுள் ஹோமம் 
செய்து கலச அபிசேகம் செய்து
கொண்டு ஈர துணிகளை தானம் செய்து விடுங்கள். 

Post a Comment

0 Comments