ஆனி மாத பலன்கள் -ஜோதிட பதில் - Tamil Astrology
விருச்சிக ராசி (கேட்டை நான்கு பாதங்களும், அனுசம் நான்கு பாதங்களும் விசாகம, 1 ஆம் பாதம் மட்டும்)
ராசியாதிபதி ஐந்தில் ஆட்சி பெற்ற குருவுடன் இருக்கிறார் சனி மூன்றில் ஆட்சி ராகு ஆறில் ஏழில் புதன் சுக்கிரன் எட்டில் சூரியன் 12 ல் கேது
விருச்சிக ராசி 8 ஆம். இடத்து ராசி மர்மமான ராசி ஒரு வசீகர பவர் உண்டு சென்ற இடமெல்லாம் இவருடைய பேச்சுக்கு மதிப்பு உண்டு பல ரகிசயங்களை பிரபஞ்சம் இவருக்கு கொடுக்கும், பலர் பாதுகாக்கபட்ட பகுதியில் பணியில் இருப்பார்கள், சாதரான வேலையாக இருந்தாலும், அரசாங்கம் அரசாங்கத்திற்கு இணையான பாதுகாப்பான பல மக்களை சந்திக்க கூடிய இடத்தில் பணி அமையும். பொதுமக்களிடம் தொடர்பு உள்ள பணிகளில் அதிகமாக காணப்டுவார்கள். இவர்களிடம் ஒரு secret அதாவது ஒரு சூட்சமத்தை தங்கள் கையில் வைதிருப்பார்கள்.
நல்லதை எழுதி கெட்டதை எழுதலாமா? கெட்டதை எழுதாலாம? நான் எழுதுவது பொது பலன்கள் இந்த பலன்கள் இந்தராசியில் பிறந்த அனைவருக்கும் பொது பலன்களே அரசனாக இருந்தாலும் ஆன்டியாக இருந்தலும் சாமனியர்களாக இருந்தாலும் அந்த பலன்கள்தான் இது அவருக்கு எழுதிவிட்டார் எனக்கு எழுதிவிட்டார் எனக்கு நடக்கவில்லை என்று குறை கூறவேண்டாம் பதிவுகளில் உள்ள கிரக பலன்களை நுணுக்கங்களை ஜோதிட மாணவர்கள் கற்றுத்தெளிவதற்கே இந்த ராசிக்காரர்கள்தான் இதை படிக்கவேண்டும் என்பது தவறு ஜோதிட மாணவர்கள் ஆர்வளர்களர்கள் அனைவரும் பலமுறை படித்து புரிந்து கொள்ளுங்கள்.
சரி பலனுக்கு வருவோம் ராசியாதி பதி செவ்வாய் ஆட்சி பெற்ற குருவுடன் சேர்ந்து ஐந்தில் இருக்கறது இது குரு மங்களயோகம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது இதை எவ்வாறு எடுத்து கொள்ளவேண்டும் இந்த இணைவு செவ்வாய் குருவுடன் இருக்கும் வரை 12 ராசிகளுக்கும் பொருந்தும், நான் அடிக்கடி எழுதுவேன் ஒரு ராசிக்கு யோகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தற்காலிக கோட்சார யோகம் உங்களை வாழ வைக்கும்.
ராசியதிபதியோ லக்கனாதிபதியோ எந்த இடத்திற்கு வந்தாலும் பார்த்தாலும் கேடு கெடுதிகள் செய்யாது அந்த வகையில் செவ்வாய் ஐந்தாம் இடத்து வருகை கெடுபலனே இருந்தாலும் விதிவிளக்கு உண்டு. சின்ன விசயங்களுக்கு அதிகமான கோபம் பொத்துக்கொண்டு வரும் கேட்ட சவாகச தொடர்பு ஏற்படும், பகைவர்கள் அதிகாமாகுவார்கள் உறவினர்களுடன் சன்டை உண்டாகும் பெயர் கெடும் சேர்த்து வைத்த தனம் பணம் நாசம் ஏற்படும். இது மாதபலன்களே!
