Ticker

6/recent/ticker-posts

எண்ணம் போல் வாழ்வு

எண்ணம் போல் வாழ்வு

தூய்மையான மனம் எண்ணங்கள் கொண்டவர்களின் ஞாயமான பிராத்தனைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் அவர்களுக்கு இறைவன் ஏதாவது ஒரு ரூபத்தில் வழிகாட்டுகிறான் அவனுக்கு யாரை வணங்கவேண்டும் வழிபடவேண்டும் என்று உணர்த்தப்படுகிறது அவனுக்கு வழிகாட்ட நல்ல குருவை காண்பித்து அருள்கிறார். 

அவன் யோகம் இல்லை என்றாலும் அவனுக்கு யோகமான மனைவி மூலம் யோகத்தை பெறுகிறான், அவனுக்கு ஆயுள் பலம் குறைவு என்று ஜாதகத்தில் இருந்தால் கணவனுக்கு ஆயுள் பலம் அளிக்க கூடிய விதத்தில் மனைவி அமைகிறாள் அல்லது ஒரு மகனோ மகளோ பிறந்து தந்தைக்கு ஆயுள் பலத்தை கூட்டக்கூடிய அமைப்பில் பிறந்து ஆயுள் பலத்தை  நீட்டிக்க படுகிறது அதுபோல செல்வ சுகங்கள் என எல்ல பலன்களும் தன்னை சார்ந்தவர்கள் மூலமாக பெற்றுக்கொள்கிறார்கள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் ஏன் மரணம் கூட தள்ளிப்போட படுகிறது. அவனுக்கு அமைகின்ற உறவுகள் மூலம் இதற்கு பல உதாரணங்களை கூறலாம் பின் வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம் 

மனம் - சந்திரன் - கிரகங்கள்

ஒரு சிறு விளக்கம்! உன் விதிப்படிதான் மனம் எண்ணங்களை தூண்டும் செயல்படுத்த வைக்கும் அது எப்படி? சந்திரன் மனக்காரகன் அவன் சலனத்திற்கு உரியவன் எங்கெல்லாம் தப்பு நடக்கிறதோ அங்கெல்லாம் சந்திரன் இல்லாமல் நடக்காது ஒரு சில உதாரணங்கள் சந்திரன் ராகு இணைவு, சந்திரன் சுக்கிரன் இணைவு, சுக்கிரன் சந்திரன் இணைவு, சந்திரன் புதன் இணைவு, குரு சந்திரன் இணைவு, சனி சந்திரன் இணைவு, கேது சந்திரன் இணைவு, இராகு சந்திரன் இணைவு.

மேலே சொன்ன அத்தனை இணைவுகளும் பல பிரச்சனைகளுக்கு துணை போகும் அப்படி என்றால் எல்லாம் விதிப்படிதான்! விதியின் இயக்கத்தை உன் மனம் நினைத்தால் கட்டுபடுத்தலாமே!

6 ஆம் இடம் 12 இடங்களை ஆய்வு செய்யும் முறைகள்- வேதஜோதிடம்

குருவேசரணம்

திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி

6ஆம் இடம் என்பது ஐந்தாம் இடத்திற்கு தனஸ்தானம், 12 இடம் என்பது லாபஸ்னத்திற்கு தனஸ்தானம் ஆகும், 6க்கு 6ஆம் இடம் 11ஆம் இடம், இந்த மாதிரி உற்று நோக்கினால் ஒரு உண்மை புரியவரும், அது போல ஒரு பாவத்தின் பலனை நிர்ணயிக்கும் போது அதனுடைய 7ஆம் பாவத்தை இணைத்து பார்க்கவேண்டும், அதுபோல பாவத்திற்கு பாவாத்பாவம் அந்த பாவத்தின் எண்ணிக்கைபடியும் பார்க்கவேண்டும், இப்படியாக பலன் கணிக்கும்போது பலன் தப்பாகாது 100% பலனை எதிர்பார்க்கலாம், 6 ஆம் இடம் என்பதுபோல ருண, ரோக, சத்ரு ஸ்தானம். எதிரி, கடன், நோய் ஆகியவற்றை குறிக்கும் இடம், அது போல 12 ஆம் இடம் கெட்ட இடம், விரயஸ்தானம் அயன சயன சுக போக ஸ்தானம் ஆகும், இந்த இடங்களில் கெட்ட கிரகம் வந்தால் மேற்கூறிய கெடுபலன்களையெல்லாம் அழிக்கும்.

