ஜோதிடம் மிகப்பெரிய ஞான பொக்கிஷம். பாகம்-1 -Tamil Astrology
குருவே துணை
வேத ஜோதிட முறையில் கூறிய அனைத்து ஜோதிட விதிகளும் கண்டிப்பாக வேலைசெய்யும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது, அது எப்படி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பல ஜோதிடர்கள் அறிவார்கள் ஆனால் அதை ஒரு சில நம்பிக்கை உள்ள நபர்களுக்கு மட்டும்தான் சுட்டிக்காட்டி உள்ளார்கள் ஒரு சிலர் தனக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து வளர்த்து வருகின்றனர் ஒரு சிலர் ஒரு கட்டத்திற்கு மேல் வேத ஜோதிடம் தடுமாறுகிறது இதற்குமேல் வழி இல்லை இந்த ஜோதிட முறை என்று வேறு முறைக்கு தாவி விடுகின்றனர் அங்கேயும் திருப்தி இல்லை ஏன் என்றால் அங்கேயும் ஒரு சில இடத்தில் தடுமாறுகிறது இன்னும் தேடல் இருந்து கொண்டே இருக்கிறது. இன்னும் பல ஜாதகங்களை பதிவிட்டு பதிவிடச்செய்து ஆராய்ச்சி சென்று கொண்டு இருக்கிறது தவிர முடிவில்லை.
ஒரு சிலர் ஜோதிடம் மிக எளிமையானது ஒரு சில நாட்களியே தெரிந்து கொண்டுபலன் கூறலாம் என்று கூறுகிறார்கள் அவர்கள் பயிற்சி எடுத்தபிறகும் பல குழுக்களில் அவர்களின் தேடுதல் இருந்துகொண்டே இருக்கிறது அப்படி என்றால் ஜோதிடம் எளிமையானதா அல்லது பல நுட்பங்களை அடக்கிய மிகப்பெரிய பொக்கிஷமா?
ஜோதிடத்தில் படிப்படியாக பல வற்றை கற்க வேண்டும் ஆட்சி உச்சம் பகை நீசம் தேவை இல்லை என்றும் சரம் ஸ்திரம் உபயம் தேவை இல்லை என்றும் ஒரு சிலர் கூறி கொண்டு இருக்கின்றார் வேத ஜோதிடத்தில் கூறிய அனைத்து ஜோதிட விதிகளும் மிக முக்கியமானவை இதை நீகற்க விட்டால் ஜோதிடத்தில் நீ தோற்றுவிடுவாய். இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்
ஜோதிடம் மிகப்பெரிய ஞான பொக்கிஷம். பாகம-2
பிறப்பு ஜாதகம் என்பது எவ்வாறு அமைகிறது? உன் கர்ம வினைபடிதான் அமைந்திருக்கும் அது என்ன கர்ம வினை? உன் கர்ம வினை நன்றாக இருந்தால் பிறப்பு ஜாதகமும் யோகம் உள்ள அமைப்பில் அமைந்திருக்கும் அது என்ன யோகம்? பிறந்த போது இருந்த கிரக நிலைதான் உன் பிறப்பு ஜாதகம் இந்த அமைப்பு அப்படியே இருந்து விடாது நகர்ந்து கொண்டே இருக்கும் சலனம் இருந்து கொண்டே இருக்கும் இதற்கு பெயர்தான் கோட்சாரம். கிரகங்கள் எவ்வாறு நகருகின்றன அவைகள் 108 நட்சத்திர