1) யார் மருத்துவர் ஆவார்? எந்த அமைப்பு கொண்ட ஜாதகம் மருத்துவர் ஆகும?
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் கூடி இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும், சூரியனுக்கு இரண்டு பனிரெண்டில் செவ்வாய் இருந்தாலும், இருவரும் பரிவர்த்தனை அடைந்து இருந்தாலும் ஒன்பது பத்து பதினொன்றில் கேது இருந்தாலும் இவர்களுக்கும் மருத்துவம் தெரியும்.
2) யாருக்கு நெருப்பால ஆபத்து ஏற்படும்?
இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் கட்டாயம் நெருப்பால் ஆபத்து உண்டு, தீக்காயம் ஏற்படும்.
3) கணவனுக்கு அடங்காத மனைவி ஜாதகம் எப்படி இருக்கும்?
லகனத்திற்கு ஏழாம் வீடு சூரியன் வீடாக இருந்தாலும், ஏழில் சூரியன் இருந்தாலும் அந்த ஜாதகி கணவனுக்கு அடங்கி போகமாட்டால் பிரச்சனைகளை ஏற்படுத்தி கொண்டே இருப்பாள், இதானல் குடும்பத்தில் பிரச்சனகள் ஏற்பட்டு பிரிந்து விடுவார்கள், சுப கிரக பார்வை இருந்தால் பிரிவினையை தவிர்க்கும்.
4) யார் கோடிஸ்வரண் ஆவார் எந்த அமைப்பு பணக்காரணாக்கும்?
தனம் பணம் இரண்டாம் இடம் ஆகும், லாபம், வெற்றி, ஒருகாரகத்தை தூண்டும் ஸ்தானம் அந்த ஸ்தானத்தின் 11 ஆம் இடம் ஆகும். லாபம் மற்றும் வெற்றியை தரக்கூடியது 11 ஆம் இடம்தான், அது போல ஒரு லக்கனம் வெற்றி பெற வேண்டும் என்றால் 11 ஆம் இடத்தில் சூரியன் இருக்கும் லக்கனம் வெற்றி பெறக்கூடிய லக்கனம் ஆகும்.
எனவே இரண்டாம் இடத்திற்குரியவர் 11 ஆம் இடத்திலோ அல்லது 11 ஆம் இடத்திற்குரியவர் இரண்டாம் இடத்திலோ இருந்தால் ஏழ்மையான நிலையில் இருந்தாலும் கோடீஸ்வரர் ஆகிவிடுவார்கள். இரண்டுக்குரியவர் லக்கனத்திலோ 11 க்குரியவர் லக்கனத்திலோ அல்லது ஒருவருக்கொருவர் தன் வீட்டில் ஆட்சி பெற்று இருந்தாலோ நல்ல தனயோகத்தை பெறுவார்கள் வாழ்க்கை பல வெற்றிகளை எளிதில் அடைவார்கள்.
5) ஜோதிட தகவல்📚
கடன் வழக்கு சிக்கல் இவற்றிற்கு காரணம் எவை?
கடன், வழக்கு, சிக்கல் கேதுவே காரண கிரகம், சனி செவ்வாய் இணைவும் கடனை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை தாமத திருமணம் கலப்பு திருமணம் முறைமாறிய திருமணத்தை ஏற்படுத்தும்.
விநாயகர் முருகபெருமான் ஆஞ்சநேயர் வழிபாடுகளை செய்து வந்தால் நல்ல தீர்வுகள் கிடைக்கும்.
6) மனைவியால் யாருக்கு யோகம்?
