Ticker

6/recent/ticker-posts

தொழில்/ வேலை

ஜோதிடம் என்பது விதியை மாற்றும் அற்புதம் அல்ல, அல்லது அதிஷ்டத்தை தரும்சக்தி அல்ல, சந்தர்பத்தை சாதகமாக்கி கொள்ள சொல்லப்படும் ஒரு வழிகாட்டி கைகாட்டிதான்.

1) இசைஅமைப்பாளர் ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்?

குரு- ஜாதகர்
சுக்கிரன்- கலை, இசை
ராகு - நிழல் தொழில்
குருவிற்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 சுக்கிரன் இருப்பது அத்துடன் ராகு சம்பந்தம் ஏற்பட்டால் நல்ல புகழ் கிடைக்கும்.
2)கடக சுக்கிரன் நல்ல இசைஞானத்தை உருவாக்கும்.

அல்லது குருவிற்கு 1-5-9 அல்லது 2-6-10 ல் சுக்கிரனும் ராகுவும் இருப்பது இசைஞானத்தை உருவாக்கும்.

3)தொழிலை பற்றி அறிய சனியை ஆராய்ச்சி செய்யவேண்டும்.

கேது கிரகத்தின் தொழில்கள்:-
கேது - மருத்துவம், நூற்பாலை, கயிறு வியபாரம், தையல் கடை, மதபோதனை செய்தல், மினகம்பி சம்பந்தமான தொழில், சட்டத்துறை, ஜோதிடம், ஆயுர்வேத சிகிச்சை, ஆன்மீக தொழில்.

4) யார் எந்த தொழிலை செய்வார்கள் தொழில் ரகசியம்?

சனி தொழில்காரகன், கர்மக்காரகன் எனவே சனிக்கு 1-5-9 அல்லது 2-12 அல்லது 3–7-11 ஆம் வீட்டில் உள்ள கிரகங்களின் காரக தொழில்களை கட்டாயம் செய்வார்கள், எத்தனை கிரகம் இருக்கிறதோ அத்தனை தொழிலை கண்டிப்பாக அவர்களின் வாழ்நாளில் செய்து விடுவார்கள்.

5) தொழில் நிர்ணய ரகசியம் 2

10 ஆம் அதிபதி நின்ற இடத்திற்கு 1-5-9 அல்லது 2-12 அல்லது 3–7-11 ஆம் வீட்டில் உள்ள கிரகங்களின் காரக தொழில்களை கட்டாயம் செய்வார்கள்.

6) எந்த ஜாதக அமைப்பு ஜோதிடம் /மருத்துவம்/ ஆன்மீகங்களை தரும்?
ஒரு ஜாதுத்தில் குரு அல்லது சனிக்கு கேதுவின் பார்வை சேர்க்கை இணைவு ஏற்பட்டால் அவர்களுக்கு ஜோதிடம் மருத்துவம் ஆன்மிகங்களின் தொடர்பை ஏற்படுத்தும்.

7) எந்த ஜாதக அமைப்பு ஆன்மீகத் தொழில்களை செய்வார்கள்?

சந்திரன் - மனம்
சனி - கர்மா
குரு- ஜீவன்
மேற்கண்ட கிரகங்களுடன் கேது பகவான் இணைவு ஏற்பட்டால் அதாவது சனி கேது, சந்திரன் கேது அல்லது குரு கேது.
(இணைவுகள் சனி குரு சந்திரன் இவற்றிற்கு 1 5 9 ல் கேது இருந்தாலும் )
ஆசைகளை இயற்கையாகவே துறந்தவர்கள் பிறருக்காக வாழ வைக்கும், வாழ நினைப்பார்கள் ஆசைகளை சுருக்கி கொள்வார்கள் ஒருகாலத்தில் அமைதியை நாடி சென்றுவிடுவார்கள் இவர்களுக்கு ஞானிகள் சித்தர்கள் மகான்களின் தொடர்பு ஏற்படும் அல்லது எளிதில் சந்திப்பார்கள் தியானம் ஆன்மீகம் இவர்களுக்கு கைவரக்கூடும்.