பாதங்கள் மூலம் நகர்ந்து கொண்டே இருக்கும் அதன் ஓடுபாதை அந்த ஓடுபாதையில் ஓடும்போது ஒவ்வோரு நட்சத்திரங்களுக்கு ஏற்ப தன்தனமையை மாற்றிக்கொள்ளும், தன் தன்மையை மாற்றிக்கொள்ளும் தவிர அந்த கிரகங்கள் வேலை செய்கின்ற விதம் நீங்கள் புரிந்துகொண்டால் வியக்கவைக்கும் உடனே தன் வேலையை காட்டி விடாது அங்கே ஒரு கூட்டனி போடும் அந்தக்கூட்டனிகேற்பதான் தன் வேலைகளை காட்டும் அங்கே என்ன கூட்டனி ஒத்த தசை கூட்டனி, கோட்சார கூட்டனி இங்கு தான் உங்கள் கர்ம வினை 1 5 9 வேலை செய்யும். இது எவ்வாறு என்று பார்பதற்கு முன்னால் ஒன்றை கூறிவிடுகிறேன் கிரகங்கள் எங்கு இருந்தாலும் அது தன் கடமையை ஒழுங்காக நிறைவேற்றும் ஆறில் இருக்கிறது 8 ல் இருக்கிறது 12 ல் இருக்கிறது என்று எல்லாம் என்ன வேண்டாம் அது உனக்கு நல்லது செய்யுமா எப்போது வேலை செய்யும். உன் ஜாதகத்தில் உள்ள அனைத்துகிரகங்களும் வேலை செய்யும் இரண்டு விதத்தில் ஒன்று நிரந்தரவேலை தற்காலிக வேலை இங்கேதான் நீங்கள் எல்லாம் ஏலனப்படுத்தும் கர்மா, ஆம் அந்த உன் கர்மா நல்லதாக இருந்தால் நிரந்தரமாக சுபத்தனமை பெற்று உனக்கு யோகபலன்களை கொடுத்துக்கொண்டிருக்கும். உன் கர்மாவில் சுபத்தனமை இல்லையெனில் எப்போது கோட்சார கூட்டனி உருவாகிறதோ அப்போதுதான் இனைவிற்கு ஏற்ப பலன்களை கொடுக்கும்.
இது எவ்வாறு சுபத்தனமை அடைகிறது? கோட்சார கூட்டனி எப்படி சுபயோகம் கூட்டணியாக மாறும் இதில் யார் கர்ம வினை காரகர்? மோட்சகாரகன் போககாரகன் இவர்களின் மிகப்பெரியபங்குகள் என்ன?
யோகம் -Tamil Astrology -Yoga
உன் பிறப்பு ஜாதகம் கர்ம வினையால்தான் அமைகிறது என்பதற்கான ஆனித்தாரமான ஆதாரம்.
நிரந்தர யோகம்? கோட்சார யோகம்? தசா யோகம்? கூட்டு கிரக தசா சந்தியோகம்? ஒத்த தசா யோகம்?
மேற்கண்ட யோகங்கள் சுப யோகத்தையைம் கொடுக்கும் அசுப யோகத்தையைம் கொடுக்கும்.
பிறப்பு ஜாதகம் என்பது ஒரு சூட்சமம் நிறைந்த சலனம் இல்லாத கிரக குறியீடுகள், நிரந்த யோகம் மட்டும் பிறந்ததிலிருந்து வேலை செய்யும் மற்றயோகங்கள் எல்லாம் காலம் வரும் வரை காத்திருக்கவேண்டும்.
பிறப்பு ஜாதக கிரகங்களை இயக்குவது கோட்சாரம், தசா புத்தி அந்தர சூட்மங்கள், உறவுவழி கிரக இணைவுகள், மனைவி வழி கிரக இணைவுகள் புத்திரவழி கிரக இணைவுகள், வீடு மனை கிரக இணைவுகள்.
