1) எந்த கிரகம் நமக்கு கர்ம வினைகளை தருகிறது?
அனைத்து கிரகங்களும் நம் கர்ம வினை பலன்களை அனுபவிக்க உதவுவார்கள் நமக்கு கிடைக்க கூடிய நற்பலன்களை குறுக்கே நின்று தடுக்க கூடிய ஒரே கிரகம் கேது மட்டும்தான்.
2) சனி தசையில் திருமணம் செய்யலாமா?
எந்த தசை நடந்தாலும் திருமணம் செய்து கொள்ளலாம் முதலில் இருவருக்கும் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை ஆராய்ந்து தேர்வு செய்யவேண்டும் சில ஒவ்வாத தசைகள் கோட்சாரங்கள் மிகுந்த பிரச்சனைகளை தரும் ஏழரைச்சனி ராகுதசை சந்திர தசை நடக்கும் ஜாதகங்களை இணைக்கும்போது மிகுந்த கவனுத்துடன் இணைக்கவேண்டும்.
அனைத்து கிரகங்களும் நம் கர்ம வினை பலன்களை அனுபவிக்க உதவுவார்கள் நமக்கு கிடைக்க கூடிய நற்பலன்களை குறுக்கே நின்று தடுக்க கூடிய ஒரே கிரகம் கேது மட்டும்தான்.
2) சனி தசையில் திருமணம் செய்யலாமா?
எந்த தசை நடந்தாலும் திருமணம் செய்து கொள்ளலாம் முதலில் இருவருக்கும் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை ஆராய்ந்து தேர்வு செய்யவேண்டும் சில ஒவ்வாத தசைகள் கோட்சாரங்கள் மிகுந்த பிரச்சனைகளை தரும் ஏழரைச்சனி ராகுதசை சந்திர தசை நடக்கும் ஜாதகங்களை இணைக்கும்போது மிகுந்த கவனுத்துடன் இணைக்கவேண்டும்.
3) ஜோதிடத்தில் கிரகங்களை எத்தனை வகைகளாக பிரிக்கலாம் அவை யாவை?
1-ஒளி கிரகங்கள் - சூரியன் மற்றும் சந்திரன்
2-பஞ்ச பூத கிரகங்கள் - செவ்வாய், புதன், குரு ,சுக்கிரன், சனி
3-நிழல் கிரகங்கள் - ராகு மற்றும் கேது
2-பஞ்ச பூத கிரகங்கள் - செவ்வாய், புதன், குரு ,சுக்கிரன், சனி
3-நிழல் கிரகங்கள் - ராகு மற்றும் கேது
4) சனி கேது சேர்க்கை உள்ள ஜாதகர் யாரை வழிபட மாற்றம் ஏற்படும்?
சனி கேது , குரு கேது, சனி ராகு, குரு ராகு, செவ்வாய் ராகு, குரு பாதிக்கபட்டு இருந்தாலோ சித்தர்கள் ஞானிகள் மகான்களை வழிபட்டு வர வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்.
கேது - தலை முடி, தடை, கதவு, மாடிபடி, கழிவறை
கேது மோட்ச காரகன், எந்த பற்றும் இல்லாமல் மோட்சத்தை நல்க கூடிய கிரகமாக கேது ஆகும்.
5) ஜாதகத்தில் எந்த கிரகம் பலன்களை யோகங்களை தடை செய்யக்கூடியது?
கேதுவே அனைத்துக் கிரகங்களிலும் பலமானவர். எனவே கேது எந்த கிரகத்துடன் இணைந்தாலும் அந்த கிரகத்தின் பலனை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தடைகளை செய்யும் அமைப்பு உண்டு.. எனவே கேது கிரகங்களின் காரகத்துவத்தை தருவதில் தடைகளை உண்டு செய்யும் . உறவு என்றால் மனதளவில் பிரிவுகளை ஏற்படுத்தும்.
சுய ஜாதகத்தில் காரக கிரகங்களுடன் கேது சேர்க்கை இருந்தாலும் , அல்லது கோச்சார காலத்தில் பிறப்பு ஜாதக கிரகங்கள் மீது கோட்சார கேது சேர்க்கை ஏற்படும்போது தடைகளை ஏறபடுத்தும்.
