திருமணம் Marriage எப்போது நடைபெறும்?
ஆண் பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரனுக்கு (Wife மனைவி) 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் கோட்சார குரு வரும் காலம் திருமணம் (Marriage) நடைபெறும்.
பெண் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய்க்கு ( Husband கணவன்) 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 ல் கோட்சார குரு வரும் காலம் திருமணம் ( Marriage) நடைபெறும்.
ஒரு ஜாதகருக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா என்பதை எப்படி ஜோதிடம் மூலம் அறியலாம்?
ஜாதகர் ஆண் குரு பெண் சுக்கிரன்- கணவன் செவ்வாய், மனைவி சுக்கிரன்
ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் சனியையோ அல்லது குருவையோ பார்த்தால் கண்டிப்பாக திருமணம் நடந்து விடும்.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் சனியையோ அல்லது சுக்கிரனையோ பார்த்தால் கண்டிப்பாக திருமணம் நடந்து விடும்.
பார்வை சேர்க்கை இணைவு என்பது சுக்கிரனுக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12 சனி / குரு இருப்பது.
சனி செவ்வாய் - காலதாம திருமணம்
சனி செவ்வாய் சேர்க்கை பார்வை இணைவு காலதாமத திருமணம் கலப்பு திருமணம், மதாமாறிய திருமணம் முறையற்ற திருமணம், திருமணம் நடைபெறாமல் வாழ்க்கை நடத்துதல்
ராகு/கேது அச்சுக்கு வெளியே லக்கனம்/சந்திரன் தாமத திருமணம்
யார் மனைவியை மதிக்காதவன்?
ஆண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 1-5-9 அல்லது 2-6-10 ல் ராகு இருந்தால் மனைவியை கணவன் மதிக்கமாட்டான், ஒரு சிலர் மனைவியை பிரிந்து வாழ்வார்கள்.
யார் கணவனை மதிக்கமாட்டார்கள்?
பெண் ஜாதகத்தில் செவ்வய்க்கு 1-5-9 அல்லது 2-6-10 ல் ராகு இருந்தால் கணவனை மனைவி மதிக்கமாட்டாள், ஒரு சிலர் மனைவியை பிரிந்து வாழ்வார்கள்.
யாருக்கு அன்னிய இனம் அல்லது வேற்று இனத்தில் திருமணம் நடக்கும்?
பெண் ஜாதகத்தில் செவ்வாய் ( கணவனை குறிக்கும் கிரகம்) க்கு ராகு (இஸ்லாம்) கேது (கிரிஷ்டியன்) தொடர்பு இணைவு சேரக்கை ஏற்பட்டால் அன்னிய இனம் அல்லது வேற்று இனத்தில் திருமணம் நடக்கும்.
காதல் திருமணம்:-
புதன் - கேது இணைவு சேர்க்கை பார்வை சாரம் காதலை உருவாக்கும் இதற்கு குருவின் பார்வை அல்லது சுக்கிரன் பார்வை பெற்றால் காதல் வெற்றியில் முடியும்/ செவ்வாய் பார்வை பெற்றால் காதல் தோல்வி அடையும்.
கணவன் மனைவி ஒற்றுமையாக வாழக்கூடிய ஜாதக அமைப்பு என்ன?
லக்னாதிபதியும் ஏழாம் அதிபதியும் அல்லது ஜீவகாரகன் களத்திரக்கனும் சேர்க்கை இணைவு பார்வை பெற்றிருந்தாலும் கணவன் மனைவி ஒற்றுமையாக அன்னோன்யமாக நெருக்காமாக வாழ்வார்கள்.
கணவன் மனைவி அன்யோன்யமாக இருக்க கூடிய ஜாதக அமைப்பு எது?
கணவன் ஜாதகத்தில் குரு சுக்கிரனோடு சேர்ந்து இருந்தாலோ அல்லது குருவிற்கு 1-5-9 ல் சுக்கிரன் இருந்தாலும், பெண் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்து இருந்தாலோ அல்லது செவ்வாய்க்கு 1-5-9 ல் சுக்கிரன் இருந்தால் கணவன் மனைவி அன்யோன்யமாக இருப்பார்கள்.