வினை செயல் நடைபெறும் காலம்
ஒரு செயல் நடைபெற வேண்டும் என்றால் அது கர்மாவில் இருக்க வேண்டும், கர்மக்காரகன் (Saturn-சனி) தொடர்பு இருக்க வேண்டும் நடைபெறும் காலத்தில் ராகு கேதுக்களின் தடை அதாவது கர்மாவின் தடை இருக்க கூடாது, இந்த நிகழ்வுகளும் கர்மாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த காலத்தில் ஜீவனின் (குரு -Jupiter) தொடர்பு அல்லது சம்பந்தம் வேண்டும். தொழில் திருமணம் Marriage குழுந்தை Child வீடு House வாகனம் பிறப்பு இறப்பு நிகழ வேண்டும் என்றால் அந்தந்த காரகத்தின் கிரகங்களின் தொடர்பும் சம்பந்த படவேண்டும். இத்தனை தொடர்பு இருந்தால் மட்டுமே ஒரு ஜீவனுக்கு கர்ம படி நிகழ்வுகள் துல்லியமாக நடந்தேறும்.
பரிகரங்கள் -தமிழ் ஜோதிடம்
திசை மாறி நிற்கும் தெய்வத்திற்கு அதி அற்புத மகத்துவமான சக்திகள் உண்டு உதாரணம் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தீஸ்வரன் மேற்கு பார்த்த சன்னதி தன்வந்தரி ஜீவசாமாதி உள்ள இடம் பல அற்புதங்கள் அடங்கி உள்ளது அதுபோல திருக்கடையூர் அமிர்தகடஷ்வரர் மேற்கு பார்த்த சன்னதி பல சரித்திரங்களை உள்ளடக்கியது ஆயுள் Life விருத்தி ஆலயம்.
மாரக தசை நடப்பவர்கள் இதுபோன்ற ஸ்தலங்களை தேடிச்சென்று சரனாகதி அடையுங்கள் வசதி இருந்தால் ஆயுஷ்ஹோமம் செய்து கலச அபிசேகம் செய்து கொள்ளுங்கள் சிவனுக்கு திங்கள்கிழமை தோறும் சிவனுக்கு பால் அபிசேகம் செய்துவரலாம்.
சூட்சமம் மூலம் தற்சமயம் நடக்கின்ற நிகழ்வுகளை தெளிவாக அறிவதே சூட்சம கணிதம் ஆகும்
அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம் மேற்கண்டபதிவிகளில் உங்களுக்கு புரியாதவை எது என்பது எனக்கு தெரியும் பின்வரும் பதிவிகளில் விளக்கப்படும்
கேள்விகள் உங்கள் கேள்விகளாக இருக்கட்டும் ஜோதிடத்திற்கு எதிரானவர் ஆன்மிகத்திற்கு எதிர்ப்பானவர்கள் எல்லாம் சென்று விடலாம்.
ஜோதிடம்
ஒவ்வொரு நிகழ்விற்கும் நடக்கும் காலம் வரை காத்திருக்க வேண்டும் அதற்கு நிறைய உதாரணங்கள் தரலாம் சாதம் சமைக்க உளை கொதித்து அரிசி கலைந்து போட்டு வெந்த பிறகே வடிக்க வேண்டும் இல்லை என்றால் அறைவேக்காடுதான், அது போல பஸ்சில் ஏறியுடன் உன் நிறுத்தம் வரும்வரை காத்திருக்கவேண்டும், இறுதி போட்டியில் பதக்கம் பெற பல போட்டிகளை சந்தித்து வரவேண்டும் , உன் ஜாதகத்தில் கிரக நிகழ்வுகள் நிகழ அந்த காலம் வரும்வரை காத்திருக்கவேண்டும் உன் ஜாதகம் முன்பதிவு செய்யபட்ட பயணசீட்டு அந்த காலம் வரும்வரை காத்திருக்கவேண்டும்.
ஜோதிடம் பார்த்தவுடனே வேலை செய்துவிடாது உன் உடல் பஞ்ச பூதத்தால் ஆன நவகிரக பிண்டம் கிரக சலணத்திற்கேற்ப சிதைந்து கொண்டே நகரும் பிரமாண்ட ஆசை பெருக்கி காட்டி இறுதியில் சுருக்கிவிடும். பிரமாண்ட ஆசையை சுருக்கி இறுதி காலத்தை பெருக்கி கொள்ளுங்கள்.