இரண்டுக்கும் ஐந்துக்கும் உடையவர் ஐந்தில் ஆட்சி பெறுவது நல்ல யோகத்தை உண்டாக்கி தரும், இந்த பலன் குரு மீனத்தில் இருக்கும் வரை, பல வகையான சுகங்களை அனுபவிப்பார்கள் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் முக்கியஸ்தர்களின் செல்வந்தர்களின் சிநேகிதம் கிடைக்கும், நீண்டகால திட்டத்திற்கு வேண்டிய அடிப்படை திட்டங்களை செய்து வைப்பார்கள் புனித காரியங்கள் புனித யாத்திரை செல்வா்கள் சிலருக்கு அரசாங்க உத்யோகம் கிடைக்கும். பொண் பொருள் ஆபரண சேர்க்கை ஏற்படும் அடகில் நகை இருந்தால் மீட்பார்கள். கௌரவம் மதிப்பு மரியாதை அந்தஸ்து பதவி எல்லாம் கிடைக்கும் ஒரு சிலருக்கு திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும் பிரிந்து வாழ்ந்தவர்கள் சேர்ந்து வாழ அவர் செய்யும் காலம் இரண்டாவது திருமணத்திற்கு காத்திரப்பவர்களுக்கு இரண்டாவது திருமணம் அமையும் திருமணம் ஆகாத கள்ள உறவுகள் தொடரும், சிலர் திருமணம் ஆகாமலே குடும்பம் நடத்தி வாழ்ந்து வருவார்கள்.
சிலுருக்கு வேற்று மொழி பேசும் பெண்களின் சிநேகிதம் ஏற்பட்டு அதனால் வழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும், சிலர் அவர்களை முன்னிலை படுத்தி தங்களுடைய செயல்களை வர்கள் மூலம் நிறைவேற்றி கொள்வார்கள், சத்ரு நாசம் ஏற்படும் சிலருக்கு பிறர் தனம் இவர் கையில் புரலும். சிலருக்கு வெளிநாடு சென்று கல்வி கற்க வாய்ப்புகள் கிடைக்கும் வெளிநாட்டில் படித்துகொண்டு இருப்பவர்களுக்கு பகுதி நேர வேலை கிடைக்கும்.
கேது 12 ல் சுக்கிரன் வீட்டில் இருப்பதால் சேர்த்த தனம் நாசம் ஆகிவிடும் பரதேசம் போவார்கள் ஆன்மீக பாதை முன்னேற்றம் தரும் சிலர் சாது சித்தர்களை சந்தித்து ஆசிர்வாதாம் பெற்றுக்கொள்வார்கள், தோற்றத்தில் பொலிவு குறையும் ஏதோ ஒன்றை பரிகொடுத்தார்போல தாடி வீசை வைத்து ஆன்டி கோலத்தில் அலைய நேரிடும் காவி உடுத்தி கொள்ள ஆசைகள் உண்டாகும் புத்தி சஞ்சலபடும் உறவினருடன் பகை ஏற்படும் ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணம் ஏற்படும் கண்களில் குறை ஏற்பட்டு நிவர்த்தி அடையும்.
உங்கள் யோகங்கள் குடும்ப நபர்களின் ஜாதகத்தால் பங்கம் ஏற்படாலம் சிலருக்கு யோகங்களாக பலன் தரலாம் அவர்அவர்களின் கர்மவினைகள் பொருத்தே!
சித்தர்களை மகான்களை இருகப்பிடித்து கொள்ளுங்கள் இது பொதுபலன்களே உங்கள் சுய ஜாதகத்தை பார்த்தும் குடும்ப உறுப்பிணர்களின் ஜாதகத்தை பார்த்து பலன்களை தெரிந்து கொண்டு வாழ்வில் எல்லா வளங்களும் பெற இறைவணை பிராத்தனை செய்வோம்.
இங்கே கோட்சாரத்தை இவ்வளவு விரிவாக எழுதுவதற்கு காரணம் நான் ராசிபலன் எழுதி புகழ்பெறுவதற்கு அல்ல கோட்சாரம் அடிப்படை கிரக நகர்வுகள் பார்வை பலன்களை தெரியாமல் ஜோதிடம் கற்க இயலாது இந்த ராசிபலன்கள் மூலம் உங்களுக்கு அடிப்படை ஜோதிட அறிவு கிடைத்து விடும் யாரெல்லாம் கிரகத்தை விவரித்து பலன்கள் எழுதிகிறார்களோ ஜோதிட பயிற்சியாளர்கள் ஒரு வருட காலம் திரும்ப திரும்ப ராசிபலன களை படித்து வாருங்கள் இரண்டாவது வருடத்தில் ஜோதிடத்தில் உங்களுக்கு நல்ல அறிவு கிடைத்துவிடும் என்பது உறுதி.
சக்கரவர்த்தி கலியபெருமாள் -ஜோதிட பதில்
Jothida Pathil
ஜீவசமாதிகள்
0 Comments