மாணவர்களை எப்படி பாதுகாப்பது?
25 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு முதல் சுற்று ஏழரைச்சனி -மங்குசனி, 30 வயதுக்குமேல் இருப்பவர்களுக்கு இது இரண்டாவது சுற்று ஏழரைச்சனி - பொங்குச்சனி, 60 வயதைக்கடந்தவர்களு்க்கு மூன்றாவது சுற்று ஏழரைச்சனி - மரணச்சனி.
மங்குசனி காலம் 17 வதை அனுசரித்து 21 வயதுக்குள்ஆனவர்களுக்கு இந்த காலம் படிப்பை பாதிக்கலாம், அதனால் மாணவ மாணவிகளை பெற்றோர்களை விட்டு பிரிந்து வெளியிடத்தில் அல்லது ஹாஸ்டலில் தங்க வைக்கவேண்டும். உள்ளூரில் குடும்பத்தில் இணைந்து இருந்து படித்தால் படிப்பில் தடை ஏற்படலாம் அல்லது பெற்றோர்களுக்கு சங்கடங்கள் வரலாம். அல்லது பிள்ளைகளுக்கு சகவாச தோஷத்தால் பிரச்சனைகள் உருவாகலாம்.
ஏழரைச்சனி காலத்தில் படிப்பில் கவனக்குறைவு தேர்வில் மதிப்பெண்கள் குறைவு தேர்வு சமயத்தில் உடல் நலம் குன்றி போதல் விணாக்களுக்கு விடைகள் தெரிந்தும் தவறாக எழுதிவிடுதல் போதிய நேரம் இல்லாமல் போதல் இப்படி அனுகூலமற்ற பலாபலன்களைச் சந்திக்க நேரும்.
அதுபோல ராகுதசை சனி தசை நடந்தால் கேட்கவே வேண்டாம் படிப்பில் கவனம் இல்லாமல் போகி ஒழுக்க கேட்டால் கல்வி தடைபடும், பிட் அடித்து மாட்டிக்கொள்வார்கள்,சுக்கிர தசை சனிபுத்தி நடக்கும் காலத்திலும் கல்விதடை உண்டாகும்.
புதனுக்கு திரகோணங்களில் செவ்வாய் இருப்பது புதனை செவ்வாய் தன் பார்வையால் பார்பது புதனுக்கு திரகோணங்களில் கேது இருந்தால் கண்டிப்பாக கல்வி தடைபட்டுதான் பயில ஆரம்பிப்பார்கள், அதற்கு தகுந்தார்போல மாணவர்களை தயார் செய்து கொள்ளுங்கள்.
கடலூர் அருகில் திருவந்திபுரம் சென்று ஶ்ரீ ஹயக்ரீவரையும், மயிலாடுதுறை பக்கம் பூந்தோட்டம் அருகில் கூத்தனூர் சென்று சரசுவதியையும் தரிசனம் செய்து பூஜை செய்யலாம் சரசுவதிக்கு என்று தனிக்கோவில் கூத்தனூரில் மட்டுமே உள்ளது. ஒட்டக்கூத்தர் வழிபட்ட கோவில்.
விடாமுயற்சி பயிற்சி நம்பிக்கை ஆசான்கள் குருக்கள் ஆசிரியர்கள்அறிவரை ஆசர்வாதங்களுடன் நல்ல அறிவசார்ந்த உடன் படிக்கும் நட்புகள் படிக்காதவனை அறிவாளியாக்கு சமூகத்தில் வெற்றி பெற செய்யும்.
🦅 கல்வி -Tamil Astrology
தந்து விடாது
காலம் கனிந்து வரவேண்டும்
ஜோதிடம் என்பது விதியை மாற்றும் அற்புதம் அல்ல கர்ம வினை வழிகாட்டி ஒரு சில உதாரணங்கள்
என் மகன் என்ன படிப்பான்?
இது அவன் 5 அல்லது 6 வகுப்பு படிக்கும் போது கேள்வி எழலாம் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11 ஆம் வகுப்பு சேரும் போது கேட்கலாம்.
என் மகன் பாஸ் செய்வானா? நல்ல மதிப்பெண் பெறுவானா? நுழைவு தேர்வில்தேர்ச்சி பெற்று மேல் படிப்பிற்கு தகுதி பெறுவானா?
இது 12 ஆம் வகுப்பு தேர்வுக்கு பிறகு எழக்கூடிய கேள்விகள்.
இந்த கேள்விகள் பாதுகாப்பதற்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர் கொள்ள அல்லது நாம் எவ்வாறு தயார் ஆகலாம். எப்படி பட்ட முயற்சிகள் எடுக்கவேண்டும் என்பதை அறிந்து செயல்பட நாம் ஜோதிடம் பார்க்கிறோம். இதன் பொருள் அப்படித்தானே.
இரண்டு ஜோதிடர்களை பார்த்து விட்டு ஒரு ஜோதிடர் தம்பி பரிட்சையில் தேர்ச்சி பெற்று நுழைவுத்தேரவிலும் வெற்றி பெருவான் என்று ஒருவர் சாதகமாகவும் மற்றவர் பாதகமாக கூறினால் எவ்வாறு நம்புவது? இப்படி பட்ட முடிவு எடுக்க நெருக்கத்தில் ஜாதகம் பார்த்தால் போதுமா? இதை எவ்வாறு அனுக வேண்டும்.
பொதுவாக அந்த நேரத்தில் நடக்க இருக்கும் மற்றும் தசா புத்திகளை மிக தெளிவாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் வித்தைகாரகனுக்கு 1 5 9 3 7 11 ராகு கேதுக்கள் பகை கிரகங்களின் சேர்க்கை ஏழரை அட்டம சனி காலங்கள் மற்றும் ராகு தசைகள் முக்கியமாக ஒவ்வாத தசை நடப்பில் இருந்தால் கல்வி தடை தடங்கல்கள் ஏற்படும்.
அப்படி அந்த கால கட்டத்தை கணித்தால் நாம் அதை எதிர்கொள்ள தாயாராக இருக்கலாம் அல்லவா! ஒருவன் கிரக அமைப்பு நடப்பு கோட்சாரம் நல்லதை செய்யும் மற்றவர்களுக்கு கெடுதலை செய்யும்!
ராகு தசை நடக்கும்போது ஒரு சில மாணவர்கள் குடும்ப தசா சந்தியில இழப்பை சந்திக்ககூடும் அதே ராகு தசை மெடிக்கல் சீட் வாங்கி கொடுத்து டாக்டர் ஆக்கிவிடும்.
இதை தெரிந்து கொண்டு சில மாற்றங்கள் செய்தால் ராகு தசையில் ஜெயிக்கலாம்!✍
சக்கரவரத்தி கலியபெருமாள -ஜோதிட பதில்
0 Comments