கர்மாவை ஒழிக்க ஆசை ஒழிக்கவேண்டும் ஞானம் -கேது சிவன் வாழ்வு சிவனே என்ற வாழ்வு ஞானத்தை பெருக்கி மோட்சத்தை கொடுக்கும்.
இறுதியில் மிஞ்சுவது ஒன்றும்இல்லை இப்போதே உணர்ந்துவிடு நவகிரகங்கள் உண்ணை கண்டு மிரண்டு ஓடும்.
கர்ம வினை 🦅
செய்த பாவத்திற்கு பரிகாரம் நம் மானிட பிறப்பு ஆகும் வினைகளை அனுபவிக்க பிறந்து இருக்கிறோம் அந்த வினையில் அனைத்தும் அடக்கம் தாய் தந்தை உறவினர்கள் மகன் மகள் செல்வம் என அனைத்தும் அடங்கிய மாமிச பிண்டமே மானிட பிறப்பு இந்த பிறப்பில் எவன் ஒருவன் பின்ட பசியை ஆசையை அடக்கி வாழ தொடங்கும்போது அவன் தெளிவு பெறுகிறார் அவன் கர்மா கழிந்து சுத்த தேகத்தை அடைகின்றனர்.
கர்ம வினை கடந்து செல்கிறது நீ நினைக்கின்ற ஒவ்வொரு ஆசைகளும் அடுத்த வினைக்கு வித்தாகிவிடுகிறது.
சனி சுக்கிரன் சந்திரன் -கர்மா சுகம் மனம்
உன் அற்ப ஆசைகள் நிறைவேற சிலவற்றை நீ வேண்டும் என்றே இழக்க நேரிடும், சுகம் சுகமானது அதை நிறைவேற சில பல உழைப்புகள், பொருட்கள், தொகைகளை நீ இழக்க நேரிடும் சுகம் சுக்கிரன் என்றால் இழப்பு சந்திரன் மனம் சந்திரன் ஆசைகளை சுமந்து கொண்டே கர்மா வாழத்தொடங்கும் உன் கர்மாவிற்கு ஏற்ப ஆசைகள் மனதில் தூண்டப்படும் கர்மாவின் அளவிற்கு ஏற்ப உன் பிண்டம் சுகத்தை தேடும் சுகத்தின் அளவிற்கு ஏற்ப செலவுகள் செல்வங்களை இழக்கநேரிடும் சும்மா இருப்பதே கர்ம பிண்டத்திற்கு சுகமானது.
அர்ப சுகம் பிரமாண்டமான சுகம் ராகு கேது சம்பந்தம் உண்டு சுகத்தை சுவைத்தபின் பிண்டம் தடுமாறும் உன் கர்ம பின்டம் ஒன்பது கிரகங்களை கொண்டே படைக்கப்படுகிறது ஒவ்வொரு கிரகங்களும் கர்மாவின் அளவிற்கு ஏற்ப நெருங்கும்போது வினைகள் நடக்கதொடங்கும் அந்த வினைகள் உன்கர்மாவிற்கு ஏற்ப பலத்தையும் பலவீனத்தையும் தாக்கத்தையும் அழிவுகளையும் கொடுக்கும், எங்கே எப்படி நெருங்கிறது எந்த கிரகத்தின் மீது பயணம் செல்கிறது என்பதை பொருத்து ஆக்கமும் அழிவுகளும் நடக்க தொடங்கும்.
கர்மாவின் கலவையே கருவாகும், கரு உறுவாகவே உன் கர்மாவில் கர்மா இருக்கு வேண்டும் கர்மா உள்ள இரண்டு மாமிசபிண்டமே கரு உருவாக்க இயலும். பல கோடி கர்மாக்கள் உருவாகாமலேயே அழிந்துகொண்டே போய்விடும். கர்மா உருவாக கர்மாவிற்கு கர்மாஇருக்கவேண்டும்.
You May Also Like
சக்கரவர்த்தி கலியபெருமாள்- ஜோதிட பதில்
0 Comments