பெண்கள் ஜாதகத்தில் எத்தகைய ஜாதக அமைப்பு கணவன் மனைவியை விட்டு பிரிய மாட்டார்கள்?
ஆண்கள் ஜாதகத்தில் மனைவியை குறிக்கும் கிரகம் சுக்கிரன், பெண்கள் ஜாதகத்தில் கணவனை குறிக்கும் கிரகம் செவ்வாய் ஆகும். எனவே பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரனை பாரத்தால் கணவன் மனைவியை விட்டு பிரிய மாட்டார்கள்.
ஆண்கள் ஜாதகத்தில் எத்தகைய ஜாதக அமைப்பு மனைவி கணவனை விட்டு பிரிய மாட்டார்கள்?
ஆண்கள் ஜாதகத்தில் மனைவியை குறிக்கும் கிரகம் சுக்கிரன், பெண்கள் ஜாதகத்தில் கணவனை குறிக்கும் கிரகம் செவ்வாய் ஆகும். ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் குருவை பார்த்தால் மனைவி கணவனை விட்டு பிரிய மாட்டார்கள்.
ஆண்கள் ஜாதகத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உள்ள ஜாதகம் அமைப்பு எது?
ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் (மனைவி) இருக்கும் ராசிக்கு 1-5-9 அல்லது 2-6-10 ல் கேது இருந்தால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உருவாகும் அல்லது பிரிவினைகளை உண்டாக்கும்.
பெண்கள் ஜாதகத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உள்ள ஜாதகம் அமைப்பு எது?
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் (கணவன்) இருக்கும் ராசிக்கு 1-5-9 அல்லது 2-6-10 ல் கேது இருந்தால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உருவாகும் அல்லது பிரிவினைகளை உண்டாக்கும்.
ஜாதகத்தில் பிரிவனைகளை உண்டாக்கும் கிரகங்கள் இரண்டு அவை ராகுவும் கேதுவும் ஆகும்.
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை யார் செய்து கொள்வார்கள்?
பிறப்பு ஜாதக குருவை பெண் கிரகங்களான சந்திரன் புதன் சுக்கிரன் ஆகிய கிரகங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகங்கள் பிறப்பு ஜாதக குருவை பார்த்தாலோ, இணைவுபெற்றாலோ, தொடர்பு ஏற்பட்டாலோ அந்த ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் ஏற்டக்கூடும். குருவிற்கு 1-5–9 அல்லது 3-7-11அல்லது 2-12 ல் பெண் கிரகங்களான புதன் சுக்கிரன், சந்திரன் இருந்தால் மேற்கண்ட இணைவு பெற்று ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் ஏற்டக்கூடும்.
Disclaimer
ஜோதிடம் என்பது உன் விதியை மாற்றும் அற்புத கலை அல்ல, வாழ்க்கையில் சிக்கி தவிக்கும்போது அனுபவம் நிறைந்த ஆசான்களால் திக்கற்று நிற்கும் உனக்கு காட்டும் ஒரு வழிகாட்டிதான், அது ஒரு கைகாட்டி போல, ஜோதிடம் மூலம் 60% முதல் 75% பலன்களை தெரிந்து கொள்ளலாம் தவிற 100 % பலன்களை அறிய இயலாது, உன்னுடன் வசிக்கும் உறவின் கர்மா மூலம் உன் பலன்கள் மாறுபடும் சில சமயம் நற்பலன்களாகவும் சில சமயம் கெடுபலன்களாகவும் அனுபவிக்க இயலும்.
பரிகாரம் என்பது கர்ம வினைகளால் நீ சிதைந்து நிற்கும்போது உன் மனதிற்கு திடம் அளிக்க செய்யப்படும் பயிற்சி வழிபாடே தவிற, உன் ஆசைகளை நிறைவேற்ற உன் கர்ம வினைகளை போக்க கூறப்படும் மந்திர மாய ஞாலங்கள் அல்ல!
ஜோதிட பதில்
0 Comments