செவ்வாய்- கணவன்
சுக்கிரன்- மனைவி Wife
சனி- கர்மா
கர்ம் வினைகளின் விளைவுகளே இந்த ஜென்ம உறவுகளாக அமைகிறது எனவே திருமணத்திற்கு பிறகு மனைவி வந்த பிறகு ஒரு சிலர் யோகமாக வாழ்கிறார்கள், வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை அடைகிறார்கள், எத்தைகய ஜாதக அமைப்பு யோகங்களை உண்டு செய்யும் என்பதை பார்க்கலாம் சனி சுக்கிரன் இணைவு சேர்க்கை பார்வை பெற்ற ஜாதகங்கள் மனைவி வந்த பிறகு சுக்கிரனின் அனைத்து காரகங்களையும் முழுமையாக அனுபவிப்பான்.
7) கிரக இணைவு என்பது என்ன?
கிரக இணைவு என்பது 1, 2, 5, 7, 9 இல் இருப்பது, ஒருவருடன் ஒருவர் சேர்ந்து இருப்பது, தன் பார்வைகளால் பார்பது, ஒருவருடைய சாரத்தில் இருப்பது. பலன்கள் என்பது நேரடித்தொடர்பு பெறும் கிரகத்திற்கு வலிமை அதிகம் பார்வை சாரம் மத்திம பலன்களை தரும்.
இரண்டு கிரகங்கள் சேர்க்கை இணைவு பார்வை பெறும்போது அந்த கிரகங்கள் தங்களின் காரகங்களை குணங்களை பரிமாறி கொள்கிறது.
8) யாருக்கு சொத்தில் தகராறு வம்பு வழக்கு ஏற்படும்?
மன் மனை வீடு நிலம் சொத்து காரகங்களுக்குடைய கிரகங்கள் புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகும் மேலும் இதற்குரிய பாவம் நான்காம் பாவம் ஆகும், மேலும் வம்பு வழக்கு தகராறு, வியாஜியங்களைக் குறிக்கும் கிரகம் கேதுவாகும் என்வே மேற்கன்ட கிரகங்களுக்கு நான்காம் பவாத்திற்கும் கேது தொடர்பு ஏற்பட்டால் கண்டிப்பாக சொத்தில் தகராறு வம்பு வழக்கு ஏற்படும்.
9) வாகன விபத்து யாருக்கு ஏற்படும்?
ஜாதகர் -குரு/ லக்கனம், லக்கனாதிபதி
காயம்- செவ்வாய்
கத்தியால் அறுப்பது Operation-செவ்வாய்
சிதரி கிழிவது - செவ்வாய் ராகு
ராகு - மரணம், கண்டம்
லக்கனத்திற்கோ லக்கனாதிபதிக்கோ குருவிற்கோ செவ்வாய் ராகு சம்பந்தம் ஏற்பட்டால் விபத்து காயம் ஏற்படும்.
10) யாருக்கு காதல் ஏற்படும்?
காதல் ஸ்தானம் மூன்றாம் இடம்
கேது -சிக்கி கொள்ள வைப்பது/ மாட்டிக்கொள்வது/ வலை
காலபுருஷ மூன்றாம் இடம் மிதுனம் அதிபதி புதன் இதனுடன் கேது இணைவு பெறுவது அல்லது மூன்றாம் இடத்து அதிபதியுடன் கேது இணைவு ஏற்பட்டால் காதல் உணர்வு ஏற்படும்.
11) நாம் செய்த பாவ புண்ணியங்கள் எங்கே பதிவாகிறது?
நாம் செய்த நன்மை தீமைகள் எல்லாம் கர்மக்காரகன் சனி கிரகத்தில் பதிவாகிறது துளி கூட மிச்சம் இல்லாமல் செய்த செயல்களுக்கு ஏற்ப பலன்களை எந்த வித முயற்சியும் இல்லாமல் கொடுத்துவிடும், அதாவது கர்ம பதிவில் என்ன பலன்கள் இருக்கிறதோ சனி கிரகம் எந்த கிரகத்தில் இணைகிறதோ அந்த காரக பலன்களை முயற்சி இல்லாமல் தந்து விடும்.
12) நன்மை செய்யும் நட்சத்திரங்கள் யாவை?