ஆன்மீக தொழிலை தேர்ந்தெடுக்கலாம் குறி சொல்லுதல் ஜோதிடம் கோவில் பூசாரி கோவில் கணக்கு எழுதுதல் குறி சொல்பவர்களுக்கு உதவியாக இருத்தல் மந்திரவாதிகள் தொடர்பு, தகடு எழுதுதல், விஷக்கடி மருந்து, தீராத வியாதிகளுக்கு மூலிகை வைத்தியம், மஞ்சல்காமாலைக்கு மருந்து கொடுத்தல், நாட்டு வைத்தியம், நாட்டு மருந்து தயாரித்தல், ஆன்மீக வேசம் போட்டு ஆடுதல்.
சுயநலம்  இல்லாத பொது நலம் உங்களை வாழ வைக்கும்.

8) எப்போது புதிய தொழிலை தொடங்க கூடாது?

ஏழரைச்சனி அட்டமச்சனி காலங்களில் சந்திர தசை ராகு தசை நடக்கும் காலங்களில் புதிய தொழிலை கண்டிப்பாக தொடங்க கூடாது, சனிக்கு திரிகோணங்களில் கோட்ராசார ராகு கேது செல்லும்போதும் சனி மீது கோட்சார ராகு கேது செல்லும்போதும் புதிய தொழிலை செய்யக்கூடாது, செய்யும் தொழிலில் மிகுந்த கவனம் தேவை தொழிலையும் விரிவு படுத்த கூடாது. லக்கனாதிபதி 6 8 12 ல் மறைந்து விட்டால் சொந்த ஊரை விட்டு சென்றால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் சொந்த ஊரில் இருந்தால் ஊரில் மல்லுக்ட்டிகொண்டு கடனோடு வாழ்க்கை நடத்த கூடும்.

9) யார் பொருளாதார நிபுணர்களாக இருப்பார்கள்?

எந்த ஒரு ஜாதகத்தில் சனி சுக்கிரன் புதன் இணைவு சேர்க்கை பார்வை பெற்று உ்ளதோ அத்தகைய அமைப்பை உடைய ஜாதகர் மிக சிறந்த பொருளாதார நிபுணர்களாக இருப்பார்கள். இவர்களுடைய பேச்சு செயல் எண்ணங்கள் எல்லாம் பொருள் ஈட்டுவது எப்படி? சேமிப்பது எப்படி ? சொத்துக்களை வாங்குவது எப்படி? என்று நினைத்து கொண்டே இருப்பார்கள்.

10) யார் சினிமா, கலை, நாடகத்துறையில் இருப்பார்கள்?

யாருடைய ஜாதகத்தில் குருவிற்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12ல் சுக்கிரன் இருக்கிறதோ அவர்கள் சினிமா, கலை, நாடகத்துறையில் இருப்பார்கள்.

11)  யார் மருத்துவர் ஆவார்? எந்த அமைப்பு கொண்ட ஜாதகம் மருத்துவர் ஆகும்?

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் கூடி இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும், சூரியனுக்கு இரண்டு பனிரெண்டில் செவ்வாய் இருந்தாலும், இருவரும் பரிவர்த்தனை அடைந்து இருந்தாலும் ஒன்பது பத்து பதினொன்றில் கேது இருந்தாலும் இவர்களுக்கும் மருத்துவம் தெரியும்.

Disclaimer 
ஜோதிடம் என்பது உன் விதியை மாற்றும் அற்புத கலை அல்ல, வாழ்க்கையில் சிக்கி தவிக்கும்போது அனுபவம் நிறைந்த ஆசான்களால் திக்கற்று நிற்கும் உனக்கு காட்டும் ஒரு வழிகாட்டிதான், அது ஒரு கைகாட்டி போல, ஜோதிடம் மூலம்  60% முதல் 75% பலன்களை தெரிந்து கொள்ளலாம் தவிற 100 % பலன்களை அறிய இயலாது, உன்னுடன் வசிக்கும் உறவின் கர்மா மூலம் உன் பலன்கள் மாறுபடும் சில சமயம் நற்பலன்களாகவும் சில சமயம் கெடுபலன்களாகவும் அனுபவிக்க இயலும்.

பரிகாரம் என்பது கர்ம வினைகளால் நீ சிதைந்து நிற்கும்போது உன் மனதிற்கு திடம் அளிக்க செய்யப்படும் பயிற்சி வழிபாடே தவிற, உன் ஆசைகளை நிறைவேற்ற உன் கர்ம  வினைகளை போக்க கூறப்படும் மந்திர மாய ஞாலங்கள் அல்ல!

சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள்🦅

Post a Comment

0 Comments