நோய் இருந்தால்தானே வைத்தியச்செலவு, விரோதியும் வில்லங்கமும் இருந்தால்தானே கோர்ட்செலவு, கடன் இருந்தால்தானே வட்டிச்செலவு, இந்த மூன்றும் இல்லாவிட்டால் விரயச்செலவு இல்லை. எந்த சுகபோகத்தையும் செலவு செய்யாமல் அனுபவிக்க முடியாது, நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றால் நல்ல செலவு செய்து சாப்பிட வேண்டும், சொகுசாக பயணம் செய்யவேண்டும் என்றால் அதிகம் செலவு செய்ய வேண்டும். இவைகள் எல்லாம் ஆடம்பரத்தேவைகள், அனாவசிய செலவுகள், இவைகளை கட்டுபடுத்தினால் சுகபோகத்தை அனுபவிக்க முடியாது. 

இருப்பவன் சாப்பிடாமல் இருந்தால் விரதம், இல்லாதவன் சாப்பிடாமல் இருந்தால் பட்டினி, சுகபோகங்களை தியாகம் செய்தால் மனப்பக்குவம், சுகபோகங்களை அனுபவிக்க வசதி இல்லாதவர்கள் ஆசைப்பட்டால் கடன் வாங்க வேண்டும் அல்லது தப்பு செய்ய வேண்டும், தப்பு செய்தால் பாவம் கவ்வி கொள்ளும், மனக்கட்டுப்பாடு உள்ளவர்கள் ஞானம் பெருவார்கள், ஞானம் பெற்றவர்களுக்கு மறுபிறவி இல்லை 12 ல் கேது உள்ளவர்கள் மறுபிறவி இல்லை என்று சொல்வார்கள் அந்த விதி ஞானம் பெற்றவர்களுக்கும் மட்டும் பொருந்தும் பேராசைகள், பந்தம் பாசம், சொந்தம் என்று சபலபட்டு சாகப்போகிறமோ என்று பயந்தவர்களுக்கு 12 ல் கேது இருந்தால் மறுபிறவி உண்டு. பிறவிக்குக் காரணம் ஆசை என்று மகான்கள் கூறி உள்ளனர், 6 க்குடையவர் தசை நடக்கும்போது கனவன்/மனைவிக்கு கெடுபலன் உண்டாகும், நல்லதும் கெட்டதும் உங்கள் எண்ணம் செயலைப் பொருத்து அமைகிறது ஒன்பது கிரகங்களும் நல்லவர்கள்தான்,  ஒன்பது கிரகங்களும் கெட்டவர்கள்தான் கிரகங்களின் பலன் நல்லதாக அமைவதும், கெடுதலாக அமைவதும் உங்கள் எண்ணங்களை பொருத்துதான். யோகதிசை என்று கணித்த திசை அவயோக திசையாக மாறிவிடும், அவயோக திசை என்று கணித்த திசை யோக திசையாக மாறிவிடும், இது எவ்வாறு என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சிவ சிவாய நம
சுக்கிரன்- பணம் வீடு அடுக்குமாடி பெண்கள் கலைத்துறை நகை
ராகு - மரணம் கொள்ளை கொலை போதை
செவ்வாய் -போலீஸ் வெப்பம் கற்கள் நிலம் கத்தி
குரு- கோவில் ஜீவன், யாணை நீதிபதி 
சனி - பொதுமக்கள் பழமையான, கர்மா, தொழில் 
புதன் -காதலர் கவிஞர் இளையவர் கல்விக்கூடம் அலி
(செவ்வாய் ராகு) -கலவரம் வெடி விபத்து துப்பாக்கி சூடு கொலை நிலபிளவு 
(சனி செவ்வாய்)- கடன் கடன் நெருக்கடி சனி செவ்வாய் ராகு கடன் நெருக்கடி விஷம் அருந்துதல், போதை பொருள் கடத்தல் தகராறு கொலை செய்தல், கேது தொடர்பு தூக்கில் தொங்குதல், கழுத்தை(புதன்)  நெரித்து  கொன்று தூக்கில் தொங்கவிடுதல்.
(குரு சனி செவ்வாய் கேது)- தூக்கு தண்டைனை நீதிமன்ற தீர்ப்பு தருதல்.
குரு ராகு கூட்டுமரணங்கள் ஏற்படக்கூடும்
பிரபல இசை அமைப்பாளர் பாடகர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
பழமையான கோவில் நீதிமன்றங்கள் விரிசல்கள் சேதங்கள் ஏற்படலாம்
(சுக்கிரன் சனி செவ்வாய் ராகு) -பணம் கொள்ளை போதல் அடுக்குமாடி குடி இருப்பில் பெண்களை நடிகைகளை இளம் பொண்களை கற்பை சூறையாடல் கொளைசெய்வது.
சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்
குருவே சரணம் 

Post a Comment

0 Comments