6) கிரகங்களும் அதன் காரகங்களும்
சூரியன் - அப்பா, மகன், ஊதியம்
சந்திரன்- அன்னை, மனம் , உடல் ஆரோக்கியம்
செவ்வாய் - கணவர், இளைய சகோதரம், தோட்டம், வயல், நிலம் , ரத்த அணுக்கள், கரடுமுரடான கற்கள்
புதன் -தாய்மாமன், கல்வி, தோல், தொண்டை
குரு- ஜாதகர்,தனம், கோவில், போதகர், குருமார்கள்
சுக்கிரன்- ஜாதகி ,பணம் , வீடு, ஆடை ஆபரண சேர்க்கை
சனி - மூத்த சகோதரன், பெரியோர்கள், வேலை , செய் தொழில்.
10) ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் ஜாதகம் அதே குடும்பத்தில் உள்ள வேறு ஒருவரை பாதிப்பு ஏற்படுத்துமா?
ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் ஜாதகம் அதே குடும்பத்தில் உள்ள வேறு ஒருவரை தசைகள கோட்சாரங்களை பொறுத்து பாதிப்பை ஏற்படுத்தும்/ யோகங்களை செய்யும். எனவே திருமண பொருத்தம் பார்க்கும்போது கண்டிப்பாக இதை பார்த்துதான் இணைக்கவேண்டும்.
11) பரிவர்த்தனை யோகம் என்றால் என்ன?
இரண்டு கிரகங்கள் ஒருவர் வீட்டில் மற்றொருவர் மாறி நிற்பதால் ஏற்படும் பலன்களை பரிவர்த்தனை யோகம் என்கிறோம்.
12) சகோதரர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாத ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கும்?
செவ்வாய்க்கு கேது அல்லது புதன் இணைவு சேர்க்கை பார்வை ஏற்படும்போது சகோதர்கள் இடையே ஒற்றுமை இருக்காது சன்டை சச்ரவுகள் ஏற்படும், சகோதர்ர்களுக்கு இடையே கல்வியில் தடை ஏற்படும்.
13) குழந்தை ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தால் தாய்மாமனக்கு ஆகாது என்பது உண்மையா?
பொதுவாக சுய ஜாதகத்தை வைத்தே பலன்களை நிர்ணயம் செய்ய வேண்டும், ஆனால் பல ஜாதகங்களை ஒப்பீட்டு பார்க்கும்போது, சிலருக்கு தாய்மாமன் இருப்பது இல்லை, பல தாய்மான்கள் வறுமையில் இருக்கிறர்கள், நல்ல வசதியாக இருந்தால் ஆயுள் பலம் குறைகிறது.
12) கடன் தொல்லை எப்போது அதிகம் ஆகும்?
ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ராசிக்கும் கேது இருக்கும் ராசிக்கும் கோட்சார சனி வரும் காலம் கடன் தொல்லை அதிகம் ஆகும்.
13) கணவன் மனைவி அன்யோன்யமாக இருக்க கூடிய ஜாதக அமைப்பு எது?
கணவன் ஜாதகத்தில் குரு சுக்கிரனோடு சேர்ந்து இருந்தாலோ அல்லது குருவிற்கு 1-5-9 ல் சுக்கிரன் இருந்தாலும், பெண் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்து இருந்தாலோ அல்லது செவ்வாய்க்கு 1-5-9 ல் சுக்கிரன் இருந்தால் கணவன் மனைவி அன்யோன்யமாக இருப்பார்கள்.
14) யாருக்கு காம உணர்ச்சி அதிகம் ஏற்படும்?
யாருடைய ஜாதகத்தில் சுக்கிரன் சந்திரன் இணைவு ஏற்பட்டாலோ அல்லது பார்த்துக்கொண்டாலோ அவர்களுக்கு காம உணர்வு அதிகம் ஏற்படும்.
15) தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும் அமைப்பு உடைய ஜாதக அமைப்பு என்ன?
