Ticker

6/recent/ticker-posts

ரிசப ராசி -ஆனிமாத பலன்கள்


ஆனி மாத பலன்கள்

ரிசபராசி (கிருத்திகை 2, 3 மற்றும் 4 ஆம் பாதங்கள், ரோகினி நான்கு பாதங்களும் மிருகசீரிடம் 1 மற்றும் 2 ஆம் பாதங்கள் மட்டும்)

ராசியாதிபதி சுக்கிரன் தன் வீட்டில் ஆட்சி பெறுகிறார் அத்துடன் 2 ஐந்திற்குரிய புதன் இணைவு, மூன்றில் சூரியன், 6ல் கேது, 12 ல் ராகு 9 ல் சனி 11ல் குரு ஆட்சி பெற்று செவ்வாய் உடன் இணைவு இதன் பலன்கள் என்னவகும்?

வயதிற்கு ஏற்றார் போல தசை நடந்து கொண்டு இருக்கும் இதில் செவ்வாய் ராகு குரு இந்த மூன்று தசையில் செவ்வாய் கூட சில புத்திகள் கொடுமை படுத்திருக்கும் சிலருக்கு நினைவிருக்கும் சிலருக்கு நினைவு இருக்காது கொஞ்சம் கோட்சாரத்தை பார்த்து விட்டு அடுத்து தசைக்கு வருவோம். ஜென்ம சுக்கிரன் நல்ல சுகத்தை அளிப்பார் இதுவரை பட்ட கஷ்டத்திற்கு வலிக்கு ஒத்தனம் கொடுப்பது போல இருக்கும் ஆனால் 12 ல் உள்ள ராகு ராகுதசை நடப்பவர்களுக்கும் குருதசை நடப்பவர்களுக்கும் கொடுமையிலும் கொடுமைதான்.

உதாரணமாக1971 மற்றும் 1972 ல் பிறந்தவர்களுக்கு நடந்த குருதசை வேறு யாருக்கும் வரக்கூடாது எல்லா சொத்துகளும் கடன் நிறைய வழிகளில் வருமானம் இருந்தும் தொழிலை நடத்த முடியாத படி முட்டுக்கட்டை வந்துகொண்டே இருந்திருக்கும் அப்போது அடித்த சுனாமியிலிருந்து மீள முடியவில்லை கடன் வட்டி நகைகள் அனைத்தும் மீட்க முடியாதபடி மீண்டும் மீண்டும் அடகில் இருக்கிறது, நம்பியவர்கள் எல்லாம் துரோகியாக மாறிவிட்டார்கள் ஊரைவிட்டு யார் ஓடி பிழைப்பு நடத்தினானோ அவன் அத்திவாசிய தேவைகள் பூர்த்தி ஆக இருக்கும் இதில் பணம் வரும், அந்த வகையில் பணம் வரும் என்று நாட்கள் நகர்ந்து மாதங்கள் கடந்து வருடங்களையும் கடந்து வஞ்சிக்கபட்ட குருதசையால் அனைத்தையும் இழந்தும் மீண்டுவராலாம் என்ற நம்பிக்கையில் என் அருமை ரிசப ராசி அன்பர்களே உங்களுக்காக நானும் வேண்டிக்கொள்கிறேன். 

சிலருக்கு வீடு பூமி மனை சொத்து இவற்றில் விள்ளங்கம் ஏற்படும் சிலர் இழக்க நேரிடும் நண்பர்களால் நம்பிக்கை துரோகம் நான் எந்த பாவமும் செய்ய வில்லை எனக்கு இந்த நிலைமையா? இஷ்டம் போல நகைகள் இருந்த வீட்டில், மனைவி மற்ற தேவைக்கு போட்டு செல்ல நகை இல்லை  எல்லாம் முழுகும் நிலை. தற்போது 11ல் உள்ள 6 ல் உள்ள கேது ஒரு சில வழிகளில் நன்மைகள் செய்ய ஆரம்பிக்கும் சிலருக்கு குருதசை முடிந்து சனி தசை சுய புத்தி நடந்தால் எந்த புது முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் சுயபுத்தி முடிந்த பிறகு புதிய முயற்சிகளை தொடரலாம், 9 ல் சனி நல்ல வாய்புகள் எல்லாம் நழுவி செல்லும்.

ஒரு சிலருக்கு யோகமான தசை திரிகோணாதிபதி தசைகள் நடக்கும் அன்பர்களுக்கு வீடு மனை யோகம் சந்ததி கீர்த்தி, ஏற்படும் பணம் பல வழகளில் வந்து சேரும் நோய் நீங்கும்வெளிநாட்டு பயணம் சுற்றுலா செல்லுதல் எதிர் பாரத அதிஷ்டம் உத்தியோக உயர்வு திருமணம் கூடும் புதியவகை பெண்கள் நட்பு கிடைக்கும் உறவு ஏற்படும் சிலருக்கு இரண்டாவது திருமணம் சட்டபடி நடக்கலாம் சிலர் யாருக்கும் தெரியாமலும் இரண்டாவது குடும்பம் நடத்த வரலாம். ராகுதசையில் இஷ்டத்திற்கு ஆட்டம் போட்டால் குருதசை ஒட்ட நருக்கி வத்தல் போட்டு கொடியில் தொங்க போட்டு விடும் சிலருக்கு கண்டங்கள் கூட வரும்.

சித்தர்களை மகான்களை இருகப்பிடித்து கொள்ளுங்கள் இது பொதுபலன்களே உங்கள் சுய ஜாதகத்தை பார்த்தும் குடும்ப உறுப்பிணர்களின் ஜாதகத்தை பார்த்து பலன்களை தெரிந்து கொண்டு வாழ்வில் எல்லா வளங்களும் பெற இறைவணை பிராத்தனை செய்வோம்.

இங்கே கோட்சாரத்தை இவ்வளவு விரிவாக எழுதுவதற்கு காரணம் நான் ராசிபலன் எழுதி புகழ்பெறுவதற்கு அல்ல கோட்சாரம் அடிப்படை கிரக நகர்வுகள் பார்வை பலன்களை தெரியாமல் ஜோதிடம் கற்க இயலாது இந்த ராசிபலன்கள் மூலம் உங்களுக்கு அடிப்படை ஜோதிட அறிவு கிடைத்து விடும் யாரெல்லாம் கிரகத்தை விவரித்து பலன்கள் எழுதிகிறார்களோ ஜோதிட பயிற்சியாளர்கள் ஒரு வருட காலம் திரும்ப திரும்ப ராசிபலன களை படித்து வாருங்கள் இரண்டாவது வருடத்தில் ஜோதிடத்தில் உங்களுக்கு நல்ல அறிவு கிடைத்துவிடும் என்பது உறுதி.

சக்கரவர்த்தி கலியபெருமாள் -ஜோதிட பதில்

You May Also Like

ஜீவசமாதிகள்

Post a Comment

0 Comments