புனர்பூசம், பூரம், ஸ்வாதி, உத்திரட்டாதி இந்த நான்கு நட்சத்திரங்களும் எந்த கிழமையோடு சேர்ந்து வந்தாலும் மரண யோகமோ, பிரபலாரிஷ்ட யோகமோ உண்டாவதில்லை. அமிர்த யோகமும் , சித்த யோகமும் மட்டும் உண்டாகும். எனவே இந்த நான்கு நட்சத்திரங்களும் நன்மையை மட்டுமே செய்யும்.
13) எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நமக்கு வழிகாட்டியாக இருப்பார்கள்?
புனர்பூசம், பூரம், ஸ்வாதி, உத்திரட்டாதி இந்த நான்கு நட்சத்திரத்தில் பிறந்த மகான்கள் சித்தர்கள் தெய்வங்களை வணங்குவதாலும் அல்லது இந்த நான்கு நட்சத்திரத்தில் பிறந்த மனிதர்கோடு சேர்ந்து நீங்கள் வாழ்க்கை பயணத்தை தொடரும்போது உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்ப்படும்.
14) சிவபெருமானின் நட்சத்திரம் எது?
சிவபெருமானின் நடசத்திரம் திருவாதிரை ஆகும்.
15) மதுரை மீனாட்சி அம்மனின் நட்சத்திரம் எது?
மதுரை மீனாட்சி அம்மனின் நடசத்திரம் அஸ்வினி ஆகும்.
16) நன்மை தரும் கரணங்கள் எவை?
பஞ்சாங்கங்களில் குறிப்படபடும் கரணங்களில் சுப காரியத்திற்குரிய கரணங்கள் 1 பவம்,2 பாலவம் 3 கௌளவம் 4 தைதுலம் 5 கரசை ஆகிய ஐந்தும் ஆகும்.
17) சஷ்டியப்த பூர்த்தி என்றால் என்ன?
அறுபது வயது நிறைவு பெற்றவர்கள்ஏ பிறந்த நட்சத்திரத்து அன்று ஆயுசு ஹோமம் செய்து கொண்டாடக்கூடிய விழா சஷ்யப்த பூர்த்தி ஆகும். பிறந்த மாதத்தில் இரண்டு முறை பிறந்த நட்சத்திரம் வந்தால் இரண்டாவது நட்சத்திரத்து அன்று சஷ்டியப்த பூர்த்தியை கொண்டாட வேண்டும்.
18) காலையில் தூங்கி எழுந்ததும் எந்த கதவை முதலில் திறக்கவேண்டும்?
காலையில் தூங்கி எழுந்ததும் முதலில் கொல்லை கதவை திறக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது
19) சித்தர்கள் கூறும் எச்சரிக்கை என்ன?
அரச மரத்தை வெட்டக்கூடாது, உலக்கை வெட்டி அடுப்பில் வைத்து எரிக்க கூடாது, எல்லை இலவசமாக வாங்க கூடாது, மிகுந்த கெடுபலன்களை தரும்.
20) சனியின் பகை கிரகங்கள் எவை? நட்பு கிரகங்கள் எவை?
நட்பு கிரகங்கள்- சுக்கிரன், குரு, புதன்
பகை கிரகங்கள்- செவ்வாய் , ராகு, கேது, சந்திரன்
21) யாருக்கு வீடு வாகனங்கள் சொந்தமாக அமையும்?
பிறப்பு ஜாதக சனிக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகருக்கு வீடு வாகனங்கள் சொந்தமாக அமையும்.
22) யாருக்கு காதல் திருமணம் ஏற்படும்?
பிறப்பு ஜாதக புதனுக்கு 1-5-9 அல்லது 2 ல் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு காதல் திருமணம் ஏற்படும், அல்லது புதன் சுக்கிரன் இணைவு ஏற்பட்டாலும் காதல் திருமணம் ஏற்படும்.
-ஜோதிட பதில்
You May also like this
0 Comments