Ticker

6/recent/ticker-posts

மீன ராசி பலன்கள்- ஆனிமாத பலன்கள்


ஆனி மாத பலன்கள்

மீனராசி (பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி நான்கு பாதங்களும் ரேவதி நான்கு பாதங்கள் முடிய )

மீன ராசி அன்பர்களே!

தற்போதைய கிரக நிலைகள பார்ப்போம் ராசியில் குரு ஆட்சி அத்துடன் செவ்வாய், ராசிக்கு இரண்டில் ராகு எட்டில் கேது மூன்றில் புதன் சுக்கிரன், நான்கில் சூரியன் ராசிக்கு பதினொன்றில் சனி ஆட்சி விராயதிபதி சனிபதினொன்றில் ஆட்சிபெறுகிறார்.

ராசியில் குரு செவ்வாய் இணைவது என்பது ஒன்பது (தர்மாதிபதி ) பத்தாம் அதிபதி   (கர்மாதிபதி) இணைவை தர்மகர்மாதிபதி யோகம் என்று ஜோதிடம் கூறுகிறது. மிக சிறப்பு, சக்தி வாய்ந்த யோகம். பொதுவாக எல்லா ஜாதகங்களும் யோகமாக பிறப்பது கிடையாது சில ஜாதகத்தில் ஒரு சில நல்ல யோகங்களுடன் பிறப்பு ஏற்படும் சில ஜாதகத்தில்  யோகங்கள் இல்லாமல் பிறப்பு ஏற்படும். யோகங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கோட்சார யோகங்கள் உங்களை வாழ வைக்கும்.

நமக்கு நடக்கும் பலன்கள் அனைத்தும் யோகங்களால்தான் நடக்கிறது அவைகள் சுப பலன்களாக இருக்கும் அல்லது அசுப பலன்களாக இருக்கும், யோகங்கள் என்றாலே கிரக இணைவுகள், கிரகங்கள் இணையும்போது மட்டுமே பலன்கள் நடக்கும் அவைகள் கோட்சார இணைவுகளாக இருக்கலாம் அல்லது தசா இணைவுகளாக இருக்கலாம் அல்லது குடும்ப நபர்களின் ஜாதக இணைவுகளாக இருக்கலாம். இதைபற்றி விரிவாக பார்க்கலாம் நான் எழுதும் ஜோதிட பதிவுகள் எல்லாம் அடிப்படை பயிலும் மாணவர்களுக்காக, தொடர்ந்து பதிவுகளை படித்து வாருங்கள் கண்டிப்பாக தெளிவு பெறுவீர்கள்.

தர்மகர்மாதிபதி யோகம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மாதிரி அதற்கு எந்த அப்பீலும் இல்லை எத்தனை பேர் எதிர்த்தாலும் முதிகில் குத்தினாலும் இந்த யோகம் உங்களை பாதுகாக்கும் கீழே தள்ளிவிட்டாலும் துள்ளி குதித்து எழுந்து ஓடுவீர்கள், பொதுவாக அனைத்து யோகங்களும் வேலை செய்ய காரணம் இருக்கும் உதரணாமக நீசபங்க ராஜயோகம் என்பது ஒன்று நீசம் பெற்ற பிறகு கிடைக்க கூடிய யோகம் அதுபோல பிருகு மங்களயோகம் என்பது கணவன் மனைவி வந்த பிறகு நடக்ககூடிய யோகம் அதுபோலத்தான் தர்ம கர்மாதிபதி யோகம் இந்த யோகம் நடக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். எந்தயோகம் நடக்க வேண்டும் என்றாலும் அதற்கு ஏற்ற காலம் வரவேண்டும் அதுவரை காத்திருக்கவேண்டும். காய் கனியும் வரை காத்திருந்தால் பழத்தை சாப்பிட முடியும்.

இரண்டில் ராகு எட்டில் கேது கடுமையான பலன்களை தரும் இருந்தாலும் கேதுவிற்கு வீடுகொடுத்தவர் மூன்றில் ஆட்சி பெறுகிறார் அதோடு ராகுவிற்கு வீடுகொடுத்தவர் ஆட்சி பெற்ற குருவுடன் இணைவு தீராத சங்கடமும் இனம்புரியாத பயம் இருந்தாலும் பொருள்கள் எதிர்பாரத நஷ்டம் ஆனாலும் மனதைரியத்துடன் இருப்பார்கள், சிந்தனை தெளிவின்றி இருப்பார்கள், கேட்ட சூழ்ச்சிகளால் அவமாணங்களை உண்டாக்கும் நோய்கள் ஏற்பட்டு விளகும், இந்த நேரத்தில் சேர்த்து வைத்த சொத்துகள் கரையும்.
 
11 ல் சனி நல்ல யோகத்தை தரும் துரோகிகள் தான விளகி நல்லவர்கள் நட்பு பெறுகும் நீங்கள் யாரை விரோதி என்று பார்த்தீர்களோ அவர்கள் எல்லாம் வந்து உதவ வருவார்கள் ஐந்தாம் இடத்தையும் வெற்றி ஸ்தானம் 11 ஆம் இடத்தை சனி பார்பதால் ஞாயமான வெற்றிகள் உங்கள் பக்கம்தான், வீன் வம்ச வழக்குகள் கோர்ட்டில் இருந்தால் வெற்றி உங்கள் பக்கம்தான்.

12 ஆம் இடத்து ராசி மீன ராசி சிறப்பு பெற்றது ஆனால் அதன் ரகசியம் தெரியாமல் பலர் தங்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்கிறார்கள் இந்த ராசி கடைசி ராசி பல துரோகங்களை தூண்டி விட்டு உங்கள் பிறப்பை கெடுத்துவிடும்.

அறந்தாங்கி அருகில் புதுக்கோட்டை ரோட்டில் அழியநிலை என்ற ஊரில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது அங்கு சென்று சிறப்பு பூஜை செய்யலாம்.

சித்தர்களை மகான்களை இருகப்பிடித்து கொள்ளுங்கள் இது பொதுபலன்களே உங்கள் சுய ஜாதகத்தை பார்த்தும் குடும்ப உறுப்பிணர்களின் ஜாதகத்தை பார்த்து பலன்களை தெரிந்து கொண்டு வாழ்வில் எல்லா வளங்களும் பெற இறைவணை பிராத்தனை செய்வோம்.

இங்கே கோட்சாரத்தை இவ்வளவு விரிவாக எழுதுவதற்கு காரணம் நான் ராசிபலன் எழுதி புகழ்பெறுவதற்கு அல்ல கோட்சாரம் அடிப்படை கிரக நகர்வுகள் பார்வை பலன்களை தெரியாமல் ஜோதிடம் கற்க இயலாது இந்த ராசிபலன்கள் மூலம் உங்களுக்கு அடிப்படை ஜோதிட அறிவு கிடைத்து விடும் யாரெல்லாம் கிரகத்தை விவரித்து பலன்கள் எழுதிகிறார்களோ ஜோதிட பயிற்சியாளர்கள் ஒரு வருட காலம் திரும்ப திரும்ப ராசிபலன களை படித்து வாருங்கள் இரண்டாவது வருடத்தில் ஜோதிடத்தில் உங்களுக்கு நல்ல அறிவு கிடைத்துவிடும் என்பது உறுதி.

சக்கரவர்த்தி கலியபெருமாள் -ஜோதிட பதில்

You May Also Like 

Post a Comment

0 Comments