Ticker

6/recent/ticker-posts

கன்னி ராசிபலன்கள்- ஆனி மாத பலன்கள்


ஆனி மாத பலன்கள் - Tamil Astrology

கன்னிராசி (உத்திரம்2, 3 மற்றும் 4 ஆம் பாதங்கள், ஹஸ்தம் நான்கு பாதங்களும் சித்திரை 1 , மற்றும் 2, ஆம் பாதங்கள் மட்டும்)

கன்னிராசி அன்பர்களே!

முதலில் கோட்சார கிரக நிலைகளை பார்க்கலாம் ராசிக்கு ஏழில் குரு செவ்வாய் இருவரும் ராசியை பார்க்கிறார்கள் ராசியதிபதி ஒன்பதில், ஐந்தில் ஐந்தாம் அதிபதி ஆறுக்குறியவர் ஆட்சி பெறுகிறார், இரண்டில் கேது எட்டில் ராகு பத்தில் சூரியன்

கிரகங்கள் எப்படி வேலை செய்கிறது அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம், வெறுமனே பலன்களை மட்டும் எழுதிவிடலாம் ஆனால் ஜோதிடம் பயிற்சி செய்பவர்களுக்கு புரியாத புதிர் போல இருக்கும் சில அறிவு ஜீவன்கள்இதை வேறு விதமாக பார்க்க கூடும் எனக்கு அதபற்றி எல்லாம் கவலை இல்லை. 

முதலில் எந்த ஒரு ஸ்தானம் இயங்கவேண்டும் என்றால் அந்த ஸ்தனத்தை தூண்ட வேறு ஒரு கிரகம் வேண்டும் அது கோட்சாரம் அல்லது தசா இணவை அல்லது அந்த செயலுக்கு சம்பந்தம் படக்கூடிய நபர்களின் ஜாதகத்தின் கிரகம் நிலையை பார்க்க வேண்டும். இதை பார்க்காமல் கிரகங்கள் இயங்காது அது சுப அசுப பலன்களாக இருக்கலாம். இவைகளை தவிர்த்து விட்டு பலன் சொன்னால் பலன்கள் மாறிவிடும். அதானால்தான் நான் அடிக்கடி எழுதுவேன் உங்கள் ஜாதகத்துடன் குடும்ப நபர்களின் ஜாதங்களை சேர்த்து பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். இதை ஒரு சிலர் எனக்கு பலன் கூற என் ஜாதகமே போதும் ஏன் என் குடும்ப நபர்களின் ஜாதகம் என்று கிண்டல் செய்தது உண்டு அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

அதுபோல ஒரு ஸ்தானம் வெற்றி பெற 11 ஆம் இடத்தில் ஏதாவது ஒரு கிரகம் இருக்க வேண்டும், இருந்து இயக்கவேண்டும் அப்படி 11 ல் கிரகம் இல்லை என்றால் அந்த ஸ்தானம் அந்த ஜாதகம் வெற்றி பெறாது தோல்வியில் தான் முடியும். 

அதபோல ஒரு காரியம் அனுகூல பலன் நடக்க வெற்றி பெற பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானங்கள் வலுவான நிலையில் இருக்க வேண்டும் சுய ஜாதகத்தில் அந்த நிலை இல்லை என்றால் காரிய நடக்கும் காலத்தில் ஜெயம் பெற கோட்சாரத்தில் 5 9 இடங்களில் சுப கிரகங்கள் இருக்கவேண்டும் பாவ கிரகங்கள் இருக்க கூடாது, ஒரு காரிய அனுகூல பலன் நடக்க ஒன்று உன் ஜென்ம புண்ணியங்கள் இருக்கவேண்டும் அல்லது நீ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ஐந்தில் சனி இருப்பது நற் பலன்களை கொடுக்காது, 5 ஆம் இடம் என்பது எண்ணம், திட்டம், மகிழ்ச்சி, பிள்ளைகள், தாய்மான், பாட்டனார், புண்ணியஸ்தானம் ஆகும். இந்த இடத்தில் சனி இருப்பது நினைத்த எண்ணங்கள் போட்ட திட்டங்கள் ஈடேராது குறிப்பாக முக்கியமான திட்டங்கள் நிறைவேறாது கர்ம கிரகம் சனி ஐந்தில் அழிக்கத்தான் நினைக்கும், அவபெயர் உண்டாகும் சேரத்த பணம் கரையும். மனது நிம்மதி அடையாது. 

8 ல் ராகு விருப்பமற்ற இடமாற்றம் நிகழும் வம்பு வழக்கு கோர்ட் கேஸ்களில் பிறர் சூழ்ச்சியால் தோல்வி அடைவீர்கள் சில புலப்படாத நோய் காரியத்தடை உண்டாகும், நகை களவு போகலாம் சிலருக்கு அம்மை நோய் உண்டாகும்.

நீங்கள் புண்ணியம் செய்து இருந்தால் 7 ஆம்இடத்து குரு மிகுந்த நற்பலன்களை அள்ளித்தரும், அனைத்துவித சுக போகங்களை அள்ளிதருவார் சிலருக்கு குழந்தை பிறப்பு ஏற்படும், உயர்ரக ஆடை ஆபரணங்கள் கிடைக்கும், கல்வியில் தேர்ச்சி பெறுவார்கள் நல்ல வாகன சுகம் கிடைக்கும் சிலர் புதிய வாகனங்களை வாங்குவார் சிலர் பழயவாகனம் சேதாரமின்றஇ கிடைக்கும். எனவே குரு நல்ல பலன்களே செய்வார் ஆனால் உங்கள் துரோகங்கள்  பாவங்கள்  செய்யாமல் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.

ஒன்பதில் புதன் சுக்கிரன் பெரும் செல்வந்தர் தொடர்பு ஏற்படும் திருமணம் கைகூடும், வெளிநாட்டிற்கு முயற்சி செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் நடக்கும் கல்வியில் தேர்ச்சி பெற்று வெற்றி பெறுவார்கள் நண்பர்கள் எல்லாம் விரும்பி உதவுவார்கள் திருமணம் ஆகாத சிலருக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் அமையும்.

புதன் மிகுந்த சோர்வைதருவார் புத்தி சாதுர்யம் குறைந்து போகும் காரியத்தடை, பழிச்சொல் பெரும்பழி ஏற்படும் பயன்தராத முயற்சிகளில் செய்லபட தூண்டும், உழைப்பு அதிகமாகும் வீன் அலைச்சல் உதவிகளை பெற்றுக்கொண்டு துரோகம் செய்துவிடுவார்கள்.

முன்னோர்கள் சாப தோசம் நீங்க தஞ்சை ஒரத்தநாடு அருகே பரிதியப்பர் கோவில் சென்று பாஸ்கரேஸ்வரை வழிப்ட்டுவரலாம். பிதுர்தோசம் உள்ளவர்கள் அமாவசை அன்று மயிலாடுதுறை அருகே பூந்தோட்டம் அருகே திலதர்பணபுரி சென்று சாபதோச பரிகாரமும் தர்பணமும் செய்து வரலாம்.

சித்தர்களை மகான்களை இருகப்பிடித்து கொள்ளுங்கள் இது பொதுபலன்களே உங்கள் சுய ஜாதகத்தை பார்த்தும் குடும்ப உறுப்பிணர்களின் ஜாதகத்தை பார்த்து பலன்களை தெரிந்து கொண்டு வாழ்வில் எல்லா வளங்களும் பெற இறைவணை பிராத்தனை செய்வோம்.

 சக்கரவர்த்தி கலியபெருமாள் -ஜோதிட பதில்

Post a Comment

0 Comments