பிறப்பு ஜாதகத்தில் யாருக்கு சூரியனுக்கு 1-5-9 ல் அல்லது 2 ல் கேது இருந்தால் தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும் / கோட்சார கேது சூரியனுக்கு 1-5-9 ல் அல்லது 2 ல் கேது வரும்போது தற்காலிக பிறிவு ஏற்படும் கருத்து வேறுபாடு ஏற்படும்.
16) யாருடனமும் ஒத்துபோகாத ஜாதக அமைப்பு உள்ள ஜாதகம் எது?
பிறப்பு ஜாதகத்தில் யாருக்கு சனிக்கு 1-5-9 ல் அல்லது 2 ல் கேது இருந்தால் ஜாதகர் யாருடனமும் ஒத்துபோகமாட்டார்.
ஒரு பாவதிபதிக்கு 4-6-8-10 ல் நிற்கும் கிரகங்களின் காரகதன்மைகள் அ்ந்த பாவதிகதிக்கு கிடைக்காது
17) கண்களை குறிக்கும் கிரகங்கள் எது அவை எந்த அமைப்பில் இருந்தால் கண் குறைபாடு ஏற்படும்/ யாருக்கு கண் குறைபாடு ஏற்படும்/ யார் கண்ணாடி அணிவார்கள்?
சூரியன்- வலதுகண்
சந்திரன்- இடதுகண்
சூரியன் இருக்கும் ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11 ல்லது 2-12 ல் சனி இருந்தால் கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணிவார்.
சந்திரன் நிற்கும் ராசிக்கு 1-5-9 அல்லது 3-7-11 ல்லது 2-12 ல் சனி இருந்தால் கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணிவார்.
18) மானிட பிறப்பு ஏன் ஏற்படுகறது?
முன் செய்த வினைகளை கர்ம பதிவிலிருந்து கழிப்பதற்கு மானிட பிறப்பு ஏற்படுகிறது.
19) நாம் செய்த வினைகள் எல்லாம் எங்கே பதிவாகிறது?
நாம் முன் செய்த வினைகள் எல்லாம் நல் வினை தீய வினைகளுக்கு ஏற்ப ஒன்பது கிரகங்களின் மூலமாக 12 கட்டங்களில் பதிவாகிறது.
20) நாம் செய்த பாவ புண்ணியங்கள் எந்த பாவத்தில் பதிவாகிறது?
நாம் செய்த பாவ புண்ணியங்கள் 10 ஆம் பாவத்தில் கர்மாக்களாக பதிவாகிறது எனவே இந்த இடத்தை கர்மஸ்தானம் என்று கூறுகிறோம்.
21) நாம் செய்த புண்ணியங்கள் எந்த எந்த கிரகங்களில் பதிவாகிறது?
நாம் செய்த புண்ணியங்கள் குரு -சுக்கிரன் -புதன் ஆகிய கிரகங்களில் பதிவாகிறது எனவே இந்த மூன்று கிரகங்களை புண்ணிய கிரகங்கள் என்று அழைக்கிறோம்.
22) நாம் செய்த பாவங்கள் எந்த எந்த கிரகங்களில் பதிவாகிறது?
நாம் செய்த பாவங்கள் சூரியன்- சந்திரன்-செவ்வாய்- ராகு- கேது ஆகிய கிகங்களில் பதிவாகிறது எனவே இந்த ஐந்து கிரகங்களை பாவ கிரகங்கள் என்று அழைக்கிறோம்.
23)எத்தகைய ஜாதக அமைப்பு மனைவியுடன் ஒத்து போக மாட்டான்?
யார் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 1-5-9 அல்லது 2ல் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு மனைவியுடன் கருத்துவேறுபாடு உண்டாகும்.
24) யார் வாழ்நாள் முழுவதும் போராட்டமான வாழ்க்கையை அனுபவிப்பார்?
ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் சனிக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் செவ்வாய் இருந்தால் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் போராட்டமான வாழ்க்கையை வாழ வேண்டிய சூழல் ஏற்படும்.
தமிழ் ஜோதிடம்- ஜோதிட பதில்
You May Also Like
0 Comments