நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகள்!
மனம் மாற வேண்டும் மனம் போன போக்கிற்கு மனைதை விடக்கூடாது மனதை கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கவேண்டும் மனதில் கர்ம வினை பதிவுகள் இருந்துகொண்டே அதற்கு ஏற்றார்போல உன்னை சபலபடுத்திகொண்டே இருக்கும். ஒன்பது கிரகங்களின் இயக்கங்ளை மனம் (சந்திரன்) தான் இயக்குகிறது.
இளம்வயதிலுருந்தே மனதிலே நல்ல பதிவுகளை பதிந்து கொண்டே வரவேண்டும் ஒரு செயலை தொடர்ந்து செய்துவருவதால் அவன் எண்ணங்களும் செயல்களும் அதை தூண்டி கொண்டே இருக்கும் அவன் மனம் செயலுக்கு ஏற்ப மாறிவிடுகிறது எனவே கர்ம வினையிலிருந்து விடுபட்டு வருவான் இது சாத்தியமா? உண்மை சாத்தியமே! ஒரு நற்செயலை நல்ல குருவின் துணைகொண்டு செய்து வந்தால் அவன் திருத்தபடுகிறான். குருவின் ஜாதகம் மாணவனின் ஜாதகத்தை கட்டுபடுத்துகிறது எனவே நீ குருவின் பார்வையில் வளர்ந்து வரவேண்டும்.
நல்ல குரு, நல்ல நட்பு, நல்ல உறவு, நல்ல மனைவி மக்கள், நல்ல வழிகாட்டி உனக்கு கிடைத்துவிட்டால் உன் இலக்கை கண்டிப்பாக அடைந்து விடுவாய் இவைகள் எல்லாம் கிடைப்பதற்கு நீ புண்ணியம் செய்து இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் எப்பாடு பட்டாவது நல்ல குரு நல்ல வழிகாட்டியை அடைந்து விடு மற்ற அனைத்தும் கிடைத்து விடும்.
நல்ல உடலை, நல்ல அறிவை, நல்ல பன்புகளை வளர்த்து வரவேண்டும் மனம் மாற மாற கர்மா கண்டிப்பாக மறிவிடும் உன் பாதை கர்மாவை நோக்கியே அழைத்து செல்லும் அந்த பாதைகளை மாற்றவே தாய் தந்தை ஆசிரியர் குரு முக்கியமாக வாழ்க்கை வழிகாட்டி இவர்களை இருக்கமாக பற்றி பிடி்த்துகொண்டு வளர்ந்து வந்தால் நீ உயர்ந்த இலக்கை அடைந்து விடுவாய் உன் தன்னிச்சையான நடவடிக்கையால் கர்ம குழியில் விழுந்து அவதிபடுவாய்.
என்ன விலை கொடுத்தாவது நல்லவர்களை நண்பணாக்கிகொள் உன் வாழ்க்கை உயர்ந்த நிலைக்கு வந்துவிடும். உன் அறிவு உன் செல்வம் உன்சந்ததி உயர்ந்த இடத்தை அடையும்.
பதிவுகளை திரும்ப திரும்ப படித்து அதன் படி நடக்க தொடங்குங்கள் கண்டிப்பாக கர்மா கரைந்து நீங்கள் செல்வ செழிப்போடு வாழலாம் காலங்கள் வித்தயாசபடாலம் உங்கள் கர்மாவிற்கு ஏற்ப ஆனால் வெற்றி நிச்சயம் இது கதையல்ல நிஜம்.
மீண்டும் ஒரு நல்ல பதிவில் தொடருவோம் நன்றி
ஜோதிட பலன்கள்
கிரகங்களின் பார்வை பலன்கள் கிரகங்களின் சேர்க்கை பலன்கள் ஸ்தான பலன்கள் கோட்சார பலன்கள் தசா பலன்கள் இவைகளின் கூட்டு பலன்கள்தான் ஜோதிட பலன்கள்.
ஒரு கிரகத்திற்கு மற்றொருகிரகம் கேந்திரம் திரிகோணங்களில் இருக்கும்போது கிரக இணைவுகள் ஏற்பட்டு அதனால் ஏற்படக்கூடிய பலன்களும் உண்டு.
அதுபோல குடும்பங்களில் ஏற்படும் பலருக்கு உண்டாகும் கேட்சாரம் மற்றும் தசா பலன்களும் நமக்கு ஏற்படக்கூடிய பலன்களை கூட்டவோ குறைக்கவோ கூடும்.
கிரக இணைவுகள் 1 5 9 கிரக பார்வைகள் 2 12 3 7 11
சிவ சிவ சிவாய நம
தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள் தெரிந்தவர்கள் வழக்கம்போல அமைதியாக படித்து கடந்து விடுங்கள்!
தற்சமயம் கோட்சாரம்
இதில் குரு ராகு சேர்க்கை நிறைய கூட்டு மரணங்கள் உண்டாகும் குரு நாசமாக விட்டது அதானல் குருவின் காரகங்கள் எல்லாம் வீழ்ச்சி ஆகிவிடும் என்ற நேரடி பலன்கள் தற்சமயம் நடைபெறாது.
பணம் நீசமாகிவிடும் பங்கு வீழ்ந்துவிடும் பேங்க் திவால் என்பது எல்லாம் நடைபெறாது அதற்கு மாறாக மாறிவிடும்.
நீசம் பெற்ற ஸ்தானாதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் நீச பெற்ற கிரகத்திற்கு உச்ச பலனை ஏற்படுத்தும் வலுவை கொடுக்கும் காப்பாற்ற படும் இழப்புகள் சீர்செய்யபடும். கொஞ்சம் கொஞ்சமாக நிதி நிலை சீரானநிலைக்கு வரும்.
குரு பணம் தனம்
ராகு பெரிய, மறைந்த, கள்ளத்தனமான
தாரளாமாக புழக்கத்தை ஏற்படுத்தும் மறைத்து வைத்த பணங்கள் அம்பலத்திற்கு வலம்வரும்.
நன்றி
பிறப்பு என்பது செய்த வினைகளின் தொகுப்பு இதை நம் ஞானி வள்ளுவ பெருந்தகை ஊழ் ஊழ்வினை என்று கூறியுள்ளார் ஜோதிடத்தில் கர்மா கர்மவினை என்று கூறியுள்ளார்கள் பிறந்த பிண்டம் எல்லாம் ஊழ் வினையினாலே ஏற்பட்ட பிண்டமே.
வினைக்கேற்ப வாழ்க்கை வாழ தொடங்குவான் ஊழைக்கணடு பிண்டத்தை சுருக்கி கொள்பவன் ஊழ்வினை அறுத்து வாழ்ந்து கொள்வான் ஊழ் அறுக்க ஊழில் வினை இருக்க வேண்டும்.
பூலோக பாவ பிண்டத்திற்கு பதில் தரும் பிண்டங்கள் பாவத்தை கையேந்தும் நிம்மதி என்ற நிலையில் இருக்க முடியாது.
ஏதாவது ஒரு சோகத்திலும் சோதனையாலும் பாவத்தை சேர்த்துக் கொண்டே வாழ்ந்து வருவான் நிம்மதி அற்ற நிலையில் இருப்பான்.
பாவகதி படுத்தும் பாடு என் ஊழ் பிறப்பிற்கு எனக்கு வழி இல்லை நான் ஊருக்கும் உறவுக்கும் உலகிற்கும் வழிகாட்டியா!
0 Comments